ஒரு துறவி வீடு வீடாகச் சென்று பிச்சைஎடுத்து வாழ்ந்து வந்தார். அவ்வாறு ஒரு நாள் அவர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பணக்காரன் ஒருவரின் வீட்டிற்கு பிச்சை யெடுக்கச் சென்றார்.
அந்த பணக்காரன் சில உணவுப்பொருட்களை துறவிக்கு பிச்சையாக கொடுத்தார்.
அதன்பின்னர்,அந்த பணக்காரன் துறவியிடம் "ஐயா.. என்னுடைய சந்தேகம் ஒன்றினை தீர்வு செய்வீர்களா" என்றார்.
உடன் துறவியும், "கண்டிப்பாக தீர்வு செய்வேன் உங்கள் சந்தேகத்தினை கேளுங்கள்.." என்று பதிலளித்தார்.
அந்த பணக்காரன், "மக்கள் ஏன் எப்போதும் ஒருவருக்கொருவர் சண்டைசச்சரவுடன் இருக்கிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன்?" என்றார்
இதைக் கேட்டவுடன் துறவி சிறிது நேரம் அமைதியாக இருந்தபின், "நான் இங்கு பிச்சை எடுக்கமட்டுமே வந்தேன், உங்களுடைய முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதிலளிக்க நான் இங்கு வரவில்லை" என்று கூறினார்.
இவ்வாறான பதிலைக் கேட்டவுடன் அந்த பணக்காரன், மிகவும் அதிக கோபமடைந்து, தன் கட்டுப்பாட்டை இழந்து, துறவியிடம், " நான் உங்களுக்கு பிச்சை கொடுத்தேன், ஆனால் இப்போது இப்படி திமிர்தனமாக என்னிடமே பதிலளிக்கிறீர்களே. உங்களை யார்உள்ளேவிட்டது என்கண்முன்னே நிற்காதீர்கள் உடனே ஓடிப்போங்கள் அப்புறம் நடப்பதே வேறமாதிரியாக இருக்கும் ." என்று கத்தி திட்ட ஆரம்பித்தார்.
மேலும் கோபத்தில் துறவியிடம் பலவாறாக திட்டினார் அந்த பணக்காரன். ஆனால் துறவி அமைதியாக அந்த பணக்காரன் திட்டுவதை கேட்டுக் கொண்டிருந்தார், அந்த பணக்காரன் அவ்வாறு கத்திக் கொண்டிருந்தபோது ஒரு சொல்கூட பதிலுக்கு அந்த துறவி பேசவில்லை.
சிறிது நேரம் கழித்து, பணக்காரன் அமைதியடைந்தபி்ன்னர், துறவி அந்த பணக்காரனிடம், "ஐயா, நான் உங்களிடம் வித்தியாசமாக பதிலளித்தவுடன், நீங்கள் கோபமடைந்தீர்கள், கோபத்தில் நீங்கள் என்னிடம் அதிக சத்தத்துடன் திட்ட ஆரம்பித்தீர்கள், அந்த நேரத்தில் நானும் பதிலுக்கு கோபமாக திட்ட ஆரம்பித்திருந்திருந்தால், நமக்குள் ஒரு பெரிய சண்டையே. ஏற்பட்டிருக்கும்
ஒவ்வொரு சண்டைக்கும் கோபம் தான் அடிப்படை காரணம், மேலும் சமாதானமாக இருப்பது ஒவ்வொரு சண்டை சச்சரவையும் முடிவுக்கு கொண்டு வரும். பதிலுக்கு கோபப்படாமல் இருந்தால் மக்களிடம் சண்டைசச்சரவே வராது" என நீண்ட விளக்கமளிதத்தார்
கற்றல்:
வீட்டிலோ, அல்லது பணியிடத்திலோ யாராவது நம்மிடம் கோபமாக பேசினால் நாம் அமைதியாக இருக்க வேண்டும் அமைதியாக பதில் சொல்ல வேண்டும். நாம் அமைதியை இழந்து நமக்கும் கோபம் வந்து பதிலுக்க சண்டையிடஆரம்பித்தால், சிறிய செயல்கள் கூட பெரிய சண்டை சச்சராகிவிடும்
ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023
மக்கள் ஏன் எப்போதும்சண்டைசச்சரவுடன் வாழ்ந்து கொண்டு யிருக்கிறார்கள்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக