ஞாயிறு, 29 ஜனவரி, 2023

பழுதுபார்க்கும் செலவு


ஒரு முறை பெரிய கப்பல் ஒன்றின் இயந்திரம் பழுதடைந்துவிட்டது. அந்நிறுவனத்தில் இருந்த யாராலும் அந்த கப்பலின் பழுதைசரி செய்ய முடியவில்லை. எனவே, அதை பழுதினை சரிசெய்ய, 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இயந்திரப்பொறியாளரை நிறுவன உரிமையாளர் பணியமர்த்தினார்.
அந்த புதிய இயந்திர பொறியாளர் அந்த கப்பலுக்கு வந்து பழுதடைந்த இயந்திரத்தை மேலிருந்து கீழாகமுழுவதையும் மிகவும் கவனமாக ஆய்வு செய்தார்.
அதன் பிறகு, அவர் தனது கருவிகளின் பையை தரையில் வைத்து அதிலிருந்து  ஒரு சிறிய சுத்தியலை மட்டும் வெளியே எடுத்தார். அவ்வியந்திர பொறியாளர்
அந்த கப்பலின் இயந்திரத்தில் மெதுவாக எதையோ தட்டினார். அந்த நிகழ்வின்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் உடன் இருந்தார், உடன்  கப்பலின் அந்த இயந்திரம் நன்றாக இயங்க ஆரம்பித்தது இதைப் பார்த்துஅந்த நிறுவனத்தின் உரிமையாளர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.
அந்த கப்பலின் இயந்திரத்தின் பழுதுபார்த்திடும்  பணி முடிந்ததும், அவ்வியந்திர பொறியாளர் பழுதுபார்க்கும் கட்டணத்திற்கான பட்டியாலை கப்பல் நிறுவன உரிமையாளரிடம் கொடுத்தார். அந்த பட்டியலை பார்த்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
பட்டியலில்  - 20,000$ என இருந்தது
உடன் கப்பலின் உரிமையாளர் , "ஏன் இவ்வளவு? நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. எங்களுக்கு விரிவான பட்டியலாக கொடுங்கள்…" எனக்கோரினார்
உடன் பொறியாளர் புதிய விவரமான பட்டியலை நிறுவன உரிமையாளரிடம் கொடுத்தார். உரிமையாளர் பட்டியலை பார்த்தபோது அதில்..
 - விவரம்- ஒரு சுத்தியலால் தட்டுதல் கட்டணம் :2$,எங்கே தட்டவேண்டும் என தெரிந்துகொள்வதற்கான கட்டணம்: 19,998$. ஆக மொத்த கட்டணம் - 20,000$ என இருந்தது
(பட்டியலின் முடிவில் பின்வருமாறான குறிப்பு இருந்தது)
குறிப்பு 30 நிமிடங்களில் ஒரு பணி செய்தால், அதை 30 நிமிடங்களில் எவ்வாறு செய்வது என்று 20 வருடங்கள் கற்றுக்கொண்டேன். நீங்கள் எனக்கு பல வருடங்களாக கடன்பட்டிருக்கிறீர்கள் நிமிடங்களி அல்ல..
கற்றல்:
ஒருவரின் நிபுணத்துவம்  அனுபவத்தை நாம் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் அவை போராட்டங்கள், சோதனைகள் கடின உழைப்பின் விளைவாகும்.

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

முதுமையில் மகிழ்ச்சியின் இரகசியம் (கட்டாயம் படிக்கவும்)

 ஒருமுறை புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் பயணத்தின் போது ஒரு நகரத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஒரு முதியவரை சந்தித்தார். சிறிது நேரத்தில் இருவரும் நன்றாகப்பேசி  பழகினர்.
முதியவர் சாக்ரடீஸை தனது இல்லத்திற்கு வரும்படி வற்புறுத்தினார். சாக்ரடீஸ் சம்மதித்து முதியவரின் வீட்டிற்கு சென்றார். முதியவர் மகன்கள், பேரன்கள்  பேத்திகள் என ஒரு பெரிய அளவிலான குடும்பஉறுப்பினர்களைக் கொண்டிருந்தார்,
சாக்ரடீஸ் முதியவரிடம் , 'உங்கள் வீட்டில் திருப்தியும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. , நீங்கள் இப்போது என்ன செய்கிறீர்கள்?" என கேட்டார்
  உடன் முதியவர் , "இப்போது, நான் எதுவும் செய்ய வேண்டியதில்லை. , எங்கள் குடும்பத்திற்கு என ஒரு நல்ல தொழில் உள்ளது, அதன் அனைத்து பொறுப்புகளும் இப்போது மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. அதனால் எங்கள் குடும்பத்தொழிலை மகன்களும் எங்கள் மருமகள்கள் வீட்டையும் நன்குக் கவனித்துக் கொள்கிறார்கள். அதனால் எங்களுடைய  வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது." என  விளக்கமளித்தார்
இதைக் கேட்ட சாக்ரடீஸ், "ஆனால் இந்த முதுமையிலும் நீங்கள்  மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியம் என்னவென்று கூறுங்களேன்?"
முதியவர் சிரித்துக்கொண்டே , “நான் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் மற்றவர்களிடம் அதிகம் எதிர்பார்க்காமல், கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் ஒரே ஒரு கொள்கையை மட்டுமே ஏற்றுவாழ்ந்துவருகின்றேன்.
நானும் என் மனைவியும் எங்கள் குடும்பப் பொறுப்பை மகன்களிடமும் மருமகள்களிடம் ஒப்படைத்தோம். நான் என் பேரக்குழந்தைகளுடன் சிரித்து விளையாடுகிறேன்.
எங்கள் மகன்ள் தவறு செய்தால், நான் அவர்களின் எந்த வேலைக்கும் இடையூறாக இல்லாமல் அமைதியாக இருப்பேன். ஆனால் பிள்ளைகள் என்னிடம் ஆலோசனைக்கு வரும்போதெல்லாம், என் வாழ்க்கையின் எல்லா அனுபவங்களையும் அவர்கள் முன் வைத்து, அவர்களின் தவறின் தீய விளைவுகளைப் பற்றி எச்சரிக்கிறேன்.
இப்போது அவர்கள் என் ஆலோசனையை எவ்வாறு பின்பற்றுகின்றார்கள் அல்லது பின்பற்றவில்லை என்பதைப் பார்ப்பது என் வேலை அன்று, அதனால்அவர்கள் பின்பற்றவில்லை என்றால், என் மனதை வருத்தப்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். என்னுடைய அறிவுரைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நான் அவர்களை வற்புறுத்துவதும்இல்லை.
என்னுடைய ஆலோசனைக்குப் பிறகும் அவர்கள் தவறு செய்தால் நான் கவலைப்பட மாட்டேன், ஆனால் அவர்கள் மீண்டும் என்னிடம் வந்தால், நான் அவர்களுக்கு மீண்டும் சரியான ஆலோசனைகூறி அனுப்பிவைக்கிறேன்." என மிகநீண்ட விளக்கமளித்தபோது சாக்ரடீஸ்  இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
 சாக்ரடீஸ், " இந்த வயதில் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உங்களிடமிருந்து நான் மிகச்சரியாக புரிந்து கொண்டேன்." எனக்கூறினார்
கற்றல்:
நீங்கள் வயதின் நான்காவது கட்டத்தில் நுழைந்தால், முதலில் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள், இது மகிழ்ச்சிக்கான முதல் படியாகும். மற்றவர்களின் வேலையில் தலையிடுவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

பயத்திலிருந்து வெளியேறிடுக

   "ஒரு காலத்தில் அரேபியாவிலிருந்து இரண்டு அற்புதமான பருந்துகளைப் பரிசாகப் பெற்ற ஒரு மன்னன். அவை தான் இதுவரை கண்டிராத மிக அழகான பறவைகளான அவ்விலைமதிப்பற்ற பருந்துகளுக்கு நன்கு பறப்பதற்கான பயிற்சி அளிக்க ஒருபயிற்சியாளரை நியமித்து பயற்சி கொடுத்தார். பலமாதங்கள் கடந்தபின்னர் ஒரு நாள் பருந்துகளில் ஒன்று கம்பீரமாகப்  வானத்தில் உயர்ந்து பறந்தது ஆனால், மற்றொருப் பறவையானது வந்த நாள் முதல் அது அமர்ந்திருந்த கிளையை விட்டு நகரவேயில்லை என அப்பருந்துகளுக்கான பயிற்சியாளர் அரசனிடம் தெரிவித்தார்.  பலவகைகளில் சிறந்த அறிவுதிறனுள்ள பலரும் பல்வேறு வகையில் முயன்றாலும் யாராலும் அந்த மற்றொரு பறவையை மட்டும் பறக்க வைக்க முடியவில்லை, அதனால் அரசன் தனது அமைச்சரிடம் அந்தபணியை வழங்கினார், அமைச்சராலும் அந்த மற்றொருபறவையை பறக்கவைக்கமுடியவில்லை  உடன் தன்னுடைய நாடுமுழுவதும்  அந்த மற்றொரு பறவையை  பறக்க வைக்க கோரி அறிவிப்பு செய்தார்
. அறிவிப்பு செய்த சிலநாட்களுக்கு பிறகு மற்றொரு பருந்து வானத்தில் பறப்பதை கண்டு அவ்வரசன் மிக பரவசமடைந்து. அரசன் தனது அரசவையில், "இந்த அதிசயத்தைச் செய்தவரை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார். அரசன் முன் வந்து நின்ற ஒரு எளிய விவசாயியை கண்ட . அரசன், "நீ மட்டும் எப்படி அந்த பருந்தினை பறக்க வைத்தாய்? "  என்ற கேள்வியை எழுப்பினார் அந்த விவசாயி அரசனை வணங்கி, "அரசே அந்தபணி மிகவும் எளிதானது, நான் வேறொன்றும் செய்யவில்லை, நான் பறவை அமர்ந்திருந்த கிளையை வெட்டத்துவங்கினேன் அவ்வளவுதான் அந்த பறவை வானத்தி்ல் பறக்க ஆரம்பிததுவிட்டது." என பதில் கூறினார்
 மனிதர்களாகிய நாமும் நம்மிடம் உள்ள நம்பமுடியாத பல்வேறு திறமைகளை பயன்படுத்தி கொள்ளாமல் , நமக்குப் பாதுகா்பான செயல்களை மட்டும் அப்படியே பற்றிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறாமல் வாழ்ந்துவருகின்றோம் . நமக்குள் இருக்கும் திறன்கள் முடிவற்றவை, ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு அவை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. . எனவே பெரும்பாலும், நம் வாழ்க்கை உற்சாகமாகவும்,, நிறைவாகவும் இருப்பதற்குப் பதிலாக  நாம் பழக்கமான,  சாதாரணமான செயல்களைமட்டும் செய்து வருகின்றோம்து.
  எனவே நாம் நம்மிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் பயத்தின் கிளையை அழித்து,  மறைந்திருக்கும் சக்திகளைப் பயன்படுத்தி வானத்தை நோக்கி உயர்ந்து வெற்றியை அடைய  ஆறுதல் மண்டலங்களை விட்டு வெளியேறிடுக

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...