ஒருநபர் நிறுமம்(One person company(OPC))என்ற கருத்தமைவு முதன்முதலில் இந்திய நிறுமங்களின் சட்டம்2013 இன் கீழ் விதி2014ல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது தனிப்பட்ட நபர்ஒருவர் எந்தவொரு வியாபாரத்தையும் அதிலும் தற்போதைய மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் சேவைத்துறையிலும் தனிநபர் நிறுவனம் என்பதற்கு பதிலாக பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஒருநபர்நிறுமாக துவங்குவது என்பது பல்வேறு வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்குகின்றது அதாவது தனியொருநபர்எவ்வளவு முதலீடு செய்துள்ளாரோ அந்தஅளவிற்குமட்டுமே அந்தநிறுமத்தின் பொறுப்பாகும் எனஒருநபர் நிறுமம்(One person company(OPC)) என்பதை நிறுமங்களின் சட்டம் 2013 வரையறுக்கின்றது
மேலும் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 2(62) இன் படி இந்த ஒருநபர் நிறுமம்(One person company) என்பது ஒரு நிறுமமானது ஒரேயொரு உறுப்பினர் மட்டும் கொண்டது என வரையறுக்கின்றது
நிறுமங்களின் சட்டம்2013 இன்படி ஒரு நபர் நிறுமம் (OPC) என்பது
1.பதிவுசெய்யப்பட்ட ஒரு நபர் நிறுமத்தின் (OPC) பங்குமூலதனம் ரூ. 50 லட்சத்திற்கு மேல் இருந்தால் அல்லதுகடந்த மூன்று வருடங்களின் சராசரியான வருடாந்திர வருவாயானது ரூ.2 கோடிக்கு மேல் இருந்தால் அது ஒரு நபர் நிறுமம் (OPC) என்ற தகுதியை இழக்கும்
2.ஒரு நபர் நிறுமத்தின் (OPC) உறுப்பினராக அல்லது நியமனஉறுப்பினராக அல்லது பயன்பெறும் பங்குஉரிமையாளராக18 வயது பூர்த்தியடையாத சிருவர்கள் ஆகமுடியாது
3. நிறுமங்களின் சட்டம்2013 பிரிவு 8 கீழ்அல்லாமல் பதிவுசெய்யப்பட்டு நடப்பில் இயங்கிகொண்டிருக்கும் தனியார் வரையறுக்கப்பட்டநிறுமத்தின் பங்கு மூலதனம் ரூ. 50 லட்சத்திற்குமிகாமலும் கடந்த மூன்று வருடங்களின் சராசரியான வருடாந்திர வருவாயானது ரூ.2 கோடிக்கு மிகாமலும் இருந்தால் அந்நிறுமத்தின் பொதுபேரவைக்கூட்டத்தில் சிறப்பு தீர்மாணத்தினை நிறைவேற்றுவதன் வாயிலாக அதனை ஒரு நபர் நிறுமமாக (OPC) மாற்றி-யமைத்து கொள்ளமுடியும்
தனிநபர்நிறுவனம் என்பதற்கும் ஒருநபர் நிறுமம்(One person company(OPC)) என்பதற்கும் உள்ள வேறுபாடுகள் பின்வருமாறு
1தனிநபர்நிறுவனம் என்பதில் அதன் உரிமையாளர் அல்லது சொந்தக்காரர் என்பவரும் அந்த தனிநபரும் ஒருவரேயாவார்கள். ஆனால் ஒருநபர் நிறுமம் (OPC)என்பதில் சட்டப்படி அந்த நிறுமத்தின் உரிமையாளர் அல்லது சொந்தக்காரர் என்பவர் வேறு அந்த தனிநபர் என்பவர் வேறுஆவார்
2. தனிநபர்நிறுவனத்தின் பொறுப்புகள் வரையறுக்கப்படாதது ஆனால் ஒருநபர் நிறுமத்தின்(OPC) பொறுப்புகள் வரையறுக்கப்பட்டதாகும்
3. தனிநபர்நிறுவனத்தின் உரிமையாளர் இறந்துபோனால் அந்தநிறுவனத்தின் வாழ்வும் அதோடுமுடிவடைந்து மூடப்பட்டுவிடும் ஆனால் ஒருநபர் நிறுமம்(OPC) என்பதில் அதிலுள்ள ஒரே உறுப்பினர் இறந்தாலும் அந்த நிறுமம் சட்டப்படி கலைக்காத வரை தொடர்ந்து செயலில் இருக்கும்
4 தனிநபர்நிறுவனத்திற்கு வழங்கப்படும் கடன்கள் அந்த தனிப்பட்ட நபரின் சொந்த பொறுப்பாகும் ஆனால் ஒருநபர் நிறுமத்திற்கு(OPC) வழங்கப்படும் கடன்கள் அந்தநிறுமம் மட்டுமே பொறுப்பாகும்
5.எந்தவொரு தனிப்பட்ட நபரும் தான்விரும்பும் தொழிலை வியாபாரத்தை இந்த தனிநபர்நிறுவனமாக பதிவுஎதுவும் செய்திடாமல் துவங்கமுடியும் ஆனால் ஒருநபர் நிறுமம்(OPC) என்பதில் கண்டிப்பாக நிறுமங்களின் சட்டம் 2013 விதி 2014இன்படி பதிவுசெய்திடவேண்டும்
6.தனிநபர்நிறுவனத்தின் நிதிநிலை போன்ற அனைத்து ஆவணங்களும்அந்த தனிப்பட்ட நபருக்கு உரிமையுடையதாகும் ஆனால் ஒருநபர் நிறுமத்தின் நிதிநிலை போன்ற அனைத்து ஆவணங்களும் ஒருநபர் நிறுமத்திற்கு(OPC) சொந்தமானதாகும்
இந்தOPC இன் வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
1. இந்த கருத்தமைவு தனிப்பட்ட நிபுணத்துவத்தை பயன்படுத்தி தான் விரும்பும் வணிகத்தை சுதந்திரமாக நடத்துவதற்கு அனுதிக்கின்றது.
2.தனிநபரின் ஆளுமை உந்துதலின் அடிப்படையிலான ஒரு வணிகத் திட்டத்தையும் செயல்படுத்திடஅனுமதிக்கின்றது.
3.ஒரு OPC நிறுமத்தினை ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக துவங்கிடமுடியும்
4.இந்த OPC நிறுமத்தில் எந்தவொருநேரத்திலும் ஒரேயொரு உறுப்பினர் (Member) மட்டுமே இருப்பர் அவ்வாறே ஒரேயொரு இயக்குநரே (Director)இருப்பர்
5 இந்த OPC நிறுமத்தின் ஒரு உறுப்பினர் அல்லது அவருடைய நியமனதாரர் இந்திய குடிமகனாகவும் இந்தியாவில் குடியிருப்பவராகவும் இருக்கவேண்டும்
6. ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட OPC ஐ உருவாக்க முடியாது அல்லது
ஒன்றுக்கு மேற்பட்ட OPC இல் நியமன உறுப்பினராக முடியாது.
7.இந்த OPC இன் உறுப்பினர் ஒருவர் மற்றொரு OPC இல் உறுப்பினராக இருந்தால் 180 நாட்களுக்குள் ஏதாவது ஒரு OPC இல் மட்டும் உறுப்பினர் என்ற தகுதியைப் பூர்த்தி செய்ய வேண்டும்
இந்தOPC க்கான பல்வேறு சலுகைகள் பின்வருமாறு
1 தனிநபர் ஒருவர் தனக்கு தோன்றிடும் எந்தவொரு புதிய வியாபார கருத்துகளின் அடிப்படையில் புதிய தொழிலை துவங்குவதற்கு இந்தOPC என்பது மிகஅருமையானஎளிதான கருவியாக விளங்குகின்றது
2. புதிய தொழில் முனைவோர்க்கு இந்த OPC ஆனது ஒரு தூண்டுகோலாக அமைகின்றது
3.இதன் வரையறுக்கப்பட்ட பொறுப்பு என்ற கருத்தமைவே புதிய தொழில் துவங்குவதற்கான உத்வேகத்தை தனிநபருக்கு வழங்குகின்றது
4 ஒரு தனியார் வரையறுக்கப்பட்டநிறுமம் அல்லது (பட்டியலிடப்பட்ட அல்லது பட்டியலிடப்படாத)பொது வரையறுக்கப்பட்டநிறுமம் போன்று இந்தOPC ஆக பதிவுசெய்யப்பட்டநிறுமம் நிறுமங்களின் சட்டம் 2013 விதி போன்றவைகளில் கூறியவறான பல்வேறு படிவங்களை சமர்ப்பிக்கவேண்டு் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை.
5. தற்போது நடப்பில் உள்ள உரிமையாளர்நிறுவனத்தினை எந்தவித சிரமமுமின்றி மிகஎளிதாக இந்த OPCஆக மாற்றிக்கொள்ளமுடியும்.
6 துவக்கத்தில் OPC ஆக குறைந்த மூலதனத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுமமாக துவங்கி படிப்படியாக வளர்ந்தபின்னர் பெரிய தனியார் வரையறுக்கப்பட்ட நிறுமமாக மாற்றியமைத்து கொள்ளலாம்
7 மூன்றாண்டிற்கு ஒருமுறை தணிக்கையாளரை மாற்றவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவமில்லாமல்தொடர்ச்சியாக ஒரே தணிக்கையாளரையே அமர்த்தி கொள்ளலாம்
8 வருடாந்திர அறிக்கையை நிறுமச்செயலர் அல்லது இயக்குநர் கையொப்பமிட்டு சமர்ப்பித்தால் போதுமானதாகும்
9 நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 98 , பிரிவுகள் 100 முதல் 111 இன்படி ஒவ்வொரு ஆண்டும் அடுத்தாண்டு செப்டம்பர் 30 இற்குள் கண்டிப்பாக நிறுமத்தின் பொதுப்பேரவை கூட்டவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை
10. நிறுமத்தின் இயக்குநர்களின் கூட்டத்தில் ஒரேயொரு நபர் மட்டுமே இருப்பதால் கூட்டம் துவங்குவதற்கு குறைந்தபட்ச இயக்குநர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்ற நிபந்தனை எதுவும் பொருந்தாது அவ்வாறே அந்த கூட்டத்தின் அறிக்கையிலும் நிதி அறிக்கையிலும் நிர்வாக இயக்குநர் அல்லதுகுறைந்தது இரு இயக்குநர்கள் கையொப்பிடவேண்டும்என்ற நிபந்தனையும் இந்த OPCக்கு பொருந்தாது இந்த OPCஇன் ஒரேயொரு இயக்குநர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டால் போதும் அவ்வாறே கூட்டஅறிக்கையிலும் நிதிநிலை அறிக்கையிலும்அந்த ஒரேயொரு இயக்குநரே கையொப்பமிட்டால் போதுமானதாகும்
OPC நிறுமத்தின் வகை பின்வருமாறு
இந்த OPC ஆக நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 3(.2) இன்படி
1.வரையறுக்கப்பட்ட பங்குமூலதனம் அல்லது
2.வரையறுக்கப்பட்ட உத்திரவாதம் அல்லது
3.வரையறுக்கப்படாத நிறுமம்
ஆகிய மூன்றவகையாக பதிவுசெய்து கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக