திங்கள், 1 அக்டோபர், 2018

பசித்தவனுக்கு மீன் ஒன்றினை கொடுப்பதைவிட அந்த மீனை எவ்வாறு பிடிப்பது என கற்றுகொடுப்பது சிறந்த உதவியாகும்


ஒருமுறை வர்த்தக வங்கியில் எனக்கு வந்த காசோலையை சமர்ப்பித்து என்னுடைய கணக்கில் வரவுவைப்பதற்காக வங்கி கிளைக்கு வந்து சேர்ந்தேன் காசாளர் புதியவராக இருந்ததால் வங்கி மேலாளரிடம் இந்த பணியை எவ்வாறு செய்வது என கோரினார் உடன் அந்த வங்கியின் கிளைமேலாளரும் அருகில் வந்து அதற்கான படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்து கையொப்பமிட்டு சமர்ப்பிப்பது என்ற வழிமுறையை எனக்கு விளக்கி கூறினார் அவ்வாறு பூர்த்தி செய்து சமர்ப்பித்த என்னுடைய படிவத்தையும் காசோலையும் சேர்த்து பெற்று அதனடிப்படையில் என்னுடைய கணக்கில் அந்த காசோலைக்கான தொகையை வரவுவைத்து அதற்கான ஒப்புகை ரசீதை எனக்கு வழங்கி சென்றார் இதேபோன்ற அன்று அந்த வங்கிகிளைக்கு வந்த வாடிக்கையாளர் ஒவ்வொருவர் வரும்போதும் காசாளர் அந்த கிளைமேலாளரை அழைப்பதும் அந்த கிளைமேலாளர் அருகில் வந்த வாடிக்கையாளரின் தேவையை நிவர்த்தி செய்வதுமாக பொழுது கழிந்துகொண்டிருந்தது அதனை கண்ணுற்ற நான் அந்த வங்கியின் காசாளருக்கருகில் கிளைமேலாளர் அமர்ந்து கொண்டு வாடிக்கையாளருக்கு சேவை செய்து கொண்டிருக்கும்நிலையில் நான் அருகில் சென்று ஐயா நீங்களே ஒவ்வொருமுறையும் காசாளருக்கு உதவியாக வந்து வாடிக்கையாளர்களுக்கு சேவைசெய்வதை விட இந்த புதிய காசாளருக்கு ஒவ்வொரு பணியையும் எவ்வாறு செய்து முடிப்பது என அருகிலிருந்து பயிற்சி கொடுத்தால் அதனை கற்றுகொண்டு சுயமாக வாடிக்கையாளர்களுக்கு சேவைசெய்திடுவார் எனஆலோசனை கூறி அவ்வாறே செயற்படுத்தினேன் பசித்தவனுக்கு மீன் ஒன்றினை வழங்கினால் அந்த ஒருவேளைமட்டுமே நன்மை கிடைக்கும் அதற்கு பதிலாக மீனை எவ்வாறு பிடிப்பது என கற்றுகொடுத்தால் வாழ்நாள்முழுவதும் உதவியாக இருக்கும் அல்லவா

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...