முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் தையல்காரர் ஒருவர் வாழ்ந்து வந்தார் அவருக்கு மகன் ஒருவன் இருந்தான். தன்னுடைய மகனையும் தையல் தொழிலில் ஈடுபடுத்திடவிரும்பினார் அதனால் அந்த தையல்காரர் தனது மகனுக்கும் தனது திறமைகளை கற்பிக்க விரும்பினார். எனவே, தினமும் தன்னுடைய மகனையும் தான் தையல்பணிசெய்திடும் இடத்திற்கு அழைத்து சென்று அந்த பணியை கற்பித்த வந்தார்*
அவர் தினமும் கடைக்கு வந்ததும் துணிகளைத் தைக்கத் தொடங்குவார், சிறுவனும் ஒரு மூலையில் அமர்ந்து தன்னுடைய தந்தை செய்திடும் அனைத்து பணிகளையும் கவனமாகப் பார்த்துவந்தான்
தனது ரந்தை முதலில் துணியை எடுத்து கத்தரிக்கோலால் சரியான அளவில் வெட்டுவதையும்அந்த கத்தரிக்கோலை தன்னுடைய காலடியில் வைத்துவிடுவதையும் பார்த்தான்
. அதன் பிறகு ஊசியில் நூலை கோர்த்து வெட்டிய துணிகளை தைப்பதையும் அவ்வாறு தைத்த பின் ஊசியை தனது தலையில் அணிந்துள்ள தொப்பியில் செருகி வைத்திடுவதையும் பார்த்தான் அந்த சிறுவன்.
இவ்வாறு ஒவ்வொருமுறையும் அந்த தையல்காரர் காலடியிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து துனியை வெட்டிடுவார்பின்னர் கத்தரிகோலை தனது காலடியில் வைத்திடுவார் அதன்பின்னர் தனது தலையிலுள்ள தொப்பியில் செருகியுள்ள ஊசியை எடுத்து அதில் நூலை கோர்த்து வெட்டிய துணியை தைத்திடுவார் பின்னர் தலையிலுள்ள தொப்பியில் அந்த ஊசியை செருகிகொள்வார்
ஒவ்வொரு முறையும் அவனது தந்தை எப்போதும் துணியை வெட்டிய பிறகு கத்தரிக்கோலை தனது காலடியில் வைத்திடுவதையும் தைக்கும் ஊசியை மட்டும் தொப்பியில் செருகிகொள்வதையும் கண்டு வியப்பு அடைந்தான் ,
அந்த சிறுவனால் இதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
அதிக ஆர்வத்தின் காரணமாக, தந்தையிடம் , "அப்பா, நீங்கள் ஒவ்வொருமுறையும் துணியை வெட்டிய, பின்னர் கத்தரிக்கோலை உங்களுடைய காலடியின்ன் வைத்துவிடுகின்றீர்காள், ஆனால் துணியை தைத்த பிறகு, ஊசியை மட்டும் உங்களுடைய தொப்பியில் செருகிவைத்திடுகின்றீர்கள்.. ஏன்அவ்வாறு செய்கின்றீர்கள்?" என சந்தேக கேள்வி எழுப்பியபோது
தையல்காரர் சிரித்துக்கொண்டே, "மகனே, அவர்கள் இருவரும் செய்திடும் வேலையின் வித்தியாசம்தான் அதற்கான காரணமாகும்." எனக்கூறினார் மேலும் அவர் தொடர்ந்து
"கத்தரிக்கோலின் வேலை துணிய வெட்டி பிரிப்பது ஊசியின் வேலை அவ்வாறு வெட்டி பிரிந்திருக்கும் துணிகளைஇணைப்பது ஆகும். அவ்வாறு வெட்டியதை இணைப்பவரின் இடம் எப்போதும் வெட்டிபிரிப்பவரின் இடத்திற்கு மேலே இருக்கும்.
எனவே கத்தரிக்கோல் காலுக்கு அடியிலும், ஊசி தலையில் அணிந்திருக்கும் தொப்பியிலும் செருகி வைக்கின்றேன்." என நீண்ட விளக்கமளித்தார்
கற்றல்:
நமது செயல்களே சமூகத்தில் நமது இடத்தை தீர்மானிக்கிறது. நாம் நல்ல செயல்களைச் செய்தால், நமது மரியாதை அதிகரிக்கும்.
அதே சமயம், நாம் தீய செயல்களைச் செய்தால், மக்களிடம் நம்முடைய மரியாதையை இழக்கிறோம். எனவே தீய செயல்களில் இருந்து விலகி எப்போதும் நல்ல செயல்களைச் செய்திடுக.
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023
தையல்காரரின்ஊசியும் கத்தரிக்கோலும் வைக்குமிடம் எது-
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக