புதன், 31 அக்டோபர், 2018

GeM என சுருக்கமாக அழைக்கப்படும் அரசுஇணைய சந்தை( அஇச)(Government E-Marketplace(GeM)) தொடர்


கடந்த 26.10.2018 அன்றைய தொடரில் இந்த அஇச வின் பொதுவான வசதி வாய்ப்புகளைபற்றி ஒரு அறிமுகத்தை மட்டும் கண்டோம் இந்த தொடரில் ஒரு சாதாரண உற்புத்தியாளர் அல்லது விற்பணையாளர் இந்த இணையசந்தையில் எவ்வாறு பதிவுசெய்து தங்களுடைய பொருளை விற்பணைசெய்வது என்றவிவரத்தை காண்போம் தற்போது நடைமுறையில் இதுவரை ஒரு உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளர் தன்னுடைய பொருளை அரசிற்கும் அரசுசார்ந்த நிறுவனங்களுக்கும் விற்பணைசெய்திடவிரும்பினால் அவர் ஒவ்வொரு துறையிலும் இதற்கென பராமரிக்கப்படும் விற்பணையாளர் பட்டியலில்(Vendor List) தன்னுடைய பெயரையும் சேர்த்திடுமாறு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது விண்ணப்பிக்கவேண்டும் அதனடிப்படையில் இவ்வாறு பதிவுசெய்பவர்களுக்கு தொடர்புடைய துறையிலிருந்து விலைப்புள்ளி கோருவதற்கான வாய்ப்பு கிடைத்திடும் அவ்வாறான நடைமுறையை மாற்றி இந்த அரசுஇணைய சந்தை( அஇச)(Government E-Marketplace(GeM)) எனும் இணையசந்தையில் தங்களைபற்றிய விவரங்களை ஒருமுறை மட்டும் பதிவுசெய்துகொண்டால் போதும் இந்தியாமுழுவதுமுள்ள அனைத்து அரசுசார்ந்த நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும் அல்லது சேவைகளையும் இந்த தளத்தின் வாயிலாக விற்பணைசெய்திடலாம் என்ற புதிய வசதியை தற்போது இந்த இணையதளம் அளிக்கின்றது பொதுவாக பொருளை உற்பத்தி செய்பவர்கள் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்லது மறுவிற்பணையாளர்கள் இந்த திறந்த சந்தையில் தங்களுடைய பொருளை எளிதாக விற்பணைசெய்திடலாம் இதில் பதிவு செய்துகொள்வதற்காக தங்களுடைய ஆதார் எண், மின்கையொப்பம் சரக்குசேவைவரி தளத்தில் பதிவுசெய்துகொண்ட விவரங்களுடன் தங்களைபற்றியும் தாம் விற்பணைசெய்யவுள்ள பொருளைபற்றிய முழுவிவரங்களையும் அதன் மாதிரி படங்களுடன் ஒருமுறைமட்டும் வழங்கப்படும் கடவுச்சொற்களின்(One Time Password(OTP)) வாயிலாக பதிவுசெய்து கொள்ளவேண்டும் மிகமுக்கியமாக பொருட்களை கொள்முதல் செய்பவர்கள் இவ்வாறான உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளரை பற்றியும் அவர்களுடைய பொருட்களை பற்றியும் ஆன விவரங்களை எளிதாக அறிந்து கொளளும் பொருட்டு அப்பொருட்களை பற்றிய அனைத்து விவரங்களையும் அந்த பொருட்களின் உருவப்படங்களையும்சேர்த்து பதிவேற்றம் செய்து இணையத்தில் பட்டியலிடுமாறு செய்திடவேண்டும் ஒரு உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளர் தாம் உற்பத்தி அல்லது விற்பணை செய்திட விரும்பும் எத்தனை பொருட்களையும் இவ்வாறு பட்டியலிடுமாறு செய்திடமுடியும் இவ்வாறு பதிவுசெய்துகொண்டபின்னர் இந்த தளத்தில் நேரடியாக எதிர்மறைஏலத்தில் பங்குகொள்ளலாம் பொதுவாக பொருட்களை ஏலத்தின் வாயிலாக விற்பணை செய்திடும்போது குறைந்தபட்ச விலையிலிருந்து ஏலம் ஆரம்பிக்கப்பட்டு அதிகபட்சம் விலைவரை உயர்ந்து கொண்டேவந்து கடைசியாக யார்அதிகபட்ச விற்பணைவிலை கோரினாரோ அவருக்கு விற்பணைசெய்வதே நடைமுறையாகும் அதற்குமறுதலையாக இந்த அஇச(Gem)எனும் தளத்தில் கொள்முதல் செய்பவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களின் அதிகபட்ச கொள்முதல் விலையை கோருவதை தொடர்ந்து குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்பவர்கள்அல்லது விற்பணையாளர்கள் எதிர்மறைஏலத்தில் பங்குகொண்டு அதாவது அதிகபட்சவிலையிலிருந்து ஏலம் துவங்கிகுறைந்த பட்சவிலைவரை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து கடைசியாக யார்மிகவும் குறைந்தவிலை கோரினாரோ அவரிடமிருந்து குறிப்பிட்ட பொருளை கொள்முதல் செய்வதாக ஏலம் முடிவிற்கு வரும் இதனை பொருட்களை கொள்முதல் செய்வதில் எதிர்மறைஏலம் (Reverse Auction)என அழைக்கப்படும் இந்த எதிர்மறை ஏலத்தில் கோரப்படும் பொருளை வழங்க தயாராக இருக்கும் 7 நாட்களுக்கமுன் பதிவு செய்து கொண்ட உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளர் மட்டுமே இந்த எதிர்மறை ஏலத்தில் பங்குகொள்ளமுடியும் இந்த எதிரமறை ஏலத்தின் போக்கை நேரடியாக திரையில் உற்பத்தியாளர் அல்லதுவிற்பணையாளர் காணமுடியும் இவ்வாறான ஏலத்தில் விற்பணைஉத்திரவுகிடைத்ததை இந்த இணைய தளமானது தொடர்புடைய உற்பத்தியாளர்களுக்கு அல்லது விற்பணையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக நினைவூட்டிடும் செய்தி ஒன்றை அனுப்படும் அதனை தொடர்ந்து அந்த உற்பத்தியாளர்கள் அல்லது விற்பணையாளர்கள் தங்களுக்கு கிடைத்த கொள்முதல் உத்திரவினடிப்-படையில் தாம் விற்பணைசெய்திடவிரும்பும் பொருட்களுக்கான விற்பணை பட்டியலை இணையத்தின் வாயிலாகவே தயார்செய்து கொள்முதல் செய்பவரின் மின்னஞ்சல்முகவரிக்கு அனுப்பிடலாம் அதன்பிறகு தங்களுடைய பொருட்களை வழங்கி கொள்முதல் செய்பவர் அப்பொருளை ஏற்று கொண்ட பத்துநாட்களுக்குள் இணையத்தின் வாயிலாகவே இதற்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம் மேலும் எந்தவொரு பயனாளரும் தங்களுக்க எழும்எந்தவொரு சந்தேகத்தையும் தீர்வுசெய்துகொள்வதற்கு அலுவலக நேரத்தில் இந்த தளத்தின் 1-800-102-3436 (1-800-102-E-GEM)என்ற உதவிபகுதியை அனுகலாம் மேலும் விவரங்களுக்கு https://gem.gov.in/ என்ற இணையமுகவரிக்கு சென்ற அறிந்து பயன்பெறுக

செவ்வாய், 30 அக்டோபர், 2018

யார் விவேகமுள்ள அதிகபுத்திசாலியான மகன்


ஒரு நாட்டில் அரசன் ஒருவன் அரசாட்சி செய்துவந்தான் அவனுக்கு இரு மகன்கள் இருந்தனர் அரசன் மிகநல்ல அரசாட்சியை மக்களுக்கு வழங்கிவந்தான் தன்னுடைய மகன்கள் இருவருக்கும் நல்ல குருவை அமர்த்தி நல்ல பயிற்சி அளித்துவந்தான் அரசன் நோய்வாய்பட்டு படுக்கையாகஇருந்தான் அதனால் தன்னுடைய இருமகன்களில் ஒருமகனுக்கு தனக்கு பிறகு அரசாளுவதற்கு முடிசூட்ட விரும்பினான் அரசன் அதனால் இருமகன்களையும் அழைத்து அரண்மனையிலிருந்த இரண்டு காலியான அறைகளை ஆளுக்கொன்று ஒதுக்கி அவர்கள் விரும்பிய பொருட்களை காலிஇடம் விடாமல் அந்த அறைமுழுவதும் நிரப்பும்படியும் அதற்காக யாரிடமும் ஆலோசனைகளை கேட்ககூடாது என்ற நிபந்தனையுடன் போட்டியொன்றினை நடத்தினான் மறுநாள் அரசன் மூத்தமகனுக்கு ஒதுக்கிய அறைக்குள் சென்ற பார்வையிட்டபோது அறைமுழுவதும் நெல் அறுவடை செய்தபின்மிகுதி கழிவாக இருக்கும் வைக்கோலை நிரப்பியிருந்ததை பார்வையிட்டான் சரி இரண்டாவது மகன் என்ன செய்துள்ளான் என இரண்டாவது அறைக்குசெல்லலாம் என முயலும்போது அந்த அறைபூட்டியிருந்தது கதவை தட்டி திறந்தபோது ஒரே இருட்டாக இருந்தது அரசன் உள்நுழைந்தவுடன் இளையமகன் மெழுகுவர்த்திஏற்றினான் உடன் இருள்நிறைந்த அறையானது முழுவதும் வெளிச்சம் பரவியது அதனை தொடர்ந்து இரண்டாவது மகனே பொருத்தமானவன் என இரண்டாவது மகனுக்கு முடிசூட்டி அரசனாக்கினான்

வெள்ளி, 26 அக்டோபர், 2018

அரசுஇணைய சந்தை( அஇச)(Government E-Marketplace(GeM))ஒரு அறிமுகம்


அரசின் அனைத்துபிரிவுகளும் அரசுநிறுவனங்களும் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொள்முதல் செய்வதற்காக அரசுஇணைய சந்தை(Government E-Marketplace) சுருக்கமாக ( அஇச (GeM))எனும் இணையத்தை பராமரித்துவருகின்றது .இதில் மிககுறைந்த அளவு மனித தலையீடுடன் முழுவதும் காகித பயன்பாடு எதுவும் இல்லாத ரொக்க புழக்கமில்லாத பொதுவாக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையம் சேவைகளையும் பெறுவதற்கு இது உறுதுனையாக இருக்கின்றது . அரசாங்கம் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வழக்கமாக தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தனித்தனியாக டென்டர் எதுவும் கோராமல் நேரடியாக இந்த ( அஇச (GeM))எனும் இணையதளசந்தையின் வாயிலாக கொள்முதல் செய்துகொள்ளலாம் இதன் வசதி வாய்ப்புகள் பின்வருமாறு 1.இதுவரை இந்த அரசுஇணைய சந்தையில்( அஇச) சுமார் 4000 பொருட்களின் விற்பணையாளர்கள் 31000 பொருட்களையும் 17 சேவைகளையும் பதிவுசெய்துள்ளனர் 2.இந்த இணையதளத்தின் வாயிலாக பொருட்களை கொள்முதல்செய்வது மட்டுமல்லாது இந்நடவடிக்கைக்கான தொகையையும் இணையத்தின் வாயிலாகவே பரிமாறிகொள்ளலாம் 3. இந்தஇணைய தளத்தில் தாம் விரும்பும் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக தங்களுடைய ஆதார் அட்டைஎண், கைவிரல்ரேகைபதிவேற்றம் செய்தல் பதிபெற்ற மின்னஞ்சல் முகவரி போன்றவைகளுடன் Electroning Data Interchange(EDI)இன்வாயிலாக பதிவு செய்து கொள்ளவேண்டும் 4. இதில் விற்பணையாளர்களும் சேவையவழங்குபவர்களும் தாங்கள் விற்பணைசெய்திட விரும்பும் பொருட்களின் அல்லது வழங்கவிரும்பும் சேவைகளின் விவரங்களை தங்களுடைய ஆதார் எண், வருமானவரி கணக்குஎண், நிறுவனங்களாக பதிவுசெய்த எண் ஆகியவற்றுடன் சுயசான்றிதழுடன் இந்த இணையதளத்தில் பதவிசெய்து கொள்ளவேண்டும் 5 அனைத்து அரசுதுறைகளும் பொதுத்துறை நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை சேவைகளை பெறுவதற்காக டெண்டர் வழி-முறைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி அதிக காலவிரையத்தையும் மனித உழைப்பையும் வீணாக்காமல் எப்போது வேண்டுமானாலும் மிகவிரைவாக தேவையானபோது உடனடியாக இந்த ( அஇச (GeM))எனும் இணையசந்தையின் வாயிலாக கொள்முதல் செய்துகொள்ளலாம் 6இதில் பதிவுசெய்வதற்காக நேரடியாக எங்கும் செல்லத்தவையில்லை அல்லது காகித ஆவணங்கள் எதுவும் அதிகம்பயன்படுத்திடத்தேவையில்லை 7 தங்களின் பொருட்களை சேவைகளை ஒரேமாதிரியானவகையில்தான் குறிப்பிடவேண்டும் என அதிக கட்டுபாடுகள் எதுவும் இல்லை அதற்குபதிலாக வேவ்வேறு பொருட்களுக்கும் சேவைகளுக்கும்ஏற்ப வெவ்வேறு வகையான குறைந்தபட்சதகுதிகள் இந்த இணையதளத்தில் பட்டியலிடபட்டுள்ளன அவைகளை பூர்த்தி செய்திடுமாறு மட்டும் தங்களுடைய பொருட்கள் சேவைகள் உள்ளதாவென சரிபார்த்து கொண்டால் போதும் 8.இந்த இணையதளம் நெகிழ்வு தன்மையுடன் விளங்குவதால் விற்பணையாளர்கள் தங்களுடைய பொருட்களின் மாதிரிகளில் அவ்வப்போது புதிய மாதிரிகளை அறிமுகபடுத்தி அதற்கேற்பதங்களுடைய பொருட்களின் விலைகளை இயக்கநேரத்தில் மாற்றியமைத்து கொள்ளலாம் 9. புதியவிற்பணையாளர்கூட எந்தவொருநேரத்திலும் அதாவது 24மணி-நேரமும் தங்களுடைய புதிய புதிய விற்பணைபொருட்களை அதன் விவரங்களுடனும் விலைகளுடனும் பதிவுசெய்து சந்தைபடுத்திடலாம் 10. இந்த இணையதளமானது விற்பணையாளர்களின் அனைத்துவகையான பொருட்களுடன் இயக்கநேரத்தில் நேரடி போட்டி இதில் இருப்பதால் கொள்முதல்செய்பவர்கள் தங்களுடைய தேவைக்கேற்ற பொருட்களை சேவைகளை தங்களுடைய பணவசதிக்கேற்ப பெற்றுகொள்ளலாம் இதில் வழக்கமான சந்தையைவிட 15 முதல் 20 சதவிகிதம் விலை குறைவாக பராமரிக்கபடுகின்றது நிறுவனங்கள் தங்களின் பேரம்பேசும் திறனை-கொண்டு அதைவிட குறைவான விலையில் தரமான பொருளை சேவையை இந்த இணையதளத்தின் வாயிலாக பெறமுடியும் 11 இந்த இணையதளமானது ஒளிவுமறைவற்ற தன்மையில் பராமரிக்கப்-படுவதால் பயனாளர்கள் தங்களுடைய தேவையை நேரடியாக இணையத்தில் பொருட்களைபற்றிய அனைத்துவிவரங்களையும் அறிந்து தெளிவு பெற்றஅல்லது திருப்தியுற்றபின்னர் கொள்முதல் செய்து கொள்ளமுடியும் 12 நிறுவனங்கள் தங்களின் எதிர்கால தேவையை கோரினால் அதற்கேற்ப பொருட்களின் சேவைகளின் வரையறை தரம் அளவு வழங்குபவரின் இருப்பிடமுகவரி எவ்வளவுநாட்களில் வழங்குவது என்பன போன்ற அனைத்தையும் இந்த இணையதளமானது திட்டமிட்டு அதற்கேற்ப அந்நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றது 13 பொதுவாக அனைவராலும் கொள்முதல் செய்யபடும் பொருட்களை தெரிவுசெய்தால் போதும் உடன் இந்த இணையதளமானது அது தொடர்பான விவரங்களையும் வழங்கதயாராக உள்ளவர்களின் விவரங்களையும் அவர்கள் அந்த பொருளுக்கு குறிப்பிட்டுள்ள விலை விவரங்களுடன் தானியங்கியாக இணையத்தில் நேரடியாகஒப்பீட்டு பட்டியல் ஒன்றினை தயார்செய்து திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது அந்த பட்டியலை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான அளவு பொருட்களை தேவையான வழங்குபவரிடம் பெற்றுகொள்ளமுடியும் 14. இவ்வாறு கொள்முதல் செய்திடமுடிவுசெய்தால் அதனை உடனடியாக இந்த இணையதளபக்கத்தின் வாயிலாக பொருட்களை பெறவும் அதற்கான தொகையை வழங்கவும் அதற்கான பொருட்களை பெற்றதற்கான , தொகையை பெற்றதற்கான அத்தாட்சியை நேரடியாக இந்த இணையதளத்தின் வாயிலாக பெற்றுகொள்ளமுடியும் 15. பொருட்கள் அல்லது சேவைகளுக்கான தொகை வழங்குவதற்காக Public Financial System(PFMS) உடன்இந்த இணையதளம் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளதுஅதனால்தாம் கொள்முதல் செய்திடும் பொருட்களுக்குஅல்லது சேவைகளுக்குஎளிதாக இணையத்தின் வாயிலாக தொகையைவழங்கமுடியும் 16 இதில் பொருட்களை அல்லது சேவைகளை பெறுவதற்கும் வழங்குவதற்குமான பொதுவான நிபந்தனைகளை் சிறப்பு நிபந்தனைகளை போன்ற விவரங்களுடன்மேலும் அதிக விவரங்களை https://gem.gov.in/ என்ற இணையமுகவரிக்கு சென்ற அறிந்து பயன்பெறுக

வியாழன், 25 அக்டோபர், 2018

ஒருநபர் நிறுமம்(One person company(OPC))-2


நிறுமங்களின்சட்டம் 1956 ஆனது விடைபெற்று புதிய நிறுமங்களின் சட்டம் 2013 என்பதை நடைமுறை படுத்திடும்போது அதற்கான புதியதொரு பரிசாக ஒரு நபர் நிறுமம் (OPC) என்பதை இந்த புதிய நிறுமங்களின் சட்டம் 2013இல் அறிமுகப்படுத்தப்-பட்டுள்ளது . இந்த புதிய நிறுமங்களின் சட்டம் 2013 இன்படி எந்தவொரு தொழில் முனைவோரும் அதிக செலவில்லாமல் மிக குறைந்த முயற்சியில் எளிதாக புதியதான இந்த ஒரு நபர் நிறுமம் (OPC) ஒன்றை உருவாக்க முடியும் இந்த ஒரு நபர் நிறுமம் (OPC) என்பது ஒரு தனியுரிமையாளரின் உரிமைகளுடனும் கடமைகளுடனும் வணிகநிறுவனத்தின் பலண்களையும் ஒருங்கிணைத்து உருவாக்குவதாகும் இதில் ஒரேயொரு நபரே அந்நிறுவனத்தின் உறுப்பினர்ஆவார் அவரே அந்நிறுவனத்தின் இயக்குநராகவும் பங்குதாரராகவும் செயல்படும் உரிமையுடைவராகின்றார். இதன்வாயிலாக மிகச்சரியான ஒன்றிற்குமேற்பட்ட நபர்கள் ஒன்றாக சேர்ந்து வணிக நிறுவனத்தின் பலண்களுடன் புதிய தொழிலை துவங்கிடவேண்டும் எனும் பழைய கருத்தமைவுகள் மறைந்து எந்தவொரு தனிநபரான தொழில்முனைவோரும் தான்விரும்பிய புதிய தொழிலை செய்வதற்காக விரைவாகவும் மிக எளிதாகவும் ஒருநபர்நிறுமத்தை துவங்கி செயல்படுத்திடமுடியும் இந்த ஒருநபர் நிறுமத்தில் சட்டப்படியான பொறுப்புகளும் நிதிபொறுப்புகளும் அவ்வுறுப்பினருக்கு வரையறுக்கபட்டுள்ளது என்பதே இந்த ஒருநபர் நிறுமத்தினுடைய சிறந்த பயனாகும். அதனால் கூட்டான்மை நிறுவனத்தில் அல்லது தனிநபர் நிறுவனத்தில் அதன் உறுப்பினர்களுக்க சொந்த பொறுப்புகளும் உண்டு என்பது போன்றில்லாமல் இந்த ஒருநபர் நிறுமத்தின் அந்த தனிநபரின் பொறுப்புகள் வரையறுக்கப்பட்டு இருப்பதால் நிறுமத்தின் ஒரேயொரு உறுப்பினரான தனிநபர் அதிக கவலையின்றி தன்னுடைய தொழில் வளர்ச்சியில் மட்டும் கவணம்செலுத்தினால் போதுமானதாகும் என்ற சிறந்த வசதி கிடைக்கின்றது சட்டப்படியானவரையறை புதிய நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 2(62) இல் ஒரு நிறுமத்தில்ஒரேயொரு தனிநபர் மட்டுமே உறுப்பினாராவர் என இந்த ஒரு நபர் நிறுமத்தின் (OPC) சட்டப்படியானநிலையை வரையறுக்கின்றது இவ்வாறான ஒரு நபர் நிறுமத்தினை (OPC) நாம் எவ்வாறு துவக்குவது ஏறத்தாழ ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட(Private limited (Pvt)) நிறுமத்தை துவங்குவதைபோன்று ஆயினும் ஒருசில சிறியமாறுதல்களுடன் இந்த ஒரு நபர் நிறுமத்தினை(OPC) துவக்கிடும் செயல் அமைகின்றது ஒரு நபர் நிறுமம் (OPC) ஆனது தனிநபர் ஒருவர் ரூ.1,00,000/- முதலீட்டுடன் பதிவு செய்யப்படுகின்றது இதில் ஒரேயொரு தனிநபரே உறுப்பினராக பதிவுசெய்துகொள்ளவேண்டும் இந்த ஒருநபர் நிறுமத்தின்Memorandum of Association ஆனது அந்த தனிநபரின் பெயரில்மட்டுமேகண்டிப்பாக இருக்கவேண்டும் அதில் அந்த தனிநபர் இறந்துபோனால் அல்லது செயல்படமுடியாது போனால் அவருக்கு பதிலாக யார் செயல்பட-வேண்டும்என வேறொரு தனிநபரை நியமனதாரராக அல்லது வாரிசுதாரராக குறிப்பிட்டிருக்கவேண்டும் இவ்வாறாக குறிப்பிடப்படும் மற்றொரு தனிநபர் நியமனதாரரை அல்லது வாரிசுதாரரை இந்த உறுப்பினர் விருப்பபட்டால் எப்போது வேண்டுமானாலும் வேறொரு தனிநபர் நியமனதாரரை அல்லது வாரிசுதாரரை நிறுமங்களின்பதிவாளர் வாயிலாக மாற்றிகொள்ளமுடியும் இந்த ஒரு நபர் நிறுமத்தினை (OPC) துவங்கிடும்போது இந்நிறுமமானது 1.வரையறுக்கப்பட்ட பங்குமூலதனம் அல்லது 2.வரையறுக்கப்பட்ட உத்திரவாதம் அல்லது 3.வரையறுக்கப்படாத நிறுமம் ஆகிய மூன்றுவகைகளில் ஏதாவது ஒருவகையில் பதிவுசெய்து கொள்ளலாம் இந்த ஒரு நபர் நிறுமத்தின் (OPC) பெயரை குறிப்பிடும் பெயர்பலகையிலும் அல்லது பெயரினை அச்சிடும்போதும்அல்லது நிறுமத்தின் முத்திரையிலும் அல்லது எங்கெங்கு நிறுமத்தின் பெயரை குறிப்பிடபடுகின்றதோ அங்கெல்லாம் இந்நிறுமத்தின் பெயருடன் பிறையடைப்பிற்குள் தனியார் நிறுமத்தின் பெயருடன்Pvt எனக்குறிப்பிடுவதை போன்று ஒரு நபர் நிறுமம் (OPC)எனக்கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் தனிநபர் ஒருவர் ஒரேயொரு ஒரு நபர் நிறுமத்தினை (OPC)மட்டுமே துவங்கிட முடியும் மேலும்இந்தியாவில்வாழும்இந்திய குடிமகனாக இருப்பவர்மட்டுமேஇந்த ஒரு நபர் நிறுமத்தினை (OPC) துவங்கிடமுடியும் ஒரு நபர் நிறுமத்தினை (OPC) விதிவிலக்குகள் பின்வருமாறு நிறுமங்களின் சட்டம், விதி ஆகியவற்றின்படி ஒவ்வொரு ஆண்டும் கண்டிப்பாக ஆண்டுபொதுப்பேரவைகூட்டம் நடத்தப்படவேண்டும், சிறப்பு செயல்களுக்கான சிறப்பு பொதுப்பேரவைகூட்டம் நடத்தவேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஒரு நபர் நிறுமத்திற்கு (OPC) இல்லை இந்த ஒரு நபர் நிறுமத்தில் (OPC) குறைந்தபட்சம் ஒரு இயக்குநரும் அதிகபட்சம் 15 இயக்குநர்களும் நியமனம் செய்து செயல்படமுடியும் ஆயினும் ஒரேயொரு இயக்குநராக இருந்திடும்போது இயக்குநர்களின் குழுக்கூட்டம் நடத்திடும் விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மிகமுக்கியமாக ஒரு காலண்டர் ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டம் என்பதற்கு பதிலாக ஒவ்வொரு அரையாண்டிற்கும் ஒரு இயக்குநர்களின் குழுக்கூட்டம் நடத்தப்படவேண்டும் அதனோடு அவ்வாறான இயக்குநர்களின் இரு குழுக்கூட்டங்களுக்கு இடையேயான காலஇடைவெளியானது 90 நாட்களுக்கு குறைவாக இருக்ககூடாது . இந்த ஒரு நபர் நிறுமத்தினை(OPC) பதிவுசெய்திடும்போது முதல் இயக்குநர்களின் குழு யார்யார் எனக்குறிப்பிடவேண்டிய அவசியமில்லை அதாவது நிறுமத்தின் ஒரேயொரு உறுப்பினரே இயக்குநராக கருதப்படுவார் ஒவ்வொரு நிதியாண்டு முடிவுற்றதும் அடுத்த நிதியாண்டின் செப்டம்பர் 30இற்குள் சமர்ப்பிக்கப்படும் ஆண்டறிக்கையுடன் ரொக்கஓட்ட அறிக்கை(Cashflowstatments) தயார்செய்து இணைக்க வேண்டிய தேவையில்லை மேலும்இவ்வாண்டறிக்கையில் நிறுமச்செயலர் கையொப்பமிட்டு சமர்ப்பிக்கத் தேவையில்லை அதற்குபதிலாக அவ்வுறுப்பினரான இயக்குநர்மட்டும் கையொப்பம்இட்டு சமர்ப்பித்தால் போதுமானதாகும் ஒரு நபர் நிறுமத்திற்கு (OPC) நிறுமங்கள்சட்டப் பிரிவு 101 கூட்டஅறிவிப்பு அனுப்புதல், பிரிவு 102 அக்கூட்டஅறிவிப்பில் அறிவிக்கைள் இணைத்து அனுப்புதல்,பிரிவு 103 கூட்டத்தின் குறைந்தபட்சஉறுப்பினர் கலந்துகொண்டிருக்கவேண்டும் எனும் நிபந்தனை, பிரிவு104 இன்படி அக்கூட்டத்தின் தலைவரை நியமித்தல்,பிரிவு105 கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பதிலாள் நியமித்தல் ,பிரிவு106 கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமையை கட்டுபடுத்துதல்,பிரிவு107 கைகளை உயர்த்துவதன் வாயிலாக அக்கூட்டத்தில் வாக்களித்தல், பிரிவு 108 மின்னனு வாக்களித்தல் , பிரிவு109 வாக்கிட்டுசீட்டின்வாயிலாக வாக்களிக்க கோருதல் ,பிரிவு 110 அஞ்சலக சீட்டு வாயிலாக கூட்டத்தில் வாக்களித்தல் , பிரிவு 111 கூட்டத்தீர்மாணங்கள் சுற்றுமுறையில் ஏற்புகை செய்தல் போன்றவை விலக்களிக்கப்படுகின்றன. ஒருநபர்நிறுமத்தின் முதலீடு ரூ.50 இலட்சத்தை விட உயர்ந்திடும்போதும் கடந்தமூன்றான்டுகளின் சராசரி ஆண்டு விற்பணை வருமானம் 2 கோடியைவிட உயர்ந்திடும்போதும் இந்த ஒருநபர்-நிறுமத்தினைதனியார் வரையறுக்கப்பட்ட (Pvt) நிறுமமாக மாற்றியமைத்து கொள்ளலாம் ஒரு நபர் நிறுமத்தில் (OPC) நிறுமம் வேறு அந்த நிறுமத்தின் உறுப்பினர் வேறு என உடைமை பிரித்தறியபடுகின்றது ஆனால்தனியுடைமைநிறுமத்தில் நிறுவனமும் தனிநபரும் ஒன்றாகவே கருதப்படுகின்றது அதாவது நிறுமத்தின் பொறுப்புகள் அந்த நிறுமத்திற்கு மட்டுமே அதாவது அதன் உறுப்பினரின் முதலீடு செய்த அளவிற்கு மட்டுமே சாரும் தனியுடைமைநிறுவனத்தில்பொறுப்புகளானது அந்த தனிநபரின் சொந்தபொறுப்பாக கருதப்படும் வரிவிதிப்பானது அந்த நிறுமத்தின் மீது மட்டுமே விதிக்கப்படும் தனியுடைமை நிறுவனத்தில் வரிவிதிப்பு அந்த தனிபரின்மீது விதிக்கப்படும் நிறுமங்களின் சட்டம் விதிகளின் படி பல்வேறு படிவங்களையும் அறிவிக்கைகளையும் நிறுமங்களின் பதிவாளரிடம் ஒருநபர்நிறுமம் கண்டிப்பாக குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கவேண்டும் தனியுடைமை நிறுவனத்தில் அவ்வாறான கட்டுப்பாடுகள்எதுவுமில்லை ஒன்றிற்குமேற்பட்டஅதாவது இருநபர்கள் இருந்தால்தான்கூட்டாளிகளின்நிறுவனமாக அல்லது கூட்டாண்மை நிறுவனமாக துவக்கமுடியும் தனிநபரொருவர் தனியுடைமை நிறுவனமாகத்தான் துவக்கமுடியும்என்ற சிக்கல்ஒழிந்து தனியொரு நபர்கூட தன்னுடைய தொழில்முனைவை இந்த ஒரு நபர் நிறுமத்தில் (OPC) வாயிலாக சிறப்பாக செயல்படமுடியும் என்பது திண்ணம்

புதன், 24 அக்டோபர், 2018

எந்தவொரு இக்கட்டான நிலையிலும் தளர்ந்துவிடாமல் விடாமுயற்சிசெய்தால் வெற்றிஎனும் இலக்கை அடையமுடியும்


சியிரோவோ ஹோண்டா என்பவர் வாகனங்களை பழுதுபார்த்திடும் மிகச்சிறியதொரு பணிமனையில் சாதாரணமான ஒரு பழுது பார்ப்பாளராக பணிபுரிந்துவந்தார்.அங்கு இவருடைய பணியானது அப்பணிமனைக்கு வரும்வாகணங்களைை பந்தயத்தில் கலந்துகொள்ளும் வகையில் மேம்படுத்துவது மட்டுமே ஆகும் அவ்வாறான நிலையில் இவர் 1937 ஆண்டு டோக்கியாய் சேக்கி என்ற நான்குசக்கரவாகனங்களில் இயங்கிடும் பிஸ்டன் வளையங்களை உற்பத்தி செய்திடும் நிறுவனத்தினை நிறுவுகைசெய்தார் இந்த நிறுவனமானது ஏற்கனவே செயலில் உள்ள டோயோட்டா எனும்நான்குசக்கரவாகண உற்பத்தி நிறுவனத்திற்கு தேவையான பிஸ்டன் வளையங்களை மட்டும் உற்பத்தி செய்து வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றினை பெற்று அதனை செயல்படுத்திவந்தது. ஆனால் இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்து வழங்கப்பட்ட பிஸ்டன் வளையங்களில் தரம் குறைந்து இருந்ததால் அவ்வாறான டோயோட்டாவுடனான ஒப்பந்தத்தை இந்த நிறுவனம் இழந்தது அதனை தொடர்ந்து டோயோட்டா எனும் நான்குசக்கரவாகண உற்பத்தி நிறுவனத்திற்கு தேவையான பிஸ்டன் வளையங்களின் தரக்காட்டுப்-பாட்டினை நன்கு அறிந்து கொண்டு 1941 ஆம் ஆண்டளவில் டொயோட்டா நிறுவனத்திற்கு ஏற்ற தரக்கட்டுபாட்டில் ஏராளமான அளவில் பிஸ்டன் வளையங்களை உற்பத்தி செய்து வழங்கிடுமளவிற்கு வளர்ச்சி பெற முடிந்தது அதன்பின்னர் இந்த நிறுவனம் வளர்ந்து டோயோட்டா நிறுவனத்தின் 40 சதவிகித பங்குகளை வாங்கிடும் அளவிற்கு வெற்றிநடைபோட்டது

ஆனால் 1944 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின்போது போடப்பட்ட அணுகுண்டு தாக்குதலினால் இந்த நிறுவனத்தின் தொழிலகம் முற்றிலும் அழிந்துபோனது மிகுதியாக இருந்த கழிவுகள் அனைத்தும் டோயோட்டா நிறுவனத்திற்கு விற்கபட்டு அதில் கிடைத்த வருமானத்தினை கொண்டு அக்டோபர1946இல் ஹோண்டா தொழில்நுட்ப ஆய்வுநிறுவனம் என்பது துவங்கப்பட்டது அது 172 சதுரஅடி இடவசதியுடனும் 12 அலுவலர்களுடனும் செயல்பட்டுவந்தது இந்நிறுவனமானது மிதிவண்டி போன்ற இருசக்கர வண்டியில் டோஹாஸ்ட்சு எனும் நிறுவன இயந்திரத்தின் நகலை மேம்படுத்தி மிகச்சிறப்பாக இயங்கிடும் இயந்திரத்தினை கட்டமைவுசெய்து மிதிவண்டியுடன் அதனை இணைத்து தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு விற்பணை செய்து வந்தது மிகக்குறுகியகால இடைவெளியில்அதாவது 1964 ஆண்டில் இந்த ஹோண்டா மோட்டார் எனும் நிறுவனமானது உலகின் மிகப்பெரிய இருசக்கரவாகண உற்பத்தி செய்திடும் நிறுவனமாக வளர்ந்தது அதன்பின்னர் மினிபிக்அப் ட்ரக் உற்பத்தியிலும் நான்குசக்கரவாகண உற்பத்தியிலும் தன்னுடைய கிளையை பரப்பி டோயோட்டா நிறுவனத்திற்கு மிகப்பெரிய போட்டியாளராக திகழ்கின்றது

இவ்வாறு சாதாரண நிலையிலும் சிறந்த புத்தாக்கங்களை கொண்டு எந்தவொரு இக்கட்டான நிலையிலும் தளர்ந்துவிடாமல் விடாமுயற்சிசெய்தால் வெற்றிஎனும் இலக்கை அடையமுடியும் என்பதே இந்த ஹோண்டா நிறுவனத்தின் வளர்ச்சிபாதையாகும் என்பதை மனதில் கொள்க

செவ்வாய், 23 அக்டோபர், 2018

ஒருநபர் நிறுமம்(One person company(OPC))


ஒருநபர் நிறுமம்(One person company(OPC))என்ற கருத்தமைவு முதன்முதலில் இந்திய நிறுமங்களின் சட்டம்2013 இன் கீழ் விதி2014ல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது தனிப்பட்ட நபர்ஒருவர் எந்தவொரு வியாபாரத்தையும் அதிலும் தற்போதைய மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் சேவைத்துறையிலும் தனிநபர் நிறுவனம் என்பதற்கு பதிலாக பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஒருநபர்நிறுமாக துவங்குவது என்பது பல்வேறு வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்குகின்றது அதாவது தனியொருநபர்எவ்வளவு முதலீடு செய்துள்ளாரோ அந்தஅளவிற்குமட்டுமே அந்தநிறுமத்தின் பொறுப்பாகும் எனஒருநபர் நிறுமம்(One person company(OPC)) என்பதை நிறுமங்களின் சட்டம் 2013 வரையறுக்கின்றது மேலும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 2(62) இன் படி இந்த ஒருநபர் நிறுமம்(One person company) என்பது ஒரு நிறுமமானது ஒரேயொரு உறுப்பினர் மட்டும் கொண்டது என வரையறுக்கின்றது நிறுமங்களின் சட்டம்2013 இன்படி ஒரு நபர் நிறுமம் (OPC) என்பது 1.பதிவுசெய்யப்பட்ட ஒரு நபர் நிறுமத்தின் (OPC) பங்குமூலதனம் ரூ. 50 லட்சத்திற்கு மேல் இருந்தால் அல்லதுகடந்த மூன்று வருடங்களின் சராசரியான வருடாந்திர வருவாயானது ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் அது ஒரு நபர் நிறுமம் (OPC) என்ற தகுதியை இழக்கும் 2.ஒரு நபர் நிறுமத்தின் (OPC) உறுப்பினராக அல்லது நியமனஉறுப்பினராக அல்லது பயன்பெறும் பங்குஉரிமையாளராக18 வயது பூர்த்தியடையாத சிருவர்கள் ஆகமுடியாது 3. நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 8 கீழ்அல்லாமல் பதிவுசெய்யப்பட்டு நடப்பில் இயங்கிகொண்டிருக்கும் தனியார் வரையறுக்கப்பட்டநிறுமத்தின் பங்கு மூலதனம் ரூ. 50 லட்சத்திற்குமிகாமலும் கடந்த மூன்று வருடங்களின் சராசரியான வருடாந்திர வருவாயானது ரூ.2 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அந்நிறுமத்தின் பொதுபேரவைக்கூட்டத்தில் சிறப்பு தீர்மாணத்தினை நிறைவேற்றுவதன் வாயிலாக அதனை ஒரு நபர் நிறுமமாக (OPC) மாற்றி-யமைத்து கொள்ளமுடியும் தனிநபர்நிறுவனம் என்பதற்கும் ஒருநபர் நிறுமம்(One person company(OPC)) என்பதற்கும் உள்ள வேறுபாடுகள் பின்வருமாறு 1தனிநபர்நிறுவனம் என்பதில் அதன் உரிமையாளர் அல்லது சொந்தக்காரர் என்பவரும் அந்த தனிநபரும் ஒருவரேயாவார்கள். ஆனால் ஒருநபர் நிறுமம் (OPC)என்பதில் சட்டப்படி அந்த நிறுமத்தின் உரிமையாளர் அல்லது சொந்தக்காரர் என்பவர் வேறு அந்த தனிநபர் என்பவர் வேறுஆவார் 2. தனிநபர்நிறுவனத்தின் பொறுப்புகள் வரையறுக்கப்படாதது ஆனால் ஒருநபர் நிறுமத்தின்(OPC) பொறுப்புகள் வரையறுக்கப்பட்டதாகும் 3. தனிநபர்நிறுவனத்தின் உரிமையாளர் இறந்துபோனால் அந்தநிறுவனத்தின் வாழ்வும் அதோடுமுடிவடைந்து மூடப்பட்டுவிடும் ஆனால் ஒருநபர் நிறுமம்(OPC) என்பதில் அதிலுள்ள ஒரே உறுப்பினர் இறந்தாலும் அந்த நிறுமம் சட்டப்படி கலைக்காத வரை தொடர்ந்து செயலில் இருக்கும் 4 தனிநபர்நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடன்கள் அந்த தனிப்பட்ட நபரின் சொந்த பொறுப்பாகும் ஆனால் ஒருநபர் நிறுமத்திற்கு(OPC) வழங்கப்படும் கடன்கள் அந்தநிறுமம் மட்டுமே பொறுப்பாகும் 5.எந்தவொரு தனிப்பட்ட நபரும் தான்விரும்பும் தொழிலை வியாபாரத்தை இந்த தனிநபர்நிறுவனமாக பதிவுஎதுவும் செய்திடாமல் துவங்கமுடியும் ஆனால் ஒருநபர் நிறுமம்(OPC) என்பதில் கண்டிப்பாக நிறுமங்களின் சட்டம் 2013 விதி 2014இன்படி பதிவுசெய்திடவேண்டும் 6.தனிநபர்நிறுவனத்தின் நிதிநிலை போன்ற அனைத்து ஆவணங்களும்அந்த தனிப்பட்ட நபருக்கு உரிமையுடையதாகும் ஆனால் ஒருநபர் நிறுமத்தின் நிதிநிலை போன்ற அனைத்து ஆவணங்களும் ஒருநபர் நிறுமத்திற்கு(OPC) சொந்தமானதாகும் இந்தOPC இன் வசதி வாய்ப்புகள் பின்வருமாறு 1. இந்த கருத்தமைவு தனிப்பட்ட நிபுணத்துவத்தை பயன்படுத்தி தான் விரும்பும் வணிகத்தை சுதந்திரமாக நடத்துவதற்கு அனுதிக்கின்றது. 2.தனிநபரின் ஆளுமை உந்துதலின் அடிப்படையிலான ஒரு வணிகத் திட்டத்தையும் செயல்படுத்திடஅனுமதிக்கின்றது. 3.ஒரு OPC நிறுமத்தினை ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக துவங்கிடமுடியும் 4.இந்த OPC நிறுமத்தில் எந்தவொருநேரத்திலும் ஒரேயொரு உறுப்பினர் (Member) மட்டுமே இருப்பர் அவ்வாறே ஒரேயொரு இயக்குநரே (Director)இருப்பர் 5 இந்த OPC நிறுமத்தின் ஒரு உறுப்பினர் அல்லது அவருடைய நியமனதாரர் இந்திய குடிமகனாகவும் இந்தியாவில் குடியிருப்பவராகவும் இருக்கவேண்டும் 6. ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட OPC ஐ உருவாக்க முடியாது அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட OPC இல் நியமன உறுப்பினராக முடியாது. 7.இந்த OPC இன் உறுப்பினர் ஒருவர் மற்றொரு OPC இல் உறுப்பினராக இருந்தால் 180 நாட்களுக்குள் ஏதாவது ஒரு OPC இல் மட்டும் உறுப்பினர் என்ற தகுதியைப் பூர்த்தி செய்ய வேண்டும் இந்தOPC க்கான பல்வேறு சலுகைகள் பின்வருமாறு 1 தனிநபர் ஒருவர் தனக்கு தோன்றிடும் எந்தவொரு புதிய வியாபார கருத்துகளின் அடிப்படையில் புதிய தொழிலை துவங்குவதற்கு இந்தOPC என்பது மிகஅருமையானஎளிதான கருவியாக விளங்குகின்றது 2. புதிய தொழில் முனைவோர்க்கு இந்த OPC ஆனது ஒரு தூண்டுகோலாக அமைகின்றது 3.இதன் வரையறுக்கப்பட்ட பொறுப்பு என்ற கருத்தமைவே புதிய தொழில் துவங்குவதற்கான உத்வேகத்தை தனிநபருக்கு வழங்குகின்றது 4 ஒரு தனியார் வரையறுக்கப்பட்டநிறுமம் அல்லது (பட்டியலிடப்பட்ட அல்லது பட்டியலிடப்படாத)பொது வரையறுக்கப்பட்டநிறுமம் போன்று இந்தOPC ஆக பதிவுசெய்யப்பட்டநிறுமம் நிறுமங்களின் சட்டம் 2013 விதி போன்றவைகளில் கூறியவறான பல்வேறு படிவங்களை சமர்ப்பிக்கவேண்டு் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. 5. தற்போது நடப்பில் உள்ள உரிமையாளர்நிறுவனத்தினை எந்தவித சிரமமுமின்றி மிகஎளிதாக இந்த OPCஆக மாற்றிக்கொள்ளமுடியும். 6 துவக்கத்தில் OPC ஆக குறைந்த மூலதனத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுமமாக துவங்கி படிப்படியாக வளர்ந்தபின்னர் பெரிய தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக மாற்றியமைத்து கொள்ளலாம் 7 மூன்றாண்டிற்கு ஒருமுறை தணிக்கையாளரை மாற்றவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவமில்லாமல்தொடர்ச்சியாக ஒரே தணிக்கையாளரையே அமர்த்தி கொள்ளலாம் 8 வருடாந்திர அறிக்கையை நிறுமச்செயலர் அல்லது இயக்குநர் கையொப்பமிட்டு சமர்ப்பித்தால் போதுமானதாகும் 9 நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 98 , பிரிவுகள் 100 முதல் 111 இன்படி ஒவ்வொரு ஆண்டும் அடுத்தாண்டு செப்டம்பர் 30 இற்குள் கண்டிப்பாக நிறுமத்தின் பொதுப்பேரவை கூட்டவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை 10. நிறுமத்தின் இயக்குநர்களின் கூட்டத்தில் ஒரேயொரு நபர் மட்டுமே இருப்பதால் கூட்டம் துவங்குவதற்கு குறைந்தபட்ச இயக்குநர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்ற நிபந்தனை எதுவும் பொருந்தாது அவ்வாறே அந்த கூட்டத்தின் அறிக்கையிலும் நிதி அறிக்கையிலும் நிர்வாக இயக்குநர் அல்லதுகுறைந்தது இரு இயக்குநர்கள் கையொப்பிடவேண்டும்என்ற நிபந்தனையும் இந்த OPCக்கு பொருந்தாது இந்த OPCஇன் ஒரேயொரு இயக்குநர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டால் போதும் அவ்வாறே கூட்டஅறிக்கையிலும் நிதிநிலை அறிக்கையிலும்அந்த ஒரேயொரு இயக்குநரே கையொப்பமிட்டால் போதுமானதாகும் OPC நிறுமத்தின் வகை பின்வருமாறு இந்த OPC ஆக நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 3(.2) இன்படி 1.வரையறுக்கப்பட்ட பங்குமூலதனம் அல்லது 2.வரையறுக்கப்பட்ட உத்திரவாதம் அல்லது 3.வரையறுக்கப்படாத நிறுமம் ஆகிய மூன்றவகையாக பதிவுசெய்து கொள்ளலாம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2018


வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டண்மை சட்டம்2008 இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான அளவில் மிகவும் அதிகமாக வியாபார உலகம் மாறிவந் துள்ளது . அதிலும்உலகம் முழுவது ஒரேபொருளாதார கிராமமாக மாறியுள்ள தற்போதைய சூழலில் இந்த இந்திய கூட்டாண்மை சட்டமானது இவ்வாறான மாறிய உலகபொருளாதாரத்திற்கு பொறுத்தமானதாக அமையவில்லை. இந்த இந்திய கூட்டாண்மைசட்டம்1932 ஆல் பின்வரும் பாதகமான செயல்கள் ஏற்படுகின்றன 1.கூட்டாண்மை நிறுவனத்தின் ஒவ்வொரு கூட்டாளியின் பொறுப்புகளும் வரையறையற்றதாக உள்ளன 2.கூட்டாளிகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் கூட்டாண்மை நிறுமத்தின் பொறுப்பினை ஏற்கவேண்டியுள்ளதுஅதனால்கூட்டாளிகளுடைய தனிப்பட்ட சொந்த சொத்துகளும் இந்த கூட்டாண்மையின்பொறுப்பிற்காக சரிகட்டும் நிலை ஏற்படுகின்றது 3 ஒரு கூட்டாளி கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெறாதவரையிலும் மற்ற கூட்டாளிகள் ஏற்று அனுமதிக்காதவரையிலும் அவர் அந்த கூட்டாண்மை நிறுமத்தில் தன்னுடைய பங்கினை மற்றவர்களுக்கு மாற்றிதர இயலாது 4 இந்த கூட்டாண்மை நிறுவனத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் கூட்டாளிகளாக சேர்த்து கொள்ளமுடியாது அதனால் வியாபாரத்திற்குகூடுதலாக தேவைப்படும் முதலீட்டினை கூடுதலான கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டுதம்முடைய வியாபாரத்தை மேலும்விரிவாக்கம் செய்திடவும் மேம்படுத்திடவும் முடியாது மேலேகூறிய காரணங்களினால் குறைந்த அளவு நிபந்தனை யுடன் நிறுமச்சட்டத்தின் பயன்களுடனும்கூட்டாண்மை நிறுமத்தின் நெகிழ்வு தன்மையுடனும் சேர்ந்த புதியவகை கூட்டாண்மை நிறுமம் தோன்றிடவேண்டிய கட்டாயத்தேவை மிக நீண்ட நாட்களாக இருந்துவந்தது மேலும் உலகளாவிய பணச்சிக்கலும் பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்ட 1980ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்அமெரிக்க ஐக்கியநாடுகளில் ஏராளமான கூட்டாண்மை நிறுமங்கள் நொடித்தநிறுமமாக அறிவிக்கப்ட்டன அதனால் பல நிறுமங்கள் பல்வேறு சட்டசிக்கல்களில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியேறமுடியாமல் தவித்துகொண்டிருந்தன அதனை தொடர்ந்து நிறுமத்தின் அனைத்து கூட்டாளிகளும் கூட்டாண்மை நிறுமத்தின் கடனாளிகளுக்கு தங்களுடைய சொந்த சொத்துகளை விற்றுகடனிற்கு ஈடுசெய்திடும் இக்கட்டான சூழலிற்கு தள்ளப்படடனர் அதனால் 1991 ஆம் ஆண்டு முதன்முதலில் கூட்டாண்மை நிறுமத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்ற கருத்துரு அமெரிக்க ஐக்கியநாடுகளின் டெக்ஸாஸ்மாநிலத்தில் அறிமுகபடுத்தப்பட்டது அதனை தொடர்ந்து அமெரிக்க ஐக்கியநாடுகளின் மிகுதி உள்ள மாநிலங்களிலும் இதற்கான சட்டத்தை வகுத்து நிறைவேற்றின அவ்வாறே இங்கிலாந்து ஆஸ்திரேலியா வளைகுடா நாடுகள் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது இந்தியாவில் இங்கிலாந்து பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2000, சிங்கப்பூர் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2005 ஆகிய இரண்டு சட்டங்களின் அடிப்படையில் சிறந்த வல்லுனர்களின் குழுவானதுபொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பது தனியானதொரு நபராகவும் அதனுடைய கூட்டாளி உறுப்பினர்கள் தனியாக இருக்குமாறும் இந்தியநாட்டில் உருவாக்க அனுதிக்கின்றது இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மையின் அடிப்படை கருத்துரு பின்வருமாறு 1இதுநிறுமங்களின்சட்டத்தின்படி வரையறுக்கப்பட்ட பொறுப்பினையும் கூட்டாண்மை நிறுமத்தின் நெகிழ்வுதன்மையும் கொண்டது 2.நிறுமங்களின் சட்டத்தின் அடிப்படையில்உருவாக்கப்படும் நிறுமம் போன்றேஇந்த நிறுமமானது அதன்கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் சேர்ந்தாலும் நிலையானதும் தனியானதுமான நிறுமமாக அதனுடைய செயல்அமைந்திருக்கும் 3.வரையறுக்கப்-பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனமானது அதனுடைய சொந்தபெயரில் சொத்துகளை வைத்திருக்கவும் ஒப்பந்தங்களை ஏற்படுத்திடவும் முடியும் .4 இது தனிப்பட்ட உருவமைப்பை கொண்டுள்ளதால் அதனுடைய சொத்துக்களின் அளவிற்கே அதனுடைய பொறுப்புகளும் இருக்கும் அதனால்அதன் கூட்டாளிகளின் பொறுப்புகள் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பின்அளவிற்குமட்டுமே பொறுப்பேற்க முடியும் .எந்தவொரு கூட்டாளியும்மற்ற கூட்டாளிகளின் தன்னிச்சையான செயல்களுக்கும் அனுமதிக்கப்படாத செயலிற்கும பொறுப்பேற்கமுடியாது அதாவது தனிப்பட்ட கூட்டாளி நபர்ஒருவர் மற்ற கூட்டாளியின் தனிப்பட்டமுறையிலான கூட்டாண்மை நிறுவனத்தின் இழப்பிற்கும் பொறுப்பிற்கும் பொறுப்பாகாமல் இதன்மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது கூட்டாளிக்களுக்கிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் அல்லது கூட்டாளிகளுக்கும் கூட்டாண்மை நிறுமத்திற்குமிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டாளிகளின் கடமைகளும் பொறுப்புகளும்பொறுப்பு வரையறுக்கப்பட்டபு கூட்டாண்மை சட்டத்திற்குள் நிருவகிக்கப்படுகின்றது அதாவது இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பது மிகமேம்பட்ட கூட்டாண்மை நிறுமம் வரையறுக்கப்பட்ட நிறுமம் ஆகிய இரண்டும் சேர்ந்த கலவையான புதிய நிறுமம் ஆகும் இந்த புதிய பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டமானது 2006இல் நாடாளுமன்றத்தில் அறிமுகபடுத்தப்பட்டு 2009 இல் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் 2009 ஆக நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு இந்தியாவில் கொண்டுவரப்பட்டது இதில் 14 பகுதிகளும் 81 பிரிவுகளும் நான்கு அட்டவணைகளையும் கொண்டுள்ளது ஒப்பந்தம் எதுவும் இல்லாத நிலையில் கூட்டாளிகளின் கடமைகளும் பொறுப்புகளும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டத்திற்குள் அட்டவணை-1இன்வாயிலாக நிருவகிக்கப்படுகின்றது தற்போது உள்ள கூட்டாண்மை நிறுமமானது இந்த சட்டத்தின்படிபொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-2 அனுமதிக்கின்றது தனியார் நிறுவனங்கள் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-3 அனுமதிக்கின்றது பங்குச்சந்தையில்பட்டியலிடப்படாத நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-4 அனுமதிக்கின்றது இந்த சட்டத்தின் நான்காவது அட்டவணைமட்டும் 31.05.2009 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது தேசிய நிறுமசட்டவாரியம் பற்றிய பிரிவுகள் தவிர இந்த சட்டத்தின் மற்றபிரிவுகள் 31.03.2009 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(n) பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பதை பற்றி வரையறை செய்கின்றது இந்த சட்டத்தின் பிரிவு 5 இன்படி எந்தவொரு தனிப்பட்டநபரும் அல்லது கூட்டுரு நிறுமமும் சேர்ந்து இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தை உருவாக்கிடமுடியும் நிறுமச்சட்டம் பிரிவு3 இன்படி 1.பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமமாக பதிவுசெய்யப்பட்ட நிறுமம் 2. இந்திய நாட்டின் எல்லைக்கு அப்பால் உருவாக்கப்பட்ட பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமம்3 இந்திய எல்லைக்கப்பால் உருவாக்கப்பட்ட நிறுமம் ஆயினும் (1) அது கூட்டுருவாக (2) நடப்பில் உள்ள சட்டத்தின்படி ஒரு கூட்டுறவுசங்கமாக பதிவுசெய்யப்பட்டிருந்த (3) நிறுமமல்லாத வேறு வகையில் கூட்டுருவாக உருவாக்கப்பட்ட அல்லது பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமமாக மத்திய அரசு அரசிதழின் அறிவிக்கப்பட்டநிறுமம் ஆகியவைஒரு கூட்டுரு நிறுமம் ஆகும் என இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(d)இல் கூட்டுரு நிறுமத்தை பற்றி வரையறுக்கப்படுகின்றது பொதுவாக நீதிமன்றத்தால்அல்லது மற்றசட்டத்தின்படிதனிநபர் ஒருவர் புத்திசுவாதினம் இல்லாதவர் எனஅறிவிக்கப்படாத எந்தவொரு நபரும் திவாலானவராகஇல்லாத நபரும் அவ்வாறு திவாலாவதற்காக பதவுசெய்யாத தனிப்பட்ட எந்தவொரு நபரும் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் கூட்டாளியாக சேரமுடியும் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் கூட்டாளியாக கண்டிப்பாகஇருக்கவேண்டும்

சனி, 20 அக்டோபர், 2018

ஒரு ஏழை சிறுவியாபாரி ஆனதெவ்வாறு


10 அல்லது 12 வயது உடைய அநாதை சிறுவன் ஒருவன் தொடர்வண்டி நிலையத்தின் மேடைமீது வந்து நின்ற விரைவு வண்டியின் சன்னல் ஓரம் தன்னுடைய வயிற்று பசிக்காக அனைவரிடமும் பொருளுதவி தருமாறு இறஞ்சி கேட்டுகொண்டிருந்தான் அந்த சிறுவனை அழைத்து அவனிடம் ரூ.200/- கொடுத்தவுடன் மிகஅதிர்ச்சியாகநின்று ஐயா இவ்வளவு தொகை தேவையில்லை ஐயா என கூவினான் தம்பி இவ்வாறு பிச்சை எடுக்கவேண்டாம் இந்த தொகையை கொண்டு மாத வாராந்திர இதழ்களை வாங்கி வந்து இதே தொடர்வண்டி பெட்டிக்குள் சென்று விற்றுவிட்டு வா என அறிவுறுத்திய வுடன் அந்த சிறுவனும் உடன் நான் வழங்கிய தொகைக்கு ஏற்ப மாத வாராந்திர இதழ்களை வாங்கி கொண்டு தொடர்வண்டி பெட்டிக்குள் புகுந்து அதனை ரூ.250/-விற்றுவந்தான் என்னிடம் கொண்டுவந்து அந்த பணம் ரூ.250/- முழுவதும் என்னிடம் கொடுத்தான் அதில் என்னுடைய ரூ.200/- ஐ மட்டும் நான் எடுத்துகொண்டு மிகுதி ரூ.50/-அவனிடம் வழங்கி இன்று இனி பிச்சை எடுக்கவேண்டாம்இதனை இன்றைய செலவிற்கு வைத்து கொள் இவ்வாறு பிச்சைஎடுக்கவேண்டாம் அதற்கு பதிலாக இந்த ரூ 1000/- வைத்துகொண்டு இதேபோன்று தினமும் மாத வாராந்திர இதழ்களை வாங்கி வந்து தொடர்வண்டி நிலையத்திற்குள் வந்து நிற்கும் தொடர்வண்டி பெட்டிக்குள் விற்று வரும் வருமானத்தை கொண்டு பிச்சை எடுக்காமல் உழைத்து பிழைத்துகொள் அடுத்தமாதம் இதே தொடர்வண்டியில் நான் வருவேன் அப்போது இந்த தொகை ரூ 1000/- எனக்கு திருப்பி கொடுத்தால் போதும் என அறிவுரை கூறி அனுப்பினேன் தொடர்வண்டியும் தன்னுடைய பயனத்தை துவங்கியது

வெள்ளி, 19 அக்டோபர், 2018

சரக்கு சேவைவரி அறிமுகம்


தற்போது உலகில் ஏறத்தாழ 150 நாடுகள் இந்த சரக்கு சேவைவரியை நடைமுறைபடுத்திவருகின்றன.அதாவது பல்வேறு உலகநாடுகளிலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்துவந்த மறைமுகவரிகளுக்கு மாற்றாகஅந்தந்த நாடுகளிலும் நாடுமுழுவதும் ஒரேயொரு வரியை செயல்படுத்துவதை போன்று இந்தியாவிலும் மத்திய அரசின் சென்வாட்வரி,மாநிலஅரசின் மதிப்புக்கூட்டுவரி (Value Added Tax (VAT))ஆகிய இரண்டையும் நடைமுறை படுத்தியதே இந்த சரக்கு சேவைவரியின் முதல்படி-முறையாகும் இதற்கடுத்து தற்போது அடுத்தபடிமுறையாக எந்தவொரு பொருளை அல்லது சேவையை வழங்கும்போதும் அதன்மீது மத்தியஅரசும் மாநில அரசுகளும் ஒன்றாக விதிக்க அதிகாரம் கொண்ட புதிய சரக்கு சேவைவரி எனும் புதிய வரிவிதிப்பு முறையை நடைமுறை படுத்தப்படவுள்ளது இந்த சரக்கு சேவைவரியானது வழங்கப்-படுகின்ற அனைத்து பொருட்களுக்கும் அலலது சேவைகளுக்கும் நாடு-முழுவதும் ஒரேமாதிரியான அளவில் வரியை விதிக்க வழிவகுக்கின்றன மேலும் இந்த சரக்கு சேவைவரியானது இறுதி நுகர்வேர் செலுத்தமாறு செய்யப்பட்டுள்ளது மேலும் தான் வழங்கும் பொருட்கள் அல்லது சேவைகளுக்கு செலுத்தவேண்டிய இந்த சரக்கு சேவைவரியில் தான் இதற்காக ஏற்கனவே பெற்ற பொருட்களுக்காக அல்லது சேவைகளுக்காக செலுத்திய வரியை கழித்துகொண்டு(input tax credit (ITC)) நிகரமாக மதிப்புக்கூட்டிய அளவிற்கு மட்டும் இந்த சரக்கு சேவைவரியை செலுத்திட அனுமதிக்கின்றது . நம்முடைய இந்திய நாட்டில் இந்த சரக்கு சேவைவரியை அறிமுகபடுத்துவதன் அடிப்படைநோக்கமே மறைமுகவரிசெலுத்துவதை எளிமைபடுத்துவதேயாகும் அதாவது தற்போது நடைமுறையில் உள்ள மறைமுகவரிகளானது வரியின்மீது வரியாக விதிக்கப்பட்டு இறுதியில் நுகர்வோருக்கு அதிக சுமை ஏற்படுகின்றது எடுத்துகாட்டாக உற்பத்தியாளர் பொருள் ஒன்றை உற்பத்தி செய்திடும்போது அவரால் மத்தியஅரசிற்கு செலுத்தப்படும் உற்பத்திவரியையும் சேர்த்து தற்போது விற்பணைவரி கணக்கிடப்பட்டு செலுத்தபடுகின்றது அதனை தவிர்த்து இந்த புதிய சரக்குசேவை வரியானது பொருளின் அல்லது சேவையின் அடிப்படைவிலையில் மட்டுமே கணக்கிடப்படுகின்றது பொருள் அல்லது சேவை வழங்குதலின் தொடர்சங்கிலியில் வரியின்மீது வரிஎன்றில்லால் மதிப்புகூட்டப்பட்ட அளவிற்கு மட்டும் வரியை கணக்கிட்டு செலுத்திடுமாறும் உண்மையில் இறுதி பயனாளர்மட்டும் இந்த வரியை செலுத்திடுமாறும் கட்டமைக்கப்-பட்டுள்ளது 1. இந்த சரக்கு சேவைவரியின் கீழ் துவக்க வரம்பாக பத்துஇலட்சம் வருடாந்திர வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது 2. இதனால் அரசிற்கு அதிக வருமானஇழப்பு ஏற்படும் 3நடுத்தர நிறுவனங்களும் இந்த சரக்கு சேவைவரியின் கீழ் கொண்டுவரப்படுகின்றது 4 உற்பத்திவரி சேவைவரி விற்பணைவரி உள்நுவைவரி போன்ற பல்வேறு வரிகள் அனைத்திற்கும் சேர்ந்து அல்லது அவைகளுக்கு பதிலாக இந்த ஒரேயொருவரியின்கீழ் கொண்டுவரமுடியுமா 5. இந்த வரியை அறிமுக-படுத்துவதற்காக மத்தியஅரசு மத்தியசரக்குசேவைவரி(Central GST (CGST))எனும் சட்டத்தையும் ஒவ்வொரு மாநிலமும் மாநில சரக்குசேவைவரி(State GST (SGST)) எனும் சட்டத்தையும் அமோதித்து சட்டமாக இயற்றவேண்டும் 6. தற்போது அந்தந்த மாநிலங்களும் தத்தமது வருவாய் செலவினங்களுக்கு ஏற்ப போதுமான அளவு வரிவிகித்தை கூட்டவோ குறைக்கவோ செய்கின்றன இந்த புதிய சரக்கு சேவைவரியில் அவ்வாறான நடைமுறை சாத்தியமாகுமா 7.தற்போது உள்ள வரிவசூலித்தல் கட்டமைவினை இந்த புதிய சரக்குசேவைவரி யை நடைமுறைபடுத்துதற்கு போதுமானதாக இருக்குமா என்பனபோன்ற சவால்கள் இந்த சரக்கு சேவைவரியை அறிமுகபடுத்தில் எதிர்கொள்ள வேண்டியவைகளாக உள்ளன இந்த புதிய சரக்குசேவைவரி யை நடைமுறைபடுத்துதால் ஏற்படும் வசதிவாய்ப்புகள் பின்வருமாறு 1.தற்போது ஒருநிறுவனம் பல்வேறு நிலைகளிலும் பல்வேறு வகையான வரிகளை கணக்கிட்டு செலுத்தவேண்டியுள்ளது அதனால் இவ்வாறான வரிகளை கணக்கிட்டு செலுத்துவதே தம்முடைய முதன்மையான பணியாக செய்யவேண்டியுள்ளது இவை இந்த புதிய முறையில் தவிர்க்கபடுகின்றன 2.தற்போது உற்பத்தி வரிக்கென்றும் சேவைவரிக்கென்றும் விற்பணைவரிக்கென்றும் நுழைவுவரிக்கென்றும் தனித்தனியான கட்டமைப்பை நிறுவுகைசெய்து வரிகளை வசூலிப்பதற்கு அதிக செலவாகின்றது 3.ஒருசிலபொருட்கள்அல்லது சேவைகள் இந்த கட்டமைப்பின்கீழ் கொண்டு வரப்படாமலேயே உள்ளன இவையெல்லாவற்றி்கும் ஒரேதீர்வாக இந்த புதிய சரக்குசேவைவரியெனும் ஒரேயொரு கட்டமைப்பின் கீழ் அனைத்து வரிகளும் கொண்டுவரப்படுகின்றன 4. வரியின்மீது வரியை செலுத்தாமலும் பல்வேறுவகையான வரிகளை செலுத்தாமலும் ஒரேயொருவரியை செலுத்தினால் போதும் என்ற புதிய கொள்கை நடைமுறைபடுத்தபடுகின்றது இவ்வாறு வரியின்மீது வரிஎன்றில்லாமல் ஒரேயொரு வரியை அறிமுகபடுத்துவதால் நுகர்வோருக்கு வரிச்சுமை குறைந்து பொருட்களின் அல்லது சேவைகளின் பெறுவதற்கான செலவு குறைகின்றது 5.இந்த புதிய சரக்கு சேவைவரி விதிப்பு முறையால் மாநிலஅரசுகளும் சேவையின்மீது வரிவிதித்திடும் அதிகாரம் பெறுகின்றன இதுவரை இந்த சேவைவரியானது மத்தியஅரசிற்கானதாக உள்ளது 6.மேலும்CST எனும் மத்தியவிற்பணைவரி அறவே நீக்கம் செய்யப்படுகின்றது 7.பொருட்களை அல்லது சேவைகளை வழங்கும் தொடர்சங்கிலியில் தான் செலுத்தவேண்டிய வரியில் ஏற்கனவே செலுத்தியவரியை சரிசெய்துகொள்ளும் வசதி மதிப்புகூட்டு வரியை போன்று இதில் அறிமுகப்-படுத்தப்டபட்டுள்ளது மத்திய அரசும் மாநிலஅரசுகளுக்கும் ஒன்றாக சேர்ந்த ஒரேயொருவரியான இந்த சரக்குசேவைவரியெனும் ஒரேவரிவிதிப்பின்கீழ் கொண்டுவரப்படுகின்றது இந்த வரிவிதிப்பின்கீழ் விலக்கு அளிக்கப்பட்டவைதவிர மிகுதியுள்ள அனைத்து பொருட்களுக்கும் அல்லது சேவைகளுக்கும் இந்த சரக்குசேவைரி பொருந்தும் அதனோடு இந்த புதிய வரிவிதிப்பு முறையில் Central GST (CGST)வரியை மத்தியஅரசிற்கும் State GST (SGST)வரியை அந்தந்த மாநிலஅரசிற்கு செலுத்தபடவேண்டும் மேலும் இவ்வாறு செலுத்தப்படும் இவ்வாறான வரிகளனைத்தும் தனித்தனி வரியாக கருதப்படும் மேலும் பொருட்களின் அல்லது சேவைகளின் வழங்குவதன் தொடர்சங்கிலியில் ஒருவர் ஏற்கனவே செலுத்திய Central GST (CGST)வரியை தான் செலுத்தவேண்டிய Central GST (CGST)வரியை மட்டுமே கழித்து கொண்டு நிகவரியை செலுத்தவேண்டும் அவ்வாறே ஒருவர் ஏற்கனவே செலுத்திய அந்தந்த மாநிலத்தின் State GST (SGST)வரியை தான் செலுத்தவேண்டிய அந்தந்தமாநில State GST (SGST)வரியை மட்டுமே கழித்து கொண்டு நிகவரியை செலுத்தவேண்டும். மிகமுக்கியமாக தற்போது நடை-முறையில் பொருட்களுக்கான வரியில் பொருட்களுக்கான வரியிலும் சேவைக்கான வரியை சேவைகான வரியில்மட்டுமே கழித்து கொள்ள அனுமதிக்கப்படும் நடைமுறை உள்ளது மேலும் தற்போது மத்தியவிற்பனை வரிசெலுத்திடும்போதுஏற்கனவே செலுத்திய மத்திய விற்பணை வரியை கழித்து கொள்ளும் நடைமுறை அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் மத்தியஅரசின்Central GST (CGST) அல்லது மாநிலஅரசின் State GST (SGST)வரியை ஒன்றுகொன்று சரிசெய்து கொள்ளமுடியாது என்ற தகவலை மனதில் கொள்க. இந்த புதிய முறையில் ஒரேமாதிரியான வழிமுறைகள் நடைமுறைபடுத்தபடுவதால் அனைவருக்கும் இதனை பயன்படுத்தி செயல்படுத்துவது அல்லது பின்பற்றுவது மிக எளிதாக இருக்கும் அதைவிட இந்த வரிவிதிப்பிற்கான காலமுறைஅறிக்கைகளின் வடிவமைப்பானது குழப்பம் எதுவுமில்லால் ஒரேமாதிரியாக இருக்கும் ஒவ்வொரு வரிசெலுத்துவோருக்கும் வருமானவரி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பேன் எண்ணுடன் இணைந்த புதிய சுட்டிஎண் இந்த புதிய சரக்கு சேவைவரிக்காக வழங்கப்படும் ஒட்டுமொத்தமாக கூறுவதெனில் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு வகையான அனைத்து வரிகளும் அறவேநீக்கம் செய்யப்பட்டு புதிய சரக்குசேவைவரிஎன்ற ஒரேகுடையின் கீழ் கொண்டுவரபபடுகின்றது இந்தியா முழுவதும் ஒரேஅளவான வரிவிதிப்பு நடைமுறைபடுத்தப்படவுள்ளது இந்த சரக்கு சேவைவரி எனும் புதிய வரிவிதிப்புமுறையில் ஒட்டுமொத்தவரிச்சுமையானது நுகர்வோருக்கு குறைவாக இருப்பதால் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு கூடுதலான தேவை ஏற்பட்டு இந்திய பொருளாதாரம் வளர்ச்சிபெறும் என்பது திண்ணம்

வியாழன், 18 அக்டோபர், 2018

சரக்கு சேவைவரி ( சசேவ)கணக்கீடு ஒரு எடுத்துகாட்டுடன்


ஜூலை2017 இலிருந்து நடைமுறைபடுத்தியுள்ள சரக்கு சேவைவரியானது ( சசேவ(GST)) ஏற்கனவே நடைமுறையில் இருந்த மத்தியஅரசின் உற்பத்திவரி சேவைவரி மாநிலஅரசின் மதிப்புக்கூட்டுவரி நுழைவரி போன்ற அனைத்த வரிகளையும் ஒன்றிணைந்த ஒருவரியாகும் இந்த புதிய சரக்குசேவரி( சசேவ) யானது உற்பத்தி செய்கின்ற இடத்திற்கு பதிலாக நுகர்வுசெய்கின்ற இடத்தில் விதிக்கபடுதே மிகமுக்கிய திருப்பமாகும் நுகர்வோர் அல்லாத நபர்ஒருவர் பெறும் பொருள் அல்லது சேவைக்கு செலுத்திடும் வரியை தாம் வேறொரு நபருக்கு வழங்கிடும்போது தான் ஏற்கனவே செலுத்திய வரியை கழித்து சரிசெய்து கொண்டு நிகரவரியைமட்டும் செலுத்தினால் போதும் அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியை(VAT) போன்று விதிக்கப்படுவதே இந்த சரக்கு சேவைவரியின் முக்கியதன்மையாகும் பொதுவாக ஒரு பொருளை அல்லது சேவையை வழங்கிடும் தொடர் சங்கிலியில் உற்பத்தியாளர் ,மொத்தவிற்பணையாளர் சில்லறை விற்பனையாளர், நுகர்வோர் ஆகிய நான்கு நபர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் இதில் உற்பத்தியாளர் தன்னுடைய உற்பத்திக்கான மூலப்பொருளை அல்லது சேவையை பெறும்போது செலுத்திடும் உள்ளீட்டு வரியை தான் உற்பத்தி செய்திடும் பொருளை மொத்த விற்பணையாளருக்கு வழங்கும்-போது அவரிடமிருந்து வசூலிக்கும் வரியில் கழித்து சரிசெய்துகொண்டு நிகர வரியைமட்டும் செலுத்தினால் போதும் அவ்வாறே மொத்த விற்பணையாளர் தான் உற்பத்தியாளரிடமிருந்து பொருளை அல்லது சேவையை பெறும்போது செலுத்திய வரியை சில்லறை விற்பணையாளரிடம் வழங்கும்போது அவரிடமிருந்து வசூலிக்கும் வரியில் கழித்து கொண்டு நிகர வரியைமட்டும் செலுத்தினால் போதும் அதேபோன்று சில்லறை விற்பணையாளர் தான் மொத்த விற்பணை-யாளரிடமிருந்து பொருளை அல்லது சேவையை பெறும்போது செலுத்திய வரியை நுகர்வோரிடம் வழங்கும்போது அவரிடமிருந்து வசூலிக்கும் வரியில் கழித்துசரிசெய்து கொண்டு நிகர வரியைமட்டும் செலுத்தினால் போதும் இதனை விரிவாக பார்ப்பதற்குமுன் இந்த சரக்குசேவைவரியானது மாநிலத்திற்கான மாநிலசரக்குசேவைவரி(SGST)யென்றும் மத்தியஅரசிற்கான மத்திய சரக்குசேவைவரி(CGST)யென்றும் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்விற்கு ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யென்றும் இந்தியஅரசின் நேரடிஆளுகைக்கு உட்பட்ட யூனியன் பிரதேசங்களில் யூனியன் சரக்குசேவைவரி(UGST)யென்றும் நான்குவகையான சட்டங்கள் நடைமுறைபடுத்தவிருக்கின்றன மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நிகழ்விற்கான ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யின் உள்ளீட்டு வரியை மத்தியஅரசின் மத்திய சரக்குசேவைவரி(CGST)யிலும் ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யிலும் கழித்துசரிசெய்து கொண்டு நிகரவரிமட்டும் செலுத்திடலாம் அவ்வாறே மத்திய சரக்குசேவைவரி(CGST)யின் உள்ளீட்டு வரியை மத்தியஅரசின் மத்திய சரக்குசேவைவரி(CGST)யிலும் ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யிலும் கழித்துசரிசெய்து கொண்டு நிகரவரிமட்டும் செலுத்திடலாம் மேலும் மாநிலஅரசின் மாநிலசரக்குசேவைவரி(SGST)யின் உள்ளீட்டு வரியை ஒருங்கிணைந்த சரக்குசேவைவரி(IGST)யிலும் மாநிலசரக்குசேவைவரி(SGST) யிலும் கழித்துசரிசெய்து கொண்டு நிகரவரிமட்டும் செலுத்திடலாம்
இந்த நிகழ்வை ஒரு எடுத்துகாட்டுடன் காண்போம் ஒரு உற்பத்தியாளர் வழங்கிடும் பொருள் அல்லது சேவைக்கு CGST வரிவிகிதம் 10% என்றும் SGSTவரிவிகிதம் 5% என்றும் அவர் தன்னுடைய உற்பத்திபொருளிற்கு அல்லது சேவைக்கு தேவையான மூலப்பொருளை ரூபாய்.1000/- அடக்க விலையில் பெறுகின்றார் அப்போது அவர் மத்தியசசேவரியாக ரூபாய்.100/- உம் மாநிலசசேவரியாக ரூபாய்.50/- உம் ஏற்கனவே செலுத்தியிருக்கின்றார் எனக்கொள்வோம் இவர் அதனுடன் ரூபாய்.300/- இற்கு மதிப்புகூட்டி மொத்த-விற்பணையாளருக்கு ரூபாய்.1300/- இக்கு வழங்குகின்றார் எனில் இவர் மத்தியஅரசின் மசசேவரியாக ரூபாய்.130/-உம் மாநிலஅரசின் மாசசேவரியாக ரூபாய்.65/-உம் செலுத்திடவேண்டுமெனில் இந்த உற்பத்தியாளர் மத்திய அரசிற்கு செலுத்தவேண்டிய மசசேவரியான ரூபாய்.130/ இல் இவர் ஏற்கனவே மத்தியஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டு மசசேவரியான ரூபாய்.100/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.30/-மட்டும் செலுத்தினால் போதும். அவ்வாறே இந்த உற்பத்தியாளர் மாநிலஅரசிற்கு செலுத்தவேண்டிய மாசசேவரியான ரூபாய்.65/- இல் இவர் ஏற்கனவே மாநில அரசிற்கு செலுத்திய உள்ளீட்டுமாசசேவரியானரூபாய்.50/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.15/-மட்டும் செலுத்தினால் போதும் பின்னர் மொத்தவிற்பணையாளர் இதன்மீது ரூபாய்.200/- இக்கு மதிப்பினை கூட்டி மொத்தம் ரூபாய்.1500/- இக்குசில்லறை விற்பணையாளருக்கு வழங்குகின்றோர் எனக்கொள்வோம் இவர் மத்தியஅரசின் மசசேவரியாக ரூபாய்.150/-உம் மாநிலஅரசின் மாசசேவரியாக ரூபாய்.75/-உம் செலுத்திட-வேண்டு மெனில் இந்த உற்பத்தியாளர் மத்தியஅரசிற்கு செலுத்தவேண்டிய மசசேவரியான ரூபாய்.150/ இல் இவர் ஏற்கனவே மத்தியஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டு மசசேவரியானரூபாய்.130/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.30/-மட்டும் செலுத்தினால் போதும். அவ்வாறே இந்த மொத்தவிற்பணையாளர் மாநிலஅரசிற்கு செலுத்தவேண்டிய மாசசேவரியான ரூபாய்.75/- இல் இவர் ஏற்கனவே மாநிலஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டுமாசசேவரியானரூபாய்.50/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.15/-மட்டும் செலுத்தினால் போதும் இதன்பின்னர்சில்லரை விற்பணையாளர் இதன்மீது ரூபாய்.100/- இற்கு மதிப்புகூட்டி நுகர்வோருக்கு ரூபாய்.1600/- இக்கு வழங்குகின்றார் எனில் இவர் மத்தியஅரசின் மசசேவரியாக ரூபாய்.160/-உம் மாநிலஅரசின் மாசசேவரியாக ரூபாய்.80/-உம் செலுத்திடவேண்டுமெனில் இந்த சில்லறைவிற்பணையாளர் மத்தியஅரசிற்கு செலுத்தவேண்டிய மசசேவரியான ரூபாய்.160/ இல் இவர் ஏற்கனவே மத்தியஅரசிற்கு செலுத்திய உள்ளீட்டு மசசேவரியான ரூபாய்.150/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.10/-மட்டும் செலுத்தினால் போதும். அவ்வாறே இந்த சில்லறைவிற்பணையாளர் மாநிலஅரசிற்கு செலுத்தவேண்டிய மாசசேவரியான ரூபாய்.80/- இல் இவர் ஏற்கனவே மாநில அரசிற்கு செலுத்திய உள்ளீட்டுமாசசேவரியானரூபாய்.75/-ஐ கழித்து சரிசெய்து கொண்டு நிகரமாக ரூபாய்.5/-மட்டும் செலுத்தினால் போதும் ஒட்டுமொத்தமாக உற்பத்தியாளர் மொத்தவிற்பணையளர் சில்லரை விற்பணையாளர் ஆகியோர் தாம் பொருளை அல்லது சேவையை வழங்கிடும்போது மத்தியஅரசிற்கு Rs. 60 (= Rs. 30+Rs. 20+Rs. 10) மட்டும் CGST ஆகவும் அவ்வாறே மாநில அரசிற்கு Rs. 80 (= Rs. 65+Rs. 10+Rs. 5) SGST ஆகவும் உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோர் வரையிலான இந்த வழங்கலின் தொடர் சங்கிலியில் மதிப்பு-கூட்டப்பட்டஅளவிற்கு மட்டும் மொத்த வரியில் அவரவர்களும் தாம் ஏற்கனவே செலுத்திய உள்ளீட்டு வரியை கழித்து சரிசெய்துகொண்டு நிகரவரியை மட்டும் செலுத்துகின்றனர் இதனை பின்வரும் அட்டவணையின்வாயிலாக எளிதாக அறிந்து கொள்ளலாம்

புதன், 17 அக்டோபர், 2018

தொழிலாளர்களுக்கிடையான நம்பிக்கையை வளர்த்தல் அல்லது மேம்படுத்துதலுக்கான அடிப்படைசெயல்கள்


ஏதோஒருவர் மற்றொருவரிடமிருந்து ஏதனும் முழுமையான நிலையானதொரு தீர்வு தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பதே நம்பிக்கையின் அடிப்படையாகும் அவ்வாறான எதிர்பார்ப்பு நிறைவடையாதபோது அதாவது அந்த நம்பிக்கை பொய்த்திடும்போது அவர்களுக்கிடையுள்ள உறவில் விரிசல் ஏற்படுகின்றது இந்நிலையில் இந்த நம்பிக்கையானது அவ்வருவர்களுக்கிடைய உறவை வலுபடுத்திடும் நிலையாக தொடர்ந்து பராமரித்திடும் ஒரு அத்திவாசியமானதொரு அடிப்படை கருவியாக அமைகின்றது இந்த உறவுகளானது கணவன் மனைவிக்கிடையேயான உறவு, முதலாளி தொழிளாளிக்கிடையேயான உறவு, மேலாளர் பணியாளருக்கிடையேயான உறவு ,பிள்ளைகள் பெற்றோருக்கிடையேயான உறவு ,அண்ணன் தம்பிக்கிடையேயான உறவு , அக்காதங்கைக்கிடையேயான உறவு ,வாடிக்கையாளர் வழங்கு நருக்கிடையேயான உறவு என ஏராளமான அளவில் தற்போதைய நம்முடைய சமூக சூழலில் விரிகின்றது இந்த உறவை தொடர்ந்து தக்கவைத்துகொள்ளவும் நீடித்து பராமரித்திடவும் பின்வரும் அடிப்படை வழிமுறைகளை பின்பற்றிடுக 1 நம்மை சார்ந்துள்ளவர்களுடைய அன்றாட செயல்களுக்கான நீண்டநாள் எதிர்பார்ப்புகளையும் குறுகிய எதிர்பார்ப்புகளையும் நம்மால் உறுதியாக பூர்த்திசெய்திடமுடியும் என்றபொறுப்பினை உறுதிபடுத்திடுக 2 கொஞ்சமாக பேசவும் அதிகமாக கவணிக்கவும் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் நமக்கு ஒரேஒரு நாக்கும் இரண்டு காதுகளும் இயற்கை வழங்கியிருக்கின்றது .அதனால் நாம் எப்போதும் நம்மை சுற்றியுள்ளமற்றவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை முதலில் கவணிக்கவும்,பிறகு கொஞ்சமாக பேசுக. 3எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் பிறரிடம் நடந்துகொள்க அதாவது நம்மைபற்றிய நம்பிக்கையானது ஒரேயொருநொடியில் கண்ணாடி மாளிகை உடைவதைபோன்று தூள்தூளாகிவிடும் ஆனால்அந்த நம்பிக்கையை நம்மீது வளர்த்திட நீண்ட நாட்களாகும் என்பதை மனதில் கொள்க 4 நாம்கூறிய வாக்குறுதியைஎந்தவிலைகொடுத்தாவது காத்திடவேண்டும் அவ்வாறு வாக்குறுதியை காத்திட இயலவில்லை யெனில் உடன் நேரடியாக உண்மையாகவும் நேர்மையாகவும் அதனை தன்னால் நிறைவேற்ற முடியாததை கூறி அதற்கான மாற்றுவழியை காண முயன்றிடுக 5 எப்போதும் மாறிகொண்டே இருக்கும் மனநிலையை விட்டிடுக. அதாவது நம்முடைய சொல்லும் செயலும் ஒரேமாதிரியாக மாறாத நிலையானதாக இருந்திடுமாறு பார்த்துகொள்க 6 ஆங்கிலத்தில் Sorry ,Thanks ஆகிய இரண்டும் பொன்னெழுத்துகளாகும் ஏனெனில் நம்மையறியாமல் நாம் ஏதேனும் தவறுசெய்திடும்போது உடனடியாக சம்பந்தபட்டவரிடம் அதற்காக மன்னிப்பு கோருவதும் அவ்வாறே எந்தவொரு செயல் அல்லது உரையாடல் முடியும்போதும் எதிரில் இருப்பவருக்கு நாம் நன்றி சொல்வதும் மற்றவர்களிடம் நம்மைபற்றிய நல்ல உயர்வான எண்ணத்தை நண்ணம்பிக்கையை உருவாக்கிடும் அடிப்படை செயலாகும்

செவ்வாய், 16 அக்டோபர், 2018

வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டண்மை சட்டம்2008


இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான அளவில் மிகவும் அதிகமாக வியாபார உலகம் மாறிவந் துள்ளது . அதிலும்உலகம் முழுவது ஒரேபொருளாதார கிராமமாக மாறியுள்ள தற்போதைய சூழலில் இந்த இந்திய கூட்டாண்மை சட்டமானது இவ்வாறான மாறிய உலகபொருளாதாரத்திற்கு பொறுத்தமானதாக அமையவில்லை. இந்த இந்திய கூட்டாண்மைசட்டம்1932 ஆல் பின்வரும் பாதகமான செயல்கள் ஏற்படுகின்றன 1.கூட்டாண்மை நிறுவனத்தின் ஒவ்வொரு கூட்டாளியின் பொறுப்புகளும் வரையறையற்றதாக உள்ளன 2.கூட்டாளிகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் கூட்டாண்மை நிறுமத்தின் பொறுப்பினை ஏற்கவேண்டியுள்ளதுஅதனால்கூட்டாளிகளுடைய தனிப்பட்ட சொந்த சொத்துகளும் இந்த கூட்டாண்மையின்பொறுப்பிற்காக சரிகட்டும் நிலை ஏற்படுகின்றது 3 ஒரு கூட்டாளி கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெறாதவரையிலும் மற்ற கூட்டாளிகள் ஏற்று அனுமதிக்காதவரையிலும் அவர் அந்த கூட்டாண்மை நிறுமத்தில் தன்னுடைய பங்கினை மற்றவர்களுக்கு மாற்றிதர இயலாது 4 இந்த கூட்டாண்மை நிறுவனத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் கூட்டாளிகளாக சேர்த்து கொள்ளமுடியாது அதனால் வியாபாரத்திற்குகூடுதலாக தேவைப்படும் முதலீட்டினை கூடுதலான கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டுதம்முடைய வியாபாரத்தை மேலும்விரிவாக்கம் செய்திடவும் மேம்படுத்திடவும் முடியாது மேலேகூறிய காரணங்களினால் குறைந்த அளவு நிபந்தனை யுடன் நிறுமச்சட்டத்தின் பயன்களுடனும்கூட்டாண்மை நிறுமத்தின் நெகிழ்வு தன்மையுடனும் சேர்ந்த புதியவகை கூட்டாண்மை நிறுமம் தோன்றிடவேண்டிய கட்டாயத்தேவை மிக நீண்ட நாட்களாக இருந்துவந்தது மேலும் உலகளாவிய பணச்சிக்கலும் பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்ட 1980ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்அமெரிக்க ஐக்கியநாடுகளில் ஏராளமான கூட்டாண்மை நிறுமங்கள் நொடித்தநிறுமமாக அறிவிக்கப்ட்டன அதனால் பல நிறுமங்கள் பல்வேறு சட்டசிக்கல்களில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியேறமுடியாமல் தவித்துகொண்டிருந்தன அதனை தொடர்ந்து நிறுமத்தின் அனைத்து கூட்டாளிகளும் கூட்டாண்மை நிறுமத்தின் கடனாளிகளுக்கு தங்களுடைய சொந்த சொத்துகளை விற்றுகடனிற்கு ஈடுசெய்திடும் இக்கட்டான சூழலிற்கு தள்ளப்படடனர் அதனால் 1991 ஆம் ஆண்டு முதன்முதலில் கூட்டாண்மை நிறுமத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்ற கருத்துரு அமெரிக்க ஐக்கியநாடுகளின் டெக்ஸாஸ்மாநிலத்தில் அறிமுகபடுத்தப்பட்டது அதனை தொடர்ந்து அமெரிக்க ஐக்கியநாடுகளின் மிகுதி உள்ள மாநிலங்களிலும் இதற்கான சட்டத்தை வகுத்து நிறைவேற்றின அவ்வாறே இங்கிலாந்து ஆஸ்திரேலியா வளைகுடா நாடுகள் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது இந்தியாவில் இங்கிலாந்து பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2000, சிங்கப்பூர் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம்2005 ஆகிய இரண்டு சட்டங்களின் அடிப்படையில் சிறந்த வல்லுனர்களின் குழுவானதுபொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பது தனியானதொரு நபராகவும் அதனுடைய கூட்டாளி உறுப்பினர்கள் தனியாக இருக்குமாறும் இந்தியநாட்டில் உருவாக்க அனுதிக்கின்றது இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மையின் அடிப்படை கருத்துரு பின்வருமாறு 1இதுநிறுமங்களின்சட்டத்தின்படி வரையறுக்கப்பட்ட பொறுப்பினையும் கூட்டாண்மை நிறுமத்தின் நெகிழ்வுதன்மையும் கொண்டது 2.நிறுமங்களின் சட்டத்தின் அடிப்படையில்உருவாக்கப்படும் நிறுமம் போன்றேஇந்த நிறுமமானது அதன்கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் சேர்ந்தாலும் நிலையானதும் தனியானதுமான நிறுமமாக அதனுடைய செயல்அமைந்திருக்கும் 3.வரையறுக்கப்-பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனமானது அதனுடைய சொந்தபெயரில் சொத்துகளை வைத்திருக்கவும் ஒப்பந்தங்களை ஏற்படுத்திடவும் முடியும் .4 இது தனிப்பட்ட உருவமைப்பை கொண்டுள்ளதால் அதனுடைய சொத்துக்களின் அளவிற்கே அதனுடைய பொறுப்புகளும் இருக்கும் அதனால்அதன் கூட்டாளிகளின் பொறுப்புகள் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பின்அளவிற்குமட்டுமே பொறுப்பேற்க முடியும் .எந்தவொரு கூட்டாளியும்மற்ற கூட்டாளிகளின் தன்னிச்சையான செயல்களுக்கும் அனுமதிக்கப்படாத செயலிற்கும பொறுப்பேற்கமுடியாது அதாவது தனிப்பட்ட கூட்டாளி நபர்ஒருவர் மற்ற கூட்டாளியின் தனிப்பட்டமுறையிலான கூட்டாண்மை நிறுவனத்தின் இழப்பிற்கும் பொறுப்பிற்கும் பொறுப்பாகாமல் இதன்மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது கூட்டாளிக்களுக்கிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் அல்லது கூட்டாளிகளுக்கும் கூட்டாண்மை நிறுமத்திற்குமிடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டாளிகளின் கடமைகளும் பொறுப்புகளும்பொறுப்பு வரையறுக்கப்பட்டபு கூட்டாண்மை சட்டத்திற்குள் நிருவகிக்கப்படுகின்றது அதாவது இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பது மிகமேம்பட்ட கூட்டாண்மை நிறுமம் வரையறுக்கப்பட்ட நிறுமம் ஆகிய இரண்டும் சேர்ந்த கலவையான புதிய நிறுமம் ஆகும் இந்த புதிய பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டமானது 2006இல் நாடாளுமன்றத்தில் அறிமுகபடுத்தப்பட்டு 2009 இல் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம் 2009 ஆக நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு இந்தியாவில் கொண்டுவரப்பட்டது இதில் 14 பகுதிகளும் 81 பிரிவுகளும் நான்கு அட்டவணைகளையும் கொண்டுள்ளது ஒப்பந்தம் எதுவும் இல்லாத நிலையில் கூட்டாளிகளின் கடமைகளும் பொறுப்புகளும் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டத்திற்குள் அட்டவணை-1இன்வாயிலாக நிருவகிக்கப்படுகின்றது தற்போது உள்ள கூட்டாண்மை நிறுமமானது இந்த சட்டத்தின்படிபொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-2 அனுமதிக்கின்றது தனியார் நிறுவனங்கள் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-3 அனுமதிக்கின்றது பங்குச்சந்தையில்பட்டியலிடப்படாத நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுமம் ஆக மாற்றியமைத்து கொள்ள அட்டவணை-4 அனுமதிக்கின்றது இந்த சட்டத்தின் நான்காவது அட்டவணைமட்டும் 31.05.2009 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது தேசிய நிறுமசட்டவாரியம் பற்றிய பிரிவுகள் தவிர இந்த சட்டத்தின் மற்றபிரிவுகள் 31.03.2009 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(n) பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை என்பதை பற்றி வரையறை செய்கின்றது இந்த சட்டத்தின் பிரிவு 5 இன்படி எந்தவொரு தனிப்பட்டநபரும் அல்லது கூட்டுரு நிறுமமும் சேர்ந்து இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தை உருவாக்கிடமுடியும் நிறுமச்சட்டம் பிரிவு3 இன்படி 1.பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமமாக பதிவுசெய்யப்பட்ட நிறுமம் 2. இந்திய நாட்டின் எல்லைக்கு அப்பால் உருவாக்கப்பட்ட பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமம்3 இந்திய எல்லைக்கப்பால் உருவாக்கப்பட்ட நிறுமம் ஆயினும் (1) அது கூட்டுருவாக (2) நடப்பில் உள்ள சட்டத்தின்படி ஒரு கூட்டுறவுசங்கமாக பதிவுசெய்யப்பட்டிருந்த (3) நிறுமமல்லாத வேறு வகையில் கூட்டுருவாக உருவாக்கப்பட்ட அல்லது பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமமாக மத்திய அரசு அரசிதழின் அறிவிக்கப்பட்டநிறுமம் ஆகியவைஒரு கூட்டுரு நிறுமம் ஆகும் என இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(d)இல் கூட்டுரு நிறுமத்தை பற்றி வரையறுக்கப்படுகின்றது பொதுவாக நீதிமன்றத்தால்அல்லது மற்றசட்டத்தின்படிதனிநபர் ஒருவர் புத்திசுவாதினம் இல்லாதவர் எனஅறிவிக்கப்படாத எந்தவொரு நபரும் திவாலானவராகஇல்லாத நபரும் அவ்வாறு திவாலாவதற்காக பதவுசெய்யாத தனிப்பட்ட எந்தவொரு நபரும் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் கூட்டாளியாக சேரமுடியும் இந்த பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுமத்தில் குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் கூட்டாளியாக கண்டிப்பாகஇருக்கவேண்டும்

திங்கள், 15 அக்டோபர், 2018

சிறந்த தலைவனுக்கு உரிய பண்பியல்புகளும் தகுதிகளும்


முன்பு ஒருகாலத்தில் நம்முடைய இந்தியாவில் இருந்த ஒரு சிறிய நாட்டில் மழைஇல்லாமல் பஞ்சத்தில் மிகசிரமமாக மக்கள் வாழ்ந்து வந்தனர் அதனால் அடுத்தவரும் மழைகாலத்திற்குள் ஆங்காங்கு புதிய ஏரிகளை உருவாக்குதல் ஏற்கனவே இருக்கின்ற ஏரிகளை தூர்வாருதல் செய்துவிட்டால் வரும் ஆண்டுகளிலாவாது மக்கள் தண்ணீர் பஞ்சமில்லாமல் வாழ்வார்கள் என அரசன் ஒருவன் தன்னுடைய இரு இளவரசர்களையும் அழைத்து இந்த பணியை ஓரிரு மாதத்திற்குள் முடிக்குமாறு உத்திரவிட்டார் உடன் ஒரு இளவரசன் நாட்டின் வடக்கு பகுதியிலும் மற்றொரு இளவரசன் நாட்டின் தெற்கு பகுதியிலும் தத்தமக்கு இட்ட பணியை முடிப்பது என நாடுமுழுவதுமான இந்த பணியை தமக்குள் பிரித்து செயல்படுத்துவது என முடிவுசெய்தனர் அதனை தொடர்ந்து முதல் இளவரசன் அரசனின் கருவூலத்தில் இருந்து ஏராளமான பணமும் பாதியளவு நாட்டின் படைவீரர்களையும் அழைத்து கொண்டு வடக்கு பகுதிக்கு சென்று அங்கு கிராமங்களில் வாழும் மக்களை அந்த பணியை ஈடுபடுத்தி அவர்களுக்கு போதுமான அளவு பொருட்களை அவர்கள் பணிபுரிவதற்காக வழங்கி புதிய ஏரிகுளங்களை அமைத்தல் ஏற்கனவே இருக்கும் ஏரிகுளங்களில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணியை மிகசிறப்பாக தன்னுடைய பணியை முடித்து திரும்பி வந்தார் அப்போது அரண்மனையில் அவருடைய இளைய சகோதரனுக்கு அரசனாக முடிசூட்டுவதற்கான ஏற்பாடுநடந்து கொண்டிருந்ததை கண்ணுற்றுதும் நேராக தன்னுடைய தந்தையிடம் சென்று "நாங்கள் இருவருமே சமமாக பணிபுரிந்து தலைநகர் திரும்பியுள்ளபோது இளைய சகோதரனுக்கு மட்டும் அரசனாக பதவியேற்பு செய்வது சரியா முறையா இது தகுமா இது சரியான செயலா அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு அரசனாக முடிசூடுவது நீதிக்கு புறம்பான செயலன்றோ" என கோபத்துடன் பொரிந்து தள்ளினான் உடன் அரசனானவன் "மகனே அமைதியாக இரு உன்னுடைய தம்பி உன்னை போன்று அரசாங்க கருவூலத்திலிருந்து எடுத்து சென்ற பணத்தை செலவுஎதுவும் செய்யவில்லை அவ்வாறே அரசு படைவீரர்களையும் இந்த பணிக்காக பயன்படுத்தி கொள்ளவில்லை அதற்கு பதிலாக அந்தந்த கிராம மக்களையே இந்த பணிகளை முடிப்பதற்காக அவர்களாகவே முன்வந்து செய்திடுமாறு ஊக்குவித்து பயன்படுத்தி கொண்டது மட்டுமில்லாமல் அந்தந்த ஏரி குளங்களில் தேக்கிவைத்திடும் ஏரிகளில் நீரினை அனைவருக்கும் சமமாக பகிர்ந்து பயன்படுத்தி கொள்ளுமாறு பல்வேறு கால்வாய்களையும் உருவாக்கி அந்த பகுதியில் வாழும் அனைத்து மக்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளார் அதனால் உன்னுடைய தம்பிதான் சிறந்த தலைவனுக்கு உரிய பண்பியல்புகளை தகுதியையும் பெற்றுள்ளார் அதனால் அவரையே எனக்கு பிறகு அரசாளுவதற்காக அரசனாக முடிசூட்டுவதற்கு முடிவுசெய்தேன்" என பதில் கூறினான்

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

நிறுமங்களின் அனைத்து பொதுபங்குகளையும் டிமேட் (Demat)வடிவத்தில் மட்டுமே இனிமேல் கையாளப்படவேண்டும்


பொதுபங்குகளின் வெளியீடுகளின் மூலம் பொதுமக்களிடமிருந்து பங்குத்தொகை பெற்று பங்குசந்தையில் பட்டியலிடப்படாதஅனைத்து நிறுவனங்களும் 2.10.2018 முதல் மேலும் புதிய பங்குகளை வெளியிடுவதாக இருந்தாலும் அல்லது பங்குதாரர்களுக்கிடையே பங்குகளை பரிமாற்றம் செய்வதாக இருந்தாலும் டிமேட் எனும் புதிய வழிமுறையில் மட்டுமே செயற்படுத்திடவேண்டும் என நிறுமங்களின் விவகாரத்துறை அமைச்சகம் தனது சுற்றறிக்கையின் வாயிலாக உத்திரவிட்டுள்ளது அதாவது இதுவரையில் பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே டிமேட் வடிவத்தில் இருந்து-வந்ததற்கு பதிலாக பங்கு சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களும் சேர்த்து அனைத்து நிறுவனங்களும் மேலும்புதியதாக வெளியிடும் பங்களையும் பங்கு பரிமாற்றங்-களையும் டிமேட் வடிவத்தில் மட்டுமே 2.10.2018 முதல் செயற்படுத்தவேண்டும் என உத்திரவிட்டுள்ளது நிறுவனங்களில் பங்குபரிமாற்ற நடவடிக்கைகளில் மேலும் வெளிப்படைத்தன்மை,, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு நிறுமங்களின் நிருவாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன்பொருட்டு நிறுமங்களின் விதிகளும் திருத்தப்பட்டிருக்கின்றன இதன்வாயிலாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் பின்வருமாறு 1பங்குசான்றிதழ்கள் காணாமல் போதல், திருட்டுபோதல், அழிந்துபோதல், மோசடியாக அபகரித்தல் என்பனபோன்ற அபாயங்களை அறவே அகற்றப்படும் 2. வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், பினாமி பங்குதாரர் நடவடிக்கைகள் , நிறுமனங்கள் தம்முடைய பங்குதாரர்களுக்கு முன் தேதியிடப்பட்டு பங்குகளை வழங்குதல் என்பனபோன்ற பல்வேறு தவறான நடைமுறைகளை தடுக்கும் வகையில் நிறுவனங்களின் நிருவாக அமைப்புமுறை இதன்மூலம்மேம்படுத்தப்படும் 3.பங்குகளின் பரிமாற்றத்தின்போது முத்திரை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு. அளிக்கப்படும் 4. பங்குகளின் பரிமாற்றம்செய்தல் ,அடைமானம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை எளிமையாக்கபடும் ஆகியனவாகும் பொதுமக்களுக்காக பங்குகளை வெளியிடுவதற்கான விதிமுறைகள் 2014 விதிமுறை 9 க்குப் பின்,"9A. எனும் திருத்தம் செய்வதன் வாயிலாக இந்த புதிய நடைமுறை 2.10 .2018 நடைமுறைக்கு வருகின்றது அதனை தொடர்ந்து 2.10.108 முதல்எந்தவொரு பட்டியலிடப்படாத பொது நிறுவனமும் பொதுபங்குகளை இனி வெளியிடுவதாக இருந்தால் டிமேட் வடிவத்தில் மட்டுமே வெளியிடப்படவேண்டும் இதனை தொடர்ந்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் அனைத்தும் வைப்புத்தொகைச் சட்டம், 1996 ன் விதிமுறைகளுக்கு இணங்க தாம் இதுவரை வெளியிடுதல் செய்து தற்போது நடப்பு பங்குகளை வைத்திருக்கும் அனைத்து பங்குதாரர்களின் பங்கு பத்திரங்களின் வகைக்கேற்ப உலகளாவிய பொதுப்பங்குகளின் சுட்டிஎண் (International security Identification Number (ISIN))ஒன்றினை ஒதுக்கீடு செய்து அந்த தகவலை பங்குதாரர்களுக்கு அறிவிப்பு செய்திடவேண்டும் மேலும் புதிய பங்குகளை வெளியிடுதல் அல்லது மிகைஊதிய பங்குகளை(Bonus Share) வழங்குதல் அல்லது உரிமை பங்குகள் (Right Share)வழங்குதல் ஆகியவற்றின் எந்தவொரு பங்குபத்திரமும் வழங்குவதற்கு, முன்னர், அதன் விளம்பரதாரர்கள், இயக்குநர்கள், முக்கிய மேலாளர்கள் ஆகியோரின் பங்குபத்திரங்கள் அனைத்தையும் நிறுமமானது டிமேட்வடிவத்திற்கு மாற்றிடவேண்டும் பத்திரங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரிய (டெபாசிட்டரிகள் மற்றும் பங்கேற்பாளர்கள்) விதிமுறை 55Aஇன் கீழ் தணிக்கை அறிக்கையை ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை தங்களுக்கு அருகேயுள்ள நிறுமங்களின் பதிவாளருக்கு சமர்ப்பிக்கவேண்டும் பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நபரும் தன்னுடைய பங்குகளை மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யவிரும்பினால் முதலில் தான் வைத்திருக்கும் பங்குகளுக்கான பத்திரத்தை டிமேட் வடிவத்தில் உருமாற்றம் செய்தபின்னரே மற்றவர்களுக்கு பங்குகளை பரிமாற்றம் செய்திடும் பணியை மேற்கொள்ளமுடியும் இத்தகையடிமேட் செய்வதால் எழும் எந்தவொரு குறைபாடுகளையும் அல்லது பங்குசந்தையில் பட்டியலிடப்படாத பொது நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்கும் தனிநபர்களுக்கு குறைகள் ஏதேனும் இருந்தாலும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிய ஆணையத்தினை (The Investor Education and protection Fund Authority( IEPF)) அனுகிதீர்வு செய்து கொள்ளலாம்.

சனி, 13 அக்டோபர், 2018

நம்முடைய தனித்தன்மையே நம்மை பாதுகாத்திடும் என நம்பிக்கையுடன் வாழ்ந்திடுவோம்


ஒரு காட்டில் ஏராளமான மரங்கள் இருந்துவந்தன அனைத்தும் மகிழ்ச்சியுடன் இருந்துவந்தன அதில் ஒரேயொரு மரம் மட்டும் வளைந்தும் நெளிந்தும் பார்ப்பதற்கு அருவெறுப்பு அடையுமாறான தோற்றத்துடன் இருந்தது மற்றமரங்கள் அனைத்தும் இதனுடைய தோற்றத்தை பார்த்து ஏளனம் செய்து கின்டல் செய்து வந்தன அதனால் அந்த மரம் மட்டும் மிகவும் அவமான மனநிலையில் வாழ்ந்துவந்தது அதனோடு நம்முடைய வாழ்வே அவ்வளவுதான் என கூனிகுறுகி வாழ்ந்து வந்தது அந்த மரம் இந்நிலையி்ல் மரம் வெட்டுபவர்கள் குழுவாக அந்த காட்டிற்கு வந்துஅனைத்து மரங்களையும் வெட்டி எடுத்து சென்று கொண்டிருந்தனர் இந்த வளைந்து நெளிந்தும் அருவெறுப்பான தோற்றத்தை பார்த்துவிட்டு இந்த மரத்தினை மட்டும் வெட்டாமல் விட்டுவிட்டு சென்றனர் கிண்டலும் கேலியும் பேசிய மரங்கள் அனைத்தையும் மரம் வெட்டுபவர்கள் வெட்டியெடுத்து சென்றனர் ஆனால் கிண்டலுக்கு ஆளான மரத்தை மட்டும் வெட்டவில்லை நீண்டநாட்கள் உயிர்வாழ்ந்தது அதனால் நம்முடைய தனித்தன்மையே நம்மை பாதுகாத்திடும் என நம்பிக்கையுடன் வாழ்ந்திடுவோம்

வெள்ளி, 12 அக்டோபர், 2018

நிறுமங்களின் சட்டம் 2013 இன்படி நிறுமங்களுக்கான சுதந்திரமான இயக்குநர்


அறிமுகம் எந்தவொரு நிறுவனத்தின் ஆளுகையிலும் கொள்கைகளை வகுப்பது அந்த கொள்கைகளின் படி அந்நிறுவனம் சரியான வழியில் செல்லுமாறு வழிகாட்டி செயற்படுத்துவது அதனை தொடர்ந்து அந்நிறுவனம் நல்ல வெற்றிகரமான நிறுவனமாக வளரச்செய்வது ஆகிய அனைத்திற்கும் அடிப்படையான அந்நிறுவனத்தை கட்டுப்படுத்துவதும் வழிநடத்துவதும் அந்நிறுவனத்தின் இயக்குநர்களின் குழுக்களாகும் இந்தியாவில் முதன்முதலாக இவ்வாறான இயக்குநர்களின் குழுக்களில் கூடுதலான அதிகாரமும் பொறுப்புகளையும் கொண்ட முற்றிலும் புதுமையான வகையில் சுதந்திரமான இயக்குநர் எனும் புதிய வரையறை ஒன்றினை ஒரு நிறுவனத்தினை நன்கு வழிநடத்தி செல்வதற்காக அவர்களுக்கான அதிகாரங்கள் பொறுப்புகள் ஆகியவற்றை முழுமையாக விவரிக்கும் நிறுமங்களின் சட்டம் 2013 இல் பிரிவு 2(47) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஏற்கனவே நடைமுறையில் இருந்த நிறுமங்களின் சட்டம் 1956 இன்படி இந்த வகையான சுதந்திரமான இயக்குநர் என்றஒரு வகைநபர்களை நேரடியாக நியமனம் செய்வதற்கான வெளிப்படையான விதிகள் எதுவும் இல்லை ஆனால் அதற்கு பதிலாக நிறுவனங்களின் பங்குகளை பங்குச்சந்தையில் விற்பணைக்காக பட்டியலிடும் ஒப்பந்தப் பிரிவு49 இல் மட்டும் பங்குகளை விற்பணைக்காக பட்டியலிடும் அனைத்து நிறுவனங்களும் சுதந்திரமான இயக்குநர்களை கண்டிப்பாக நியமிக்கவேண்டும் என தூண்டப்படும் செயல்வாயிலாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதன்பிறகு இந்திய அரசின் நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகமானது நிறுவனங்களின் சட்டம் 1956இல் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு பங்குச்சந்தையில் விற்பணைக்காக தத்தமது பங்குகளை பட்டியலிடும் எந்தவொரு நிறுவனத்திலும் அந்நிறுவனத்தின் ஆளுகையை மேற்பார்வையிடுகின்ற சுதந்திரமான இயக்குநர்களையும் சேர்ந்தபுதிய இயக்குநர்களின் குழுவாக அமைந்திடுமாறு சுதந்திரமான இயக்குநர்களை அந்நிறுவனத்தில் நியமிப்பதற்கு தேவையான செயலை மேற்கொள்வதற்காக முயற்சி செய்து செயல்படுத்தியது எனினும் இந்த முயற்சியின் பலனாக நியமிக்கப்பட்ட சுதந்திரமான இயக்குநர்களுக்கான கடமைகள், பொறுப்புகள், அதிகாரங்கள் ஆகியவற்றை பற்றி எந்தவொரு விளக்கங்களும் அதில் இல்லாத நிலையில் இந்த சுதந்திரமான இயக்குநர்களை நியமிக்கும் பணியை அது தெளிவாக முழுமையாக செயல்டுத்த தவறிவிட்டது என்றும் இந்த செயல் பயனற்றது என்றும் நிரூபிக்கப்பட்டுவிட்டது அதனால் சிறந்த ஆளுகையுடைய ஒரு நிறுவனத்தின் நிருவாகத்தினை சுதந்திரமான இயக்குநர்களை கொண்டு மிகச்சரியாக செயல்படுத்திடுவது என்பது மிகவும் சிக்கலானதும் இக்கட்டானதும் ஆன நிலையாகி-விட்டது . அதனால் சுதந்திரமான இயக்குநர்கள் தொடர்பான ஒருங்கிணைந்த மிகவலுவான சட்டம் ஒன்று மிகஅத்தியாவசிமாக தேவையென்ற நிலையில் தற்போதைய புதிய நிறுமங்களின் சட்டம் 2013 இல் பிரிவு 2 (47) ஐ நடைமுறைபடுத்தவேண்டிய கட்டாய சூழல் உருவானது அவ்வாறான சுதந்திரமான இயக்குநர்கள் நியமனம் அவர்களின் அதிகாரங்கள் , கடமைகள் ,பொறுப்புகள் ஆகியவை பற்றிய முழுவிவரங்களை பற்றி இந்த தொடரில் காண்போம் சுதந்திரமான இயக்குநர்களின் நியமனம் இந்த சட்டமானது ஒருநிறுவனத்தில் உள்ள இயக்குனர்களின் மொத்த எண்ணிக்கையில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையில் சுதந்திரமான இயக்குனர்களை நியமிக்கவேண்டுவது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒரு குறிப்பிட்ட கடமையாகும் என விதிக்கின்றது மேலும் மத்திய அரசு இந்த தேவையின் எல்லைக்குள் நிறுவனங்களின் மற்ற சட்டவிதி / விதிகளை உள்ளடங்கிடுவதற்காக அனுமதிக்கின்றது. ஆகவே மேலே கூறிய நிபந்தனைகளானது நிறுவனத்தில் செலுத்தப்பட்ட மூலதனத்தில் இந்திய ரூபாய் 1 பில்லியன் (சுமார் அமெரிக்க டாலர்$ 16 மில்லியன் ) அல்லது விற்பணை வருமானம் இந்திய ரூபாய் 3 பில்லியன் (சுமார் அமெரிக்கடாலர் $ 48 மில்லியன்) அல்லது ஒட்டுமொத்த கடன் / கடன் பத்திரங்கள் / வாங்கிய கடன்கள் இந்திய ரூபாய் 2 பில்லியன் (சுமார் அமெரிக்க டாலர்$ 3225065) ஐவிட கூடுதலாக இருக்கும் எந்தவொரு பொதுத் துறை நிறுவனங்களுக்குப் பொருந்தும் இந்த சுதந்திரமான இயக்குநர்களை நியமிக்கும் பணியை எளியதாக ஆக்கும் பொருட்டு மத்தியஅரசும் மத்தியஅரசால் அங்கீரிக்கப்பட்ட நிறுவனங்களும் இணைந்து சுதந்திரமான இயக்குநர்களாக நியமிக்கதகுதியுள்ள தயார்நிலையிலுள்ள நபர்களின் விவரங்களடங்கிய பட்டியலான தரவுவங்கியை பராமரிக்கவேண்டும் இந்த தரவுவங்கியிலிருந்து மேற்கூறிய நிறுவனங்கள் தத்தமக்குத்தேவையான சுதந்திரமான இயக்குநர்களை தெரிவுசெய்து நியமித்து கொள்ளலாம் ஆனால், மேற்கூறிய சுதந்திரமான இயக்குநர்கள் நியமிக்கும் தேவையை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்கள் போதுமான அளவில் இந்த தரவுவங்கியில் தற்போது உள்ளனரா என்பதே மிகமுக்கியமான பிரச்சினையாகும் .இவையே இந்நிறுமங்கள் சட்டம் 2013இன் தேவையை பூர்த்தி செய்வதற்கு கடினமான வாய்ப்புகளாக இருப்பதை காணலாம் இதனை நிறுவனங்கள் ஒருவருடத்திற்குள் செயல்படுத்திடவேண்டும் என இந்த நிறுமங்கள் சட்டம் 2013 ஆனது அனுமதித்தாலும் இந்தியாவில் போதுமான அளவு தகுதியுள்ள நபர்களை மேம்படுத்தி உருவாக்கிடும்வரை நிறுவனங்கள் மேற்கூறிய சுதந்திரமான இயக்குநர்களை கட்டாயமாக நியமித்திடவேண்டும் என கூறும் நிறுமங்கள் சட்டம் 2013ஐ நடைமுறை படுத்துவது மிகவும் கடினமான பணியாக இருக்கும் ஆகவே இயக்குநர்கள் குழுவின் பொறுப்புகளைச் நிருவகிக்கத் தேவையான திறனை உருவாக்க பொருத்தமான நபர்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் / அமைப்புகள் மூலமாக சுதந்திரமான இயக்குநர்களாக மேம்படுத்திடுவதற்கான பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்வதே தற்போதைய முதன்மையான பணியாகும்

வியாழன், 11 அக்டோபர், 2018

சரக்கு மற்றும் சேவைவரி நடைமுறைபடுத்திடும் போது அடிக்கடி எழும் கேள்விகளும் அதற்கான பதில்களும் -தொடர்-1


கேள்வி.1.சசேவ என்றால் என்ன?அதுஎவ்வாறு செயல்படும்? பதில்.1.சசேவ என்பது இந்தியாமுழுவதற்கும் செயற்படுத்திடவுள்ள ஒரேயொரு மறைமுக வரியாகும் இது இந்தியாமுழுவதையும் ஒரே சந்தையாக மாற்றவிருக்கின்றது பொதுவாக உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரை சென்றடையும் வரை வழங்கப்படும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஒருமுறைமட்டும் வரி செலுத்திடுமாறு செய்வதே இந்த சசேவஇன் அடிப்படை குறிக்கோளாகும் இதன்படிபொருட்கள் கடந்துசெல்லும் ஒவ்வொரு படிநிலையிலும் கூடுதலாக ஆக்கப்பட்ட மதிப்பிற்கு மட்டும் வரிசெலுத்தினால் போதும் அதாவது குறிப்பிட்ட நிலையில் வரிசெலுத்துவதற்காக அதற்குமுந்தைய நிலையில் செலுத்திய வரியை கழித்துகொண்டு நிகர வரியை மட்டும் செலுத்தினால் போதும் இதன்மூலம் பொருட்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு நிலையிலும் அந்நிலையில் கூடுதலாக்கப்பட்ட மதிப்பிற்கு மட்டும் வரிசெலுத்தினால் போதும் என்ற வசதி ஏற்படுத்தபடவிருக்கின்றது இந்த பொருட்கள் கடந்திடும் சங்கிலிதொடரின் கடைசியாக விற்பணையாளர் முந்தைய நிலைகளில் செலுத்திய வரிகளை கழித்து கொண்டு நிகர சசேவ மட்டும் நுகர்வோரானவர் செலுத்தினால் போதும் கேள்வி.2. சசேவ இன் பயன்கள் யாவை பதில் .2.1 தொழிலகங்களுக்கும் வியாபார நிறுவனங்களுக்குமான பயன்கள் இந்த சசேவ நடைமுறை படுத்துவதால் தொழிலகங்களுக்கும் வியாபார நிறுவனங்களுக்குமான பயன்பின்வருமாறு பதிவுசெய்தல் காலமுறை அறிக்கை சமர்ப்பித்தல் வரிசெலுத்துதல் ஆகிய அனைத்து்ம் தகவல்தொழிலநுட்ப வளரச்சியினால் ஒளிவுமறைவற்ற தன்மையில் இணையத்தின்வாயிலாக எளிதாக செயல்படுத்தவிருக்கின்றது இந்தியாமுழுவதும் ஒரேமாதிரியான வரிவிகித அளவும் கட்டமைவும் அமையவுள்ளன தற்போது நடைமுறையிலுள்ள வரியின்மீது வரியாக அதிக சுமையை நுகர்வோரின்மீது ஏற்றாமல் வரிசெலுத்திடும்போது முந்தையநிலையில் செலுத்திய வரியை கழித்துகொண்டு நிகரமாக கூடியமதிப்பிற்கு மட்டும் வரிசெலுத்தினால் போதும் இதனால் பரிமாற்ற செலவுகள் பேரளவு குறைந்து வியாபார உலகானது போட்டிமிகுந்த சந்தையாக மாறவிருக்கின்றது மேலும் உள்ளூரில் உற்பத்தியாகும் பொருளானது குறைந்த வரிவிகிதத்திலும் வெளியூரிலிருந்து கொண்டுவரப்படும் பொருட்களுக்கு கடந்துவந்த நிலையிலான வரியுடன் சேர்ந்து இருப்பதால் உள்ளூரில் உற்பத்தியாகும் பொருள் குறைந்தவிலையில் நுகர்வோருக்கு கிடைக்கவிருக்கின்றது இதனால் உள்ளூரில் உற்பத்தியாகும் பொருள் வியாபாரத்தில் போட்டியிடமுடியாமல்மறைந்து போகும் என்ற பிரச்சினை எழாது பதில். 2.2.மத்திய மாநில அரசுகளுக்கான பயன்கள் தற்போது நடைமுறையில் உள்ள உற்பத்தி வரி ,சேவைவரி ,நுழைவரி ,விற்பணைவரி , மத்திய விற்பணைவரி ,ஆடம்பரவரி என்பன போன்ற பல்வேறு வரிகளும் அவைகளை நிருவகிக்க பல்வேறு கட்டமைவுகளுக்கம் பதிலாக எளிய தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியினால் இணையத்தின் வாயிலாக ஒரேகுடையின் கீழ் நிருவகிப்படவிருக்கின்றது இந்த புதிய சசேவ விதிப்பின் கட்டமைவினால் தற்போது நடைமுறையில் ஏற்படும் வரியேய்த்தல் வரிதவிர்த்தல் பதிலாக அனைத்து படிமுறைகளும் இணையத்தின் வாயிலாக கட்டமைக்கப்படவிருப்பதால் வரியேய்த்தல் வரிதவிர்த்தல் போன்றவைகள் உருவாகாமல் அரசிற்கு முழுமையாக வரிவருவாய் வந்தசேரும் மேலும் தற்போது நடைமுறையில் வரிகளை வசூலிப்பதற்கான பல்வேறு கட்டமைவிற்கு பதிலாக ஒரேயொரு கட்டமைவாக மாறவிருப்பதால் வரிவசூலிக்கும் செலவு அரசிற்கு மிகவும் குறைவாகமாறும் பதில் .2.3. நுகர்வோர்களுக்கான பயன் தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறுவகையான வரிவிதிப்பினால் வரியி்ன்மீது வரியாக கூடுதலாக பொருட்களுக்கான விலை செலுத்துவதற்கு பதிலாக எந்தவொரு படிநிலையிலும் கூடுதலான மதிப்பிற்குமட்டும் வரிசெலுத்தபடுவதால் பொருட்களின் விலை குறையும் அதனால் நுகர்வோர்களின் செலவும் குறையும் தற்போது நடைமுறையில் உற்பத்தி வரியென்றும் அதன்மீது விற்பணைவரியென்றும் மாநிலங்களுக்கு இடையே மத்திய விற்பணைவரியென்றும் நுழைவுவரி என்றும் சேவைவரியென்றும் பல்வேறு வரிகள் எதெதற்கு எந்தெந்தவிகிதத்தில் யார்யாருக்கு செலுத்துவது எவ்வளவு செலுத்துவது என்ற குழப்பமான தற்போதைய நிலையினால் வரிதவிர்த்தல் வரிஏய்த்தல் ஆகியநிகழ்வினால் நுகர்வோர்களின்மீது அதிகசுமையேற்றபடுகின்றது இந்த நிலைபுதிய சசேவ இல் அறவே தவிர்க்கப்பட்டு ஒரேயொரு வரிஅதுவும் கூடுதலான மதிப்பிற்குமட்டும் என்பதால் பொருட்களுக்கான விற்பனைவிலை மிகவும் குறைவாக மாறவிருக்கின்றது கேள்வி.3. மாநில மத்திய அரசுகளின் எந்தெந்த வரிகள் இந்த சசேவ இல் ஒருங்கிணைக்கவிருக்கின்றது? பதில்.3.1.மத்திய அரசின் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள மத்திய அரசின் உற்பத்திவரி ,கூடுதல் உற்பத்திவரி ,சேவைவரி ,கூடுதல் சுங்கவரி சிறப்பு கூடுதல் சுங்கவரி ஆகியவரிஇனங்கள் இந்த சசேவ இன் கீழ் கொண்டுவரவிருக்கின்றது பதில்.3.2.மாநிலஅரசின் நிலையில் மாநில மதிப்புகூட்டுவரி அல்லது விற்பனைவரி ,பொழுதபோக்குவரி மத்தியவிற்பணைவரி நுழைவுவரி கொல்முதல் வரி ஆடம்பரவரி சூதாட்டவரி லாட்டரி வரி ஆகிய வரிஇனங்கள் இந்த சசேவ இன் கீழ் கொண்டுவரவிருக்கின்றது -தொடரும்

புதன், 10 அக்டோபர், 2018

மிகச்சிறந்த பணியாளர்


ஒரு பெரிய அளவிலான செயல்திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் 1000இற்குமேற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய நிலையில் இவைகளில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிஇருந்தது ஏனெனில்இவைகளின் ஒவ்வொரு இடத்தின் உரிமையாளரும் வெவ்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை (தொழில்நுட்ப அறையினை அணுகுவதற்கான அனுமதி பெறுவதற்காக)அதாவது , நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடிதம், தேசிய அடையாள எண், நிறுவனஉரிம எண், வர்த்தகபதிவு எண், மேற்பார்வையாளர் விவரங்கள், இணைய பயன்பாடுகள், சிறப்பு படிவங்கள் மேலும்பல்வேறு தேவைகள் .போன்றவற்றின் காரணமாக ஒவ்வொரு நகரின் ஆய்வுகள் முடிவுகளையும் பெறுவது என்பது சிறிது வித்தியாசமாக அதாவது ஒரு சில உகந்ததாகவும் வேறுசில நிராகரிகதக்கதாகவும் இருந்தன. இந்த செயல்திட்டத்தின் தினசரி பகுப்பாய்வின் போது, வெவ்வேறு இடத்தில் பின்வரும் நடத்தையியல் அணுகுமுறைகளை இந்த ஆய்வுகளின் முடிவுகளினால் அடையபட்டது பணியாளர் 1:, இவர் ஒவ்வொரு தளத்திற்கும் செல்வது அதனை அணுகுவதற்கான பிரச்சினையின் அனுபவத்தை அடைவது, மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பி வருவது, அவ்விடத்தின் மேலாளரை சந்திப்பது அவ்விடத்தின் பிரச்சினைகளை தீர்வுசெய்வதில் அவரது ஆதரவை கோருவது. அம்மேலாளரானவர் அந்த சிக்கலை தீர்வுசெய்வதற்காக இந்த பணியாளருக்கு உதவுவது, அதனை தொடர்ந்து அந்த ஆய்வு பணியை மேலும் சில நாட்களுக்கு பிறகு செய்வது ஆகியவற்றை இந்த அனைத்து 1000இற்குமேற்பட்ட தளங்களின் ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக அதே நடைமுறை பின்பற்றப்பட்டது பணியாளர் 2: இவர் தளங்களின் அணுகுவதற்கான பிரச்சினை எதிர்கொள்வது, பின்னர் அலுவலகத்திற்கு திரும்பி வருவது ஆவணங்களை தயார்செய்வது அவ்விடத்தின் மேலாளருடைய தலையீடு இல்லாமல் தானாகவே சிக்கலை தீர்வுசெய்வதற்கு முயற்சி செய்வது. ஆகிய அனைத்து செயல்களும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நகரத்தின் அனைத்து 1000இற்குமேற்பட்ட தளங்களின் ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக அதே நடைமுறை பின்பற்றப்பட்டது. பணியாளர் 3: இவர் தளங்களின் அணுகுவதற்கான பிரச்சினை எதிர்கொள்வது, பின்னர் அலுவலகத்திற்கு திரும்பி வருவது ஆவணங்கள் தயார் செய்திடும் பணியை விரைவில் முடித்துவிடுவது எதிர்கால அணுகலுக்கான கட்டிட மேலாண்மையுடன் தேவைகளை முடிவுசெய்து. அது எதிர்காலத்தில் அவருக்கு பயன்படுவதற்காக இந்த ஆவணத்தை தன்னுடைய இழுப்பறையில்(drawer) வைத்திடுவது. ஆகிய அனைத்து செயல்களும் அவருடைய அனைத்து 1000இற்குமேற்பட்ட தளங்களின் ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக அதே நடைமுறை பின்பற்றபட்டது. பணியாளர் 4: இவர் தளங்களின் அணுகுவதற்கான பிரச்சினை எதிர்கொள்வது, ஆவணங்கள் தயார் செய்திடும் பணியை முடித்துவிடுவது அவ்வவ்விடத்தின் அணுகுதல் பிரச்சினைகளை தீர்வு செய்தல், அதனோடு எதிர்காலத்தில் அணுகுதல் பிரச்சினை எதுவும் எழாமல் இருப்பதற்காக அவைகளை தீர்வுசெய்வதற்கான பொதுமைப்படுத்த நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றுதல். , ஒவ்வொரு தளத்திற்குமான தரவுதளத்தினை உருவாக்குவது அதில் அந்த தளத்தினை பற்றியஅனைத்து விரிவான தகவல்களையும் பதிவுசெய்தல்(உரிமையாளர் பெயர், செல்லிடத்து பேசி எண், அணுகுதல் நடைமுறை, பார்வையிடும் நேரம், இதர நடைமுறைகள் போன்றவை) எதிர்காலத்தில் இந்த தளத்திற்கு வரும்போது செய்த பணியையே திரும்பதிரும்ப செய்திடாமல் அடுத்தடுத்த பணிகளை செய்வதற்கு உதவுவதற்காக அவரது சகாக்களுடன் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்வது இந்த அனைத்து பணியும் முடிவடையும்போது பணியாளர்-4 மட்டும் மிகச்சிறந்த திறமையானவராக தோன்றுகின்றார் ஏனெனில் இவர் அந்தந்த தளமேலாளரின் உதவியை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய பணிமுடித்தது மட்டுமல்லாமல் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான அனைத்து செயல்களையும் செய்துள்ளார் அவருடைய செயல் எதிர்காலத்தில் அந்த தளத்தினை ஆய்வு செய்திட செல்லும் நபரின் வாகண எரிபொருள் செலவு போக்குவரத்து படி ஆகியவற்றை நிறுவனத்திற்கு மிச்சபடுத்தி உள்ளார் இந்த எடுத்துகாட்டு உண்மையில் அனைத்து தொழில் துறைகளுக்கும் பொருந்துவதாகு

செவ்வாய், 9 அக்டோபர், 2018

இந்திய அரசின் சரக்கு சேவை வரியின் 2016(சசேவ)முக்கியமான பண்புகள்


1.மக்களுக்கு பொருட்களை அல்லது சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளின் போதுமட்டும் இந்தசரக்கு சேவை வரி 2016 (சசேவ) பொருந்தும் ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் மறைமுகவரிகள் பொருளை உற்பத்தி செய்திடும்போது அல்லது சேவைகளை வழங்கும் இடத்திற்கு பொருந்தும் 2.இந்த சரக்கு சேவை வரி 2016 (சசேவ) யானது பொருட்களை அல்லது சேவைகளை வழங்கும் இடத்தின் அடிப்படையில் வரி விதிக்கப் பட-விருக்கின்றது ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் மறை-முகவரிகள் பொருளை உற்பத்தி செய்திடும் இடத்திலேயே அல்லது சேவைகளை வழங்குபவரின் இடத்திலேயே வரி விதிக்கபடுகின்றது 3. நடைமுறை படுத்தவிருக்கும் சரக்கு சேவை வரி 2016 (சசேவ)யானது பொதுவான அடிப்படைவரிவிகிதத்தில் மத்தியஅரசு மத்திய சரக்கு சேவை வரி 2016 (மசசேவ)(Central Goodsand Service Tax2016 (CGST)) என்றும் மாநில அரசுகள் மாநிலசரக்கு சேவை வரி 2016 (மாசசேவ)(State Goods and Service Tax2016 (SGST)) என்றும் வரியை வசூலிக்கவிருக்கின்றார்கள் 4. அதேபோன்று மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நடவடிக்கை-களுக்காக ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி 2016 (ஒசசேவ)(Integrated Goods and Service Tax(IGST))என்று அதே பொதுவான அடிப்படைவரிவிகிதத்தில் வரியை வசூலிக்கவிருக்கின்றார்கள் 5. அதுமட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்கள், சேவைகளுக்கு இந்த ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி 2016 (ஒசசேவ)(Integrated Goods and Service Tax2016 (IGST)) என்று அதே பொதுவான அடிப்படைவரிவிகிதத்தில் வரியை வசூலிக்கவிருக்கின்றார்கள் 6.இந்த வரிவிதிப்பின் துவக்கத்தில் முதல் இரண்டு ஆண்டுகள் அல்லது சரக்கு சேவை வரி ஆலோசனைக்குழு (சசேவகு)(Goods and Service Tax Council (GSTC))வின் பரிந்துரைக்கும் காலம் வரை மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் நடவடிக்கை-களுக்காக ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி 2016 (ஒசசேவ)(Integrated Goods and Service Tax2016 (IGST))இன்படி வரியாக 1 சதவிகிதம் மட்டும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு தொடர்புடைய மாநில அரசிற்கு மத்தியஅரசால் வழங்கப்படும் 7.இந்த சரக்கு சேவை வரி 2016 (சசேவ)யானது தற்போது நடைமுறையில் உள்ள மத்திய அரசின் வரிகளான அனைத்து வகையான உற்பத்தி வரி, இறக்குமதிவரி, பல்வேறுவகையான கூடுதல்வரி ஆகியவற்றிற்கு மாற்றானதாக இருக்கும் மேலும் மாநில அரசுகளின் மதிப்புகூட்டுவரி, விற்பணைவரி,கொள்முதல வரி, நுழைவுவரி, ஆடம்பரவரி, பொழுது-போக்குவரி, சூதாட்டவரி, பரிசுவரி மாநில அரசுகள் விதிக்கும் கூடுதல் வரி ஆகியவற்றிற்கு மாற்றானதாக இருக்கும் 8 இந்த சரக்கு சேவை வரி 2016 (சசேவ)யானது மனிதர்கள் அருந்தும் எரிசாராயம் .மின்சாரம், வீடுமனைசொத்துகள்(Real Estate) ஆகியவை தவிர மிகுதி அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொருந்தும் 9.பெட்ரோலிய பொருட்களுக்கு மட்டும்சரக்கு சேவை வரி ஆலோசனைக்குழு (சசேவகு)(Goods and Service Tax Council (GSTC))வின் பரிந்துரைக்கும் நாளிலிருந்து நடைமுறை படுத்தப்படும் 10.இந்த சரக்கு சேவை வரி 2016 (சசேவ)இன் கீழ் மிகக்குறைந்த அளவு நடவடிக்கைகள் மட்டும் கொண்டுவரப் -படாதவைகளாக இருக்கும் இதற்காக கூடியவரை மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஒத்திசைவாக இருக்குமாறு நடைமுறை படுத்தபடும் 11,பொருட்கள் அல்லது சேவைகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தால் அதற்கு இந்த சரக்கு சேவை வரி 2016 (சசேவ)இன் கீழ் வரிவிதிப்பே கிடையாது 12. ஒருவர் (அ) தாம்ஏற்கனவே மசசேவ (CGST) இன் கீழ் செலுத்திய வரியை உள்ளீட்டு வரிக்கழிவு(Input Tax credit (ITC))ஆக மசசேவ (CGST) இல்மட்டும் கழித்துகொள்ளமுடியும் ; (ஆ)அவ்வாறே தாம் ஏற்கனவே மாசசேவ(SGST) இன் கீழ் செலுத்திய வரியை உள்ளீட்டு வரிக்கழிவு(Input Tax credit (ITC))ஆக மாசசேவ(SGST) இல் மட்டும் கழித்துகொள்ளமுடியும்; (இ)மேலும் தாம் ஏற்கனவே மசசேவ (CGST)இன் கீழ் செலுத்திய வரியை உள்ளீட்டு வரிக்கழிவு(Input Tax credit (ITC))ஆக மசசேவ (CGST),ஒசசேவ (IGST) ஆகியஇரண்டிலும் கழித்துகொள்ளமுடியும் ; (ஈ)அதுமட்டுமின்றி தாம் ஏற்கனவே மாசசேவ(SGST)இன் கீழ் செலுத்திய வரியை உள்ளீட்டு வரிக்கழிவு(Input Tax credit (ITC))ஆக மாசசேவ(SGST),ஒசசேவ (IGST) ஆகியஇரண்டிலும் கழித்துகொள்ளமுடியும் ; (உ)அவ்வாறே தாம் ஏற்கனவே ஒசசேவ (IGST)இன் கீழ் செலுத்திய வரியை உள்ளீட்டு வரிக்கழிவு(Input Tax credit (ITC))ஆக ஒசசேவ (IGST),மசசேவ (CGST),மாசசேவ(SGST) ஆகிய மூன்றிலும் கழித்துகொள்ளமுடியும் . 13.இவ்வாறான வரிக்கழிவு வழங்குவதற்கான மத்திய அரசு மாநில அரசு ஆகிவற்றிற்கு இடையேயான கணக்குகள் உடனக்குடன் சரிபார்க்கப்பட்டு கணக்கு நேர்செய்துகொள்ளப்படும் 14உள்ளீட்டு வரிக்கழிவு(Input Tax credit (ITC)) இன் அடிப்படையில் கூடுதல் வரிஎதுவும்விதிக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது 15. இவ்வாறான அனைத்து வரிகளையும் வசூலிப்பதற்கான சட்டம் விதிமுறைகள் வழிமுறைகள் ஆகிய அனைத்தும் மத்திய சரக்கு சேவை வரி 2016 (மசசேவ)(Central Goodsand Service Tax2016 (CGST)) அடிப்படையிலே செயல்படுத்தப்படும் .

திங்கள், 8 அக்டோபர், 2018

புதியதாக தொழில் துவங்குபவர்கள் பின்வரும் தவறுகளை தவிர்த்திடுக


1.புதிய தொழில் துவங்கிய ஒரே நாளில் வெற்றியடைந்துவிடுவோம் என எதிர்பார்த்து ஏமாந்துவிடாதீர் ஒரு சிலதொழில்களை தவிர மற்றவைகளை துவங்கிய அன்றே வெற்றிநடைபோடும் என எதிர்பார்த்திடவேண்டாம் புதிய விதை ஒன்றை தரையில் ஊண்றியபின்னர் அதற்கு தேவையான தண்ணீர் காற்று சூரிய ஒளி ஆகியவற்றை அளித்தால் மட்டுமே அதுமுளைத்து செடியாக வளர்ந்து மரமாக உயர்ந்து அதன்பின்னரே நாம் எதிர்பார்த்திடும் பலன் அந்த மரத்திலிருந்து கிடைக்கும் அதேபோன்று புதிய தொழில்களை துவங்கியவுடன் அதன் நீண்டகால வளர்ச்சிக்கான அனைத்து அடித்தள ஏற்பாடுகளையும் செய்தபின்னரே அதற்கான பலன்கிடைக்கும் தொழில் துவங்கியஒரேநாளில் அதற்கான பலன்கிடைக்கும்என ஏமாந்து சோர்ந்து இருந்திடவேண்டாம் 2.அடுத்ததாகநம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் சேவைகளுக்கான ஏற்கனவே இல்லாத வாடிக்கையாளர் அனைவரையும் கவரும் மிகச்சிறந்த வணிகபெயரை Trademark Electronic SearchSystem(TESS) போன்ற அதற்கான அனுமதி அளிப்பவர்களிடம் பெற்று ஊடகங்களில் கடுமையாக முயற்சி செய்து நம்முடைய வணிக பெயரை வாடிக்கையாளரின் அனைவரின் பார்வைக்கு சென்றடையுமாறு செய்திடுக 3.மூன்றாவதாக நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை சேவைகளைபற்றிய விவரங்களை பயனாளர்களுக்கு கொண்டு சேர்த்திடும் சந்தைபடுத்துதல் செயலை நன்கு திட்டமிட்டு செயற்படுத்திட வேண்டும் பொதுவாக புதியவர்கள் தங்களுடைய நிறுவனத்தில் பொருளை உற்பத்தி செய்தபின் தம்முடைய நிறுவனத்தின் இருக்கையில் உட்கார்ந்திருந்தவாறே அனைத்தும் விற்பனை ஆகிவிடும் என கனவு காணவேண்டாம் மிகச்சரியான பயனாளர்களுக்கு மிகச்சரியான நேரத்தில் நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை சேவைகளைபற்றிய விவரங்களை கொண்டுசென்று சேர்த்திடுக 4.நான்காவதாக நம்முடைய நிறுவனத்தின் உற்பத்தி வளங்களான நிதி மூலப்பொருட்கள் மனிதவளம் ஆகியவற்றை மிகச்சரியாக நீண்டகால நோக்கில் திட்டமிட்டு மிகச்சரியாக பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிடுக இல்லையெனில் நம்முடைய நிறுவனம் கடலிற்குள் மூழ்கிய கப்பலை போன்று ஆகிவிடும் 5.ஐந்தாவதாக புதிய நிறுவனம் ஒன்றினை துவக்கிடும்போது சமூகஊடகமான முகநூல் போன்றவைகளில் மூழ்கிடவேண்டாம் அவ்வாறே நம்முடைய ஓய்வையும் தூக்கத்தையும் சிறிதுகாலம் தள்ளிவையுங்கள் மேலும் நம்முடைய உறவினர்கள் நண்பர்களுடன் செலவிடும் காலத்தையும் கட்டுபடுத்திடுக அதுமட்டுமின்றி நம்முடைய சொந்த பொழுதுபோக்கு செயல்களை அறவே தவிர்த்திடுக கூடுதலாக நம்முடைய வாழ்வின் முதன்மை செயல் அல்லது குறிக்கோள்என்பது நம்முடைய புதிய தொழில் மட்டுமே என்றவாறு நம்முடைய கவனத்தை ஒருமுகபடுத்தி செயல்படுக

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

வியாபாரிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இந்த சரக்கு சேவை வரியை நடைமுறை படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்


பொதுவாக அனைத்து வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் இந்த சரக்கு சேவைவரியை நடைமுறை படுத்துவதில் ஆர்வமுடையவர்களாக உள்ளனர் ஆனால் இதனால் தங்களுக்கு என்னென் பயன்கள் கிடைக்கும் என அறிந்து கொள்வதில் அதிக ஆவலாக உள்ளனர்பொதுவாக இதில் ஒருசில நன்மைகள் இருந்தாலும் வேறுசில வகையில் ஏராளமான வித்தியாசங்களும் உள்ளன உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய ஒரு பறவை பார்வை பின்வருமாறு : 1.ஒரே வரி: மத்திய அரசும் மாநிலஅரசுகளும் சேர்ந்து தற்போது 16 க்கும் அதிகமான வகையில் பொருட்களின்மீதும் சேவைகளின்மீதும் வரிகளை விதித்து வசூலிக்கின்றனர் அவையனைத்திற்கும் பதிலாக பொதுவான அடிப்படையில் ஒரேயொரு வரியாக இந்த சரக்கு சேவைவரியை நடைமுறை படுத்தவுள்ளனர் 2இந்தியாமுழுவதும் ஒரே சந்தை: தற்போது மாநிலங்களுக்கு இடையே விற்பணை நடைபெறும்போது மத்திய விற்பணை வரி செலுத்தப்படுகின்றது ஆனால் இந்த வரியை மற்ற மாநிலத்தில் விற்பணையின்போது செலுத்தப்படும் விற்பணைவரியில் சரிசெய்துகொள்ள முடியாது அதனால் விற்பணையாளர்கள் முடிந்தவரை ஒரே மாநிலத்திற்குள் பொருட்களை விற்பணை செய்துவிடுகின்றனர் இதனால் ஒரு மாநிலத்தில் கிடைக்கும் அதி தரமான மிகமுக்கியமான பொருட்கள் மற்ற மாநிலங்களில் கிடைக்காத நிலை தற்போது உள்ளது அதற்கு பதிலாக இந்த சசேவ இன் படி செலுத்தப்படும் வரியானது மற்ற மாநிலத்தில் விற்பணையின்போது செலுத்தப்படும் விற்பணைவரியில் சரிசெய்து கொள்ள முடியும் அதனால் நல்ல தரமான பொருட்கள் நாட்டின் எந்தவொரு பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தாலும் அது உடனுக்குடன் நாட்டின் வேறு எந்தவொரு பகுதியிலும் விற்பணைசெய்திடும் ஒரு பொதுவான சந்தையாக உருவாகும் 3பொருட்களுக்கும் சேவைகளுக்கும் இடையிலான வேறுபாடு இல்லை: ஒரு சில மூலப்பொருளை நல்லமுடிவு பொருளாக பல்வேறு சேவைகளின் அடிப்படையில் உருமாற்றம் செய்திடும்போது தற்போது உற்பத்தி வரிஎன்றும் சேவை வரியென்றும் விற்பணை வரியென்றும் விதிக்கப்படுவதற்கு பதிலாக இந்த வேறுபாடுகளை தவிர்த்து இந்த சசேவ அறிமுகத்துடன் ஒரேயொரு வரி மட்டும் விதிக்கப்படும் 4விலைப்பட்டியல் தயார்செய்வது எளிது: தற்போது, விற்பணை பட்டியல் தயார் செய்வது எனில் முதலில் பொருட்களின் அடிப்படை விலை அதன்பின் அந்த பொருட்களின்மீது உற்பத்தி வரி , சேவைகள் மீதான சேவை வரி அதனை தொடர்ந்து விற்பணை வரி போன்று ஒவ்வொரு நடவடிக்கையின்போது மிகச்சிக்கலான வகையில் விற்பணை பட்டியல் தயார்செய்யப்படுகின்றது இந்த சசேவ அறிமுகபடுத்தியபின் இந்த விற்பணை பட்டியலானது அடிப்படை விலை சசேவவரி ஆகிய இரண்டுமட்டுமே கொண்ட எளியதாக இருக்கும் 5நுழைவு வரியே இல்லை , ஒரு பொருள் இந்தியாவின் வடபகுதியில் இருந்து தென்னிந்தியாவிற்கு மிக நீண்டதூரம் கடந்து வருகின்றது எனில் லாரி ஓட்டுனர்கள் ஏறத்தாழ 60 சதவிகித நேரம் தம்முடைய வண்டியை நுழைவுவரி செலுத்துவதற்காகவே நிறுத்தி செல்லவேண்டிய அவலநிலையில் தற்போது நாம் வாழ்ந்து வருகின்றோம் அதற்கு பதிலாக இந்த சசேவ நடைமுறைபடுத்தினால் நுழைவுவரி என்பதே இல்லாததால் பொருட்களை கொண்டு செல்லும் நேரம் பேரளவு மிச்சபடும் 6 மத்திய, மாநில அரசுகளின் இடையே பொதுவான விதிவிலக்குகள்: தற்போது வெவ்வேறு மாநிலங்களும் வரி செலுத்துவதில் வெவ்வேறு வகையான விதிவிலக்குகளை வைத்திருப்பதால் பொருட்கள் மாநிலங்களுக்கு இடையே இடமாறும் போது மிகசிக்கலான விதிவிலக்குகளை கையாளவேண்டியுள்ளது அதனால் பொருட்களின் இறுதி விலையும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறுவகையில் உள்ளன இந்த சசேவ நடைமுறைபடுத்தினால் பொருட்களுக்கான விதிவிலக்குகள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான விகிதங்களில் இருக்கும் அதனால் பொருட்களின் இறுதி விலையும் ஒரே அளவாக இருக்கம் உற்பத்திவரிஇல்லை: தற்போது நடைமுறையில் உள்ள44079990, 76069110 போன்ற எட்டு எண்களை கொண்டு பொருட்களை வகைப்படுத்தி அதன்மீது இந்திய அரசு விதிக்கும் வெவ்வேறு உற்பத்திவரி என்பது இதன்பின்னர் இருக்காது உற்பத்தியாளர் என்ற கருத்துரு இனிஇல்லை உற்பத்தியாளர் என்ற கருத்துருவானது தற்போது மிகவும் சிக்கலான உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் வாயிலாக பெரும்பாலும் வரையறுக்கப்படுகிறது. அதனால் இது சர்ச்சைகுரிய ஒரு குகைபோன்று உள்ளது. அதாவது தற்போது உள்ள மதிப்புக்கூடுதல் என்பதுஎண்ணிக்கையில் அளவிடுவதற்கரியாதகவும் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது .உற்பத்தியாளர் மதிப்புகூடுதல்எனும் கருத்துரு இந்த சசேவ நடைமுறைபடுத்துவதால் மாற்றப்படும். வகைபடுத்தபடும் சர்ச்சைகள் இருக்காது: தற்போது பல்வேறு விகிதங்களில் பல்வேறு வரிகள் உள்ளதால் ஏராளமான வகையில் சிக்கல்களும் அதற்கான விதிவிலக்குகளும் உள்ளன என்பதால் இதனை கையாளுவது என்பது மிகுந்த சிக்கலான செயலாகின்றது இந்த சசேவ நடைமுறைபடுத்துவதால் இவ்வாறான சிக்கல் எதுவும் இருக்காது. தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுவிடும்: தற்போது, நுகர்வோர் மீது தாம் பெறும் பொருள் அல்லது சேவைக்காக உற்பத்திவரி ,சேவைவரி விற்பணைவரி என அதிக அளவு விதிக்கப்பட்டு வசூலிப்பதால் அவர்களின் சுமை மிகஅதிகமாகின்றது அதனால் அவைகளால் ஏற்படும் சர்ச்சைகளை தீர்வுசெய்வதற்காக மிகஅதிக கால அவகாசமும் செலவும் ஆகின்றது இவையனைத்தும் இந்த புதிய சசேவ அறிமுகப்படுத்துவதால் இல்லாதாகிவிடும் பொருளிற்கு அல்லது சேவைக்கு வரியில்லாமல் செய்வது எளிது: தற்போதுள்ள நடைமுறையில் ஒரு சில பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு வரிவிலக்கு அளிப்பது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருமாதிரியான நடைமுறை பின்பற்றப்படுவதால் ஒரே பொருள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான விற்பணை விலையில் உள்ளது இந்த சசேவ நடைமுறை படுத்தினால் பொருளிற்கான சேவைக்கான வரிவிலக்கு எளிய நடைமுறையாகும் அதனால் நுகர்வோர அதிக பயனடைவர் தற்போது ரப்பர் அல்லது பிசின், காகிதம் அல்லது அட்டை, சாம்பல், போன்ற பல்வேறு பொருட்களையும் அவைகள் எந்தவரிவிகித்தில் கொண்டுவரப் பட்டுள்ளன எவ்வளவு தொகை செலுத்துவது என அடையாளம் காண்பதே மிக தலைவலி பிடித்த செயலாகும் இந்த சர்ச்சைகள் அனைத்தும் புதிய சசேவ அறிமுகப்படுத்துவதால் இருக்காது . முடிவாக இந்த சசேவ ஒரு ஒளிவுமறைவற்ற வரிச்சட்டமாகும் மறைமுகவரிஎதுவும் இல்லாததாதல் நுகர்வோருக்கு குறைந்துவிலையில் பொருட்கள் கிடைக்கும் வருமானவரி மட்டுமல்லாத இந்தசசேவ இலும் போதுமானஅளவிற்கு அரசிற்கு வரியாக கிடைக்கும் மத்திய அரசும் மாநில அரசுகளும் இறுதி விற்பணையின்போது மட்டும் வரியாக பெறுகின்ற நடைமுறை செயலிற்கு வருவதால் பொருளின் விற்பனை விலை குறையும் சுங்கவரி, நுழைவரி உற்பத்திவரி,சேவைவரி, மத்தியவிற்பணைவரி,மாநில விற்பணைவரி போன்ற பல்வேறு வரிகள் அனைத்திற்கும் பதிலாக ஒரேயொரு சசேவ மட்டும் நடைமுறையில் இருக்கும்

சனி, 6 அக்டோபர், 2018

தீங்கையே நம்முடைய வெற்றிப்படியாக மாற்றி பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெறுவோம்


ஒரு கிராமத்தில் விவசாயி கழுதை ஒன்றை வளர்த்து வந்தார் ஒருநாள் அந்த கழுதையானது அருகிலிருந்த பாழடைந்த பயன்படுத்தாத கினற்றுக்குள் விழுந்துவிட்டது அதனால் அந்த கழுதை உயிர்பயத்தினால் கத்த ஆரம்பித்தது உடன் விவசாயிஅந்த கழுதையைஎப்படி மேலே கொண்டுவருவது எனஆலோசனை செய்தான் சுலபமான வழியெதுவும் புலப்படவில்லை அதனால் அந்த பாழடைந்த கினற்றையே கழுதையோடு சேர்த்து மூடிவிடுவது நல்லது என இறுதியாக முடிவுசெய்து அருகிலிருப்போரை ஒன்று சேர்த்து மண், குப்பை போன்றவைகளை சேகரித்து அந்த பாழடைந்த கினற்றிற்குள் உள்ள கழுதையின் மீது கொண்டுசென்று கொட்டினர் அந்த கழுதையானது நம்மையும் சேர்த்து இந்த கினற்றை மூடுவதற்கு முடிவுசெய்துவிட்டார்கள் அதனால் இதிலிருந்து தப்பிப்பது எவ்வாறு என ஆலோசனைசெய்து இறுதியாக தன்னுடைய உடலை குலுக்கி அசைத்து தன்மீது கொட்டிய மண்ணையும் குப்பைகளையும் கீழே தள்ளிவிட்டு அதன்மீது ஏறிநின்று கொண்டது இவ்வாறே ஒவ்வொரு முறை அந்த கிராமத்தார்கள் மண் குப்பை போன்றவைகளை அந்த பாழடைந்த கினற்றிற்குள் உள்ள கழுதையின் மீது கொட்டியதும் அந்த கழுதையானது தன்னுடைய உடலை குலுக்கி அசைத்து தன்மீது கொட்டிய மண்ணையும் குப்பைகளையும் கீழே தள்ளிவிட்டு அதன்மீது ஏறிநின்று கொள்வதுமாக தொடர்ந்து நடைபெற்றுகொண்டே இருந்தன ஒருவழியாக அந்த பாழடைந்த கினறும் நிரம்பி தரைமட்டம் அளவிற்கு வந்துவிட்டது அதனால் அந்த பாழடைந்த கினற்றில் விழுந்த கழுதையும் தரைக்கு தாவிவெளியேறி உயிர்தப்பியது அவ்வாறே இந்த உலகவாழ்க்கையில்நம்முடைய எதிரிகள் நம்மையும் வீழ்த்துவதற்காக எதாவது நமக்கு தீங்கு செய்து கொண்டே யிருப்பார்கள் அந்த தீங்கையே நம்முடைய வெற்றிப்படியாக மாற்றி பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் வெற்றிபெறுவோம்

அறிந்துகொள்க ஒருங்கிணைந்த சரக்குகளின் சேவைகளின் வரி ( சசேவ) (The Goods and Services tax(GST))


இதுவரையில் (30.06.2017 )நாமெல்லோரும் கலால் வரி,சுங்கவரி, இறக்குமதிவரி ,சேவைவரி, மத்திய விற்பணைவரி, மாநில விற்பணைவரி, நுழைவரி ,பொழுது போக்குவரி என்பனபோன்ற 16இக்கும் மேற்பட்ட வகையான மறைமுக வரிகளை செலுத்தி வந்தோம் இவைகளில் ஒருசில வரிகள் மத்திய அரசாலும் ஒருசில வரிகள் மாநில அரசுகளாலும் விதிக்கப்பட்டு நம்மிடமிருந்து வசூலிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது வேவ்வேறு வகையான வரிகள் வெவ்வேறு வகையான அமைப்பால் வெவ்வேறு நிலைகளில் வசூலிக்கப்படுகின்றன இன்றைய கட்டமைவில் ஒருவன் இவ்வாறான அனைத்து வரிகளையும் செலுத்திவிட்டானா எனஉறுதி செய்திடமுடியாது மேலும் இவ்வாறான வரிகளைபற்றிய அனைத்து நிகழ்வுகளையும் நிருவகிப்பது என்பது பெரிய தலைவலி பிடித்த செயலாக உள்ளது அதனால் தற்போதைய கட்டமைப்பில் உள்ள இந்த மறைமுகவரிகள் என்பது மிகவும் சிக்கலான அமைப்பில்உள்ளன என முடிவிற்கு வரவேண்டியுள்ளது ஏனெனில் ஒரு உற்பத்தியாளர் அல்லது ஒருமொத்த-விற்பணையாளர் அல்லது ஒரு சில்லறை விற்பணையாளர் ஆனவர் இவ்வாறான சிக்கலான வரிகளை கையாளுவதற்காக அல்லது கவணித்துகொள்வதற்காக என்று தனியாக ஒரு துறையையே அமைத்து நிருவகிக்க வேண்டியுள்ளது அதனால் இவ்வாறான சிக்கலான வரிசையாகஉள்ள வெவ்வேறு வகையான மறைமுக வரிகளை ஒழுங்குபடுத்தி ஒற்றையான வரியமைவாக நடைமுறை-படுத்தபடுமா வென இதுவரையில் நாமனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தோம் இறுதியில் ஒருவழியாக இந்த ஒருங்கிணைந்த சரக்குகளும் சேவைகளுக்குமான வரி (சசேவ) என்பது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது இது இந்திய நாட்டின் பல்வேறு மாநில அரசுகளாலும் இந்திய அரசாலும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகின்ற மிகவும் சிக்கலான குழப்பமான பல்வேறு வகையாக உள்ள வரிகளுக்கு பதிலாக அல்லது மாற்றாக இந்தியா முழுவதும் ஒரேமாதிரியாக ஒரேவழிமுறையில் மறைமுகவரியை வசூலிப்பதற்கான ஒரு சிறந்த வரிஅமைவாக இந்த ஒருங்கிணைந்த சரக்குகளும் சேவைகளுக்குமான வரி(சசேவ) என்பது விளங்க வுள்ளது மேலும் முதலாவதாக தற்போது நடைமுறையிலுள்ள மதிப்புகூட்டுவரியின் அடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசும் தத்தமது விவகார எல்லைக்குள் அந்தந்த அரசின் விருப்பபடி எவ்வளவு வேண்டுமானாலும் வரிவிதித்து அவ்வரியைவசூல் செய்துகொள்ளலாம் என உள்ளது இரண்டாவதாக சேவைவரியானது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலு்ம் மத்திய அரசால் நேரடியாக வசுலிக்கப்-படுகின்றது ஆனால் இதில் மாநில அரசிற்கு பங்கேதும் கிடையாது ஆகிய இரு தப்பித்து கொள்ளும் வழி தற்போதைய நடைமுறையில் உள்ளன அதனை சரிசெய்து இந்தியாமுழுவதும் ஒரேமாதிரியான ஒரேவழிமுறையில் மறைமுக வரியை விதிக்கவும் அதனை வசூலிக்கவும் கூடிய திறனுடையதாக இந்த சசேவ இருக்கபோகின்றது இந்த சசேவ ஒன்றும் புதிய வரிஅன்று இது ஏற்கனவே கனடா நாட்டில் 1905 இலிலேயே நடைமுறை படுத்தபட்டு வருகின்றது மேலும் உலகில் தற்போது ஏறத்தாழ 140 நாடுகளில் இந்த சசேவ தற்போது நடைமுறையில் உள்ளது ஆகிய செய்திகளையும் மனதில் கொள்க எதுஎப்படியிருந்தாலும் இந்த சசேவஇன் தொழில்நுட்ப விவரங்களுக்குள் நாம் மூழ்கிவிவரங்களை அறிந்து கொள்வதற்குமுன் இந்த சசேவ என்பது ஏன் ஒரு பெரிய புரட்சிகரமான வரிவிதிப்புமுறை என தெரிந்துகொள்வது மிகமுக்கியமானசெயலாகும் அதன்படி நாம் பின்வரும் எடுத்துகாட்டின் வாயிலாக தெரிந்து கொள்வதற்காக முதலில்சசேவ விதிப்பிற்கு முந்தைய நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள வரிகணக்கீடு அட்டவணை 1 இல் உள்ளது இது தற்போது வசூலிக்கபடுகின்ற வரிகளின் மிகச்சரியான வரிவிகித கணக்கீடு அன்று இருந்தபோதிலும் இது உத்தேசமாக தற்போது மதிப்புகூட்டுவரி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என எளிதாக சசேவ வை புரிந்து அறிந்து கொள்வதற்குமான ஒரு எடுத்துகாட்டு மட்டுமே என்ற செய்தியை மனதில் கொள்க In this figure:
1 அட்டவணை 1 நடைமுறையில் உள்ள சசேவ முந்தைய வரிவிதிப்புமுறை அ)ஒரு உற்பத்தியாளர் மூலப்பொருட்களை விலைஇல்லாமல் தம்முடைய நிறுவனத்திற்காக கொள்முதல் செய்கின்றார் எனக்கொள்வோம் பின்னர் அவர் தன்னுடைய நிறுவனத்தில் இந்த மூலப்பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்திடும் முடிவுப்பொருளாக உருவாக்கி அந்த பொருளிற்கு ரூபாய் 100/- என அடக்க-விலையாக மதிப்பிடுகின்றார் என்றும் இந்த பொருளிற்கான விற்பணைவரி 10% சதவிகிதம் எனவும் கொள்வோம் அதனால் அவர் ரூபாய் 110/- இற்கு மொத்த-விற்பணையாளரிடம் இந்தபொருளை விற்பணை செய்கின்றார் இங்கு விற்பணை வரி அல்லது மதிப்புகூட்டு வரி ரூபாய் 10/- ஆகும் ஆ)அதனை தொடர்ந்து மொத்தவிற்பணையாளர் தாம் கொள்முதல் செய்த ரூபாய் 100/- இக்கான பொருளின் மீது ரூபாய் 50/- மதிப்புகூட்டி (அதாவது மொத்தவிற்பணையாளரின் அடக்க விலை ரூபாய் 150/- கழிக்க உற்பத்தியாளரின் அடக்கவிலைரூபாய் 100) சில்லறை விற்பணயாளருக்கு ரூபாய் 150/- என்ற அடக்கவிலைநிர்ணயித்து அந்த பொருளை விற்பணை செய்கின்றார் இங்கும் அந்த பொருளிற்கான மதிப்புகூட்டு வரிவிகிதம் 10% சதவிகிதம் எனகொள்வோம் அதனால் அவர் இந்த மதிப்புகூட்டு வரியையும் சேர்த்து மொத்தம் விற்பணை விலை ரூபாய் 165/- இக்கு (இங்கு விற்பணை விலையானது அடக்கவிலை ரூபாய் 150/- கூட்டுக மதிப்பு கூட்டு வரி ரூபாய் 15/-) இந்த பொருளை விற்பணை செய்கின்றார் இ)மூன்றாவதாக சில்லறை விற்பணயாளர் மொத்தவிற்பணையாளரிடமிருந்து ரூபாய் 150 அடக்கவிலையின் மீது ரூபாய் 70/- மதிப்புகூட்டி (அதாவது சில்லறை விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 220/- கழிக்க மொத்த விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 150/- ) மொத்தம் ரூபாய் 220/-என அடக்கவிலையாக பொதுமக்களுக்கு விற்பணைசெய்கின்றார் இங்கும் மதிப்பகூட்டுவரிவகிதம் 10% சதவிகிதம் எனக்கொள்வோம் அதனால் இந்த மதிப்புகூட்டுவரியும் சேர்த்து மொத்தம் விற்பணைவிலைரூபாய் 242/- இக்கு (இங்கு விற்பணைவிலையானது சில்லறை விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 220/- கூட்டுக மதிப்பு கூட்டு வரி ரூபாய் 22/-) பொதுமக்களாகிய நுகர்வோருக்கு அந்த பொருளை விற்பணை செய்கின்றார். இதன்மூலம் நாம் இந்த விற்பணை சங்கிலியின் முடிவில் விற்பணை விலையானது ரூபாய் 242/- என்றும் மதிப்புகூட்டு வரியானது ரூபாய் 47/- என்றும் அதாவாது ஏறத்தாழ 19.5% சதவிகிதம் என தெரிந்து கொள்ளலாம் . ஏன் இவ்வாறு ஒரு பொருளிற்கான மதிப்புகூட்டு வரிமட்டும் இவ்வளவு அதிகமாகின்றது ? ஏனெனில் இந்த விற்பணை-சங்கிலியின் ஒவ்வொன்றின் முடிவிலும் உள்ள மதிப்புகூட்டுவரியையும் சேர்த்த மொத்தவிலைக்கே அடுத்தநிலையில் மதிப்புகூட்டுவரி விதிக்கப்படுகின்றது அதாவது மதிப்பு கூட்டியதற்கு மட்டுமல்லாது ஏற்கனவே செலுத்திய வரிக்கும் சேர்த்து அதாவது வரிக்கு வரிஎன்றவாறு கூட்டுவரியாக விதிக்கப்பட்டு வசூலிக்கபடுகின்றது நுகர்வோரின் கூடுதலான இந்த ரூபாய் 15/- எனும் வரிச்சுமையானது பின்வருமாறு மொத்தவிற்பணையாளர் ,உற்பத்தியாளர் ஆகியோர்களுக்கு செலுத்திய அடக்கவிலையின் மதிப்புகூட்டுவரியை மீண்டும் ரூபாய் 10என வசூலிக்கின்றார் பின்னர் சில்லறை விற்பணையாளர் உற்பத்தியாளரின் அடக்கவிலைக்கும் மொத்த-விற்பணையாளரின் மதிப்புகூட்டிய விலைக்கும் சேர்த்து மீண்டும் ஒருமுறை நுகர்வோரிடமிருந்து ரூபாய் 15/- உம் சேர்த்து ஆகமொத்தம் ரூபாய் 25/- ஐ கூடுதலாக வசூலிக்கின்றார் வேறுமுறையில் கூறுவதெனில் உற்பத்தியாளரின் அடக்கவிலைமீது ரூபாய்100/- இக்கு விற்பணைவரியாக ரூபாய் 10/- உடன் இந்த உற்பத்தியாளரின் விற்பணைவரியான ரூபாய் 10/-இக்கு வரிமீது வரியாக ரூபாய்1/- என்றும் மொத்த விற்பணையாளரின் நிகர அடக்கவிலையின் மீது ரூபாய் 40/-இக்கு வரியாக ரூபாய் 4/- ஆகமொத்தம் வரிக்கு வரியாக மட்டும் ரூபாய் 15/- வசூலிக்கப்படுகின்றது இங்கு மொத்தவிற்பணையாளர் தாம் உற்பத்தியாளருக்காக கூடுதலாக செலுத்திய மதிப்புகூட்டுவரியை சில்லறை விற்பணையாளரின் தலையில் சுமத்துகின்றார் அதனைதொடர்ந்து சில்லறை விற்பணையாளர் உற்பத்தியாளருக்காக கூடுதலாக செலுத்திய மொத்தவிற்பணையாளரின் வரியுடன் மொத்த விற்பணையாளருக்காக கூடுதலாக செலுத்திய மதிப்புகூட்டுவரியையும்சேர்த்து நுகர்வோர் தலையில் சுமத்துகின்றார் அதாவதுஏற்கனவே செலுத்தபட்ட வரிக்கும் சேர்த்து வரியாக இறுதியில் நூகர்வோர் கூடுதலாக செலுத்துகின்றார் இந்த விற்பணை சங்கிலியில் கூடுதலான நபர் சேர்ந்து சங்கிலியானது நீளமானால் அதற்கேற்ப நுகர்வோரின் வரிச்சுமையும் கூடுதலாகின்றது இப்போது இரண்டாவது அட்டவணையை பார்ப்போம் இந்த இரண்டாவது அட்டவணையானது இந்தியாவில் இந்த சசேவ அறிமுகபடுத்தி நடைமுறைபடுத்தபட்டால் அதே முதல் எடுத்துகாட்டின் விற்பணைசங்கிலியின் அதே விற்பணை வரிவிகித்தில் அல்லது சசேவ விகிதத்தில் ஆனால் வரிச்சுமை முழுவதுமாக மாறியமைவதை காணலாம்
2 அட்டவணை 2 சசேவ விகிதம் அறிமுகபடுத்தி நடைமுறைபடுத்தினால் அ) ஒரு உற்பத்தியாளர் மூலப்பொருட்களை விலைஇல்லாமல் தம்முடைய நிறுவனத்திற்காக கொள்முதல் செய்கின்றார் எனக்கொள்வோம் பின்னர் அவர் தன்னுடைய நிறுவனத்தில் இந்த மூலப்பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்திடும் பொருளாக உருவாக்கி அந்த பொருளிற்கு ரூபாய் 100/- என மதிப்பிடுகின்றார் இந்த பொருளிற்கான விற்பணைவரி 10% சதவிகிதம் என கொள்வோம் அதனால் அவர் ரூபாய் 110/- இற்கு மொத்த விற்பணையாளரிடம் விற்பணை செய்கின்றார் இங்கு மதிப்புகூட்டு வரி ரூபாய் 10/- ஆகும் ஆ)அதனை தொடர்ந்து மொத்தவிற்பணையாளர் தாம் கொள்முதல் செய்த ரூபாய் 100/- இக்கான பொருளின் மீது ரூபாய் 50/- மதிப்புகூட்டி (அதாவது மொத்தவிற்பணையாளரின் அடக்க விலை ரூபாய் 150/- கழிக்க உற்பத்தியாளரின் அடக்கவிலைரூபாய் 100/-) சில்லறை விற்பணயாளருக்கு ரூபாய் 150/- என்ற அடக்கவிலையில் அந்த பொருளை விற்பணை செய்கின்றார் இங்கும் அந்த பொருளிற்கான மதிப்புகூட்டு வரிவிகிதம் 10% சதவிகிதம் எனகொள்வோம் அதனால் அவர் மதிப்புகூடுதல் செய்தரூபாய் 50/- மதிப்பிற்கு மட்டும் வரியாக ரூபாய் 5/- சேர்த்து மொத்தம் விற்பணை விலை ரூபாய் 155/- இக்கு (இங்கு விற்பணைவிலையானது அடக்கவிலை ரூபாய் 150/- கூட்டுக மதிப்பு கூட்டு வரி ரூபாய் 5/-) சில்லறை விற்பணையாளருக்கு விற்பணை செய்கின்றார் இ)மூன்றாவதாக சில்லறை விற்பணயாளர் மொத்தவிற்பணையாளரிடமிருந்து கொள்முதல் செய்தபொருளின் அடக்கவிலைரூபாய் 150/- உடன் மீது ரூபாய் 70 /- மதிப்புகூட்டி (அதாவது சில்லறை விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 220/- கழிக்க மொத்த விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 150/- ) ரூபாய் 220/- என அடக்க விலையாக பொதுமக்களுக்கு விற்பணைசெய்கின்றார் இங்கும் மதிப்புகூட்டுவரிவகிதம் 10% சதவிகிதம் எனக்கொள்வோம் அதனால் இந்த கூடுதலான மதிப்பிற்குமட்டும் மதிப்பு கூட்டுவரி ரூபாய் 7/- சேர்த்து மொத்தம் இறுதி விற்பணைவிலைரூபாய் 227/- இக்கு (இங்கு விற்பணைவிலையானது சில்லறை விற்பணையாளரின் அடக்கவிலை ரூபாய் 220/- கூட்டுக மதிப்பு கூட்டு வரி ரூபாய் 7/-) பொதுமக்களாகிய நுகர்வோருக்கு விற்பணை செய்கின்றார் இங்கு மொத்த வரிச்சுமை ரூபாய் 22/- மட்டுமே ஆக முந்தைய வரிச்சுமைக்கும் ரூபாய்47/- தற்போதையவரிச்சுமைக்கும் ரூபாய்22/- வித்தியாசம் ரூபாய் 25/- ஆகும் அதனால் பொருளின் இறுதி விற்பணை விலையானது ரூபாய் 242/- இக்கு பதிலாக ரூபாய் 227 /-ஆக நுகர்வோருக்கு குறைவாக கிடைக்கின்றது அதனால் இந்த சசேவ அறிமுகபடுத்துவதால் பொருளின் விற்பணை விலை குறைந்து நுகர்வோரின் வாங்கும் திறன் கூடுகின்றது இந்நிலையில் பொதுவாக இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள மறைமுகவரி அமைவு எவ்வாறு அமைந்துள்ளது என நாமெல்லோரும் கண்டிப்பாக தெரிந்து கொள்வது நல்லது இந்தியாவானது கூட்டாட்சியின் அடிப்படையில் நிருவகிக்கப்படுகின்றது அதனால் வரிவிதி்ப்பின் உரிமையானது மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து இந்த மத்திய மாநில அரசுகளானது சில்லறை விற்பணையாளரகளால் உற்பத்தி பொருட்கள் விற்பணை செய்திடும்போது உற்பத்தியாளரோ அல்லது மொத்த விற்பணையாளரோ தாம் செலுத்திய உள்ளீட்டு மதிப்புக்கூட்டு வரியை கழித்து கொண்டு நிகரவரியை மட்டும் செலுத்தினால் போதும் என்றும் எவ்வளவு தொகை கழித்து கொள்வது எந்த விகிதத்தில் வரிவிதிப்பது என்ற உரிமையின் அடிப்படையில் செயல்படுகின்றன ஏராளமான நிகழ்வுகளில் மாநில அரசுகள் சில்லறை விற்பணையாளரகளால் உற்பத்தி பொருட்களை விற்பணை செய்திடும்போது உற்பத்தியாளரோ அல்லது மொத்த விற்பணையாளரோ தாம் மற்ற மாநில அரசுகளுக்கு செலுத்திய உள்ளீட்டு மதிப்புக்கூட்டு வரியை கழித்து கொண்டு நிகரவரியை மட்டும் செலுத்தினால் போதும் என்பதை ஏற்க மறுத்துள்ளன இதற்காக ஏராளமான நீதிமன்ற தீர்ப்பகளும் வழக்குகளும் கணக்கிடமுடியாத அளவில் உள்ளன வேறு சில நிகழ்வுகளில் மாநில அரசுகள் உற்பத்தி பொருட்களை சில்லறை விற்பணையாளரகளால் விற்பணை செய்திடும்போது உற்பத்தியாளரோ மொத்த விற்பணையாளரோ தாம் மத்தியஅரசுிற்கு செலுத்திய உள்ளீட்டு மதிப்புக்கூட்டு வரியை கழித்து கொண்டு நிகரவரியை மட்டும் செலுத்தினால் போதும் என்பதை ஏற்க மறுத்துள்ளன ஆக இந்த இரு சூழலிலும் நுகர்வோர் மட்டும் அதிக வரிச்சுமையை ஏற்கவேண்டிய நிலைக்கு தள்ளபடுகின்றனர் ஏனெனில் சில்லறை விற்பணையாளரின் மதிப்பு கூட்டப் பட்ட அளவிற்கு மட்டும் வரி செலுத்தப்-படுவதில்லை ஆனால் ஏற்கனவே செலுத்திய வரிக்கும் சேர்த்து வரிக்கு வரியாக கூட்டுவரியாக விதிக்கப்பட்டு கூடுதலாக இறுதி விற்பணைவிலை மிக அதிக சுமையாக நுகர்வோர்மீது சுமத்தபடுகின்றது இந்த எடுத்துகாட்டின் சூழலில் சில்லறை விற்பணையாளரிடம் இறுதியாக வரியானது ரூபாய் 22/- ஆகும் ஆனால் வரியானது ரூபாய் 7/- இக்கு பதிலாக கூடுதலான வரிச்சுமையும் சேர்த்து நுகர்வோர்மீது சுமத்தபடுகின்றது சில நேரங்களில் ஒருசில பொருட்களுக்கு ஏற்கனவே செலுத்திய வரி கழித்துகொள்ள அனுமதிக்கபடுகின்றது ஆனால் வேறுசில பொருட்களுக்கு இதே அனைத்து நடைமுறைகளும் பின்பற்றியிருந்தாலும் அவைகளுக்கு ஏற்கனவே செலுத்திய வரியை கழித்து கொள்ள அனுமதிப்பதில்லை மேலும் வெவ்வேறு மாநில அரசுகளானது தத்தமது சொந்த வரிவிதிப்பதற்கான விதிகள் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை பின்பற்றுவதால் வெவ்வேறு நிலைகளில் சில்லறை விற்பணையாளர் , மொத்த விற்பணையாளர் , உற்பத்தியாளர் ஆகியோர் தாம் ஏற்கனவே மற்ற அரசுகளுக்கு செலுத்திய மதிப்புகூட்டு வரியை தங்களுடைய வரியை செலுத்தும் போது கழித்து கொள்வதை ஏற்பதற்காக உருவாக்கி நடைமுறை படுத்துகின்றன அதனால் சில்லறை விற்பணையாளர் , மொத்த விற்பணையாளர் , உற்பத்தியாளர் ஆகிய அனைவரும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளின் மதிப்புகூட்டு வரி தொடர்பான அனைத்து விதிகள் வழிகாட்டுதல்கள் வெவ்வேறு நிலைகள் ஆகியவற்றை முழுவதும் ஐயம் திரிபற தெரிந்து அறிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இதற்கென தனியாக அமைப்பொன்றை வைத்து பராமரிப்பு செய்தால்தான் மற்ற மாநில எல்லைக்குள் சென்று தம்முடைய வியாபாரி நடவடிக்கையை செயற்படுத்திடமுடியும்என்ற நிலை தற்போதைய வரிவிதிப்புகளில் உள்ளது அதனால் இந்த வரிவிதிப்பை கையாளும் அமைப்பிற்கான கூடுதல் செலவானது உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருளின் அடக்க-விலையுடன் சேர்த்து அதன்விலைஉயர்வதற்கும் அவர்களுடைய இலாபவிகிதம் குறைவாக இருப்பதற்கும் ஏதுவாகின்றது அதுமட்டுமல்லாமல் மாநில அரசுகளும் இந்த வரிவிதிப்பு வரிவசூலித்தல் வரிவிதிப்பு தொடர்பான வழக்குகள் அந்த வழக்குகளால் ஏற்படும் பிணக்குகளை தீர்வுசெய்தல் ஆகிய நிகழ்வுகளை கையாளுவதற்கென ஏராளமான செலவில் தனியான தொரு துறையை கட்டமைவு செய்து நிருவகிக்க வேண்டியுள்ளது இவ்வாறான அதிக சுமையுடைய அதிக குழப்பமான தெளிவற்ற சூழலும் கொண்ட அமைவாக தற்போதைய மறைமுகவரிச்சூழல் இருக்கின்றது இதனால் சில்லறை விற்பணையாளர், மொத்த விற்பணையாளர் , உற்பத்தியாளர் ஆகியோரில் யாராவது ஒருவர் வரியை செலுத்தாது விட்டு வி்ட்டார்களா் அல்லது இவர்கள் சரியாக செலுத்தினார்களா என எப்போதும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய சூழலில் அரசின் கட்டமைவு இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளபடுகின்றது இவ்வாறான சிக்கல்களையும் சிரமங்களையும் குழப்பங்களையும் தவிர்த்து வரிசெலுத்துவதும் வரிவசூலிப்பதும் எளிமையான இந்தியா முழுவதும் ஒரேமாதிரியான வரிவிதிப்பிற்கான விதிகள் வழிமுறைகள் வரிவிகிதங்கள் அமைந்துள்ளதே இந்த சசேவ ஆகும் மேலும் வரிநிருவாக அமைவானது குறிப்பிட்ட ஒருவர் மிகச்சரியாக வரிசெலுத்தியுள்ளார் என எளிதாக சான்றளிக்கபடவிருக்கின்றது அதனை தொடர்ந்து இறுதி நுகர்வோருக்கு வரிச்சுமை குறைந்து உற்பத்தி பொருட்களின் விலையும் குறையும் அதனால் நுகர்வோரின் வாங்கும் திறன் கூடுதலாகி உற்பத்தியாளர்கள் அதிக பொருட்களை உற்பத்தி செய்திடவேண்டிய நிலையும் கூடுதலான பொருட்கள் உற்பத்தி யாகி விற்பணையாவதால் அரசுகளுக்கு கூடுதலான வரிவருமானமும் கிடைக்கும் உண்மையில் நுகர்வோராகிய பொதுமக்கள் ,சில்லறை விற்பணையாளர் , மொத்த விற்பணையாளர் , உற்பத்தியாளர் மாநில அரசுகள் மத்திய அரசு ஆகிய அனைவருக்கும் இந்த சசேவ மிகப்பெரிய உதவியாக அமையும் இந்த சசேவ ஆனது ஒரு பொருளின் அல்லது சேவையின் நுகர்வின் அடிப்படையான வரியாகும் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பொருள் அல்லது சேவையானது கைமாறும்போது விற்பணை சங்கிலியின் ஒவ்வொரு படிமுறையிலும் ஏற்படும் கூடுதலான மதிப்பிற்குமட்டும் என்ற அடிப்படையில் செயல்படவிருக்கின்றது வேறுவகையில் இந்த சசேவ பற்றி கூறுவதெனில் ஒருவர் தாம் கொள்முதல் செய்திடும்போது செலுத்திய உள்ளீட்டு வரியை தம்முடைய பொருளை விற்பணைசெய்திடும் போது செலுத்த வேண்டிய வரியில் கழித்து நிகரவரியை மட்டும் செலுத்தினால் போதுமானதாகும் அதானல் ஒரு உற்பத்தியாளர் மொத்த விற்பணையாளர் சில்லறை விற்பணையாளர் ஆகியோர் சதேவ இல் விதிக்கப்பட்ட வரியை கண்டிப்பாக செலுத்தவேண்டும் ஆனால் இவர்கள் ஏற்கனவே செலுத்திய வரியை அதற்கான வழிமுறையில் கழித்துகொள்ளலாம் ஆனாலும் இந்த விற்பணைசங்கிலியின் கடைசியாக உள்ள பொதுமக்களாகிய நுகர்வோர் இறுதியில் அனைத்து நபர்களின் வரிகளையும் சேர்த்து செலுத்தவேண்டும் இந்த சசேவ ஒரு மறைமுக வரி அதாவது ஒரு உற்பத்தியாளர் மொத்த விற்பணையாளர் சில்லறை விற்பணையாளர் ஆகியோர் சதேவ விதிக்கப்பட்ட வரியை ஏற்கனவே செலுத்தியிருந்தால அதனை கழித்து கொண்டு செலுத்திவிடுவார்கள் ஆனால் இதனை மற்றவர்களிடமிருந்து அந்த பொருளின் விற்பணையின் போது அல்லது சேவையின்போது வசூலித்துவிடுவார்கள் தொடர்ந்து விற்பணைசங்கிலியின் இறுதியில் உள்ள பொதுமக்களாகிய நுகர்வோர் இந்த வரிசுமையை செலுத்தவேண்டும் ஆயினும் நடப்பிலுள்ள வரிவிதிப்பிலும் இதே போன்றுதான் மற்றவர்களிடமிருந்து அந்த பொருளின் விற்பணையின் போது அல்லது சேவையின்போது இந்த மறைமுக வரிகளை வசூலித்துவிடுவார்கள் ஆயினும் விற்பணை சங்கிலியின் இறுதியில் உள்ள பொதுமக்களாகிய நுகர்வோர் வரிக்கு வரியாக கணக்கிட்டு இந்த வரிசுமையை ஏற்று கூடுதலாக செலுத்தவேண்டியுள்ளது.ஆனால் இந்த புதிய சசேவ இல் வரிக்கு வரியாக கணக்கிடப்படுவதில்லை அதற்கு பதிலாக அப்பொருளின் கூடுதல் மதிப்பிற்கு மட்டுமே வரிகணக்கிடப்பட்டு எளிமை படுத்தப்பட்டு வசூலிக்கப்படுகின்றது அதனால் பொருளின் இறுதி விற்பணை விலை மிகக்குறைவாகின்றது ஒட்டுமொத்த சாராம்சமாக கூறவேண்டுமெனில் தற்போது நடைமுறையில் உள்ள உற்பத்தி வரி மதிப்புக்கூட்டுவரி ஆகிய வற்றின் மறுபெயரே இந்த சசேவ ஆகும் ஆனால் அவ்வாறான குழப்பமும் சிக்கலும் வெவ்வேறு அளவிலும் இல்லாத தெளிவான எளிய நடைமுறையில் ஒரேமாதிரியான அளவில் இந்த சசேவ விதிக்கபடுவதாகும் என்ற அடிப்படை செய்தி மனதில் கொள்க

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...