சனி, 11 நவம்பர், 2023

அரசகுருவும் ஆடு மேய்ப்பவனும் - பேராசை கதை

 
ஒருமுறை போஜ் எனும் அரசனின் அரசவையில்  - பலிபீடத்தை போன்று ஒரு மனிதனால் வெளியே வர முடியாத கினறு எது?  என்ற ஒரு கேள்வி எழுந்தது. உடன் அரசன் அதற்கான மிகச்சரியானபதிலை அந்த அரசவையிருந்த உறுப்பினர்களில் யாராவதொருவர் கூறுமாறு கேட்டுக்கொண்டார் அதனை தொடர்ந்து அரசவையிலிருந்த உறுப்பினர்கள் பலரும் பல்வேறுவிதமான பதில்களை அளித்தனர் ஆனால் யாராலும் அந்தக்கேள்விக்கான மிகச்சரியான பதிலால் அரசனின் ஆர்வத்தை திருப்திப்படுத்த முடியவில்லை. இறுதியில், அவ்வரசன் அரசவை குருவிடம்  ஏழு நாட்களுக்குள் இந்த கேள்விக்கான மிகச்சரியான பதில் சொல்ல வேண்டும், இல்லையெனில் அவரிடமிருந்து அரசவை குரு என்ற பதவியும் நீக்கம் செய்யப்படும் அதனோடு அவர் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். அதனால்  அரசகுரு அந்த கேள்விக்கான சரியான பதிலைக் கண்டுபிடிக்க மிககடுமையாகமுயன்றார், ஆனால் ஆறு நாட்கள் கடந்தும், அவரால் பதிலெதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசன் கெடுவிதித்த ஏழாவது நாளன்றுஅந்த நாட்டின் அரசகுருவானவர் நம்மால் அரசன்கோரியவாறு அந்த கேள்விக்கான மிகச்சரியான பதிலை கண்டுபிடிக்கமுடியவில்லையே அடுத்து நாம் என்னசெய்வது எனமிகுந்த  மனவருத்தத்துடனும் அவநம்பிக்கையடனும் மனஆறுலிற்காக அருகிலிருந்த காட்டிற்குள் சென்றார், அவர்அந்தக் காட்டில் ஆடுமேய்ப்பவன் ஒருவனை கடந்து சென்று கொண்டிருந்தார். அந்த ஆடு மேய்ப்பவன் இவர் நம்முடைய நாட்டின் அரசகுருவாயிற்றே ஏன் மிகமனவருத்தத்துடன் காட்டிற்குள் சென்று கொண்டிருக்கின்றார் எனஅவரை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு, "ஐயா நீங்கள் இந்த நாட்டின் அரசகுருவல்லவா ,நீங்கள்  இந்தகாட்டிற்குள்  என்ன செய்யப்போகின்றீர்கள்? நீங்கள் ஏன் மிகமனவருத்தத்துடனும் இவ்வளவு சோகமாகவும் இருக்கின்றீர்கள் ?"  என வினவினான் அந்த ஆடு மேய்ப்பவனிடம் பேசிப் பயனில்லை என எண்ணிக் கொண்டு, அரசகுருவானவர் பதில் ஏதும் பேசாமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார். ஆடுமேய்ப்பவன்  மீண்டும், “ஐயா , உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கூறுங்கள். உங்களுடைய பிரச்சனைக்கான தீர்வு என்னிடம்கூட இருக்கலாம்.“  எனக் கோரினான் .அவ்வாறு அந்த காட்டிலிருந்த ஆடுமேய்ப்பவன் அவரிடம் கேட்டபோது அரசகுருவானவர் தன்னுடைய  பிரச்சனையைஅந்த ஆடுமேய்ப்பவனிடம் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தீங்கும் ஏற்படவழியில்லை அதனால் ஆடுமேய்ப்பவனிடம் தன்னுடய பிரச்சினயை கூறலாம் என முடிவுசெய்து ஏழுநாட்களுக்குமுன் அரசவையில் எழுந்த  கேள்வியும் அதற்கான பதிலை ஏழுநாட்களுக்குள் பதில் சொல்ல முடியாவிட்டால் தன்னுடைய அரசபதவி இழப்பதோடுமட்டமல்லாமல் தன்னை இந்த நாட்டைவிட்டு வெளியேறுமாறு அரசன் கட்டளையிட்டதையும் தன்னுடைய தற்போதைய கையறுநிலையை  பற்றியும் விவரமாக கூறினார் . இதைக் கேட்ட ஆடுமேய்ப்பவன்அரசகுருவிடம், "பரவாயில்லை ஐயா. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ஐயா. என்னிடம்  மந்திர கல் ஒன்று உள்ளது, அதைப் பயன்படுத்தினால் நீங்கள் எந்த வொரு பிரிச்சினைக்கும் தீர்வுகாண முடியும் விரும்பினால் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும்கூட கொண்டுவருமாறு செய்ய முடியும்" என்றார். ஆடுமேய்ப்பவனின் இந்த பதிலை கேட்டு அரசகுருமிகுந்த ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார். தொடர்ந்து ஆடுமேய்ப்பவன், "ஐயா இந்தக் கல்லால் நீங்கள் இனி பணத்திற்காக கவலைப்பட வேண்டியதில்லை, அதனை உங்களிடமிருந்து பெறுவதற்காக பலரும் உங்களைப் பின்தொடர்வார்கள், அதனை நான் உங்களுக்கு வழங்க முடியும், ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது." என கூறியதும் அரசகுருவானவர், "நிபந்தனை என்ன?" எனக்கேட்டார் உடன் ஆடு மேய்ப்பவன் , "ஐயா நீங்கள்முதலில் என் சீடனாக  மாறிசெயல்படவேண்டும்." எனக்கூறியபோது அரசகுருவானவர் முதலில், "பணத்திற்காக நான் ஏன் ஆடு மேய்ப்பவனின் சீடனாக ஆக வேண்டும்" என்று நினைத்தார். ஆனால் பின்னர் மந்திரக் கல்லின் திறனை பற்றி சிந்தித்து, அரசுகுரு ஒப்புக்கொண்டார். இப்போது, ஆடு மேய்ப்பவன், "என் சீடனாவதற்கு, முதலில் நீங்கள் என்னுடைய இந்த ஆடுகளில் இருந்த கரக்கின்றஆட்டுப்பாலை குடிக்க வேண்டும்" என்றார். அரச குரு, "ஆனால் ஒரு பிராமணர் ஆட்டுப்பாலை குடித்தால், அவனது புத்திசாலித்தனம் இல்லாமல் ஆகிவிடும், அதனால் நான் ஏன் ஆட்டுப்பாலை குடிக்கவேண்டும் எனவே நான் அந்த பாலை குடிக்க மாட்டேன்" என்றார். ஆடு மேய்ப்பவன், "அப்படியானால் சரிஐயா நீங்கள் போகலாம், நான் அந்த  மந்திரக் கல்லை உங்களுக்கு கொடுக்க மாட்டேன்" என்றான். அதன்பிறகு ஒரு நிமிடம் சிந்தித்த அரச குரு, "சரி, நான் நீ கூறியவாறு ஆட்டுப்பாலை குடிக்கின்றேன்" என்றார். ஆடு மேய்ப்பவன், ° சரி ஐயா. ஆனால் , முதலில் நான் ஆட்டுப் பாலை குடிப்பேன், பிறகு மிகுதியாக நான்வைத்திடுகின்ற ஆட்டுப் பாலைத்தான் நீங்கள் குடிக்க வேண்டும்." என்றான் அதனால் அரச குரு மிகுந்த கோபத்துடன் ,  ° ஆடு மேய்ப்பவனே நான் ஒரு பிரமான குலத்தினை சேர்ந்தவன் அவ்வாறு இருந்தும் இப்போது, நீ உன்னுடைய வரம்பை மீறுகிறாய். ஆடுமேய்ப்பவன் குடித்தது போகு மிகுதி இருக்கும் ஆட்டுப்பாலை ஒரு பிராமணர்  ஏன் குடிக்க வேண்டும்? அவ்வாறெல்லாம் செய்யமுடியாது நான் போகின்றேன்"  என பதிலளித்தார்
ஆடு மேய்ப்பவன் மீண்டும், "சரிஐயா அவ்வாறாயின் நீங்கள் போகலாம் ஐயா நான் அந்த  மந்திரக் கல்லை உங்களுக்கு கொடுக்க மாட்டேன்" என்றான்  . திரும்பவம் அந்த மந்திரக் கல்லைப் பற்றி சிந்தித்த அரச குரு ஆடுமேய்ப்பவன் கூறியவாறு செய்வதையும் ஒப்புக்கொண்டார். இப்போது ஆடு மேய்ப்பவன்  என் வீட்டின் முன் ஒரு இறந்த மனிதனின் மண்டை ஓடு திருவோடு போன்று இருக்கிறது. இப்போது நான் அந்த மண்டையோட்டிலான திருவோட்டில் ஆட்டின் பாலைகரந்து ஊற்றுகிவேன், பிறகு நான் அதை குடித்துவிட்டு, அதன் பிறகு அந்த மண்டை ஓட்டில் நான் குடித்தது போக மிகுதி உள்ள பாலையே நீங்கள் குடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மந்திரக் கல்லை நான் உங்களுக்குத் தருவேன், இல்லையெனில் நீங்கள் உங்கள் வழியில் செல்லலாம்." எனமீண்டும் மற்றொரு நிபந்தனைவிதித்தான் .இதைக் கேட்ட அரச குரு நிறைய சிந்தித்து, °நான் ஒரு பிராமணர் அவ்வாறு செய்யக் கூடாதுதான் எனக்கு மிக சங்கடமாக இருக்கின்றது. இருந்தாலும் நான் நீகூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்படுகின்றேன் நான் இப்போது நீகூறியவாறு செய்யத்தயாராக இருக்கிறேன்." என்று ஏற்றுக்கொண்டு கூறினார் உடன் ஆடுமேய்ப்பவன் காட்டிற்கு அருகிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு ஆடுகளை ஓட்டிச்சென்று மண்டையோட்டிலான திருவோட்டில் ஆட்டுப்பாலைகரந்து தன்னுடைய வாய்வைத்து கொஞ்சம் பாலைகுடித்துவிட்டு மிகுதியை அரசகுருவிடம் கொடுத்தான் அரசகுருவும் தான் ஏற்றுக்கொண்ட நிபந்தனையின்படி ஆடுமேய்ப்பவன் வாய்வைத்து குடித்தது போக திருவோட்டில் மிகுதி இருந்த ஆட்டின் பாலை குடித்தார் அதனை தொடர்ந்து  ஆடு மேய்ப்பவன் , " உங்களிடம் பதில் கண்டுபிடித்துகூறுமாறு கோரிய  கேள்விக்கான பதில். பேராசை. ஆகும் அந்த பேராசையில்  ஒரு மனிதன் விழுந்தால், அவன் வெளியே வரவே முடியாது. அவ்வாறே அரசகுருவான நீங்களும் அந்த மந்திரக் கல்லைப் பெறவேண்டும் என்ற பேராசை எனும் கிணற்றில் விழுந்துவிட்டீர்கள் இதிலிருந்து உங்களால் தப்பித்து வெளியேறவே முடியாது."  என நீண்ட விளக்கமளித்தான்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...