கடந்த 26.10.2018 அன்றைய தொடரில் இந்த அஇச வின் பொதுவான வசதி வாய்ப்புகளைபற்றி ஒரு அறிமுகத்தை மட்டும் கண்டோம் இந்த தொடரில் ஒரு சாதாரண உற்புத்தியாளர் அல்லது விற்பணையாளர் இந்த இணையசந்தையில் எவ்வாறு பதிவுசெய்து தங்களுடைய பொருளை விற்பணைசெய்வது என்றவிவரத்தை காண்போம்
தற்போது நடைமுறையில் இதுவரை ஒரு உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளர் தன்னுடைய பொருளை அரசிற்கும் அரசுசார்ந்த நிறுவனங்களுக்கும் விற்பணைசெய்திடவிரும்பினால் அவர் ஒவ்வொரு துறையிலும் இதற்கென பராமரிக்கப்படும் விற்பணையாளர் பட்டியலில்(Vendor List) தன்னுடைய பெயரையும் சேர்த்திடுமாறு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது விண்ணப்பிக்கவேண்டும் அதனடிப்படையில் இவ்வாறு பதிவுசெய்பவர்களுக்கு தொடர்புடைய துறையிலிருந்து விலைப்புள்ளி கோருவதற்கான வாய்ப்பு கிடைத்திடும் அவ்வாறான நடைமுறையை மாற்றி இந்த அரசுஇணைய சந்தை( அஇச)(Government E-Marketplace(GeM)) எனும் இணையசந்தையில் தங்களைபற்றிய விவரங்களை ஒருமுறை மட்டும் பதிவுசெய்துகொண்டால் போதும் இந்தியாமுழுவதுமுள்ள அனைத்து அரசுசார்ந்த நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களையும் அல்லது சேவைகளையும் இந்த தளத்தின் வாயிலாக விற்பணைசெய்திடலாம் என்ற புதிய வசதியை தற்போது இந்த இணையதளம் அளிக்கின்றது
பொதுவாக பொருளை உற்பத்தி செய்பவர்கள் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்லது மறுவிற்பணையாளர்கள் இந்த திறந்த சந்தையில் தங்களுடைய பொருளை எளிதாக விற்பணைசெய்திடலாம் இதில் பதிவு செய்துகொள்வதற்காக தங்களுடைய ஆதார் எண், மின்கையொப்பம் சரக்குசேவைவரி தளத்தில் பதிவுசெய்துகொண்ட விவரங்களுடன் தங்களைபற்றியும் தாம் விற்பணைசெய்யவுள்ள பொருளைபற்றிய முழுவிவரங்களையும் அதன் மாதிரி படங்களுடன் ஒருமுறைமட்டும் வழங்கப்படும் கடவுச்சொற்களின்(One Time Password(OTP)) வாயிலாக பதிவுசெய்து கொள்ளவேண்டும் மிகமுக்கியமாக பொருட்களை கொள்முதல் செய்பவர்கள் இவ்வாறான உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளரை பற்றியும் அவர்களுடைய பொருட்களை பற்றியும் ஆன விவரங்களை எளிதாக அறிந்து கொளளும் பொருட்டு அப்பொருட்களை பற்றிய அனைத்து விவரங்களையும் அந்த பொருட்களின் உருவப்படங்களையும்சேர்த்து பதிவேற்றம் செய்து இணையத்தில் பட்டியலிடுமாறு செய்திடவேண்டும் ஒரு உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளர் தாம் உற்பத்தி அல்லது விற்பணை செய்திட விரும்பும் எத்தனை பொருட்களையும் இவ்வாறு பட்டியலிடுமாறு செய்திடமுடியும்
இவ்வாறு பதிவுசெய்துகொண்டபின்னர் இந்த தளத்தில் நேரடியாக எதிர்மறைஏலத்தில் பங்குகொள்ளலாம் பொதுவாக பொருட்களை ஏலத்தின் வாயிலாக விற்பணை செய்திடும்போது குறைந்தபட்ச விலையிலிருந்து ஏலம் ஆரம்பிக்கப்பட்டு அதிகபட்சம் விலைவரை உயர்ந்து கொண்டேவந்து கடைசியாக யார்அதிகபட்ச விற்பணைவிலை கோரினாரோ அவருக்கு விற்பணைசெய்வதே நடைமுறையாகும் அதற்குமறுதலையாக இந்த அஇச(Gem)எனும் தளத்தில் கொள்முதல் செய்பவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களின் அதிகபட்ச கொள்முதல் விலையை கோருவதை தொடர்ந்து குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்பவர்கள்அல்லது விற்பணையாளர்கள் எதிர்மறைஏலத்தில் பங்குகொண்டு அதாவது அதிகபட்சவிலையிலிருந்து ஏலம் துவங்கிகுறைந்த பட்சவிலைவரை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து கடைசியாக யார்மிகவும் குறைந்தவிலை கோரினாரோ அவரிடமிருந்து குறிப்பிட்ட பொருளை கொள்முதல் செய்வதாக ஏலம் முடிவிற்கு வரும் இதனை பொருட்களை கொள்முதல் செய்வதில் எதிர்மறைஏலம் (Reverse Auction)என அழைக்கப்படும் இந்த எதிர்மறை ஏலத்தில் கோரப்படும் பொருளை வழங்க தயாராக இருக்கும் 7 நாட்களுக்கமுன் பதிவு செய்து கொண்ட உற்பத்தியாளர் அல்லது விற்பணையாளர் மட்டுமே இந்த எதிர்மறை ஏலத்தில் பங்குகொள்ளமுடியும் இந்த எதிரமறை ஏலத்தின் போக்கை நேரடியாக திரையில் உற்பத்தியாளர் அல்லதுவிற்பணையாளர் காணமுடியும் இவ்வாறான ஏலத்தில் விற்பணைஉத்திரவுகிடைத்ததை இந்த இணைய தளமானது தொடர்புடைய உற்பத்தியாளர்களுக்கு அல்லது விற்பணையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக நினைவூட்டிடும் செய்தி ஒன்றை அனுப்படும் அதனை தொடர்ந்து அந்த உற்பத்தியாளர்கள் அல்லது விற்பணையாளர்கள் தங்களுக்கு கிடைத்த கொள்முதல் உத்திரவினடிப்-படையில் தாம் விற்பணைசெய்திடவிரும்பும் பொருட்களுக்கான விற்பணை பட்டியலை இணையத்தின் வாயிலாகவே தயார்செய்து கொள்முதல் செய்பவரின் மின்னஞ்சல்முகவரிக்கு அனுப்பிடலாம் அதன்பிறகு தங்களுடைய பொருட்களை வழங்கி கொள்முதல் செய்பவர் அப்பொருளை ஏற்று கொண்ட பத்துநாட்களுக்குள் இணையத்தின் வாயிலாகவே இதற்கான தொகையை பெற்றுக்கொள்ளலாம் மேலும் எந்தவொரு பயனாளரும் தங்களுக்க எழும்எந்தவொரு சந்தேகத்தையும் தீர்வுசெய்துகொள்வதற்கு அலுவலக நேரத்தில் இந்த தளத்தின் 1-800-102-3436 (1-800-102-E-GEM)என்ற உதவிபகுதியை அனுகலாம் மேலும் விவரங்களுக்கு https://gem.gov.in/ என்ற இணையமுகவரிக்கு சென்ற அறிந்து பயன்பெறுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக