ஞாயிறு, 6 மே, 2018

மற்றவர்களை பற்றி அவர்கள் இல்லாதபோது புறங்கூறுவதை விட்டிடுக


ஒரு பள்ளியில் பயிலும் மாணவன் அம்மாணவனுடைய ஆசிரியரும் சேர்ந்து பள்ளிக்கு அருகிலிருந்த பூங்காவில் வழக்கம்போன்ற விவாதித்துகொண்டு காலாற நடந்து சென்றுகொண்டிருந்தனர் அப்போது அம்மாணவன் தன்னுடைய ஆசிரியரிடம் "ஐயா நான் என்னுடைய நண்பர்களை பற்றி அவர்கள் இல்லாதபோது அவர்களைபற்றிய குறைகளை விவாதிக்கும் மனநிலை எப்போதும் எனக்கு ஏற்படுகின்றது இதனை நான் எவ்வாறு தவிர்ப்பது என எனக்கு அறிவுரை கூறுங்கள்" எனக்கோரினான் ஆசிரியர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்த பின்னர், 'தம்பி நீ கைபேசி வைத்திருக்கின்றாயா?'எனவினவினார் உடன் அந்த மாணவன் தனது கைபேசியை எடுத்துஆசிரியரிடம் காண்பித்தான். அது சமீபத்தில் வெளியிடப்பட்ட மாதிரிகளில் ஒன்றாகும்.அம்மாணவன் அந்த கைபேசியை அதிகமாக நேசித்தான் பின்னர் ஆசிரியர் மாணவனிடம், அந்த கைபேசியை அருகிலுள்ள சேற்றுப் பகுதியில் தூக்கி வீடிஎறிந்திடுமாறு கூறினார். அவ்வாறான ஆசிரியரின் ஆலோசனையை கேள்வியுற்றதும் அதிர்ச்சி அடைந்த மாணவன், 'அதுஎப்படி ஐயா நான் அதிகம நேசிக்கும் புதியதாக வாங்கிய என்னுடையகைபேசியை சேற்றில் தூக்கி எறிய முடியும்? இதனை நான் அதிக பணம் செலவழித்து வாங்கினேன் ' என அந்த மாணவன் பதிலிறுத்தான் அதனை தொடர்ந்து ஆசிரியர் 'தம்பி உன்னுடைய நண்பர்களின் மரியாதையும் கூட மற்றவர்களுடைய பார்வையில் சிறந்ததாகவும் மதிப்புமிக்கதாகவும் இருக்கிறது. அதனை எவ்வாறு எளிதாகக் குறைக்க முடியும்? ' அதனால் அவ்வாறு மற்றவர்களை பற்றி அவர்கள் இல்லாதபோது புறங்கூறுவதை விட்டிட்டு நல்ல மாணவனாக நடந்து கொள்அப்போதுதான் உன்னைபற்றியும் மற்றவர்கள் மரியாதை குறைவாக நடத்தாமல் இருப்பார்கள் என அறிவுரைகூறினார் அதன்பின்னர் அம்மாணவன் மனந்திருந்தி அவ்வாறு புறங்கூறுவதை அறவே தவிரத்து வந்தான்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...