சனி, 7 செப்டம்பர், 2019

மகன் தன்னுடைய தந்தைக்கு ஆற்றும் கடைமை


ஒருநாள் மாலைநேரத்தில் தனது வயதான தந்தையைஒருவர் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை மிகவும் வயதானவராகவும் பலவீனமானவராகவும் இருந்ததால்,அவ்வுணவகத்தில் அந்த வயதான தந்தை சாப்பிடும்போது, அவரது உடையின்மீதும் உடல்மீதும் சாப்பிடும் உணவுதுகள்கள் சிந்திகொண்டும் சிதறிகொண்டும் சாப்பிட்டுகொண்டிருந்தார். அவருடைய மகன் தன்னுடைய தந்தை உணவு உண்பதை அமைதியாக பார்த்து கொண்டிருந்தார் அதனை கண்ணுற்ற உணவகத்தில்சாப்பிட்டு கொண்டிருந்த மற்றஅனைவரும் அவ்வாறு சிந்திக்கொண்டும் சிதறிகொண்டும் வயதானவர் சாப்பிடுவதை மிக வெறுப்புடனும் மிககேவலமாகவும் பார்த்துகொண்டிருந்தனர். ஒருவழியாக அந்த வயதானவர் சாப்பிட்டு முடித்ததும், அவரது மகன், மிகவும் பாதுகாப்பாக அவரை கை கழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்று, உடை முழுவதும் இறைந்து கிடந்த உணவுத் துகள்களைத் துடைத்துசுத்தம்செய்து, அவருடைய கைகளையும் கழுவச்செய்த பின்னர் , அவரது தலைமுடியை சீப்பினால் சீவி, அவரது கண் கண்ணாடியை சரியாக பொருத்தி வெளியே அழைத்து வந்தார். அவ்விருவரும் வெளியே வந்தபோது, அவ்வுணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த மிகுதி அனவரும் , இந்நிலையில் வேறு யாராவதுஇவ்வாறான தர்மசங்கடமான சூழலில் அமைதியாக பொறுமையாக செயல்படமுடியுமா என ஆச்சரியத்துடன் அம்மகனின் செயலை புரிந்து கொள்ள முடியாமல் அமைதியாக பார்த்து கொண்டிருந்தனர். தாங்களிருவரும் உணவருந்தியதற்காக ஆகும் கட்டணத்தொகையை அவ்வுணவக முதலாளியிடம் கொடுத்து தீர்த்துக் கொண்டபின்னர் அம்மகனும் தனது தந்தையுடன்அந்த உணவகத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்தனர் அந்த நேரத்தில், அவ்வுணகத்தில் இருந்த மற்றொரு மத்தியவயதுடைய மனிதர் அந்த வயதானவரின் மகனை அழைத்து,"தம்பி நீங்கள் இங்கு எதையாவது விட்டுவிட்டு செல்கின்றீர்களா?". என கேள்வி எழுப்பினார் அதற்கு , “நான் ஒன்றையும் விட்டுவிட்டுசெல்லவில்லை ஐயா, ” என அந்த வயதான மனிதனுடைய மகன் பதிலளித்தார் . அதனை தொடர்ந்து அந்த நடுத்தரவயதுடையவர் ,"இல்லை தம்பி நீங்கள் ஒவ்வொரு மகனும் தன்னுடைய தந்தையை எவ்வாறு பாதுகாத்து கவணித்து கொள்ளவேண்டும் என ஒரு மகன் தன்னுடைய தந்தைக்கு ஆற்றும் கடைமையை அனைவரும் காணுமாறான பாடத்தை விட்டுவிட்டுசெல்கிறீர்கள் ". என்றார் அந்த உணவகம் அமைதியாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...