அரசின் அனைத்துபிரிவுகளும் அரசுநிறுவனங்களும் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொள்முதல் செய்வதற்காக அரசுஇணைய சந்தை(Government E-Marketplace) சுருக்கமாக ( அஇச (GeM))எனும் இணையத்தை பராமரித்துவருகின்றது .இதில் மிககுறைந்த அளவு மனித தலையீடுடன் முழுவதும் காகித பயன்பாடு எதுவும் இல்லாத ரொக்க புழக்கமில்லாத பொதுவாக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையம் சேவைகளையும் பெறுவதற்கு இது உறுதுனையாக இருக்கின்றது . அரசாங்கம் அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வழக்கமாக தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தனித்தனியாக டென்டர் எதுவும் கோராமல் நேரடியாக இந்த ( அஇச (GeM))எனும் இணையதளசந்தையின் வாயிலாக கொள்முதல் செய்துகொள்ளலாம் இதன் வசதி வாய்ப்புகள் பின்வருமாறு
1.இதுவரை இந்த அரசுஇணைய சந்தையில்( அஇச) சுமார் 4000 பொருட்களின் விற்பணையாளர்கள் 31000 பொருட்களையும் 17 சேவைகளையும் பதிவுசெய்துள்ளனர்
2.இந்த இணையதளத்தின் வாயிலாக பொருட்களை கொள்முதல்செய்வது மட்டுமல்லாது இந்நடவடிக்கைக்கான தொகையையும் இணையத்தின் வாயிலாகவே பரிமாறிகொள்ளலாம்
3. இந்தஇணைய தளத்தில் தாம் விரும்பும் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக தங்களுடைய ஆதார் அட்டைஎண், கைவிரல்ரேகைபதிவேற்றம் செய்தல் பதிபெற்ற மின்னஞ்சல் முகவரி போன்றவைகளுடன் Electroning Data Interchange(EDI)இன்வாயிலாக பதிவு செய்து கொள்ளவேண்டும்
4. இதில் விற்பணையாளர்களும் சேவையவழங்குபவர்களும் தாங்கள் விற்பணைசெய்திட விரும்பும் பொருட்களின் அல்லது வழங்கவிரும்பும் சேவைகளின் விவரங்களை தங்களுடைய ஆதார் எண், வருமானவரி கணக்குஎண், நிறுவனங்களாக பதிவுசெய்த எண் ஆகியவற்றுடன் சுயசான்றிதழுடன் இந்த இணையதளத்தில் பதவிசெய்து கொள்ளவேண்டும்
5 அனைத்து அரசுதுறைகளும் பொதுத்துறை நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை சேவைகளை பெறுவதற்காக டெண்டர் வழி-முறைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி அதிக காலவிரையத்தையும் மனித உழைப்பையும் வீணாக்காமல் எப்போது வேண்டுமானாலும் மிகவிரைவாக தேவையானபோது உடனடியாக இந்த ( அஇச (GeM))எனும் இணையசந்தையின் வாயிலாக கொள்முதல் செய்துகொள்ளலாம்
6இதில் பதிவுசெய்வதற்காக நேரடியாக எங்கும் செல்லத்தவையில்லை அல்லது காகித ஆவணங்கள் எதுவும் அதிகம்பயன்படுத்திடத்தேவையில்லை
7 தங்களின் பொருட்களை சேவைகளை ஒரேமாதிரியானவகையில்தான் குறிப்பிடவேண்டும் என அதிக கட்டுபாடுகள் எதுவும் இல்லை அதற்குபதிலாக வேவ்வேறு பொருட்களுக்கும் சேவைகளுக்கும்ஏற்ப வெவ்வேறு வகையான குறைந்தபட்சதகுதிகள் இந்த இணையதளத்தில் பட்டியலிடபட்டுள்ளன அவைகளை பூர்த்தி செய்திடுமாறு மட்டும் தங்களுடைய பொருட்கள் சேவைகள் உள்ளதாவென சரிபார்த்து கொண்டால் போதும்
8.இந்த இணையதளம் நெகிழ்வு தன்மையுடன் விளங்குவதால் விற்பணையாளர்கள் தங்களுடைய பொருட்களின் மாதிரிகளில் அவ்வப்போது புதிய மாதிரிகளை அறிமுகபடுத்தி அதற்கேற்பதங்களுடைய பொருட்களின் விலைகளை இயக்கநேரத்தில் மாற்றியமைத்து கொள்ளலாம்
9. புதியவிற்பணையாளர்கூட எந்தவொருநேரத்திலும் அதாவது 24மணி-நேரமும் தங்களுடைய புதிய புதிய விற்பணைபொருட்களை அதன் விவரங்களுடனும் விலைகளுடனும் பதிவுசெய்து சந்தைபடுத்திடலாம்
10. இந்த இணையதளமானது விற்பணையாளர்களின் அனைத்துவகையான பொருட்களுடன் இயக்கநேரத்தில் நேரடி போட்டி இதில் இருப்பதால் கொள்முதல்செய்பவர்கள் தங்களுடைய தேவைக்கேற்ற பொருட்களை சேவைகளை தங்களுடைய பணவசதிக்கேற்ப பெற்றுகொள்ளலாம் இதில் வழக்கமான சந்தையைவிட 15 முதல் 20 சதவிகிதம் விலை குறைவாக பராமரிக்கபடுகின்றது நிறுவனங்கள் தங்களின் பேரம்பேசும் திறனை-கொண்டு அதைவிட குறைவான விலையில் தரமான பொருளை சேவையை இந்த இணையதளத்தின் வாயிலாக பெறமுடியும்
11 இந்த இணையதளமானது ஒளிவுமறைவற்ற தன்மையில் பராமரிக்கப்-படுவதால் பயனாளர்கள் தங்களுடைய தேவையை நேரடியாக இணையத்தில் பொருட்களைபற்றிய அனைத்துவிவரங்களையும் அறிந்து தெளிவு பெற்றஅல்லது திருப்தியுற்றபின்னர் கொள்முதல் செய்து கொள்ளமுடியும்
12 நிறுவனங்கள் தங்களின் எதிர்கால தேவையை கோரினால் அதற்கேற்ப பொருட்களின் சேவைகளின் வரையறை தரம் அளவு வழங்குபவரின் இருப்பிடமுகவரி எவ்வளவுநாட்களில் வழங்குவது என்பன போன்ற அனைத்தையும் இந்த இணையதளமானது திட்டமிட்டு அதற்கேற்ப அந்நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றது
13 பொதுவாக அனைவராலும் கொள்முதல் செய்யபடும் பொருட்களை தெரிவுசெய்தால் போதும் உடன் இந்த இணையதளமானது அது தொடர்பான விவரங்களையும் வழங்கதயாராக உள்ளவர்களின் விவரங்களையும் அவர்கள் அந்த பொருளுக்கு குறிப்பிட்டுள்ள விலை விவரங்களுடன் தானியங்கியாக இணையத்தில் நேரடியாகஒப்பீட்டு பட்டியல் ஒன்றினை தயார்செய்து திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது அந்த பட்டியலை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான அளவு பொருட்களை தேவையான வழங்குபவரிடம் பெற்றுகொள்ளமுடியும்
14. இவ்வாறு கொள்முதல் செய்திடமுடிவுசெய்தால் அதனை உடனடியாக இந்த இணையதளபக்கத்தின் வாயிலாக பொருட்களை பெறவும் அதற்கான தொகையை வழங்கவும் அதற்கான பொருட்களை பெற்றதற்கான , தொகையை பெற்றதற்கான அத்தாட்சியை நேரடியாக இந்த இணையதளத்தின் வாயிலாக பெற்றுகொள்ளமுடியும்
15. பொருட்கள் அல்லது சேவைகளுக்கான தொகை வழங்குவதற்காக Public Financial System(PFMS) உடன்இந்த இணையதளம் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளதுஅதனால்தாம் கொள்முதல் செய்திடும் பொருட்களுக்குஅல்லது சேவைகளுக்குஎளிதாக இணையத்தின் வாயிலாக தொகையைவழங்கமுடியும்
16 இதில் பொருட்களை அல்லது சேவைகளை பெறுவதற்கும் வழங்குவதற்குமான பொதுவான நிபந்தனைகளை் சிறப்பு நிபந்தனைகளை போன்ற விவரங்களுடன்மேலும் அதிக விவரங்களை https://gem.gov.in/ என்ற இணையமுகவரிக்கு சென்ற அறிந்து பயன்பெறுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக