சனி, 27 மார்ச், 2021

உலகம் ஒரு கண்ணாடி போன்றது

 
ஒரு நாள் ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தாம் பணிபுரியும் அலுவலகத்திற்கு வந்து சேரும்போது, அவ்வலுவலக வாயிலில்   “நேற்று இந்த நிறுவனத்தில் உங்கள் வளர்ச்சிக்கும் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் தடையாக இருந்த நபர் ஒருவர் காலமாகிவிட்டார்.   அலுவலக உடற்பயிற்சிகூடத்தில் அவருக்காக நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறோம் ”.  என்ற  பெரிய அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டிருப்பதை கண்டணர் இந்த அறிவிப்பினை கண்டவுடன் ஆரம்பத்தில்,  அனைவரும் தங்களுடன் பணிபுரிந்த  சக ஊழியர்களில் ஒருவரின் மரணத்திற்கு வருத்தமடைந்தனர், ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, சக ஊழியர்களின் வளர்ச்சியையும், நிறுவனத்தின் வளர்ச்சியையும் தடுத்த அந்த மனிதர் யார் என்பதை அறிய மிக அதிக ம் ஆர்வகாட்டத் தொடங்கினர். இன்றைய அலுவலக பணியை பின்னர் பார்த்து கொள்வோம் நம்மடைய வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருந்த அந்த சக ஊழியன் யார் என அறிந்த கொள்ள மிகவும் ஆவலுடன் அனைவரும் உடற்பயிற்சி கூடத்தை நோக்கி மிகவிரைவாக சென்றுகொண்டிருந்தனர் , இவ்வாறு ஒட்டுமொத்த ஊழியர்களும் ஒரேஅறைக்குள் வந்தால் அக்கூட்டத்தை கட்டுப்படுத்திடுமாறு பாதுகாவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதனால் அவர்கள் ஒவ்வொருவராக மட்டுமே அந்த அறைக்குள் சென்றிடுமாறு அறிவுறுத்தபட்டு அனுமதிக்கப்பட்டனர் அதிகமான மக்கள் கூட்டம்  அவ்வுடற்பசிற்சி கூடத்தை அடைந்ததும், உற்சாகம் கரைபுரண்டோடியத . ஊழியர்கள் அனைவரும்: “என்னுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர் யார்?  யாராயிருந்தாலும் பரவாயில்லை  , இப்போது  அவர் இறந்துவிட்டார்!  அதனால் நாம் நிம்மதியாக பணியாற்றலாம் ”  என தங்களுக்குள் பேசிகொண்டனர் .இவ்வாறு சிலிர்த்த பேசிக்கொண்டிருந்த ஊழியர்கள் ஒவ்வொருவராக  சவப்பெட்டியை நெருங்கினர், அவர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று பார்த்தபோது  திடீரென்று பேச்சற்றவர்களாக மாறினர்.  சவப்பெட்டியின் அருகே நின்று, உள்ளே பார்த்தபோது  அதிர்ச்சியடைந்தனர்,அதாவது அந்த சவப்பெட்டியின் உள்ளே ஒரு கண்ணாடி மட்டுமே இருந்தது: அதனை பார்த்தபோது  அனைவருமே தங்களுடைய உருவத்தை மட்டுமே க் காண முடிந்தது. அந்த நிலைக்கண்ணாடியின் அருகில் அறிவிப்பு ஒன்றும் இருந்தது: "உங்கள் வளர்ச்சிக்கான வரம்புகளை நிர்ணயிக்கும் திறன் கொண்ட ஒருவர் மட்டுமே இருக்கிறார்: அது நீங்கள் தான்."  , என்ற  செய்தியை கண்டபோது அமைதியாக  யாரோ தங்கள் ஆன்மாவின் ஆழமான பகுதியைத் தொட்டது போல. உணர்ந்தனர்
 ஆம் உங்கள் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரே நபர் நீங்கள் தான். உங்கள் மகிழ்ச்சியையும், உங்கள் வெற்றியையும் பாதிக்கக்கூடிய ஒரே நபர் நீங்கள் தான். நீங்களே உங்களுக்கு உதவக்கூடிய ஒரே நபர். உங்கள் முதலாளி மாறும்போதும், ​​உங்கள் நண்பர்கள் மாறும்போதும், ​​உங்கள் நிறுவனம் மாறும்போதும் உங்கள் பங்குதாரர் மாறும்போதும் உங்கள் வாழ்க்கை மட்டும் மாறாது. ஆனால் நீங்கள் மாறும்போது மட்டுமே உங்கள் வாழ்க்கை மாறுகிறது, உங்கள் வரம்புக்குட்பட்ட நம்பிக்கைகளுக்கு அப்பால் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை நீங்கள் உணரும்போது. "உங்களுடனான மிக முக்கியமான உறவு உங்களுடனேயே உள்ளது என அறிவீர்கள்".
நீதி: உலகம் ஒரு கண்ணாடி போன்றது: ஒருவர் வலுவாக நம்பிய எண்ணங்களின் பிரதிபலிப்பை அது யாருக்கும் திருப்பித் தருகிறது.  நீங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் தான் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...