இந்திய ஆட்சி பணிக்கான நேர்முகத்தேர்வு நடந்தது அதில் இரு இளைஞர்கள் கலந்துகொண்டனர்
தேர்வுக்குழு உறுப்பினர்கள் முதல்இளைஞனைஅழைத்து இந்தியாஎப்போது சுதந்திரம் அடைந்தது என்றகேள்வியை கேட்டனர்
உடன் அந்த முதல் இளைஞன் அதற்காகமீகநீண்டநாட்களாக போராடவேண்டயிருந்து இறுதியில்அதிக சிரமத்துடன் 1947 இல் கிடைத்தது என பதிலிறுத்தார்
அடுத்ததாக இந்தியசுதந்திரத்திற்காக யார்அதிகபாடுபட்டார்அந்த தலைவரின் பெயர் என்னஎன தேர்வாளர்கள் வினவினர்
அந்தமுதல் இளைஞன் இந்தியசுதந்திரத்திற்காக பலர் அரும்பாடுபட்டனர் அவர்களுள் ஒருவர் பெயரைமட்டும் கூறினால் மற்றவர்கள் இந்திய சுதந்திரதிற்காக பாடுபடவில்லையாஎன்ற கேள்வி யெழும்அதனால் அனைவரும் அரும்பாடுபட்டனர் எனபதிலிறுத்தார்
மூன்றாவதாக கையூட்டு பெறுவதுதான் இந்திய பொருளாதாரத்தின் மிகமுக்கிய எதிரியா எனவினவினர் தேர்வாளர்கள்
உடன் முதல்இளைஞன் ஐயா இந்தகையூட்டு புகார்குறித்து ஆய்வுசெய்து அறிக்கைதருமாறு குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளதுஅந்த குழுவின்அறிக்கை கிடைத்தபின்னர் மட்டுமேஅதற்கானவிடையைஉறுதியாக கூறமுடியும் என கூறினார் தேர்வாளர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் முதல் இளைஞர் கூறியபதிலால் திருப்தியுற்று தம்பி வெளியேகாத்திரு மேலும் இந்த விவாதத்தை மற்றயாருக்கும் வெளியிடாதே என்ற உறுதியளிப்புடன் அனுப்பினர்
வெளியவந்த முதல் இளைஞனை இரண்டாவது இளைஞன் தேர்வாளர்கள் எந்தெந்த கேள்விகேட்டனர் அதற்கு முதல்இளைஞன் கூறிய பதிலை கூறுமாறுமிகவம்வற்புறுத்திக தெரிந்து கொண்டார்
பின்னர் இரண்டாவது இளைஞரை உள்ளே அழைத்தனர் இரண்டாமவரிடம் நீஎப்போது பிறந்தாய்எனகேட்டனர்
உடன் இரண்டாவது இளைஞன் ஐயா அதற்காகமிகவும் கடுமையாக போராடினார்கள் இருந்தபோதிலும்இறுதியாக 1947 இல் நான் பிறந்தேன் எனபதிலிருத்தான் இந்த பதிலாள் தேர்வாளர்கள் குழம்பிவிட்டனர்
சரிதம்பி உன்னுடைய தந்தையின் பெயர் என்ன என தேர்வாளர்கள் கேள்விகேட்டனர்
உடன்ஐயா அதற்காகபலர்அரும்பாடுபட்டனர்அவர்களுள் ஒருவரின்பெயரை கூறினால் மற்றவர்களுக்கு துரோகம் செய்தவனாவேன்அதனால்பலரும் அரும்பாடுபட்டனர்எனஇரண்டாமவன் பதிலிறுத்தவுடன் தேர்வாளர்கள அனைவரும் மிகஅதிர்ச்சியாக ஒருவர்முகத்தை மற்றொருவர் பார்த்து கொண்டனர்
இறுதியாக சரி தம்பி உனக்குபுத்தி தெளிவாகஇல்லையா என கேட்டனர்
உடன் ஐயாஇந்த புகார்குறித்து ஆய்வுசெய்து அறிக்கைதருமாறு குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளதுஅந்த குழுவின்அறிகைகிடைத்தபின்னர் மட்டுமே அதற்கானசரியான விடையைஉறுதியாக கூறமுடியும் எனகூறினார் இதனை கேளவியுற்ற அனைத்து தேர்வாளர்களும் மிகவும் அதிர்ச்சியுடன் அப்படியே சிலைபோன்றஅமர்ந்துவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக