சனி, 31 ஆகஸ்ட், 2019

பலூன்வியாபாரி


ஒரு கண்காட்சியில் ஒருவியாபாரி பலூன்களை விற்றுகொண்டிருந்தார். அந்த வியாபாரியிடம் சிவப்பு, மஞ்சள், நீலம் பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களிலும் பலூன்கள் இருந்தன. பலூன் வியாபாரம் மெதுவாக இருக்கும்போதெல்லாம், அவர் வாயுநிரப்பப்பட்ட பலூனை காற்றில்பறக்க விடுவார், பலூன்களானவை வானத்தில் மேலேபறந்து செல்வதைக் கண்டஉடன் அந்த கண்காட்சிக்கு தத்தமது பெற்றோர்களுடன் வந்திருந்த குழந்தைகள் அனைவரும்ஓடிவந்து அந்த பலூன் வியாபாரியிடமிருந்த ஒரு பலூனையாவது வாங்கி சென்றனர். , அந்த பலூன்வியாபாரியினுடைய பலூன்களின் விற்பனை மீண்டும் உயரும். அவர் நாள் முழுவதும் இவ்வாறான செயல்முறையினை பின்பற்றி தன்னுடைய வியாபாரத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில், யாரோ ஒருவர் தன்னுடைய சட்டையை இழுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து யார் இழுக்கின்றனர் எனஅவர் திரும்பிபார்த்தபோது ஒரு சிறுவனைப் கண்டார், "நீங்கள் ஒரு கருப்பு பலூனை விடுவித்தால், அதுவும்வாணத்தில் பறக்குமா?" என அந்த சிறுவன் கவலையுடன் கேட்டான் அந்த சிறுவனின் கோரிய தோரணையால் தூண்டப்பட்ட அந்தபலூன்வியாபாரி "தம்பி இந்த பலூன்கள் பறப்பதற்கு இந்த பலூன்களின் நிறம் முக்கியமன்று, அவைகளின் உள்ளே நிரப்பட்டிருக்கும்வாயு தான் காரணம்பலூன்களின்வாயு இருப்பதால் பலூன்களை மேலேபறக்கச் செய்கின்றது."என பதிலளித்தார் அந்த பலூன்களை போன்றே நம்மில் சில தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது நாடுகள் மற்றவர்களை விட ஏன் மிகவும் வெற்றிபெறுகின்றனர் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கின்றோமா? அது ஒரு ரகசியம் அன்று. அவர்களனைவரும் மிகவும் திறம்பட செயல்படுகிறார்கள். அதாவது மிகவும் மதிப்புமிக்க சொத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதை எப்படி முன்னேற்றபாதைக்கு கொண்டுசெல்வது என அவர்கள் கற்றுக்கொண்டார்கள். அதனடிப்படையில் அந்த தனிநபரின், நிறுவனத்தின் அல்லது நாட்டின் வெற்றியானது அவர்களின் சரியான முடிவினை பொறுத்து அமைகின்றது .

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...