புதன், 14 ஆகஸ்ட், 2019

குரங்கும் மரத்தாலான ஆப்பில் பழமும்


காட்டில் குரங்கு ஒன்று வாழ்ந்துவந்தது அது பசியெடுத்தால் தேவையானஅளவு மரங்களில் காய்த்து தொங்கிய பழங்களை பசியாற பறித்து தின்றபின்னர் ஓய்வெடுத்துகொள்ளும் பின்னர் மீண்டும் பசிஎடுத்தால் மீண்டும் பசியாற தேவையான அளவு பழங்களைபறித்து தின்றபின்னர் ஓய்வெடுத்துகொள்ளும் இவ்வாறு அதனுடைய நடைமுறை வாழ்க்கையானது சென்று கொண்டிருக்கம்போது ஒருநாள்அந்த காட்டிலிருந்த குரங்கு தவறுதலாக மக்கள் குடியிருக்கும் நகரத்திற்கு வந்து சேர்ந்தது அங்கு ஒருவீட்டி்ல கண்ணைகவரும் வகையில் அழகான ஆப்பில் பழங்கள் குவியலாக இருந்ததைபார்த்ததும்பேராசையினால் அந்த குரங்கானது தன்னுடைய கைகளில்அனைத்து ஆப்பில் பழங்களையும் அள்ளி எடுத்திட முயன்று முடியாமல் முடிவில் ஒன்றை மட்டுமே எடுத்துகொண்டு காட்டிற்கு ஓடியது காட்டில் இந்த வண்ணமயமான ஆப்பிலை பார்த்த மற்ற குரங்குகள் அந்த ஆப்பில் பழத்தை அபகரித்திட துரத்திகொண்டு வந்தன உடன் இந்த குரங்கு மற்ற குரங்குகளுக்கு கிடைக்காமல் வெகுதூரத்திற்கு ஓடியது சிறிதுதூரம் சென்றபின்னர் தன்னை யாரும் பின்தொடரவில்லை என்பதை உறுதிசெய்து கொண்டு தான் கொண்டுவந்த ஆப்பில் பழத்தை கடித்து தின்னலாம் என கடிக்க முற்பட்டபோது ஐயோபாவம் அந்த ஆப்பில் பழமானது வண்ணம் பூசப்பட்டமரத்தால் செய்யப் பட்டதாகும் அதனால் அந்தகுரங்கினுடைய பற்களுக்குதான் வலி ஏற்பட்டதே தவிரஎவ்வளவு முயன்றும் பசியாற கடித்து தின்னமுடியவில்லை மீண்டும் பசிஎடுத்ததால் மீண்டும் முயன்றும் கடித்து தின்ன முடியவில்லை சரி வேறுஏதாவது பழமரங்கள் அருகில் உள்ளதாவென தேடிபார்த்தபோது அருகில் பல்வேறு பழமரங்களில் பழங்கள் காய்த்து தொங்கின அந்த மரங்களில் ஏறி அவைகளையாவது பறித்து தின்றுபசியாறலாம் என்றால் கையிலுள்ள தின்னமுடியாத ஆப்பில் பழத்தை தரையில் வைத்தால்தான் அந்த பழமரங்களில் ஏறமுடியும் என்ற நிலையில் ஆப்பில் பழத்தை கீழே வைத்திட்டால்வேறு யாராவதுதான் மரத்தில் ஏறிஇறங்குவதற்குள் எடுத்து தின்றுவிட்டால் என்ன செய்வது என பேராசையினால் அதனை தரையில் வைத்திடமுடியாமல் மரத்திலும் ஏறமுடியாமல் பசியோடு தவித்தது நேரம் ஆக பசி அதிகமாகி கொண்டேயிருந்தது அதனோடு கையில் தொடர்ந்து அந்த கடித்து தின்னமுடியாத ஆப்பில் பழத்தை வைத்து கொண்டிருப்பதால் கைகளுக்கு அதிக வலிஏற்பட்டு தரையில் அந்த ஆப்பில் பழத்தை வைக்கவும் முடியாமல் தின்னவும் முடியாமல் தவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது இதற்குமேல் பசிதாங்கமுடியாத நிலையில் அந்த கடித்துதின்னமுடியாத ஆப்பில் பழத்தை தரையில் வைத்துவிட்டு அருகில்இருந்த மரத்தில் ஏறி தேவையானஅளவு வேறு பழங்களைபறித்து தின்று பசியாறியது இதேபோன்றே நாமும்நம்முடைய பேராசையினால் தேவையற்ற பயனற்றபல்வேறு எண்ணங்களையும் கருத்துகளையும் நம்முடைைய மனதில் வலிய சேர்த்து வைத்துகொண்டு பயன்படுத்தமுடியாமல் அல்லலுறுகின்றோம் முதலில் அவற்றை அறவே ஒதுக்கிவைத்துவிட்டு வாழ்வில் வெற்றிபெறுவதற்கு உதவிடும் ஆக்கபூர்வமான நல்ல பயனுள்ள கருத்துகளை மட்டும் மனதில் கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...