சனி, 25 பிப்ரவரி, 2023

அரசனும் ஒருவிவசாயியும் - சம்பாதித்த பணத்தின் பயன்பாடு

 ஒரு நாள் ஒருநாட்டின் மன்னர் மாறுவேடத்தில் தனது நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அவ்வாறு  சுற்றுப்பயணம் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு கிராமத்தின் வயல் அருகே சென்றார், அங்கு கிழிந்த ஆடைகளை அணிந்திருந்த விவசாயி  ஒருவர் மரத்தின் நிழலில் அமர்ந்து உணவு உண்டுகொண்டிருந்தார்.
அவ்விவசாயியின் கிழிந்த ஆடைகளைப் பார்த்த மன்னன், "இந்த விவசாயி தன்னுடைய வாழ்க்கையில்  நன்கு வசதியுடன் வாழ  சில பொற்காசுகளைக் கொடுக்க வேண்டும்" எனமுடிவுசெய்தார்.
அரசன் அவ்விவசாயியுடன்  சிறிது நேரம் கலந்துரையாடியபின், "நான் உன்னுடைய நிலத்தின் வழியாகவந்து கொண்டிருந்தபோது, உன்னுடைய வயலில் இந்த நான்கு பொற்காசுகளைக் கண்டேன்.  இவை உங்களுடைய வயலில் கிடைத்ததால், நீங்கள்தான் அவற்றிற்கான உரிமையாளர் இந்தாருங்கள் இவற்றை வைத்துக் கொள்ளுங்கள்." எனக்கூறியவாறு அப்பொற்காசுகளை விவசாயியிடம் வகொடுத்தார்
உடன்விவசாயி, "வேண்டாம் ..ஐயா அவை என்னுடைய நிலத்தில் கிடைத்தாலும் அவை என்னுடைய  நாணயங்கள் அல்ல, அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அல்லது வேறு யாருடையது என தேடிப்பிடித்து அவருக்கு கொடுங்கள். அவை எனக்கு தேவையில்லை" எனக்கூறி அவற்றை வாங்க மறுத்துவிட்டார்.
அரசன் விவசாயியின் அவ்வாறான மிகவும் விசித்திரமான   பதிலை கேட்டு மிக ஆச்சரியத்துடன், "யாரும் பொற்காசுகளை கொடுத்தால் எனக்குத் தேவையில்லை! எனக்கூறமாட்டார்கள் நீங்கள் ஏன் இவற்றை  வேண்டாம் என்று கூறுகிறீர்கள்" என வினவினார்.
உடன் விவசாயி"ஐயா, நான் தினமும் நான்கு அணாக்கள் (பழைய இந்திய நாணயம்) சம்பாதித்தாலே எனக்கு போதுமானதாக எண்ணி,  மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவருகின்றேன்.. எனக்கு தற்போது அவ்வாறானஅளவிற்கு வருமானம் கிடைக்கின்றது  அதற்கு மேல் இந்த பொற்காசுகள் எனக்கு தேவையேயில்லை", விவசாயி விளக்கமளித்தார்.
மன்னன் மிகவும் வியந்து, "என்ன? நான்கு அணா மட்டுமே சம்பாதித்தாலே, போதுமென மகிழ்ச்சியாக இருக்கின்றேன் எனக்கூறுகின்றீர்களே. அது எவ்வாறு சாத்தியமாகும்?" என வினவினார்
அதற்கு விவசாயி, "ஐயா, நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் அல்லது எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மகிழ்ச்சி இல்லை. மகிழ்ச்சி என்பது உங்களுடைய பணத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பொறுத்தது ஆகும்" ,  என பதிலிருத்தார் .
"அப்படியானால் உங்களுடைய நிலத்தில் கிடைத்த இந்த நான்கு பொற்காசுகளை நான் என்ன செய்வது?" என்று கிண்டலாக  கேட்டார் அரசர்.
விவசாயி அவசரமாக, தன்னுடைய நிலத்தில்வீடுபட்ட வேலையை செய்வதற்கு கிளம்பிகொண்டிருந்தார் அதனால் அதற்கு  முன்,அரசன் வழங்கவிருந்த பொற்காசுகளை பெறாமல் மறத்துதால் அதனை என்ன செய்வது என்ற கேள்விக்கு பதில் கூறவேண்டுமல்லவா அதனால்"இந்த நான்கு பொற்காசுகளில் ஒன்றை  கிணற்றில் போட்டுவிடுங்கள், இரண்டாவதைகொண்டு உங்களுடைய கடனை அடைத்து,கடன்கணக்கினை நேர்செய்துகொள்ளுங்கள் மூன்றாவதை    கடனாகக் கொடுத்துவிடுங்கள், நான்காவது காசினை மண்ணில் புதைத்துவிடுங்கள்" என்று கூறினார்.
அரசனுக்கு விவசாயியின் அந்த பதிலின்படி அந்த நான்கு பொற்காசுகளை என்னசெய்வது என புரியாமல் திகைத்துநின்றுவிட்டார். விவசாயியின் அந்த பதிலிலால் அரசனுக்கு எழுந்த சந்தேகத்தினை தீர்வுசெய்திடுமாறு அவ்விவசாயியிடமே கேட்க விரும்பினார், ஆனால் அரசன் அந்த சந்தேகத்தினை கேட்பதற்கு முன், விவசாயி தனது வயலில் வேலையை தொடர்ந்து செய்வதற்குச் சென்றுவிட்டார்.
அதனால் அரசன் விளக்கமெதுவும் பெறாமல் தனது அரண்மனைக்குத் திரும்பினார், மறுநாள் காலையில் தன்னுடைய அரசவையை கூடியவுடன், நேற்றைய நிகழ்வை முழுவதுமாக விவரித்தார், மேலும் விவசாயி அவ்வாறு கூறிய செயாதிகாகான விளக்கத்தைஅனைவரிடமும் கேட்கத் தொடங்கினார்.
அரசவையினர் தத்தமது சொந்த கருத்துகளை மட்டுமேகூறினர், ஆனால் யாராலும்விவசாயி கூறியதற்கான சரியான விளக்கத்தை கூற முடியவில்லை, இறுதியில் அவ்விவசாயியையே அரசவைக்கு நேரில்அழைத்து விளக்கம் கோரலாம் எனமுடிவு செய்யப்பட்டது. நீண்டநாட்களுக்குப் பிறகு, விவசாயி  அரசவைக்கு வந்து சேர்ந்தார், . அப்போது அரசன் தனது மாறுவேடப் பயணத்தைப் பற்றி விவசாயியிடம் கூறி, அவரை மரியாதையுடன் அரசவையில் உட்கார வைத்தார்
அரசன், "உங்கள் பதிலால்  நான் அதிகம் ஈர்க்கப்பட்டேன், உங்களுடைய அந்த நான்கு பொற்காசுகளை செலவிடும் விளக்கத்தை அறிய விரும்புகிறேன். தயவுசெய்து நீங்கள் அதை விளக்கமாக இந்த அவைக்கு கூறிடுங்கள்?" என கோரியபோது  விவசாயி, "அரசே, நான்சொன்னது போல், கிணற்றில் ஒரு பொற்காசினை போடுங்கள் என்றால், குடும்பத்தை பராமரிக்க செலவிடுங்கள் என்பதாகும் இரண்டாவதை,கொண்டு கடனை அடைத்து, கடன்கணக்கினை நேர்செய்துகொள்ளுங்கள் என்றால் நம்முடைய பெற்றோரின் கடனை அடைத்திடுங்கள்என்பதாகும் அதாவது,  வயதான பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை பராமரித்தலாகும்.
மூன்றாவதை    கடனாகக் கொடுத்துவிடுங்கள் என்றால் நம்முடைய குழந்தைகளை நன்கு பராமரித்து அவர்களின் கல்விக்காக செலவிடுங்கள் என்பதாகும், நான்காவது  கினற்றில் போடுதல் என்பது, அந்த பொற்காசினை சேமித்து வைத்தால்  பிற்காலத்தில்தேவையானபோது யாரிடமும் கடன் வாங்காமல் அந்த சேமிப்பிலிருந்து பயன்படுத்தலாம்  என்பதாகும்." என நீண்ட விளக்கமளித்தார்
என்ன வாசகரே நீங்களும் சம்பாதித்த பணத்தை  அவ்வாறு  சரியாக செலவிடுவீர்களா

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

ஏன் எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை அமையவில்லை?

ஒருமுறை ஒரு பணக்காரன் புதிய விலையுயர்ந்த காலணிகளை அணிந்து கோவிலுக்குச் சென்றார். கோவிலின் முன் இருந்த போது, "கோயிலுக்குள் செல்ல, புதிய காலணிகளை கழற்ற வேண்டும், கோவிலுக்கு வெளியே விட்டால், திருடு போகலாம்... உள்ளே சென்ற பிறகும், காலணிகளை பற்றி தான் கவலைப்படுவேன். ,அப்போது  கூட நம்முடியை மனமானது கடவுளை வழிபடாது"
என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வெளியே ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்து பிச்சையெடுத்துகொண்டிருப்பதைப் பார்த்தான் பணக்காரன். பிச்சைக்காரணிடம் சென்று, "கோயிலிற்குள் நான் சென்று திரும்பும் வரை என் காலணிகளை  பார்த்து கொள்கின்றாயா?" எனக்கோரியபோது
பிச்சைக்காரன் சரி  என தலையசைத்தான்
"என்ன சமச்சீரற்ற உலகம்.. சிலர் இவ்வளவு பணம் கொடுத்து விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் வைத்துகொள்கிறார்கள், வேறு சிலரோ தாங்கள் உயிர்வாழ்வதற்கான உணவிற்கு கூட பிச்சை எடுக்க வேண்டியுள்ளது. எல்லோருக்கும் எல்லாப்பொருளும் சமமாககிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று எண்ணிக்கொண்டே கோயிலின் உள்ளே சென்றான் பணக்காரன்.
இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுப்பதாக மனதில் முடிவு செய்தான் பணக்காரன். கோயிலைவிட்டு வெளியே  பணக்காரன், வந்த போது அங்கே பிச்சைக்காரனோ, பணக்காரனுடைய காலணிகளோ இல்லை என்பதைக் கண்டான்.
உடன் பணக்காரன் தான் மிக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தான், ஆனால் பிச்சைக்காரன் எங்காவது பிச்சையெடுக்க சென்றுஇருப்பான என பிச்சைக்காரன் திரும்பி வருவதற்கு சிறிது நேரம் காத்திருந்தான்,  நீண்ட நேரம் கழித்தும் பிச்சைக்காரன் திரும்பி வரவில்லை.
எனவே, பணக்காரன் தனது வீட்டை நோக்கி வெறுங்காலுடன் நடக்க ஆரம்பித்தான். செல்லும் வழியில், சாலையோரம் நடைபாதையில் ஒரு நபர் காலணிகளை விற்றுக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அங்கு பணக்காரன்  தனது காலணிகளும் அங்கு விற்பணக்கு வைத்திருந்ததைக் கண்டான்.  அந்த விற்பனையாளரிடம் சென்று அந்த காலணிகளைப் பற்றி கேட்டபோது, முதலில் அந்த விற்பனையாளர் எவ்வாறு அந்த காலணி கிடைத்து எனும் பதிலைசொல்ல மறுத்துவிட்டான். ஆனால் பணக்காரன் கடைக்காரனை வற்புறுத்தியபோது,  "ஒரு பிச்சைக்காரன் இந்த காலணிகளுடன் என்னிடம் வந்து 1OOரூபாய்க்கு என்னிடம் விற்றுசென்றான்." எனக்கூறினான்
அந்த பணக்காரன் எதையோ யோசித்து கேட்டு சிரித்துக்கொண்டே அந்த விற்பணையாளரிடம் 1OOரூபாய் கொடுத்து தன்னுடைய காலணிகளை அணிந்துகொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தான். அப்போது தான் தன் கேள்விக்கு பதில் கிடைத்ததை உணர்ந்த பணக்காரன், சமுதாயத்தில் ஏன் ஒற்றுமை இருக்க முடியாது என பின்வருமாறு தெளிவடைந்தான்.
ஏனென்றால், நமது செயல்கள் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது, அது கடந்த காலத்தின், நாம் வாழும் இவ்வுலகில் வாழும்  சமூகத்தில் உள்ள அனைத்து வேறுபாடுகளும்  எதை எப்படி பெறுவது.. என்பது நம்முடைய செயல்களால் தீர்மானிக்கப்பட்டு முடிவுக்கு வருகிறது.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

தையல்காரரின்ஊசியும் கத்தரிக்கோலும் வைக்குமிடம் எது-

 முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் தையல்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார் அவருக்கு  மகன் ஒருவன் இருந்தான்.  தன்னுடைய மகனையும் தையல் தொழிலில் ஈடுபடுத்திடவிரும்பினார் அதனால் அந்த தையல்காரர் தனது மகனுக்கும் தனது திறமைகளை கற்பிக்க விரும்பினார். எனவே, தினமும் தன்னுடைய மகனையும் தான் தையல்பணிசெய்திடும் இடத்திற்கு அழைத்து சென்று அந்த பணியை கற்பித்த வந்தார்*
 அவர் தினமும் கடைக்கு வந்ததும் துணிகளைத் தைக்கத் தொடங்குவார், சிறுவனும் ஒரு மூலையில் அமர்ந்து தன்னுடைய தந்தை செய்திடும் அனைத்து பணிகளையும் கவனமாகப் பார்த்துவந்தான்
 தனது ரந்தை முதலில் துணியை எடுத்து கத்தரிக்கோலால் சரியான அளவில் வெட்டுவதையும்அந்த கத்தரிக்கோலை தன்னுடைய காலடியில் வைத்துவிடுவதையும் பார்த்தான்
. அதன் பிறகு ஊசியில் நூலை கோர்த்து  வெட்டிய துணிகளை தைப்பதையும் அவ்வாறு தைத்த பின்  ஊசியை தனது தலையில் அணிந்துள்ள தொப்பியில் செருகி வைத்திடுவதையும் பார்த்தான் அந்த சிறுவன்.
இவ்வாறு ஒவ்வொருமுறையும்   அந்த தையல்காரர் காலடியிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து துனியை வெட்டிடுவார்பின்னர் கத்தரிகோலை தனது காலடியில் வைத்திடுவார்  அதன்பின்னர் தனது தலையிலுள்ள தொப்பியில் செருகியுள்ள ஊசியை எடுத்து அதில் நூலை கோர்த்து வெட்டிய துணியை தைத்திடுவார் பின்னர் தலையிலுள்ள தொப்பியில் அந்த ஊசியை செருகிகொள்வார்
ஒவ்வொரு முறையும் அவனது தந்தை எப்போதும் துணியை வெட்டிய பிறகு கத்தரிக்கோலை தனது காலடியில் வைத்திடுவதையும் தைக்கும் ஊசியை மட்டும் தொப்பியில் செருகிகொள்வதையும் கண்டு வியப்பு அடைந்தான் ,
அந்த சிறுவனால் இதற்கான காரணத்தை  புரிந்து கொள்ள முடியவில்லை.
அதிக ஆர்வத்தின் காரணமாக,  தந்தையிடம் , "அப்பா, நீங்கள் ஒவ்வொருமுறையும் துணியை வெட்டிய, பின்னர் கத்தரிக்கோலை உங்களுடைய காலடியின்ன் வைத்துவிடுகின்றீர்காள், ஆனால் துணியை தைத்த பிறகு, ஊசியை மட்டும் உங்களுடைய தொப்பியில் செருகிவைத்திடுகின்றீர்கள்.. ஏன்அவ்வாறு செய்கின்றீர்கள்?" என சந்தேக கேள்வி எழுப்பியபோது
தையல்காரர் சிரித்துக்கொண்டே, "மகனே, அவர்கள் இருவரும் செய்திடும் வேலையின் வித்தியாசம்தான் அதற்கான காரணமாகும்." எனக்கூறினார் மேலும் அவர் தொடர்ந்து
"கத்தரிக்கோலின் வேலை துணிய வெட்டி பிரிப்பது  ஊசியின் வேலை அவ்வாறு வெட்டி பிரிந்திருக்கும் துணிகளைஇணைப்பது ஆகும். அவ்வாறு வெட்டியதை இணைப்பவரின் இடம் எப்போதும் வெட்டிபிரிப்பவரின்  இடத்திற்கு மேலே இருக்கும்.
எனவே கத்தரிக்கோல் காலுக்கு அடியிலும், ஊசி தலையில் அணிந்திருக்கும் தொப்பியிலும் செருகி வைக்கின்றேன்." என நீண்ட விளக்கமளித்தார்
கற்றல்:
நமது செயல்களே சமூகத்தில் நமது இடத்தை தீர்மானிக்கிறது. நாம் நல்ல செயல்களைச் செய்தால்,  நமது மரியாதை அதிகரிக்கும்.
அதே சமயம், நாம்  தீய செயல்களைச் செய்தால், மக்களிடம் நம்முடைய மரியாதையை இழக்கிறோம். எனவே தீய செயல்களில் இருந்து விலகி எப்போதும் நல்ல செயல்களைச் செய்திடுக.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

மக்கள் ஏன் எப்போதும்சண்டைசச்சரவுடன் வாழ்ந்து கொண்டு யிருக்கிறார்கள்?

 ஒரு துறவி வீடு வீடாகச் சென்று பிச்சைஎடுத்து வாழ்ந்து வந்தார். அவ்வாறு ஒரு நாள் அவர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பணக்காரன் ஒருவரின் வீட்டிற்கு பிச்சை யெடுக்கச் சென்றார்.
அந்த பணக்காரன் சில உணவுப்பொருட்களை துறவிக்கு பிச்சையாக கொடுத்தார்.
அதன்பின்னர்,அந்த பணக்காரன் துறவியிடம் "ஐயா.. என்னுடைய சந்தேகம் ஒன்றினை தீர்வு செய்வீர்களா" என்றார்.
உடன் துறவியும், "கண்டிப்பாக தீர்வு செய்வேன் உங்கள் சந்தேகத்தினை கேளுங்கள்.." என்று பதிலளித்தார்.
அந்த பணக்காரன், "மக்கள் ஏன் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டைசச்சரவுடன் இருக்கிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன்?" என்றார்
இதைக் கேட்டவுடன் துறவி சிறிது நேரம் அமைதியாக இருந்தபின், "நான் இங்கு பிச்சை எடுக்கமட்டுமே வந்தேன், உங்களுடைய முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க நான் இங்கு வரவில்லை" என்று கூறினார்.
இவ்வாறான பதிலைக் கேட்டவுடன் அந்த பணக்காரன், மிகவும் அதிக கோபமடைந்து, தன் கட்டுப்பாட்டை இழந்து, துறவியிடம், " நான் உங்களுக்கு பிச்சை கொடுத்தேன், ஆனால்  இப்போது இப்படி திமிர்தனமாக என்னிடமே பதிலளிக்கிறீர்களே. உங்களை யார்உள்ளேவிட்டது என்கண்முன்னே நிற்காதீர்கள் உடனே ஓடிப்போங்கள் அப்புறம் நடப்பதே வேறமாதிரியாக இருக்கும் ." என்று கத்தி திட்ட ஆரம்பித்தார்.
மேலும் கோபத்தில் துறவியிடம் பலவாறாக திட்டினார் அந்த பணக்காரன். ஆனால் துறவி அமைதியாக அந்த பணக்காரன் திட்டுவதை  கேட்டுக் கொண்டிருந்தார், அந்த பணக்காரன் அவ்வாறு கத்திக் கொண்டிருந்தபோது ஒரு சொல்கூட பதிலுக்கு அந்த துறவி பேசவில்லை.
சிறிது நேரம் கழித்து, பணக்காரன் அமைதியடைந்தபி்ன்னர், துறவி அந்த பணக்காரனிடம், "ஐயா, நான் உங்களிடம் வித்தியாசமாக பதிலளித்தவுடன், நீங்கள் கோபமடைந்தீர்கள், கோபத்தில் நீங்கள் என்னிடம்  அதிக சத்தத்துடன் திட்ட ஆரம்பித்தீர்கள், அந்த நேரத்தில் நானும்  பதிலுக்கு கோபமாக திட்ட ஆரம்பித்திருந்திருந்தால், நமக்குள் ஒரு பெரிய சண்டையே. ஏற்பட்டிருக்கும்
ஒவ்வொரு சண்டைக்கும் கோபம் தான் அடிப்படை காரணம், மேலும் சமாதானமாக இருப்பது ஒவ்வொரு சண்டை சச்சரவையும் முடிவுக்கு கொண்டு வரும். பதிலுக்கு கோபப்படாமல் இருந்தால் மக்களிடம் சண்டைசச்சரவே வராது" என நீண்ட விளக்கமளிதத்தார்
கற்றல்:
வீட்டிலோ, அல்லது பணியிடத்திலோ யாராவது நம்மிடம் கோபமாக பேசினால் நாம் அமைதியாக இருக்க வேண்டும் அமைதியாக பதில் சொல்ல வேண்டும். நாம் அமைதியை இழந்து நமக்கும் கோபம் வந்து பதிலுக்க சண்டையிடஆரம்பித்தால், சிறிய செயல்கள் கூட பெரிய சண்டை சச்சராகிவிடும்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...