சனி, 3 ஆகஸ்ட், 2019

கொத்தனாரும் மேற்பார்வையாளரும்


நகர்புறத்தில் அடுக்குமாடி கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தன. அங்கு மேல் தளத்திலிருந்து அந்த அடுக்குமாடி கட்டுவதை மேற்பார்வையிடும் மேற்பார்வையாளர் உடனடியாக ஏதோவொரு முக்கியமான பணியை செய்யுமாறு கூறுவதற்காக கீழ்தளத்தில் பணி செய்து கொண்டிருக்கும் கொத்தனார் ஒருவரை பெயரிட்டுஅழைத்தார் பல்வேறு பணிகளினால்உருவாகும் ஓசையினால் அந்த கொத்தனாரும் மேற்பார்வையாளரின் அழைப்பை கவணிக்காமல் தன்னுடைய பணியை செய்துகொண்டிருந்தார் இரண்டு மூன்றுமுறை கொத்தனாரின் பெயரை மேற்பார்வையாளர் அழைத்தும் எதற்குஅழைத்தார்கள் என அந்த கொத்தனார் திரும்பிகூட பார்த்திடாமல் இருந்ததை தொடர்ந்து மேற்பார்வையாளர் தன்னுடைய பையிலிருந்து நூறுரூபாய் தாள் ஒன்றினை எடுத்து அதே கொத்தனாருக்கு அருகில் விழுமாறு விட்டெறிந்தார் இப்போது அந்த கொத்தனார் இன்று படம் பார்ப்பதற்கான செலவிற்கு ஆயிற்றுஎன அருகில்வந்து விழுந்த ரூபாய்தாளினை எடுத்து தன்னுடைய பையில் வைத்து கொண்டு தொடர்ந்து தன்னுடைய பணியை செய்து கொண்டிருந்தார் மீண்டும் மற்றொரு நூறு ரூபாய் தாளினை அந்த மேற்பார்வையாளர் கொத்தனாரை நோக்கி வீசினார் மீண்டும் ஆகா அருமை படம் பார்க்க செல்லும்போது நல்லஉணவகத்தில் இன்று நன்றாக சாப்பிட்டு செல்வதற்காயிற்று என அந்த கொத்தனார் தன்னருகில்வந்து விழுந்த ரூபாய் தாளினை எடுத்து தன்னுடைய பையில் வைத்து கொண்டு மீண்டும் தொடர்ந்து தன்னுடைய பணியை செய்து கொண்டிருந்தார் அதனால் எரிச்சலுற்ற மேற்பார்வையாளர் சிறு கல்லை எடுத்து அந்த கொத்தனாரின் தலையின்மீது படுமாறு விட்டெறிந்தார் அந்த கல்லும் மிகச்சரியாக அந்த கொத்தனாரின் தலையில் விழுந்தவுடன் சுரீர் என வலிஉருவானதை தொடர்ந்து அந்த கொத்தனார் அந்த கல்வந்த வழியை அன்னாந்து பார்த்தார் அப்போதுதான் மேற்பார்வையாளர் அவரை மேல்தளத்திற்கு வருமாறு அழைத்ததைதொடர்ந்து மேல் தளத்திற்கு சென்றார் மனிதர்களில்பெரும்பாலோனோர் இதேபோன்று நம்முடைய வாழ்க்கைபாதையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகளை யார்செய்தார்என பார்த்து அவர்களுக்கு நன்றிகூற மாட்டோம் ஆனால் நமக்கு ஏதேனும் சிறியஅளவில் தீங்கு ஏற்பட்டால் உடனடியாக நாம் அதனை கவணத்தில் கொண்டு அதனை ஏற்படுத்தியவரை அடையாளம் கண்டு அவர் நம்மைவிட பலசாலியாக இருந்தால் அவர்களுடன் மேலும் நமக்கேன் வம்பு என தாண்டி சென்றிடுவோம் ஆனால் நம்மைவிட பலமற்றவர்களெனில் அவர்களைஉண்டு இல்லையென ஒரு வழி செய்தபின்னர் வேறு எந்தவொருபணியை செய்யதுவங்கிடுவோம் இதுவே மனிதனின் இயல்பான குணமாகிவிட்டது அதற்கு பதிலாக தவறுதலாக கூட இவ்வாறு ஏற்ட்டிருக்கும் என மன்னித்து செல்வதுதான் சுமுகமாக வாழ்வதற்கான வழியாகும் என செயல்படுக மேலும் நமக்கு நன்மை செய்பவரை யாரென அறிந்து அவர்களுக்கு நன்றி சொல்வது நம்மீது மதிப்பு அதிகமாக்குவதற்கு ஏதுவாகும் அதனால் நமக்கு மேலும் உதவி தயங்காமல் கிடைக்க ஏதுவாகிவிடுமல்லவா

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...