ஊரில் நல்ல இரக்ககுணமுள்ள கோடீஸ்வரன் ஒருவன் இருந்தான். மூன்று பிச்சைக்காரர்கள் அந்த கோடீஸ்வரனிடம் உதவிக்காக அணுக நினைத்தனர்.
முதல் பிச்சைகாரன் கோடீஸ்வரனிடம் சென்று : "ஐயா! தயவுசெய்து எனக்கு பத்து ரூபாய் மட்டும் பிச்சை கொடுங்கள் ஐயா!." என கோரினான். இந்தமுதல்பிச்சைகாரனின் கோரிய தோரணையை கண்டு அந்த கோடீஸ்வரன் மிகவும் அதிர்ச்சியடைந்தான். "என்ன! நான் உன்னிடம் கடன்பட்டிருப்பதைப் போல பத்து ரூபாய் கொடுங்கள் என என்னிடம் கோருகின்றாய்! நான் என்ன உனக்கு கடனாளியா? உனக்கு எவ்வளவு தைரியம்? ஒரு பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாய்தான் என்னால் கொடுக்க முடியுமா! , நான் அவ்வளவு கேவலமாக போய்விட்டேனா ! இந்தா ஐந்து ரூபாய் இதனை எடுத்துக்கொண்டு தூரஓடிபோஇங்கு திரும்பவும் வராதே!" என்று அந்த கோடீஸ்வரன் ஐந்து ரூபாயை மட்டும் கொடுத்து பிச்சைகாரனை விரட்டிஅடித்தான். அந்த முதல் பிச்சைகாரன் ஐந்து ரூபாயை மட்டும் அந்த கோடீஸ்வரனிடமிருந்து வாங்கிகொண்டு சென்றான்.
அடுத்தஇரண்டாவது பிச்சைக்காரன்அதே கோடீஸ்வனிரிடம் சென்று: "ஐயா! நான் கடந்த பத்து நாட்களாக உணவில்லாமல் பட்டினியாக இருக்கின்றேன் . தயவுசெய்து நான் சாப்பிடுவதற்கு ஏதாவது உதவுங்கள்ஐயா." எனக்கோரினான் அதனைதொடர்ந்து"உனக்கு எவ்வளவு வேண்டும்?" என அந்த கோடீஸ்வரன் இரண்டாவது பிச்சைகாரனிடம் கேட்டான்.அதற்கு இரண்டாவது பிச்சைகாரன்"நீங்கள் என்ன கொடுத்தாலும் போதும் ஐயா" என பதிலளித்தான். அதனைதொடர்ந்து அந்த கோடீஸ்வரன்", இந்தா நூறு ரூபாய் . குறைந்தது மூன்று நாட்களுக்கு நல்ல உணவைக்சாப்பிடுவதற்குஇது போதுமானதாகும்." என இரண்டாவது பிச்சைக்காரனுக்குஅவன் கேளாமளேயே நூறு ரூபாயைகோடீஸ்வரன் வழங்கினான் அந்தநூறுரூபாயை மட்டும் பெற்றுகொண்டு இரண்டாவது பிச்சைகாரன் அங்கிருந்து சென்றான்.
மூன்றாவது பிச்சைக்காரன்அதே கோடீஸ்வரனிடம் வந்து. "ஐயா, உங்களுடைய உன்னத குணங்களையும் தயாளகுணங்களையும் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அதனால், உங்களை என்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் பார்க்கவேண்டும் என்ற பேராவலுடன் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இதுபோன்ற தொண்டு மனப்பான்மை உடையவர்கள் நிச்சயமாக நாம் வாழும் இந்த பூமியில் காண்பது மிகவும் அரிதிலும் அரிது ஐயா" என்று கோடீஸ்வரனை மிகவும் புகழ்ந்து கூறினான்.அவ்வாறான சொற்களை பிச்சைகாரனின் வாயிலிருந்து வந்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றகோடீஸ்வரன்"தயவுசெய்து இந்த நாற்காலியில் உட்காருங்கள் ஐயா" என்று கோடீஸ்வரன் மூன்றாவது பிச்சைகாரனிடம் கூறி தன்னுடைய வீட்டிலுள்ள நாற்காலியில் அமரச்செய்தான்.மேலும் "நீங்கள் மிகவும் சோர்வாகத் தோன்றுகிறீர்கள். தயவுசெய்து வயிறார இந்த உணவை சாப்பிடுங்கள்" என மூன்றாவது பிச்சைக்காரனுக்கு போதுமான உணவை கோடீஸ்வரன் வழங்கினான். மூன்றாவது பிச்சைகாரன் உணவு உண்ட பின்னர் " ஐயா நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று இப்போது கூறுங்கள்" என மிகப்பணிவுடன் அந்த மூன்றாவது பிச்சைகாரனிடம் கோடீஸ்வரன் கோரினான்.
"ஐயா நான் ஒரு சிறந்த நபரைச் சந்திக்க மட்டுமே வந்தேன். ஆனால் நீங்களோ ஏற்கனவே எனக்கு வயிறார உணவைவழங்கிவிட்டீர்கள்.இதைவிட உங்களிடமிருந்து வேறு என்னஎனக்கு தேவை? அதைவிடநீங்கள் ஏற்கனவே என்னிடம் அசாதாரணஅன்பினை காட்டியுள்ளீர்கள் அதுவேபோதும் ஐயா!" எனமூன்றாவது பிச்சைகாரன்கூறியதும் மிகவும் மனம் குளி ர்ந்து" ஐயா உங்களைபோன்ற நபர்கள் நண்பர்களாக எனக்கு அருகில் எப்போதும் இருக்கவேண்டும் அதுவே என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள் " என்ற வேண்டுகோளுடன் தன்னுடன் இருக்கும்படிமிகவும் கெஞ்சினான், தொடர்ந்து அந்த மூன்றாவது பிச்சைகாரனுக்காக ஒரு நல்ல வீட்டைக் கட்டிகொடுத்து அதில், அவனது வாழ்நாள் முழுவதும் வாழ்வதற்கு தேவையான பொருட்களை வழங்கி பிச்சைகாரனைகோடீஸ்வரன் நன்கு கவனித்துகொண்டான்
பொதுவாக நாம் எவ்வாறு மற்றவர்களை அனுகுகின்றோமோ அதற்கேற்பவே உதவியும் மரியாதையும் கிடைக்கும் என தெரிந்து கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக