ஒரு பெரிய அளவிலான செயல்திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்கள் 1000இற்குமேற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய நிலையில் இவைகளில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டிஇருந்தது ஏனெனில்இவைகளின் ஒவ்வொரு இடத்தின் உரிமையாளரும் வெவ்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை (தொழில்நுட்ப அறையினை அணுகுவதற்கான அனுமதி பெறுவதற்காக)அதாவது , நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடிதம், தேசிய அடையாள எண், நிறுவனஉரிம எண், வர்த்தகபதிவு எண், மேற்பார்வையாளர் விவரங்கள், இணைய பயன்பாடுகள், சிறப்பு படிவங்கள் மேலும்பல்வேறு தேவைகள் .போன்றவற்றின் காரணமாக ஒவ்வொரு நகரின் ஆய்வுகள் முடிவுகளையும் பெறுவது என்பது சிறிது வித்தியாசமாக அதாவது ஒரு சில உகந்ததாகவும் வேறுசில நிராகரிகதக்கதாகவும் இருந்தன. இந்த செயல்திட்டத்தின் தினசரி பகுப்பாய்வின் போது, வெவ்வேறு இடத்தில் பின்வரும் நடத்தையியல் அணுகுமுறைகளை இந்த ஆய்வுகளின் முடிவுகளினால் அடையபட்டது
பணியாளர் 1:, இவர் ஒவ்வொரு தளத்திற்கும் செல்வது அதனை அணுகுவதற்கான பிரச்சினையின் அனுபவத்தை அடைவது, மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பி வருவது, அவ்விடத்தின் மேலாளரை சந்திப்பது அவ்விடத்தின் பிரச்சினைகளை தீர்வுசெய்வதில் அவரது ஆதரவை கோருவது. அம்மேலாளரானவர் அந்த சிக்கலை தீர்வுசெய்வதற்காக இந்த பணியாளருக்கு உதவுவது, அதனை தொடர்ந்து அந்த ஆய்வு பணியை மேலும் சில நாட்களுக்கு பிறகு செய்வது ஆகியவற்றை இந்த அனைத்து 1000இற்குமேற்பட்ட தளங்களின் ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக அதே நடைமுறை பின்பற்றப்பட்டது
பணியாளர் 2: இவர் தளங்களின் அணுகுவதற்கான பிரச்சினை எதிர்கொள்வது, பின்னர் அலுவலகத்திற்கு திரும்பி வருவது ஆவணங்களை தயார்செய்வது அவ்விடத்தின் மேலாளருடைய தலையீடு இல்லாமல் தானாகவே சிக்கலை தீர்வுசெய்வதற்கு முயற்சி செய்வது. ஆகிய அனைத்து செயல்களும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நகரத்தின் அனைத்து 1000இற்குமேற்பட்ட தளங்களின் ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக அதே நடைமுறை பின்பற்றப்பட்டது.
பணியாளர் 3: இவர் தளங்களின் அணுகுவதற்கான பிரச்சினை எதிர்கொள்வது, பின்னர் அலுவலகத்திற்கு திரும்பி வருவது ஆவணங்கள் தயார் செய்திடும் பணியை விரைவில் முடித்துவிடுவது எதிர்கால அணுகலுக்கான கட்டிட மேலாண்மையுடன் தேவைகளை முடிவுசெய்து. அது எதிர்காலத்தில் அவருக்கு பயன்படுவதற்காக இந்த ஆவணத்தை தன்னுடைய இழுப்பறையில்(drawer) வைத்திடுவது. ஆகிய அனைத்து செயல்களும் அவருடைய அனைத்து 1000இற்குமேற்பட்ட தளங்களின் ஆய்வுகளிலும் தொடர்ச்சியாக அதே நடைமுறை பின்பற்றபட்டது.
பணியாளர் 4: இவர் தளங்களின் அணுகுவதற்கான பிரச்சினை எதிர்கொள்வது, ஆவணங்கள் தயார் செய்திடும் பணியை முடித்துவிடுவது அவ்வவ்விடத்தின் அணுகுதல் பிரச்சினைகளை தீர்வு செய்தல், அதனோடு எதிர்காலத்தில் அணுகுதல் பிரச்சினை எதுவும் எழாமல் இருப்பதற்காக அவைகளை தீர்வுசெய்வதற்கான பொதுமைப்படுத்த நெறிமுறைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றுதல். , ஒவ்வொரு தளத்திற்குமான தரவுதளத்தினை உருவாக்குவது அதில் அந்த தளத்தினை பற்றியஅனைத்து விரிவான தகவல்களையும் பதிவுசெய்தல்(உரிமையாளர் பெயர், செல்லிடத்து பேசி எண், அணுகுதல் நடைமுறை, பார்வையிடும் நேரம், இதர நடைமுறைகள் போன்றவை) எதிர்காலத்தில் இந்த தளத்திற்கு வரும்போது செய்த பணியையே திரும்பதிரும்ப செய்திடாமல் அடுத்தடுத்த பணிகளை செய்வதற்கு உதவுவதற்காக அவரது சகாக்களுடன் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்வது
இந்த அனைத்து பணியும் முடிவடையும்போது பணியாளர்-4 மட்டும் மிகச்சிறந்த திறமையானவராக தோன்றுகின்றார் ஏனெனில் இவர் அந்தந்த தளமேலாளரின் உதவியை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய பணிமுடித்தது மட்டுமல்லாமல் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான அனைத்து செயல்களையும் செய்துள்ளார் அவருடைய செயல் எதிர்காலத்தில் அந்த தளத்தினை ஆய்வு செய்திட செல்லும் நபரின் வாகண எரிபொருள் செலவு போக்குவரத்து படி ஆகியவற்றை நிறுவனத்திற்கு மிச்சபடுத்தி உள்ளார் இந்த எடுத்துகாட்டு உண்மையில் அனைத்து தொழில் துறைகளுக்கும் பொருந்துவதாகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக