செவ்வாய், 30 டிசம்பர், 2014

தற்போது வாழும் மக்கள் நம்மைவிட நாம் பயன்படுத்தும்விலையுயர்ந்த உடைக்கும் , விலையுயர்ந்த வாகணங்களுக்கும் தான் மதிப்பை வழங்குகின்றனரே அன்றி அதனை பயன்படுத்தும் மக்களுக்கு அன்று


நல்ல புகழ்வாய்ந்த கவிஞர் ஒருவர் இருந்தார் அவருடைய சிறந்த கருத்துகளடங்கிய உரையினாலும் அறிவுரைகளினாலும் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.ஆயினும் அவர் மிக எளிமையாக வாழ்ந்துவந்தார்.

அவர்வாழ்ந்துவந்த ஊருக்கு அருகிலிருந்த நகரத்தில் ஒரு பெரும் பணக்காரர் தன்னுடைய மகனுக்கு நடத்தவிருந்த திருமண விழாவிற்கு இந்த கவிஞரை கண்டிப்பாக வந்து மணமக்களை வாழ்த்தும்படி கோரி அழைப்பிதழை நேரில் வந்து வழங்கிசென்றார்

குறிப்பிட்ட நாளன்று அந்த திருமணவிழாவிற்கு மிக சாதாரணமான எளிமையான உடையணிந்த அந்த கவிஞரும் அந்த பணக்காரரின் மகனுடைய திருமண விழாவிற்கு சென்றார் விழா மண்டபத்தின் நுழைவுவாயிலை அடைந்தபோது பளபளவென மின்னும் விலையுயர்ந்த பட்டாடைகளையும் காலணிகளையும் அணிந்த பல பணக்காரர்கள் மகிழ்வுந்து வண்டிகளில் தங்களின் மணைவிமார்களுடன் வந்து இறங்கியதை தொடர்ந்து அந்த பணக்காரரும் ஓடிஓடி சென்று அவர்களை வரவேற்றார்

ஆனால் நீண்டநேரம் நுழைவுவாயிலில் நின்றுகொண்டிருந்த இந்த எளிமையான கவிஞனை என்னவென கூட விசாரிக்காமலும் வரவேற்பு செய்யாமலும் இருந்ததை கண்ணுற்ற அந்த கவிஞர் உடன் வேகமாக அருகில் அதேதெருவில் இருந்த வாடகை துணிகள் வழங்கும் கடைக்கு சென்று விலையுயர்ந்த பட்டாடையையும் காலணிகளையும் வாடகைக்கு பெற்று அணிந்து அதே பணக்காரர் வீட்டு திருமணவிழா மண்டபத்திற்கு வந்தார்

அப்போது அந்த பணக்காரர் வாருங்கள் வாருங்கள் கவிஞர் அவர்களே என முகமலர்ந்து வரவேற்றார்

அதோடுமட்டுமல்லாது அனைவரும் விருந்து உண்ணும் நேரம் வந்ததால் கவிஞரையும் நேராக விருந்து நடைபெறும் கூடத்திற்கு அழைத்து சென்று அமரவைத்து பணியாளர்களை அழைத்து கவிஞருக்கு மிக உயர்ந்த உணவுவகைகளை பரிமாறசெய்து மற்ற விருந்தாளிகளை உபசரிக்க வேறுபக்கம் சென்று திரும்பவும் அந்த கவிஞர் உணவருந்தும் இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த கவிஞர் அவருடைய இலையில் பரிமாறபட்ட விலைமிகுந்த உணவுவகைகளை பட்டாடையிலும் துணிகளிலும் எடுத்து தேய்த்து கொண்டிருந்தார்

அதனை கண்ட அந்த பணக்காரர் என்ன கவிஞரே விலையுயர்ந்த பட்டாடைகளை இவ்வாறு வீணாக்குகின்றீர் என வினவியபோது ஐயா நான் இந்த திருமண விழாவிற்கு எளிமையான என்னுடைய சொந்த உடையில் வந்து நீண்டநேரம் காத்திருந்தபோது நீங்கள் என்னை கண்டுகொள்ளவே யில்லை ஆனால் நல்ல விலையுயர்ந்த இந்த பட்டாடைகளை அணிந்த வந்தபோதுமட்டும் மிக விமரிசையாக வரவேற்பு செய்து என்னை இந்த விருந்துநடைபெறும்கூடம் வரைவந்து விருந்தினை பரிமாற செய்தீர்கள்

அதனால் நீங்கள் நான் அணிந்த பட்டாடைக்குதானே மரியாதைசெய்தீர்கள் விருந்துணவை பரிமாறினீர்கள் அதனால்தான் இந்த விருந்து எனக்கன்று நான் அணிந்திருக்கின்ற இந்த பட்டாடைக்கு என்பதால் இந்த விலையுயர்ந்த பட்டாடையை இந்த விருந்துணவை உண்ணும்படி செய்கின்றேன் என கூறினார்

ஆம் தற்போது நம்மோட வாழும் மக்கள் கூட நம்மைவிட நாம் பயன்படுத்தும்விலையுயர்ந்த உடைக்கும் விலையுயர்ந்த வாகணங்களுக்கும் தான் மதிப்பை வழங்குகின்றனரே அன்றி அதனை பயன்படுத்தும் மக்களுக்கு அன்று என அறிந்துகொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...