சனி, 10 ஆகஸ்ட், 2019

நேர்மையான பெண்குழந்தை


இளம்வயது தொழிலதிபர் ஒருவர்தங்களுடைய மகிழ்வுந்தில் குடும்பத்தாருடன் அடுத்து இருந்த நகரத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருந்தார் அவர்களுடையவீடு இன்னும் நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் இருக்கும்போது தங்களுடையவீட்டிற்கு இந்தமாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு செல்லலாம் என ஒரு பெரிய கடையின் வாயிலில் வண்டியை நிறுத்தம் செய்து குடும்ப உறுப்பினர் அனைவரும் அந்த கடையின் உள்ளே சென்று மளிகை பொருட்களை வாங்கிகொண்டு மீண்டும் தங்களுடைய மகிழ்வுந்தில் ஏறி வீடு திரும்பினர் தங்களுடைய வீட்டில் வண்டியைவிட்டு இறங்குவதற்கு குடும்பஉறுப்பினர் அனைவரும் தயாராகும் போது அவர்களுடைய சிறிய பெண்குழந்தையானதுமளிகை பொருட்கள் வாங்கிய அந்த கடையில் சிறிய சாக்லேட் பை ஒன்றினை கையிலெடுத்துவைத்திருந்தது அதற்கான தொகைகடைக்கு வழங்கப்படவில்லை வேடிக்கை பார்த்து கொண்டே வந்த அந்த பெண்குழந்தையானதுஅப்போதுதான் ஞாபகம் வந்து அப்பா அப்பா இந்த சாக்லேட்டிற்கான ரூபாயை அந்த கடைகாரருக்கு தரவில்லையே கண்டிப்பாக அதற்கான ரூபாயை கடைக்காரருக்கு கொடுத்துவிடவேண்டும் அப்பா என கூறியது அந்த சாக்லேட்டிற்கான விலை பத்து ரூபாய் மட்டுமே இருக்கும் அதனால் அதற்காக மீண்டும் அவ்வளவு தூரம் வண்டியில் செல்வதா வேண்டாமாஎன தடுமாறி நின்றபோது வேண்டுமானால் நான் நடந்தே போய் இதற்கான பணத்தை அந்த கடைக்காரருக்கு கொடுத்துவிட்டு வந்துவிடவா அப்பா எனஅவர்களுடைய பெண்குழந்தை கூறியதும் அந்த இளம் தொழிலதிபர் தன்னுடைய பெண்குழந்தையின் நேர்மையை கண்டு மனம் நெகிழ்ந்து மகிழ்வுந்தை வீட்டு கீழிறங்காமல் அப்படியே கடைக்கு திரும்பி சென்றனர் அங்கு கடைக்கு சென்று அந்த கடைகாரரிடம் அந்த குழந்தையானது மாமா உங்களுக்கு பணம் கொடுக்காமல் தவறுதலாக இந்த சாக்லேட் பையை எடுத்து சென்றுவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் இந்தாருங்கள் அந்த சாக்லேட் பைக்கான தொகை என தன்னுடைய கையிலிருந்த பத்துரூபாயைஅந்த கடைக்காரருக்கு கொடுத்தது உடன்அந்த கடைக்காரர் அந்த பெண்குழந்தையின் நேர்மையை மெச்சி இந்தபெண்குழந்தையின் நேர்மையை அந்த கடைக்கு வந்த அனைவருக்கும் தெரியுமாறு அறிவிப்பு செய்தார் அதுமட்டுமல்லாமல் அந்த நகரத்தின் சிறந்த குழந்தையாக அந்த ஆண்டு அந்த பெண்குழந்தை தெரிவுசெய்யப்பட்டது சாக்கலேட்பைக்கான தொகை கொடுத்துவிட்டதால் அந்த இளம் தொழிலதிபர்குடும்ப உறுப்பினர்அனைவரும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வீடுசென்று சேர்ந்தனர்

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...