வெள்ளி, 12 அக்டோபர், 2018

நிறுமங்களின் சட்டம் 2013 இன்படி நிறுமங்களுக்கான சுதந்திரமான இயக்குநர்


அறிமுகம் எந்தவொரு நிறுவனத்தின் ஆளுகையிலும் கொள்கைகளை வகுப்பது அந்த கொள்கைகளின் படி அந்நிறுவனம் சரியான வழியில் செல்லுமாறு வழிகாட்டி செயற்படுத்துவது அதனை தொடர்ந்து அந்நிறுவனம் நல்ல வெற்றிகரமான நிறுவனமாக வளரச்செய்வது ஆகிய அனைத்திற்கும் அடிப்படையான அந்நிறுவனத்தை கட்டுப்படுத்துவதும் வழிநடத்துவதும் அந்நிறுவனத்தின் இயக்குநர்களின் குழுக்களாகும் இந்தியாவில் முதன்முதலாக இவ்வாறான இயக்குநர்களின் குழுக்களில் கூடுதலான அதிகாரமும் பொறுப்புகளையும் கொண்ட முற்றிலும் புதுமையான வகையில் சுதந்திரமான இயக்குநர் எனும் புதிய வரையறை ஒன்றினை ஒரு நிறுவனத்தினை நன்கு வழிநடத்தி செல்வதற்காக அவர்களுக்கான அதிகாரங்கள் பொறுப்புகள் ஆகியவற்றை முழுமையாக விவரிக்கும் நிறுமங்களின் சட்டம் 2013 இல் பிரிவு 2(47) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஏற்கனவே நடைமுறையில் இருந்த நிறுமங்களின் சட்டம் 1956 இன்படி இந்த வகையான சுதந்திரமான இயக்குநர் என்றஒரு வகைநபர்களை நேரடியாக நியமனம் செய்வதற்கான வெளிப்படையான விதிகள் எதுவும் இல்லை ஆனால் அதற்கு பதிலாக நிறுவனங்களின் பங்குகளை பங்குச்சந்தையில் விற்பணைக்காக பட்டியலிடும் ஒப்பந்தப் பிரிவு49 இல் மட்டும் பங்குகளை விற்பணைக்காக பட்டியலிடும் அனைத்து நிறுவனங்களும் சுதந்திரமான இயக்குநர்களை கண்டிப்பாக நியமிக்கவேண்டும் என தூண்டப்படும் செயல்வாயிலாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதன்பிறகு இந்திய அரசின் நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகமானது நிறுவனங்களின் சட்டம் 1956இல் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு பங்குச்சந்தையில் விற்பணைக்காக தத்தமது பங்குகளை பட்டியலிடும் எந்தவொரு நிறுவனத்திலும் அந்நிறுவனத்தின் ஆளுகையை மேற்பார்வையிடுகின்ற சுதந்திரமான இயக்குநர்களையும் சேர்ந்தபுதிய இயக்குநர்களின் குழுவாக அமைந்திடுமாறு சுதந்திரமான இயக்குநர்களை அந்நிறுவனத்தில் நியமிப்பதற்கு தேவையான செயலை மேற்கொள்வதற்காக முயற்சி செய்து செயல்படுத்தியது எனினும் இந்த முயற்சியின் பலனாக நியமிக்கப்பட்ட சுதந்திரமான இயக்குநர்களுக்கான கடமைகள், பொறுப்புகள், அதிகாரங்கள் ஆகியவற்றை பற்றி எந்தவொரு விளக்கங்களும் அதில் இல்லாத நிலையில் இந்த சுதந்திரமான இயக்குநர்களை நியமிக்கும் பணியை அது தெளிவாக முழுமையாக செயல்டுத்த தவறிவிட்டது என்றும் இந்த செயல் பயனற்றது என்றும் நிரூபிக்கப்பட்டுவிட்டது அதனால் சிறந்த ஆளுகையுடைய ஒரு நிறுவனத்தின் நிருவாகத்தினை சுதந்திரமான இயக்குநர்களை கொண்டு மிகச்சரியாக செயல்படுத்திடுவது என்பது மிகவும் சிக்கலானதும் இக்கட்டானதும் ஆன நிலையாகி-விட்டது . அதனால் சுதந்திரமான இயக்குநர்கள் தொடர்பான ஒருங்கிணைந்த மிகவலுவான சட்டம் ஒன்று மிகஅத்தியாவசிமாக தேவையென்ற நிலையில் தற்போதைய புதிய நிறுமங்களின் சட்டம் 2013 இல் பிரிவு 2 (47) ஐ நடைமுறைபடுத்தவேண்டிய கட்டாய சூழல் உருவானது அவ்வாறான சுதந்திரமான இயக்குநர்கள் நியமனம் அவர்களின் அதிகாரங்கள் , கடமைகள் ,பொறுப்புகள் ஆகியவை பற்றிய முழுவிவரங்களை பற்றி இந்த தொடரில் காண்போம் சுதந்திரமான இயக்குநர்களின் நியமனம் இந்த சட்டமானது ஒருநிறுவனத்தில் உள்ள இயக்குனர்களின் மொத்த எண்ணிக்கையில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையில் சுதந்திரமான இயக்குனர்களை நியமிக்கவேண்டுவது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒரு குறிப்பிட்ட கடமையாகும் என விதிக்கின்றது மேலும் மத்திய அரசு இந்த தேவையின் எல்லைக்குள் நிறுவனங்களின் மற்ற சட்டவிதி / விதிகளை உள்ளடங்கிடுவதற்காக அனுமதிக்கின்றது. ஆகவே மேலே கூறிய நிபந்தனைகளானது நிறுவனத்தில் செலுத்தப்பட்ட மூலதனத்தில் இந்திய ரூபாய் 1 பில்லியன் (சுமார் அமெரிக்க டாலர்$ 16 மில்லியன் ) அல்லது விற்பணை வருமானம் இந்திய ரூபாய் 3 பில்லியன் (சுமார் அமெரிக்கடாலர் $ 48 மில்லியன்) அல்லது ஒட்டுமொத்த கடன் / கடன் பத்திரங்கள் / வாங்கிய கடன்கள் இந்திய ரூபாய் 2 பில்லியன் (சுமார் அமெரிக்க டாலர்$ 3225065) ஐவிட கூடுதலாக இருக்கும் எந்தவொரு பொதுத் துறை நிறுவனங்களுக்குப் பொருந்தும் இந்த சுதந்திரமான இயக்குநர்களை நியமிக்கும் பணியை எளியதாக ஆக்கும் பொருட்டு மத்தியஅரசும் மத்தியஅரசால் அங்கீரிக்கப்பட்ட நிறுவனங்களும் இணைந்து சுதந்திரமான இயக்குநர்களாக நியமிக்கதகுதியுள்ள தயார்நிலையிலுள்ள நபர்களின் விவரங்களடங்கிய பட்டியலான தரவுவங்கியை பராமரிக்கவேண்டும் இந்த தரவுவங்கியிலிருந்து மேற்கூறிய நிறுவனங்கள் தத்தமக்குத்தேவையான சுதந்திரமான இயக்குநர்களை தெரிவுசெய்து நியமித்து கொள்ளலாம் ஆனால், மேற்கூறிய சுதந்திரமான இயக்குநர்கள் நியமிக்கும் தேவையை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்கள் போதுமான அளவில் இந்த தரவுவங்கியில் தற்போது உள்ளனரா என்பதே மிகமுக்கியமான பிரச்சினையாகும் .இவையே இந்நிறுமங்கள் சட்டம் 2013இன் தேவையை பூர்த்தி செய்வதற்கு கடினமான வாய்ப்புகளாக இருப்பதை காணலாம் இதனை நிறுவனங்கள் ஒருவருடத்திற்குள் செயல்படுத்திடவேண்டும் என இந்த நிறுமங்கள் சட்டம் 2013 ஆனது அனுமதித்தாலும் இந்தியாவில் போதுமான அளவு தகுதியுள்ள நபர்களை மேம்படுத்தி உருவாக்கிடும்வரை நிறுவனங்கள் மேற்கூறிய சுதந்திரமான இயக்குநர்களை கட்டாயமாக நியமித்திடவேண்டும் என கூறும் நிறுமங்கள் சட்டம் 2013ஐ நடைமுறை படுத்துவது மிகவும் கடினமான பணியாக இருக்கும் ஆகவே இயக்குநர்கள் குழுவின் பொறுப்புகளைச் நிருவகிக்கத் தேவையான திறனை உருவாக்க பொருத்தமான நபர்களை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் / அமைப்புகள் மூலமாக சுதந்திரமான இயக்குநர்களாக மேம்படுத்திடுவதற்கான பயிற்சி அமர்வுகளை ஏற்பாடு செய்வதே தற்போதைய முதன்மையான பணியாகும்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...