செவ்வாய், 30 டிசம்பர், 2014

தற்போது வாழும் மக்கள் நம்மைவிட நாம் பயன்படுத்தும்விலையுயர்ந்த உடைக்கும் , விலையுயர்ந்த வாகணங்களுக்கும் தான் மதிப்பை வழங்குகின்றனரே அன்றி அதனை பயன்படுத்தும் மக்களுக்கு அன்று


நல்ல புகழ்வாய்ந்த கவிஞர் ஒருவர் இருந்தார் அவருடைய சிறந்த கருத்துகளடங்கிய உரையினாலும் அறிவுரைகளினாலும் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.ஆயினும் அவர் மிக எளிமையாக வாழ்ந்துவந்தார்.

அவர்வாழ்ந்துவந்த ஊருக்கு அருகிலிருந்த நகரத்தில் ஒரு பெரும் பணக்காரர் தன்னுடைய மகனுக்கு நடத்தவிருந்த திருமண விழாவிற்கு இந்த கவிஞரை கண்டிப்பாக வந்து மணமக்களை வாழ்த்தும்படி கோரி அழைப்பிதழை நேரில் வந்து வழங்கிசென்றார்

குறிப்பிட்ட நாளன்று அந்த திருமணவிழாவிற்கு மிக சாதாரணமான எளிமையான உடையணிந்த அந்த கவிஞரும் அந்த பணக்காரரின் மகனுடைய திருமண விழாவிற்கு சென்றார் விழா மண்டபத்தின் நுழைவுவாயிலை அடைந்தபோது பளபளவென மின்னும் விலையுயர்ந்த பட்டாடைகளையும் காலணிகளையும் அணிந்த பல பணக்காரர்கள் மகிழ்வுந்து வண்டிகளில் தங்களின் மணைவிமார்களுடன் வந்து இறங்கியதை தொடர்ந்து அந்த பணக்காரரும் ஓடிஓடி சென்று அவர்களை வரவேற்றார்

ஆனால் நீண்டநேரம் நுழைவுவாயிலில் நின்றுகொண்டிருந்த இந்த எளிமையான கவிஞனை என்னவென கூட விசாரிக்காமலும் வரவேற்பு செய்யாமலும் இருந்ததை கண்ணுற்ற அந்த கவிஞர் உடன் வேகமாக அருகில் அதேதெருவில் இருந்த வாடகை துணிகள் வழங்கும் கடைக்கு சென்று விலையுயர்ந்த பட்டாடையையும் காலணிகளையும் வாடகைக்கு பெற்று அணிந்து அதே பணக்காரர் வீட்டு திருமணவிழா மண்டபத்திற்கு வந்தார்

அப்போது அந்த பணக்காரர் வாருங்கள் வாருங்கள் கவிஞர் அவர்களே என முகமலர்ந்து வரவேற்றார்

அதோடுமட்டுமல்லாது அனைவரும் விருந்து உண்ணும் நேரம் வந்ததால் கவிஞரையும் நேராக விருந்து நடைபெறும் கூடத்திற்கு அழைத்து சென்று அமரவைத்து பணியாளர்களை அழைத்து கவிஞருக்கு மிக உயர்ந்த உணவுவகைகளை பரிமாறசெய்து மற்ற விருந்தாளிகளை உபசரிக்க வேறுபக்கம் சென்று திரும்பவும் அந்த கவிஞர் உணவருந்தும் இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த கவிஞர் அவருடைய இலையில் பரிமாறபட்ட விலைமிகுந்த உணவுவகைகளை பட்டாடையிலும் துணிகளிலும் எடுத்து தேய்த்து கொண்டிருந்தார்

அதனை கண்ட அந்த பணக்காரர் என்ன கவிஞரே விலையுயர்ந்த பட்டாடைகளை இவ்வாறு வீணாக்குகின்றீர் என வினவியபோது ஐயா நான் இந்த திருமண விழாவிற்கு எளிமையான என்னுடைய சொந்த உடையில் வந்து நீண்டநேரம் காத்திருந்தபோது நீங்கள் என்னை கண்டுகொள்ளவே யில்லை ஆனால் நல்ல விலையுயர்ந்த இந்த பட்டாடைகளை அணிந்த வந்தபோதுமட்டும் மிக விமரிசையாக வரவேற்பு செய்து என்னை இந்த விருந்துநடைபெறும்கூடம் வரைவந்து விருந்தினை பரிமாற செய்தீர்கள்

அதனால் நீங்கள் நான் அணிந்த பட்டாடைக்குதானே மரியாதைசெய்தீர்கள் விருந்துணவை பரிமாறினீர்கள் அதனால்தான் இந்த விருந்து எனக்கன்று நான் அணிந்திருக்கின்ற இந்த பட்டாடைக்கு என்பதால் இந்த விலையுயர்ந்த பட்டாடையை இந்த விருந்துணவை உண்ணும்படி செய்கின்றேன் என கூறினார்

ஆம் தற்போது நம்மோட வாழும் மக்கள் கூட நம்மைவிட நாம் பயன்படுத்தும்விலையுயர்ந்த உடைக்கும் விலையுயர்ந்த வாகணங்களுக்கும் தான் மதிப்பை வழங்குகின்றனரே அன்றி அதனை பயன்படுத்தும் மக்களுக்கு அன்று என அறிந்துகொள்க

எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைக்கும் சிக்கல் இல்லாத எளிய தீர்வை கண்டு செயல்படுத்தி பயன்பெறுக


ஆவின் நிறுவனத்தில் பால்கோவாஉற்பத்தி செய்திடும் பகுதியில் உற்பத்தி செய்த பால்கோவாவை சிறிய பெட்டியில் வைத்து கட்டும் பிரிவு ஒன்று இருந்தது அவ்விடத்தில் நூறு பெட்டிக்கு ஒன்று என்றவாறு அவ்வப்போது பால்கோவாவை பெட்டியில் வைத்து கட்டபடாமல் இடையிடையே காலியான பெட்டிகளும் வெளியில் வந்துகொண்டிருந்தன.

இதனை அறிந்த ஆவின் நிறுவனத்தின் மேலாண்இயக்குநர் தனக்கு கீழ் பணிபுரியும் உற்பத்தி மேலாளரையும் பால்கோவாவை பெட்டியில் வைத்து கட்டபடும்பிரிவு மேற்பார்வையாளரையும் பணியாளர்களையும் அழைத்து கண்டிப்பாக இவ்வாறானநிகழ்வு ஏற்பட்டால் சம்பந்தபட்ட அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்தார்.

அதன்பின் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்வு செய்வது என்று தலைமை அலுவலர்களின் கூட்டத்தில் ஆய்வுசெய்தபோது உற்பத்தி பொறியாளர் அந்தஇடத்தில் எக்ஸ்-ரே கருவி ஒன்றை அமைத்து பெட்டிகளில் ஏதேனும் காலியாக சென்றுகொண்டிருந்தால் அதனை கண்டுபிடித்திடவும் அதனடிப்படையில் அந்த காலிபெட்டியில் மட்டும் மீண்டும் பால்கோவாவை வைத்து கட்டி அனுப்பிடுமாறு செய்தால் இந்த பிரச்சினை தீர்வுசெய்யபட்டுவிடும் என கூறியதை ஏற்று அந்த தலைமை அலுவலர்கள் கூட்டத்தில் அதனையே செயல்படுத்துவது என ஒருமனதாக முடிவுசெய்தனர்.

அதனைதொடர்ந்து அந்ததீர்வை நடைமுறைபடுத்தினர் இந்நிலையில் அந்நிறுவனத்தில் உற்பத்தி கணக்கருக்கு இந்த செய்தி கிடைத்தவுடன் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார் பிறகு அங்கு இந்த எக்ஸ்ரே கருவிக்கு பதிலாக ஒரு காற்றாடி ஒன்றை அமைக்கும்படி கூறி அந்த காற்றாடியின் சுழற்சியினால் ஏற்படும் வேகமான காற்றோட்டத்தின்மூலம் காலியான பெட்டி மட்டும் அந்த காற்றில் பறந்து செல்லுமாறும் அதன்பின்னர் அந்த காலியான பெட்டிகளைசேகரித்து மீண்டும் பால்கோவாவை நிரப்பும் படியும் செய்யபட்டது

இதனால் விலை அதிகமான எக்ஸ்ரே கருவிக்கு பதிலாக விலைகுறைந்த காற்றாடியாலேயே அந்த பணியை செய்யமுடிந்ததை கண்ணுற்ற மேலாண்மை இயக்குநர் உற்பத்தி கணக்கரின் இந்த பிரச்சினைக்கான எளிய தீர்வை பாரட்டினார்

ஆம் நாமும் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைக்கும் சிக்கல் இல்லாத எளிய தீர்வை கண்டு செயல்படுத்தி பயன்பெறுவோம்

சனி, 27 டிசம்பர், 2014

அவரவர்களுடைய நிலையில் இருந்தால் என்ன நிகழ்வு நடைபெறும் என அறிந்து நம்முடைய பிள்ளைகளை எப்போதும் அன்புடன் நடத்துவதுதான் நம்முடைய அடிப்படை கடமையாகும்


சிலகாலங்களுக்கு முன்ப என்னுடைய நண்பர் பொருளாதார சிக்கலில் மாட்டிகொண்டு மிக அல்லலுற்றிருந்தார் அவ்வாறான சமயத்தில் ஒருநாள் அவருடைய நான்குவயது மகள் அவர்களுடைய வீட்டிலிருந்த மதிப்பு மிக்க பொருள் ஒன்றினை வீனாக்கிவிட்டதை தொடர்ந்து அந்நண்பருக்கு மிக அதிக கோபாமாகி ஒவ்வொரு ரூபாய்க்கும் அல்லாடிகொண்டிருக்கின்ற இந்த நிலையில் இவ்வாறு மதிப்புமிக்க பொருள் விணாக்கபட்டுவிட்டதே என அவருடைய மகளை மிககடுமையாக தீட்டி தீர்த்தார்

அதன்பிறகு சிலநாட்கள் கழித்து அவர்களுடைய பொருளாதார சிக்கலும் தீர்ந்த நிலையில் அவருடைய நான்குவயது மகள் அவருக்கு ஒரு பரிசு பெட்டியை வழங்கி அப்பா இந்த அன்பு பரிசு உங்களுக்காகத்தான் பெற்றுக்கொள்ளுங்கள் என அளித்தபோது அவருக்கு முன்னர் கடுமையாக தங்களுடைய மகளை திட்டிய செயலால் மிக தருமசங்கடமான நிலையாகவிட்டது

அந்த பரிசுபெட்டியை பிரித்து பார்த்தபோது அதுவெறுகாலியான பெட்டியாக இருந்ததை பார்த்து முன்புபோலவே கோபம் அதிகமாகி யாருக்கும் பரிசுபெட்டி அளிக்கும்போது அதனுள் ஏதாவது பொருட்களை வைத்துதானே வழங்கவேண்டும் என கடுமையாக மீண்டும் திட்ட ஆரம்பித்தார்

அவர் திட்டி முடியும்வரை அமைதியாக இருந்த அவருடைய மகள் அப்பா இந்த பரிசு பெட்டியில் என்னுடைய அன்புமுத்தங்கள் மட்டுமே என்னால் வைக்க முடிந்தது இதை உங்களுக்காகவே வைத்துள்ளேன் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியதும்

அவருக்கு மிக அதிக தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது மகளே பிஞ்சுஉள்ளம் கொண்ட உன்னை நான் கோபமாக திட்டிவிட்டேனே அவ்வாறு நான் திட்டினாலும் நீ உன்னுடைய அன்பு முத்தங்களை வழங்கியுள்ளாயே என வருத்தபட்டு அவருடைய மகளை பராட்டியதோடுஇல்லாமல் தன்னை மன்னிக்கும்படி கோரினார்

அந்த நிகழ்விலிருந்து அந்நண்பர் அவருடைய மகள் அன்புமுத்தங்களுடன் அளித்த அந்த காலியான பரிசு பெட்டியை எப்போதும் அவருடைய படுக்கை அறையில் வைத்திருந்தார்

ஆம் நாம் அனைவருமே நம்மைபோன்றே நம்முடைய பிள்ளைகளும் இருப்பார்கள் என நம்முடைய கோபத்தை அவர்கள்மீது திருப்பிவிடுகின்றோம் அவ்வாறில்லாமல் அவர்களுடைய நிலையில் இருந்தால் என்ன நிகழ்வு நடைபெறும் என அறிந்து நம்முடைய பிள்ளைகளை எப்போதும் அன்புடன் நடத்துவதுதான் நம்முடைய அடிப்படை கடமையாகும்

திங்கள், 15 டிசம்பர், 2014

எந்தவொரு கேள்விக்கும் அவரவர் சூழ்நிலைக்கு தக்கவாறுதான் அதற்கான பதிலும் கிடைக்கும்


வகுப்பு ஆரம்பித்தவுடன் இரண்டாம் வகுப்பிற்குள் நுழைந்த கணித ஆசிரியர் அவ்வகுப்பில் படிக்கும் மாணவர்களில் ஒருவனிடம் "தம்பி! நான் ஒரு மாம்பழம் உன்னிடம் தருகின்றேன் ,மற்றொருமாம்பழம் தருகின்றேன் , மீண்டும் ஒருமாம்பழம் தருகின்றேன் என்றால் மொத்தம் எத்தனை மாம்பழம் உன்னிடம் இருக்கும்?" என கேட்டார்.

உடன் தயக்கமே இல்லாமல் அவனும் " நான்கு மாம்பழம் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான். இதனை கேள்வியுற்றதும் என்ன நம்முடைய வகுப்பு மாணவர்களுள் இவன் மட்டும் கணிதத்தில் இவ்வளவு மக்காக இருக்கின்றானே! என யோசித்து "தம்பி! நன்றாக கவணி! நான் ஒரு மாம்பழம் உன்னிடம் தருகின்றேன், மற்றொருமாம்பழம் தருகின்றேன், மீண்டும் ஒருமாம்பழம் தருகின்றேன் என்றால் மொத்தம் எத்தனை மாம்பழம் உன்னிடம் இருக்கும்?" என கேட்டபோது மீண்டும் தயக்கமில்லாமல் "நான்கு மாம்பழம்தான் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான்.

அவனுடைய தவறான பதிலை கேட்டவுடன் கோபம் அதிகமானாலும் வேறுவகையில் கேட்போம் என" தம்பி! நன்றாக கவணி! நான் உன்னிடம் ஒரு கொய்யாபழம் தருகின்றேன், மற்றொருகொய்யாபழம் தருகின்றேன், மீண்டும் ஒருகொய்யாபழம் தருகின்றேன் என்றால் மொத்தம் எத்தனை கொய்யாபழம் உன்னிடம் இருக்கும்?" என கேட்டபோது ஆசிரியரின் முகத்தை பார்த்து அவனும் உடனடியாக "மூன்று கொய்யாபழம் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான். "பார்த்தாயா தம்பி! இப்போது நான்கூறிய கொய்யாபழ கணக்கைமட்டும் சரியாக கவணித்து கணக்கிட்டு சரியான விடையை கூறிவிட்டாய் பரவாயில்லை ஆனால் சற்றுமுன்பு நான் கேட்ட மாம்பழ கணக்கிற்கு சரியான பதிலை கூறு!" என மீண்டும் கேட்டபோது மறுபடியும் தயக்கமில்லாமல் நான்கு மாம்பழம் என்னிடம் இருக்கும் ஐயா!" என பதிலிறுத்தான்

அவனுடைய தவறான பதிலை கேட்டவுடன் கோபம் அதிகமானாலும் கட்டுபடுத்தி கொண்டு கொய்யாபழ கணக்கை சரியக கூறுகின்றாயே ஆனால் ஏன்தம்பி மாம்பழ கணக்கில் மட்டும் தவறான விடை கூறுகின்றாய் என பொறுமையாக கணிதஆசிரியர் அம்மாணவனிடம் விசாரித்தபோது "ஐயா! என்னிடம் ஏற்கனவே ஒருமாம்பழம் கால்சட்டைபையில் வைத்துள்ளேன் அதனோடு நீங்கள் மூன்று மாம் பழம் கொடுத்தால் என்னிடம் நான்கு மாம்பழம் தானே இருக்கும் அதனால்தான் முதல் கணக்கிற்கு அவ்வாறு நான்குமாம்பழம் என விடை கூறினேன் ஆனால் என்னிடம் கொய்யாபழம் எதுவும் இல்லை அதனால் நீங்கள் இரண்டாவதாக கேட்ட கொய்யாபழ கணக்கிற்கு மூன்று என கூறியதை நான் சரியாக பதில் கூறியதாக முடிவுசெய்தீர்கள்!" என பதிலளித்தான்.

ஆம் நாம் கோரும் எந்தவொரு கேள்விக்கும் முன்கூட்டியே நாம் முடிவுசெய்தவிடைக்கு பதிலாக எதிர்பார்க்காத விடைகிடைக்கின்றது எனில் விடைகூறுபவரின் பக்கத்திலிருந்து யோசித்தால் சரியோ தவறோ அவரவர் சூழ்நிலைக்கு தக்கவாறுதான் அதற்கான பதிலும் கிடைக்கும் என இதிலிருந்து முடிவுசெய்து கொள்க

சனி, 6 டிசம்பர், 2014

யாரும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமலும் அவர்களை தீயவழியில்செல்ல தூண்டாமலும் இருந்தால் இவ்வுலகில் வாழும் அனைவரும் மிக நல்லவர்களாகவே இருப்பார்கள்


புத்தர் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்துதம்முடைய இளவரசர் எனும் பட்டத்தை துறுந்து துறவறம் பூண்டு வொகுதூர நாடுகளுக்கெல்லாம் பயனம் செய்து இவ்வுலக மாந்தர்கள் துன்பங்கள் எதவுமில்லாமல் இன்பமயமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வழி ஏதேனும் உள்ளதா என தேடிக்கொண்டிருந்தார் இந்நிலையில் அவரது புத்திசாலித்தனத்திலும், இளமையான அழகான உருவத்திலும் அவருடைய உடலைசுற்றி இருந்த ஒளிவட்டத்திலும் மயங்கி அவரை ஏராளமான மக்கள் பின்தொடர்ந்து சென்றனர். அவர்களுள் அம்பாசாலி எனும் பெண் ஒருத்தியும் இவருடைய அறிவுத்திறனில் மயங்கி பின்தொடர துவங்குவதற்காக புத்தரை அணுகி, "ஓ! அரசே, நீங்கள். இந்த உலக வாழ்வை துறந்து காவி அங்கியை அனிந்திருந்தாலும் ஒரு இளவரசர் போலவே இருக்கின்றீர் அதனால் இந்த இளம் வயதில் ஏன் நீங்கள் துறவறம் பூண்டு காவி உடையை அணிந்துகொண்டீர் என நான் அறிந்துகொள்ளலாமா?" என வினவினார் அதற்கு புத்தர் அவர் மூன்று பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அடைய தான் துறவறப் பாதையை தேர்வுசெய்த்தாக பதிலளித்தார்

. அதாவது "இந்த உடலானது தற்போது இளமையாகவும் அழகானதாகவும் உள்ளது ஆனால் காலபோக்கில் முதுமையுற்றும், நோயுற்றும், இறுதியில் அழிந்து மரணமுறவும் செய்வதற்கு காரணம் என்னவென்றும் அதன் உண்மைநிலையாது என்றும் தெரிந்துகொள்ளவே நான் துறவறம் பூண்டேன் ." என கூறினார் .இவருடைய உண்மை தேடலால் ஈர்க்கப்பட்ட அப்பெண் புத்தரை தன்னுடைய இல்லத்திற்கு மதியஉணவு அருந்த வருமாறு அழைத்தார். இந்த செய்தி அந்த கிராமம்முழுவதும் பரவியது. உடன் அந்த கிராமத்து மக்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து ‘’ஐயா! தாங்கள் இளந்துறவியாக உள்ளீர்கள்! ஆனால், அந்தபெண்ணோ மிகமோசமான நடத்தையுள்ளவள், அவளுடைய அழைப்பை ஏற்று அவளுடைய இல்லத்திற்கு செல்லாதீர்கள்! அந்த அழைப்பையும் ஏற்கவேண்டாம்!’’, எனக் கேட்டுக் கொண்டனர்.

அவர்களுடைய புகார்களை புத்தரும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்தார் பின்னர் புத்தர் புன்முறுவலுடன் அந்த கிராமத்தின் தலைவரிடம் , "நீங்களும் கூட அந்த பெண் மோசமானவள் என கூறுகிறீர்களா?" என கேட்டார்

உடன் அந்த கிராம்த்தின் தலைவர் "ஒருமுறை இல்லை, ஆயிரம் மடங்கு அந்த பெண் அம்பாசாலி தீய நடத்தை கொண்டவள் என நான் கூறுவேன் அதனால். அவளுடைய வீட்டிற்கு மட்டும் நீங்கள் செல்லவேண்டாம்" என்று பதிலளித்தார்.

உடன் புத்தர் கிராமத் தலைவருடைய வலது கையை தன்னுடைய கைகளால் பிடித்துகொண்டு,அந்த கிராமத்து தலைவரிடம் அவருடைய கைகளைத்தட்டி ஓசை எழுப்புமாறு கோரினார்

அதற்கு அந்த கிராமத் தலைவர் " தமது ஒரு கையை புத்தர் பிடித்திருப்பதால் மற்றொரு கையை மட்டும் தட்டி ஒலி எழுப்பமுடியாது யாரும் தன்னுடைய ஒரு கையால் மட்டும் கைத்தட்டி ஒலி எழுப்ப சாத்தியமே இல்லை", என பதிலிறுத்தார்

தொடர்ந்து புத்தரும் " ஆம் அவ்வாறுதான் இந்த கிராமத்தில் மோசமான நடத்தை கொண்ட ஆண்கள் இல்லாமல் அந்த பெண் அம்பசாலி மட்டும் எவ்வாறு மோசமான நடத்தை கொண்ட பெண்ணாக மாறமுடியும் ", என்றார். தொடர்ந்து “இந்த கிராமத்தில் உள்ள எல்லா ஆண்களும் நல்ல நடத்தை உள்ளவர்களாக இருந்தார்கள் என்றால், இந்த பெண்னும் மோசமான நடத்தைஉள்ளவளாக மாறியிருக்கமாட்டாள். எனவே, இந்த கிராமத்தில் உள்ள மோசமான நடத்தையுள்ள ஆண்களும் அவர்களுடைய பணத்திமிறுமே அந்த பெண்அம்பாசாலியை மோசமான நடத்தையுள்ளவளாக மாறிவிட்டதற்கு பொறுப்பு. ஆகும் " என கூறினார்

அதனை தொடர்ந்து "இங்கு கூடியிருக்கும் இவ்வூரின் ஆண்களில் மோசமான நடத்தைக்கான தடயமே இல்லாதவர்கள் யாராவது இருந்தால் என் முன்வாருங்கள் அவர்களுடைய வீட்டிற்கு நான் மதியஉணவுஅருந்த வரத்தயாராக இருக்கின்றேன்" என்ற கோரிக்கையை அவர்கள் அனைவரின் முன் வைத்தார்.

அவர்களுள் யாரும் அந்த கோரிக்கைக்கு முன்வரவில்லை பின்னர் புத்தர் " பார்த்தீர்களா உங்களில் யாரும் எனக்கு முன்வராத இந்த செயலினால் இந்த கிராமத்தில் மோசமான நடத்தையுள்ள ஆண்கள் பலர் உள்ளனர் என்ற உண்மை எனக்கு தற்போது தெரியவருகின்றது , அதனால் ஒரு பெண்ணை மட்டும் . அவள் மோசமான நடத்தையுள்ளவள் என சுட்டிக்காட்டுவது சரியாகாது மேலும் மோசமான நடத்தையுள்ள ஆண்கள் இந்த கிராமத்தில் இருப்பதால்தான் அந்த பெண்ணும் மோசமான நடத்தையுடைவளாக மாறியுள்ளாள் அதனால் அந்த பெண் மோசமான நடத்தை கொள்வதற்கு இந்த கிராமத்து ஆண்களும் உடந்தையாகி உள்ளீர்கள் அதுமட்டுமல்லாது நாம் நம்முடைய கைகளின் விரலை மற்றவர்களை நோக்கி நீட்டி நீ நடத்தை கெட்டவன் / கெட்டவள் என சுட்டிகாட்டிடும்போது மற்றவிரல்கள் உங்களை நோக்கியுள்ளதையும் கவணியுங்கள். "' என கூறினார் உடன் அந்த கிராமத்து மக்கள் அனைவரும் தங்களுடைய தவறை உணர்ந்து, புத்தரின் காலில் விழுந்து தங்களை மன்னிக்கும்படி கோரினர். .

அதன் பின்னர் அந்த பெண் அம்பாசாலி புத்தரின் போதனைகளை ஈர்க்கப்பட்டு, துறவறம் பூண்டு பக்தி பாதைக்குதிரும்பி பக்தி வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தாள்.

அவ்வாறே இவ்வுலகில் வாழும் யாரும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமலும் அவர்களை தீயவழியில்செல்ல தூண்டாமலும் இருந்தால் இவ்வுலகில் வாழும் அனைவரும் மிக நல்லவர்களாகவே இருப்பார்கள் என்ற உண்மையை தெரிந்துகொள்க

வெள்ளி, 5 டிசம்பர், 2014

நம்முடைய அன்பையும் ஆதரவான சொற்களையும் யாருமற்ற அனாதையாக இருப்பவர்களுக்கு வழங்கிடுவோம்


ஒரு வயதான மனிதன் அவருக்கு ஏற்பட்ட தீவிர மாரடைப்பில் உருவான வலியால் தன்னுடைய இறுதி பயனத்திற்கு ஆயத்தமாக படுக்கையில் மயக்கமுற்று சோர்வாக படுத்திருந்தார் அப்போது அவரை கவணித்து கொள்ளும் செவிலியர் அவருடைய படுக்கைக்கு அருகில் துடிப்புள்ள இளைஞன் ஒருவனை அழைத்து வந்து " ஐயா! உங்களுடைய மகன் உங்களை பார்ப்பதற்காக இங்கே வந்துள்ளார் கண்திறந்து பாருங்கள் ," என அந்த வயதான மனிதனை அழைத்தார் ஆயினும் அந்த வயதான மனிதன் கண்திறக்கவில்லை அதனால் அவள் தொடர்ந்து " ஐயா! உங்களுடைய மகன் உங்களை பார்ப்பதற்காக இங்கே வந்துள்ளார் கண்திறந்து பாருங்கள் ," என மீண்டும் மீண்டும் பல முறை அந்த வயதான மனிதனை அழைத்தார்

ஏனெனில் அவருக்கு ஏற்பட்ட மிக தீவிர மாரடைப்பின் வலியால் மயக்கமுற்று படுத்திருந்தார் இருந்தபோதும் செவிலியரின் விடாமுயற்சியின் அழைப்பால், இறுதியாக அந்த வயதான மனிதன் தன்னுடைய படுக்கைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த கப்பல் படையின் சீருடையணிந்த இளைஞனை தன்னுடைய மங்கலான கண்களால் பார்த்தார். தொடர்ந்து தன்னுடைய தளர்ந்த கைகளை அந்த இளைஞனின் கைகளை பிடிப்பதற்காக நீட்டினார் உடன் அந்த இளைஞன்.தன்னுடைய கைகளால் ஆதரவாக அவருடைய கைகளை அழுத்தி பிடித்துகொண்டு அதன் வழியே தன்னுடைய அன்பையும் ஆதரவையும் வழங்கினார் இந்நிலையில் அந்த செவிலியர் அந்த படுக்கைக்கு அருகில் அந்த இளைஞன் உட்காருவதற்கு வசதியாக ஒரு நாற்காலியொன்றை கொண்டுவந்த வைத்து அந்த இளைஞனை அந்த வயதான மனிதனுக்கு அருகில் சிறிதுநேரம் உட்காரும்படி வேண்டினார் அவ்விளைஞனும் இரவு நீண்டநேரம் கண்மூடி தூங்காமல் அந்த வயதானமனிதனின் படுக்கைக்கு அருகில் வைத்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அந்த வயதான மனிதனின் கைகளை தொடர்ந்து இறுக்கமாக பிடித்துகொண்டு அவருக்கு தன்னுடை அன்பையும் ஆதரவையும் அளித்துகொண்டிருந்தார் இதனை கண்ணுற்ற அந்த செவிலியரும் அவ்வப்போது வந்து அவ்விளைஞனிடம் சிறிதுநேரம் ஓய்வுஎடுத்து கொள்ளும்படி பரிந்தரைத்தார்

ஆயினும் அந்த இளைஞன் ஒரு வயதான மனிதன் உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது தான் ஓய்வு எடுத்துகொள்ள விரும்பவில்லை என மறுத்துவிட்டார். அந்த செவிலியரும் அவ்வப்போது இந்த படுக்கைக்கு அருகில் வந்து பார்க்கும்போதெல்லாம் அவ்விளைஞன் தன்னுடைய கைகளால் அந்த வயதான மனிதனின் கைகளை ஆதரவாக தொடர்ந்து பிடித்து கொண்டிருந்ததை கண்டார் இரவு பணியில் ஈடுபட்டவர்களின் சிரிப்பு சத்தமும் நோயாளிகளின் வலியால் ஏற்படுத்திய முனகல்களும் சத்தமும் இரவு முழுவதும் இருந்துவந்தாலும் தொடர்ந்து அவ்விளைஞன் தன்னுடைய கைகளால் அந்த வயதான மனிதனின் கைகளை ஆதரவாக பிடித்து கொண்டேயிருந்தார்

அந்த செவிலியரும் அவ்வப்போது இந்த படுக்கைக்க்கு அருகில் வந்து பார்க்கும்போதெல்லாம் அவ்விளைஞன் தன்னுடைய கைகளால் அந்த வயதான மனிதனின் கைகளை ஆதரவாக தொடர்ந்து பிடித்து கொண்டு உங்களுக்கு ஒன்றுமில்லை நீங்கள் நன்றாக இருக்கின்றீர்கள் எழுந்து நடமாட போகின்றீர்கள் என்ற ஆதரவான சொற்களை அந்த இளைஞன் அந்த வயதான மனிதனிடம் கூறிக்கொண்டிருப்பதை கண்டு சென்றார் அந்த வயதான மனிதனும் அந்த இளைஞனின் கைகளை இரவுமுழுவதும் இறுக்கமாக பிடித்துகொண்டிருந்தார்

விடியற்காலையில் ஒருவழியாக,அந்த வயதான மனிதன் இறந்ததை கண்ட அவ்விளைஞன் தான் பிடித்திருந்த அந்த உயிரற்ற கைகளை விட்டிட்டு அந்த செவிலியரிடம் இந்த தகவலை கூறுவதற்காக சென்றார்

.அந்த செவிலியரும் தன்னுடைய இதர நோயாளிகளுக்கான பணிவிடைகளை செய்துமுடித்து இந்த படுக்கைக்கு திரும்பி வந்தார் அப்போதுதான் "அந்த மனிதன் யார்?" என அந்த இளைஞன் செவிலியரிடம் வினவியபோது "அவர்தான் உங்களுடைய தந்தை ," என செவிலியர் பதிலிறுத்தார் அதன்பின்னர் ‘’வயதானவருக்கு தன்னுடைய இறுதி தருனத்தில் அவருடைய மகனை காண விரும்பினார் அதனால் உங்களை அவருக்கு ஆதரவாக அவருடைய மகனாக இருக்குமாறு ஏற்பாடு செய்தேன்’’ எனகூறியதை தொடர்ந்து அவ்விளைஞன் ‘’நானும் அதனை தெரிந்துகொண்டேன் அதனால் தான் வயதான மனிதன் தன்னுடைய இறுதிநேரத்தில் அமைதியாகவும் ஆதரவாகவும் இருக்கவேண்டும் என்று நான்கூட அவருடைய கைகளை அன்பாக பிடித்துகொண்டே படுக்கைக்கு அருகில் இரவுமுழுவதும அமர்ந்திருந்தேன்’’ என கூறினார்

ஆம் வாருங்கள் நாமும் நம்முடைய அன்பையும் ஆதரவான சொற்களையும் யாருமற்ற அனாதையாக இருப்பவர்களுக்கு வழங்கி அவர்களுடைய அமைதியான நிம்மதியான வாழ்விற்கு வழியமைத்திடுவோம்

வியாழன், 4 டிசம்பர், 2014

எது நடந்தாலும் நல்லதே நடக்கும் என நம்முடைய மனதில் கொண்டு செயல்படுவோம்


புதியதாக திருமணம் ஆன ஒரு மனிதன் தன்னுடைய இளம் மனைவியுடன் படகு ஒன்றில் ஒரு ஏரி வழியே தங்களுடைய வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தான். , அந்த மனிதன் ஒரு போர்வீரன் ஆவான் திடீரென ஒரு பெரிய புயல் உருவாகி உக்கிரமாக வீச ஆரம்பித்தது தொடர்ந்து அவர்கள் பயனம் செய்த படகு மிகச்சிறியதாக இருந்தது மேலும் அந்த படகு எந்த நேரத்திலும் மூழ்கிவிடுவதை போன்று தத்தளித்துகொண்டும் மேலும் கீழும் மிகவேகமாக அசைந்து கொண்டிருந்தது., அதனால் அந்த இளம் பெண் நம்பிக்கையற்ற நிலையில் மிகவும் பயந்து இப்போது நாம் சாகப்போகின்றோம் என உயிர் பயத்தில் கத்திகொண்டிருந்தால். ஆனால் அந்த மனிதன் மட்டும் மெளனமாக எதுவுமே நிகழாதவாறு மிக அமைதியாக இருந்தான்

அதனை கண்ணுற்ற அந்த பெண் மேலும் பயந்து நடுங்கி கொண்டு, "உங்களுக்கு பயமேயில்லையா?". இதுவே நம்முடைய வாழ்வின் கடைசி நிமிடமாக இருக்கலாம் அல்லவா! எதாவதொரு அதிசயம் நடந்தால் மட்டுமே நாம் இந்த இயற்கை பேரழிவிலிருந்து தப்பிக்க முடியும்; இல்லையெனில் நமக்கு மரணம் நிச்சயம் உண்டு” என பயத்துடன் நடுங்கி கொண்டு கீரீச்சிட்டு கத்தினாள்

அதற்கு அம்மனிதன் மிக மென்மையாக சிரித்தான் தொடர்ந்து தன்னிடமிருந்த வாள்ஒன்றை அதன் உறையிலிருந்து வெளியே எடுத்தார். அதனை கண்ணுற்ற அவருடைய மனைவி நம்முடைய கணவர் இப்போது எதற்கு வாளை போரிடபோவது போன்று வெளியிலெடுக்கவேண்டும் என அந்த செயலை மிக அதிசயமாக விளையாட்டாக பார்த்தார் தொடர்ந்து அம்மனிதன் அந்த வாளினை அப்பெண்ணின் கழுத்தை வெட்டுவதை போன்று மிக நெருக்கமாக தொடும்படி வைத்தகொண்டு

" நான் இந்த கத்தியால் உன்னுடைய கழுத்தினை வெட்டபோகின்றேன் அதனால் நீ இப்போது பயப்பட வில்லையா கிறாயா? ', என வினவினார்

உடன் அவ்விளம் மனைவி சிரிக்க தொடங்கினாள் தொடர்ந்து நான் ஏன் பயப்பட வேண்டும் ", என்று வினவியதுடன் இந்த வாள் உங்கள் கைகளில் தான் இருக்கிறது, ஆயினும் நீங்கள் உயிருக்குயிராக என்மீது அன்பு செலுத்திடும் நிலையில் என்னை எவ்வாறு கொல்ல துணிவீர்கள் . அதனால் , நான் ஏன் பயப்பட வேண்டும்? " என பதிலிறுத்தாள் உடன் அந்தமனிதன் தன்னுடைய வாளை மீண்டும் உறைக்குள் வைத்துவிட்டு, பார்த்தாயா உன்னுடைய சொல்லிலேயே நீகேட்ட கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டது அதாவது கடவுள் நம்மிடம் அன்பு செலுத்துகின்றார் என்பது நமக்கு தெரியும் மேலும் இந்த புயலின் செயல் அதன் விளைவு ஆகிய அனைத்து நிகழ்வுகளும் அந்த கடவுளின் கைகளில்தான் உள்ளது

. அதனால் தற்போது எதுநடந்தாலும் நன்றாகத்தான் நடக்கும் மேலும் நாம் உயிருடன் வாழ்கின்றோம் எனில் அதுவும் நல்லதுதான் அல்லது நம்மால் வாழமுடியவில்லை நாம் இறக்கபோகின்றோம் என்றாலும் அதுவும் நல்லதுதான் ஏனெனில் எந்தவொரு நிகழ்வும் அந்த கடவுளின் கையில் மட்டுமே உள்ளது அதனால் அவர் நமக்கு எதிராக எதையும் அவரால் தவறாக செய்யமுடியாது

நீதி நம்முடைய முழு வாழ்வையும் மாற்றியமைத்திடும் திறன் கடவுள் ஒருவரிடம் மட்டுமேஉள்ளது ஆயினும் எந்தவொரு நிகழ்விற்கும் ஏதோவோரு காரணம் இருக்கும் அதனால் எது நடந்தாலும் நல்லதே நடக்கும் என நம்முடைய மனதில் கொண்டு செயல்படுவோம்

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...