சனி, 28 செப்டம்பர், 2019

நம்முடைய வாழ்க்கையில் பணத்தினால் நமக்கான மகிழ்ச்சியை வாங்க முடியாது


ஒருபணக்கார, விலையுயர்ந்த ஆடை அணிகலண்களை அணிந்த பெண் மனநல மருத்துவ ஆலோசகர் ஒருவரிடம் சென்று தன்னுடைய வாழ்க்கையில் முழுவதும் தனக்கு வெறுமையாகவும் பயனற்றதாகவும் இருப்பதாக புகார் அளித்தார், மேலும் தன்னுடைய கணவன் காலமான பிறகு தான் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பெரிய வீட்டில் தான் மட்டும் தனியாக நெடுமராக நின்றுவிட்டதாகவும் தன்னுடைய பெரிய வீடு ,அதில் தற்போது உள்ள ஆடம்பரமான கார், விலையுயர்ந்த வீட்டு உபயோகபொருட்கள், பிரஞ்சு வாசனை திரவியம், பாரசீக தரைவிரிப்பு, இறக்குமதி செய்யப்பட்ட இசைக்கருவிகள்ஆகியவை அனைத்தும் தனக்கு பயனற்ற பொருட்களாக தோன்றுவதாகவும் கூறினாள் . அதுமட்டுமல்லாது மிகநீண்ட சிந்தனைக்குப் பிறகு, தான் ஏதாவது செய்யவேண்டும் என முடிவு செய்ததாகவும் ஆயினும் அடுத்து என்ன செய்வது எனும் மிகப்பெரிய கேள்விக்கு தன்னால் விடை காண முடியாமல் தொக்கி நிற்பதாகவும் . எனவே தனக்கு மிக நிரந்தரமான நீண்டகால மகிழ்ச்சியைத் அடைவதற்கான ஆலோசனை கூறி வழிகாட்டிடும் ஒரு ஆலோசகரைப் தேடிவருவதாகவும் அவ்வாறான ஆலோசகர் தாங்கள்தான் அதனால் தாங்கள் தனக்கு இந்நிலையில்தக்க ஆலோசனைகளைகூறி வழிகாட்டிடுமாறு அவரிடம் கோரினாள்.

உடன் அந்த ஆலோசகர் தன்னுடைய அலுவலக மாடிகளை சுத்தம் செய்துகொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியை அழைத்தார். பின்னர் ஆலோசகர் அந்த பணக்கார பெண்மணியிடம், "மாரியம்மாவிற்கு எப்படி மகிழ்ச்சி கிடைத்தது என்பதைக் அவர் கூறுவதை தாங்கள் இங்கே கேட்கப் போகின்றீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், அந்தம்மாள் கூறுவதைசிறிது செவிசாய்த்து கேட்டால் மட்டும் போதுமானதாகும்" என்று கூறி மாரியம்மாவை தன்னுடைய வாழ்க்கை பற்றிய கதையை அந்த பணக்கார பெண்மணியிடம் விவரமாக எடுத்துகூறிடுமாறு கேட்டு கொண்டார் அந்த மனநலஆலோசகர்.

அதனை தொடர்ந்து அந்த வயதான துப்புரவுப் பணிபுரியும் மாரியம்மாள் தன்னுடைய கையில் வைத்து பணிசெய்துகொண்டிருந்த விளக்குமாறை கீழே போட்டுவிட்டு வந்து அந்த பணக்கார பெண்மணிக்கு அருகிலிருந்தவொரு நாற்காலியில் அமர்ந்து தன்னுடைய கதையை கூற ஆரம்பித்தாள் "என் கணவர் மலேரியாவால் இறந்தார், பின்னர் மூன்று மாதங்களுக்குப் பிறகு எங்களது ஒரே மகன் கார் விபத்தில் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து எனக்கு உதவ யாரும் வரவில்லை எனக்கு பேச்சுதுனைக்குகூட யாரும் அருகில்இல்லை. எனக்கு எதுவும் இல்லை எல்லாமே இழந்துவிட்டது போன்ற ஒரு வெற்றிடம் என்கண்முன் நின்று என்னை பயமுறுத்தியது அதனால்இரவில். என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, சரியாக வேளாவேளைக்குஎன்னால் சாப்பிட முடியவில்லை, அதனால் என்னுடைய வாழ்க்கையை அன்றோடு முடிந்தது என்று துக்கத்தில் அழக்கூடமுடியாதல் தத்தளித்து தவித்துகொண்டிருந்தேன்" .

"இந்நிலையில் அன்றொருநாள் மாலை, வீட்டிற்கு வெளியில் சென்று திரும்பி வரும்போது சிறிய பூனைக்குட்டியொன்று என்னைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் உள்நுழைந்தது அது குளிர்காலமானதால் வெளியே மிகவும் குளிர்ச்சியாக இருந்தது அதனால் அந்த பூனை குட்டியை பார்க்க மிகபாவமாக இருந்தது . அதற்கு எப்படியாவது உதவவேண்டும் என எண்ணி அந்த பூனைக்குட்டியை உள்ளே விட முடிவு செய்தேன். மேலும் கொஞ்சம் பாலை காய்ச்சி அந்த பூனைக்குட்டிக்காக ஒரு தட்டில் ஊற்றினேன் அதனைதொடர்ந்து, அந்த பூனைக்குட்டி தட்டை சுத்தமாக நக்கி பாலைகுடித்துவிட்டு என்னுடைய காலடியில் வந்து என்னுடைய பாதத்தில் தன்னுடைய முகத்தினை தேய்த்தது அப்படியே என்னுடைய காலடியில்படுத்து கொண்டது அதனை கண்டவுடன் , ஒரு சிறிய உயிருள்ள மிருகத்திற்கு சிறிதளவு உதவியஉடன் தனக்கு உதவியவர்களுக்கு தன்னுடைய நன்றியைஎவ்வாறு தெரிவித்து கொண்டதென அறிந்து முதன் முறையாக என்னுடைய மனதில் மகிழ்ச்சியுடன் நான் சிரித்தேன்."

"ஒரு சிறிய பூனைக்குட்டிக்கு உதவுவது என்னைப் புன்னகைக்கச் செய்ததால், அதேபோன்று இவ்வுலகில் வாழும் மக்களுக்காக ஏதாவது உதவிசெய்வது என்னை மேலும் மகிழ்ச்சியாக மாற்றக்கூடும் என்று நான் நினைத்தேன். எனவே அடுத்த நாள் நான் கோதுமைமாவினால் சிலரொட்டிகளை சுட்டெடுத்துகொண்டு, பக்கத்து வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக படுக்கையில்இருந்த ஒரு வயதானவரிடம் கொடுத்து உண்ணுமாாறு உபசரித்தேன் உடன் அவர் மிகமனமகிழ்வுடன் தன்னுடைய மகளைபோன்று தனக்கு உதவியதற்கு மிகவும் நன்றிகூறினார் . இவ்வாறே ஒவ்வொரு நாளும் நான் யாராவது ஒருவருக்கு உதவிய செய்திட முயற்சித்தேன். அதனை தொடர்ந்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்று, என்னை விட நன்றாக நிம்மதியுடன் தூங்கும் மனமகிழ்ச்சியுடன் சாப்பிடும் யாரையும் நான்பார்க்கவில்லை. தற்போது மற்றவர்களுக்கு ஏதாவது உதவி செய்வதன் மூலம் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். "என்று கூறினாள்

இவ்வாறு மாரியம்மாள் கூறியதை கேட்ட பணக்கார பெண்மணி "இந்த உலகில் பணத்தினால் வாங்கக்கூடிய அனைத்து பொருட்களையும் என்னிடம் வைத்திருக்-கின்றேன், ஆனால் அவ்வாறான பணத்தினால் எனக்கான மகிழ்ச்சியைகூட வாங்கமுடியும் என இதுவரை இறுமாந்திருந்தேனே" என மிகவும்ஓலமிட்டு அழ ஆரம்பித்ததாள்.

நம்முடைய வாழ்க்கையில் பணத்தினால் நமக்கான மகிழ்ச்சியை வாங்க முடியாது அதற்கு பதிலாக மற்றவர்களுக்கு உதவுகின்ற நம்முடைய செயலால் மற்றவர்களை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்பதைப் பொறுத்து நம்முடைய மகிழ்ச்சியான வாழ்க்கைஅமைந்திருக்கும் .என தெரிந்து கொண்டாள் அந்த பணக்கார பெண்மணி அதன்பிறகு அந்த பணக்கார பெண்மனி அந்த நகரின் ஒரு தொண்டு நிறுவனத்தின் தலைவரானார். இப்போது அந்த பெண்மணி மக்களுக்கு சேவை செய்வதிலும், அவர்களுக்கு அன்றாடம் மகிழ்ச்சியைக் அளிக்க கூடிய செயல்களை கண்டுபிடிப்பதிலும் மும்முரமாக இருக்கின்றார் .

சனி, 21 செப்டம்பர், 2019

எப்போதும் நல்லவைகளையே அனைவரின் பார்வையில் படுமாறு மாற்றி கொண்டுசெல்வது சிறந்தது


.முன்னொரு காலத்தில் அரசனொருவன் இருந்தான் அவன் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற நல்ல திறனுடைய அரசனாக அரசுபுரிந்து வந்தான் ஏதோவொரு அசம்பாவித நிகழ்வினால் அவனுடைய ஒரு காலும் ஒரு கண்ணும் இழந்துவிட்டான் ஆனாலும் அனைவராலும் விரும்பம்படுமாறு திறனுடன் ஆட்சி புரிந்துவந்தான் தன்னைபற்றிய நினைவுகள் பிற்காலத்தில் நிலையாக இருக்கவேண்டுமெனில் தலைநகருக்கு அருகிலிருந்த மலைகுன்றுகளில் தன்னை அழகிய ஓவியமாக வரைந்துவைத்தால் நல்லது என திட்டமிட்டு அவ்வாறு தன்னை அழகிய ஓவியமாக வரைந்திடுமாறு கேட்டு கொண்டான் அதனடிப்படையில் பலஓவியர்களும் உடல் குறைபாடுகளுடைய அரசனை எவ்வாறு அரசன் கோரியவாறு ஒரு அழகிய ஓவியமாக வரைய முடியும் என தயங்கினர் மயங்கினர் ஆனாலும் ஒரு ஓவியர் மட்டும் அரசன் காட்டில் வேட்டையாடும்போது அம்பினை குறிபார்ப்பது போன்று ஒரு கண்மட்டும் தெரியுமாறும் மற்றொருகண் மறைந்திருக்குமாறும் அவ்வாறே குறிபார்ப்பதற்கு ஏதுவாக ஒருகாலை மடித்து நிற்குமாறு அரசனுடைய குறைகளை மறைத்து சிறந்த ஓவியமாக தெரியுமாறு அரசனை ஓவியமாக வரைந்தார் அரசனின் உடலில் பல குறைபாடுகள் இருந்தாலும் அவைகளை பார்ப்பவர்கள் காணமுடியாமல் மறைத்து சிறந்த உயிரோட்டமுடைய ஓவியமாக வரைந்ததை அனைவரும் பார்த்து புகழ்ந்தனர் அவ்வரசனும் அந்த ஓவியனுக்கு வாக்களித்தவாறு ஓவியம் வரைவதற்காக பொன்னும் பொருளும் வழங்கி கவுரவித்தான் அதேபோன்று நம்முடைய வாழ்வில் எதிர்படும் நல்லவைகள் கெட்டவைகள் ஆகியவற்றில் எப்போதும் நல்லவைகளையே அனைவரின் பார்வையில் படுமாறு மாற்றி கொண்டுசெல்வது சிறந்தது எனமதில் கொள்க.

சனி, 14 செப்டம்பர், 2019

ஊழியர்களுக் கான பங்குமுதலீட்டு திட்டம் (Employee Stock Option (ESO))ஒருஅறிமுகம்


ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காவும் அந்நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுவதற்கா-கவும் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியார்கள் ,அலுவலர்கள் ,இயக்குநர்கள் ஆகியோர் செய்து வரும் அரும்பெரும் பணிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் பொருட்டு ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 200 நபருக்கு மிகாமல் தம்முடைய நிறுவனத்தின் பங்குகளை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட சலுகை விலையில் குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் கொள்முதல் செய்து கொள்ளுமாறு அனுமதிக்கப்படுவதையே ஊழியர்களின்பங்குமுதலீட்டு திட்டம் (Employee Stock Option (ESO)) என அழைக்கப்படுகின்றது ஆயினும் இந்த வகையான வாய்ப்பு பங்குசந்தை-பரிமாற்றத்தின் வாயிலாக அனுமதிப்பதில்லை அதற்கு பதிலாக இவர்கள் நேரடியாக நிறுவனத்தில் இருந்துமட்டுமே பங்குகளை குறிப்பிட்ட காலக்கெடு-விற்குள் நிர்ணயம்செய்யப்பட்ட சலுகை விலையில் கொள்முதல் செய்திட-வேண்டும் இது ஊழியார்கள், அலுவலர்கள், இயக்குநர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் ஒரு மறைமுகமான ஊக்கத்தொகையாக கருதப்படுகின்றது அதாவது நிறுவனம் ஒன்று 1000 பங்குகளை பங்கு ஒன்று ரூ.50 வீதம் இந்த திட்டத்தின் அடிப்படையில் வழங்குவதாக கொள்வோம் ஒன்றிரண்டு ஆண்டு கழித்து அவ்வாறு இந்த திட்டத்தின்கீழ் கொள்முதல் செய்த பங்குகளை அன்றைய சந்தை நிலவரத்தின் படி உதாரணமாக ரூ70 விற்பணைவிலையாக இருக்கின்றது எனில் அந்த விலைக்கு விற்பணைசெய்திடும்போது இந்த பங்குகளை கொள்முதல் செய்த ஊழியருக்கு வருமானமாக ரூ.20000 தொகை கிடைக்கின்றது இதையே மறைமுக ஊக்கவிப்பு தொகை என அழைக்கப்-படுகின்றது இவ்வாறான ESO திட்டத்தின் படி பங்குகளை ஊழியர்களுக்கு வழங்குவதாக இயக்குநர்களின் குழுக்கூட்டத்திலும் பொதுப்பேரவையிலும் சிறப்புத்தீரமானம் ஒன்றினை நிறைவேற்றிடவேண்டும் இந்த ESO திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்ட பங்குகள் குறித்த தனியாக பதிவேடுகள் பராமரிக்க-வேண்டும் நிறுமச்செயலர் அல்லது வேறு அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் இந்த பதிவேட்டினை பராமரித்திட அனுமதி பெற்றிருக்கவேண்டும் இயக்குநர்களின் அறிக்கையில் இந்த ESO திட்டம்குறித்த விவரங்களை குறிப்பிடவேண்டும் மேலும் பொதுப்பேரவை கூட்டத்திற்கான ஆண்டறிக்கையிலும் இந்த விவரங்களை குறிப்பிடவேண்டும் போன்றவையே இந்த ESO திட்டத்தினை செயல்படுத்துவதற்கான நிபந்தனைகளாகும்

சனி, 7 செப்டம்பர், 2019

மகன் தன்னுடைய தந்தைக்கு ஆற்றும் கடைமை


ஒருநாள் மாலைநேரத்தில் தனது வயதான தந்தையைஒருவர் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை மிகவும் வயதானவராகவும் பலவீனமானவராகவும் இருந்ததால்,அவ்வுணவகத்தில் அந்த வயதான தந்தை சாப்பிடும்போது, அவரது உடையின்மீதும் உடல்மீதும் சாப்பிடும் உணவுதுகள்கள் சிந்திகொண்டும் சிதறிகொண்டும் சாப்பிட்டுகொண்டிருந்தார். அவருடைய மகன் தன்னுடைய தந்தை உணவு உண்பதை அமைதியாக பார்த்து கொண்டிருந்தார் அதனை கண்ணுற்ற உணவகத்தில்சாப்பிட்டு கொண்டிருந்த மற்றஅனைவரும் அவ்வாறு சிந்திக்கொண்டும் சிதறிகொண்டும் வயதானவர் சாப்பிடுவதை மிக வெறுப்புடனும் மிககேவலமாகவும் பார்த்துகொண்டிருந்தனர். ஒருவழியாக அந்த வயதானவர் சாப்பிட்டு முடித்ததும், அவரது மகன், மிகவும் பாதுகாப்பாக அவரை கை கழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்று, உடை முழுவதும் இறைந்து கிடந்த உணவுத் துகள்களைத் துடைத்துசுத்தம்செய்து, அவருடைய கைகளையும் கழுவச்செய்த பின்னர் , அவரது தலைமுடியை சீப்பினால் சீவி, அவரது கண் கண்ணாடியை சரியாக பொருத்தி வெளியே அழைத்து வந்தார். அவ்விருவரும் வெளியே வந்தபோது, அவ்வுணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த மிகுதி அனவரும் , இந்நிலையில் வேறு யாராவதுஇவ்வாறான தர்மசங்கடமான சூழலில் அமைதியாக பொறுமையாக செயல்படமுடியுமா என ஆச்சரியத்துடன் அம்மகனின் செயலை புரிந்து கொள்ள முடியாமல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர். தாங்களிருவரும் உணவருந்தியதற்காக ஆகும் கட்டணத்தொகையை அவ்வுணவக முதலாளியிடம் கொடுத்து தீர்த்துக் கொண்டபின்னர் அம்மகனும் தனது தந்தையுடன்அந்த உணவகத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்தனர் அந்த நேரத்தில், அவ்வுணகத்தில் இருந்த மற்றொரு மத்தியவயதுடைய மனிதர் அந்த வயதானவரின் மகனை அழைத்து,"தம்பி நீங்கள் இங்கு எதையாவது விட்டுவிட்டு செல்கின்றீர்களா?". என கேள்வி எழுப்பினார் அதற்கு , “நான் ஒன்றையும் விட்டுவிட்டுசெல்லவில்லை ஐயா, ” என அந்த வயதான மனிதனுடைய மகன் பதிலளித்தார் . அதனை தொடர்ந்து அந்த நடுத்தரவயதுடையவர் ,"இல்லை தம்பி நீங்கள் ஒவ்வொரு மகனும் தன்னுடைய தந்தையை எவ்வாறு பாதுகாத்து கவணித்து கொள்ளவேண்டும் என ஒரு மகன் தன்னுடைய தந்தைக்கு ஆற்றும் கடைமையை அனைவரும் காணுமாறான பாடத்தை விட்டுவிட்டுசெல்கிறீர்கள் ". என்றார் அந்த உணவகம் அமைதியாக இருந்தது.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...