சனி, 4 நவம்பர், 2023

மகனின் வீட்டுப்பாடத்தை படித்தலால்- தந்தையின் சிந்தனையில் மாற்றம்

 ஒரு மனிதன் வீட்டுச் செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்க வேண்டியதாலும், முழுக் குடும்பத்தின் பொறுப்பும் தன் மீது இருப்பதாலும், உறவினர்களின் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு மிமுக்கிய நிகழ்வுகளுக்குச் சென்று வருவதாலும் எப்போதும் எரிச்சலுடனும் பதட்டத்துடனும் அதிக கவலைப்பட்டுக் கொண்டு மிருப்பார். அதனோடு இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டு, அடிக்கடி மனம் வருந்துவதும், தங்களுடைய பிள்ளைகளைக் கடிந்து கொள்வதும், ஏதாவதொரு செயலுத்துக்காக மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வதும் அவருடைய வழக்கமான செயலாகிவிட்டது. ஒரு நாள் அவர்களுடைய மகன் அவரிடம் வந்து, “அப்பா, தயவு செய்து என் வீட்டுப்பாடம் செய்வதற்கு எனக்குஉதவுங்கள்” என்றான். அதனை  கேட்டவுடன் அதிக  எரிச்சலுடனும் கோபத்துடனும் தங்களுடைய  மகனைத் திட்டி விரட்டினார். ஆனால் சிறிது நேரம்கழித்து  அவரது கோபம் தணிந்தபின்னர் அவர் மகனின் அறைக்குச் சென்று பார்த்தபோது, வீட்டுப்பாடத்தினை  தன்னுடைய கையில் வைத்துகொண்டே  மகன் தூங்கிக் கொண்டிருந்தான். அவர்  மகனின் கைகளில் இருந்து எடுத்துப் பார்த்துவிட்டு, திரும்ப அதைத் திரும்பகீழே வைத்திடும் போது.. மகனுடய வீட்டுப்பாடத்தின் தலைப்பைப் படித்தார். அந்த தலைப்பானது- முதலில் நமக்குப் பிடிக்காத செயல்கள், ஆனால் அவை நல்லவை என்று பின்னர் உணருங்கள் என்றிருந்தது. தங்களுடைய மகன் இவ்வாறான  தலைப்பில் ஒரு பத்தி எழுதி இருப்பதை கண்டு அவர்மிகவும் ஆர்வத்தால்  மகன்  எழுதியதைப் படிக்க ஆரம்பித்தார்: "எனது இறுதித் தேர்வுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், ஏனெனில் அவை பள்ளிக்கூடம் செல்லத் துவங்கும்போது இல்லை, ஆனால் இந்த தேர்வுகளுக்கு  பிறகு மிக நீண்ட விடுமுறைகள் உள்ளன அதனால் நான் மிகமகிழ்ச்சியடைகின்றேன். அதேபோன்றுமோசமான  மருந்துகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனென்றால் அவை முதலில் கசப்பாக இருந்தாலும் அவை என் நோயைக் குணப்படுத்துகின்றன. மேலும் அதேபோன்று என்னை எரிச்சலூட்டும் ஆனால் தினமும் என்னை  காலையில் எழுப்பி நான் தினமும் அன்றன்றையை வீட்டுப்பாடங்களை எழுதவும் படிக்கவும் உதவுகின்ற கடிகாரத்தின்அலாரத்திற்கு நான்  கூறுகிறேன். அவ்வாறே அத்தகைய நல்ல தந்தையை எனக்கு வழங்கியமைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனென்றால் அவர் திட்டுவது முதலில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது, ஆனால் அவர் எனக்கு பொம்மைகளைவாங்கி  கொண்டு வருகிறார், எனக்கு இனிப்புகளையும் தின்பண்டங்களையும்வாங்கி  கொண்டு வருகிறார், தினமும் என்னை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்." என்றவாறு இருந்த மகனின் வீட்டுப் பாடத்தைப் படித்துவிட்டு, மகன் எழுதிய சொற்கள் அவர் மனதில் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருந்தன. அதன்முடிவில் அம்மனிதன் ஒரு சிறந்த கருத்தினை உணர்ந்துகொண்டார். சிறிது நேரம் அமர்ந்து தன்னுடைய மனவருத்தத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். வீட்டின் அனைத்து செலவுகளையும் நான் ஏற்க வேண்டும், அதாவது எனக்கு ஒரு வீடு இருக்கிறது,  வீடு கூட இல்லாதவர்களை விட நான் சிறந்த நிலையில் இருக்கிறேன். முழு குடும்பத்தின் பொறுப்பையும் நான் ஏற்க வேண்டும் என்றால் எனக்கு ஒரு குடும்பம், மனைவி, குழந்தைகள் உள்ளனர் , குடும்பம் இல்லாமல் இந்த உலகில் தனியாக இருப்பவர்களை விட நான் மிகவும் நற்பேறு அடைந்தவன்..
என் நண்பர்களும் உறவினர்களும் தொடர்ந்து என்னுடைய வீட்டிற்கு வருகிறார்கள் நானும் அவ்வாறேஅவர்களுடைய வீட்டிற்கு சென்று வருகின்றேன், அதாவது எனக்கு ஒரு சிறந்த சமூக நிலைஉள்ளது, அதனால் என் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் எனக்கு ஆதரவாக நண்பர்களும் உறவினர்களும்இருக்கிறார்கள். . இதனைஎண்ணி நான் மிகவும் வருந்துவது தவறு,  என இதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், அவருடைய துன்பங்கள், கவலைகள் எல்லாம் மறைந்தோடிச்சென்றன. அவரது சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது. மகனின் நெற்றியில் முத்தமிட்டு மகனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தார்
கற்றல்: நமக்கு முன்னால் எந்த பிரச்சனைகள் இருந்தாலும், எதிர்மறையான கண்ணோட்டத்தில் அவற்றைப் பார்க்கும் வரை, நாம் கவலையுடனும் எரிச்சலுடனும் இருப்போம். ஆனால் அதே சூழ்நிலையை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்த்தவுடன், நமது கண்ணோட்டம், நமது சிந்தனை நம் வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடும்.



கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...