சனி, 26 ஆகஸ்ட், 2023

நாய்க்கு பூனை சலுகை - சார்புநிலை பற்றிய கதை

ஒரு நாள், ஒரு பூனை இரையை தேடி சென்று கொண்டிருந்தது, திடீரென்று  அதன்  எதிரில் பெரிய , பயங்கரமான நாய் ஒன்று வந்தது. உடன் பூனை ஆனது நாயைப் பார்த்து பயந்து அதனால் வரவிருக்கின்ற ஆபத்தை உணர்ந்து விரைவாக ஓட ஆரம்பித்தது ஆனால் பூனை நாயை விட விரைவாக ஓடமுடியவில்லை அதனால் சிறிது நேரத்தில் நாய்ஆனது பூனையை  பிடித்து விட்டது தொடர்ந்து பூனையை கொல்வதற்குதயாரானது  . மரணம் பூனையின் முன்னால் இருந்தது. வேறு வழியில்லாமல் நாயிடம் தன்னை கொல்லாமல் விட்டு விடும்படி கெஞ்சதுவங்கியது. ஆனால் பூனையின் கெஞ்சல்களுக்கும் அனைத்து வேண்டுகோள்களும் நாய் செவிசாய்க்காமல் தன்னுடைய அடுத்த செயலிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தது.
இந்நிலையில்  தன்னுடைய உயிரை காத்துக்கொள்வதற்கான கருத்து ஒன்று பூனையின் மனதில் தோன்றியது அதனை செயல்படுத்திடுவதற்காக பூனையானது நாயிடம், “நீ என்னை கொல்லாமல் விட்டிட்டால், நாளையிலிருந்து நீ உணவைத் தேடி எங்கும் செல்ல வேண்டியதில்லை, அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன், நானே தினமும் உனக்கான உணவினை தேடி கொண்டுவருவேன் அதனை நீ உண்ணலாம் அதன் பிறகு ஏதாவது மிச்சமிருந்தால்,  , எனக்கு கொடு. அதைக் கொண்டு என்னுடைய வயிற்றை நிரப்புவேன்” எனும் செயல்திட்டத்தை கூறியது.
உணவிற்காக எங்கும் தேடி அலையாமலும் கடினமாக உழைக்காமலும் நமக்கு தினமும் தேவையான உணவினை இந்த பூனையானது தேடிக்கொண்டுவருவேன் என்பது சரியான செயல்திட்டமாக நாய் உணர்ந்தது  அதைமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது  அந்த செயல்திட்டத்தின் படி நாயானது பூனையைக் கொல்வதை நிறுத்தியது  .ஆனால் அதே நேரத்தில் ஏதாவது ஒருநாள் அவ்வாறு தனக்கான உணவினை பூனையானது தேடிக்கொண்டுவரவில்லையெனில் அன்று பூனையை கொன்று தன்னுடைய உணவாக ஆக்கி கொள்வேன் என பூனையை எச்சரித்தது.
என்ன விலை கொடுத்தாலும் தன் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன் என்று பூனை சபதம் செய்தது.
அந்த நாளிலிருந்து நாய்க்கு நம்பிக்கை வந்தது, நாயானது பூனை தினமும் தேடிக்கொண்டு வந்துகொடுக்கின்ற உணவை சாப்பிட்டு வாழ ஆரம்பித்தது. உணவு தேடி எங்கும் செல்ல வேண்டிய அவசியம் அந்த நாய்க்கு இல்லை.  நாள் முழுவதும் தனது இடத்தில் படுத்துக் கொண்டு பூனைக்காகக் காத்திருப்பது மட்டுமே நாயின்அன்றாட பணியாக இருந்தது.
பூனையும் அந்த நாய்க்கு தான்ஏற்றுக்கொண்டவாறு தினமும் சரியான நேரத்தில் உணவைதேடிக் கொண்டுவந்து கொடுத்துந்ததது. இப்படியே பலநாட்கள் கழிந்தன. கடந்த பலநாட்களாகஅந்த நாயானது வேறு எங்கும் சென்று வராமல்  ஒரே இடத்தில் படுத்துக்  கிடப்பதால் அதிக கொழுப்பு உடலில் சேர்ந்து நாயானது மிகவும் பருமனாக ஆகிவிட்டது அதனால் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையாகிவிட்டது.
  ஒரு நாள், நாய்க்குமிகவும் பசியாக இருந்தது, தினமும் தன்னுடைய உணவினை கொண்டுவருகின்ற பூனைக்காக காத்திருந்தது. நீண்ட நேரம் காத்திருந்தும் பூனை வராததால் பொறுமை இழந்த நாய் பூனையை கண்டுபிடிக்க வெளியே தன்னுடைய பருத்தஉடலின் விரைவாகஓடமுடியாததால் மிகமெதுவாக நடந்து சென்றது.
நாயின் கண்களால்  பூனையினை காண்கின்ற தூரத்தில் பூனையானது ஒரு எலியை கொன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது, இதைப் பார்த்து நாய் கோபமடைந்து பூனையிடம் , "பூனையாரே, நீங்கள் உங்கள் வாக்குறுதியை மீறிவிட்டீர்கள். ஒப்பந்ததில் கூறியவாறு இப்போது நான் உன்னைக் கொன்று சாப்பிடபோகின்றேன்” என கோபமாக கூறியது
மேலும் இதைச் சொல்லிவாறு பூனையை நோக்கி விரைந்து செல்ல துவங்கியது ஆனால் பூனை ஏற்கனவே விழிப்புடன் இருந்தது. உடனே அது தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து விரைவாக ஓடியது.
நாயும் அதன் பின்னால் ஓடமுடியாமல் மெதுவாக நடந்தது. ஆனால் இந்த முறை பூனை நாயை விட விரைவாக ஓடியது. நாய் மிகவும்அதிக கொழுப்பு சேர்ந்து உடல்பருமனாக இருந்ததால் பூனையை நீண்ட நேரம் துரத்த முடியாமல் சோர்வாகி உட்கார்ர்ந்துவிட்டது. விரைவாக ஓடிய பூனை காணாமல் போய்விட்டது. தொடர்ந்து நாயானது தனக்கான உணவினை வேட்டையாடி உண்ணமுடியாமல் பட்டியாக இறந்துவிட்டது
  மற்றவர்களைச் சார்ந்திருப்பது நீண்ட காலம் நீடிக்காது. அது நம்மை சோம்பேறியாகவும் பலவீனமாகவும் ஆக்குகிறது. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால்,நமக்குத்தேவையான நம்மால் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் நாமேசெய்துகொள்வோம் என உறுதி கொள்க

சனி, 19 ஆகஸ்ட், 2023

இரண்டு கைதிகளை , பாம்பு கடிக்க செய்வதன்மூலம் தூக்குதுதண்டனை நிறைவேற்றுதலை ஆய்வு செய்தல்

 .சில அறிவியல் ஆய்வாளர்கள்  தங்களுடையை  ஒரு பரிசோதனைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு கைதிகளை தேர்ந்தெடுத்தனர், அவர்களுக்கு .
மரணதண்டனைவழங்குவதற்குத் தயாராக இருந்தபோது, அவர்களிடம்  நீங்கள் தூக்கிலிடப்பட மாட்டீர்கள், அதற்கு பதிலாக  விஷப்பாம்பு கடிக்கச்செய்து கொல்லப்படுவீர்கள் என கூறப்பட்டது.
அதன் பிறகு, முதல் கைதியை மரணதண்டனை நிறைவேற்றுவதற்காக ஒரு அறைக்குள் கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் கண்களை எதை.யும் காணமுடியாதவாறு கருப்புத்துனியாமல் இருகக்கட்டப்பட்டு ஒரு நாற்காலியில் உட்காரவைத்து கைகளையோகால்களையோ அசைக்க முடியாதவாறு கட்டப் பட்டார், பின்னர் அவ்வறையில் விஷப்பாம்பு ஒன்று விடுவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில், அந்த விஷப்பாம்பு அந்த கைதியை கடித்து, அதன்மூலம் அந்த முதல் கைதி இறந்தார்.
இந்த நிகழ்வினை இரண்டாவது கைதி காணும் படி செய்யப்பட்டது அவ்வரண்டாவது கைதி தனக்கு முன்னால் இதையெல்லாம் பார்த்து மிகவும் பயத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது கைதியை அதேஅறையில் அடைத்து நாற்காலியில் உட்காரவைத்து கைகளை.யோ கால்களையோ அசைக்க முடியாதவாறு முதல் கைதியை செய்ததை போன்றே கட்டப்பட்டார் , பின்னர் அந்த கைதியின் கண்களை எதையும் பார்க்கமுடியாதவாறு கருப்புத்துனியால் இருகக்கட்டினர். இந்த முறை, அந்த அறைக்குள் விஷப்பாம்பு விடப்படவில்லை, அதற்கு பதிலாக ஒரு கூர்மையான  ஊசியால் இரண்டுமுறை அந்த கைதியின் கால்களில் குத்தப்பட்டது.
இந்த முறையும் முதல்கைதியை போன்றே இரண்டாவது கைதியும் சில நொடிகளில் இறந்தார். அதைக் கண்டு அறிவியல் ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டனர். இரண்டாவது கைதியின் உடலைப் பரிசோதனை செய்தனர் முதல் கைதியின் உடலில் இருந்ததைப் போன்றே இரண்டாவது கைதியின் உடலிலும் பாம்பு விஷத்திற்கு நிகரான விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
   இரண்டாவது கைதியின் உயிரை பறித்த இந்த விஷம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து  ஆய்வு நடத்தப்பட்டது. முதல் கைதியை பாம்பு கடிக்கச்செய்து இறந்ததை தன்னுடைய கணகளால் கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கூர்மையான  ஊசியால் மட்டும் இரண்டுமுறை குத்தப்பட்ட போதும் ஆனால் அதனை அவரது கண்களால் காணமுடியாதவாறு செய்யப்பட்டதால் தன்னை முதல் கைதியை போன்றே விஷப்பாம்புதான் கடித்தது என்ற எதிர்மறை எண்ணத்தால் அவரது உடலே விஷத்தினை உற்பத்தி செய்துள்ளது என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் இருந்து.நாம்  நமது ஒவ்வொரு செயலிலும்  நேர்மறையாக இருக்க வேண்டும்என  நாம் அறிந்து கொள்ளலாம்.
ஏனென்றால், மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகினால், அது நம் உடலில் விஷம் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது  மேலும் நம்முடைய உடலில் 75% நோய்க்கான மூலக் காரணங்கூட எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகின்றது.
இன்றைய உலகில் மனிதன் தன் எதிர்மறை எண்ணங்களால் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். எனவே,நம்முடைய சிந்தனையை எப்போதும் நேர்மறையாக வைத்திருக்க பழகிடுக.

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

துறவிபயனம்செய்கி்ன்ற ஒட்டகங்கள் - வாழ்க்கையின் சிக்கல்கள்.

  ஒருமுறை ஒரு நகரத்தில்,  ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டவாறே தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியேஅடையாத ஒரு மனிதன் வாழ்ந்தான். அம்மனிதன் எப்பொழுதும் ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு வருத்தத்துடன் இருப்பதே வழக்கமாகும். அவ்வாறான நிலையில் ஒரு நாள்,  துறவி ஒருவர் தற்போது போன்று வசதிஇல்லாத பழங்காலமானதால் பயனம் செய்வதற்கான ஒட்டகங்களின் கூட்டத்துடன் அந்நகரத்திற்கு அருகில் வந்து தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது உடன்  அந்த நகரமக்கள் அனைவரும் அவரைப் பற்றியசெய்தியை அறி்ந்தவுடன் தங்கள் பிரச்சினைகளை அவரிடம் கூறி தீர்வு செய்து மகிழ்ச்சிடன் இருப்பதற்காக அந்த துறவியை காண  சென்று கொண்டிருந்தனர், இந்தமனிதனும் அவ்வாறே தன்னுடைய பிரச்சினைகள் இவர்மூலமாகவாவது தீர்வுசெய்திடமுடியுமா என அந்த துறவியை காண முடிவு செய்து மறுநாள் விடியற்காலையிலேயே அங்கு சென்றபோது  மாலை வரை அந்த துறவியைச் சந்திக்கும் வாய்ப்பு அந்த மனிதனுக்குக் கிடைக்கவில்லை. கடைசியாக துறவியை சந்திக்க அனுமதிகிடைத்து  துறவியை சந்தித்தபோது அவரிடம், “ஐயா, நான் என் வாழ்க்கையில் எப்போதும் ஏதாவது பிரச்சினைகளால் சூழ்ந்து என்னால் மற்றவர்களை போன்று மகிழ்ச்சியாகவே வாழமுடியவில்லை., சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில், சில நேரங்களில் யாருடனாவது மோதல்கள், சில நேரங்களில் என் உடல்நிலை குறித்து கவலைப்படுவது என்றவாறு எல்லா நேரங்களிலும் ஏராளமானபிரச்சனைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன என்னால் இவைகளை எதிர்கொள்ளமுடியாமல் தத்தளி்க்கின்றேன் அதனால் மிகவும் வருத்தத்துடனேயே வாழ்ந்துவருகின்றேன். தயவு செய்து என் வாழ்வில் எதிர்படுகின்ற எல்லா பிரச்சனைகளும் முடிந்து நான்மனமகிழ்ச்சியுடன் வாழக்கூடிய ஒரு தீர்வை கூறுங்கள்” என்றான் உடன் அந்த துறவி புன்னகைத்து, “மகனே, இன்று மிகவும் தாமதமாகிவிட்டது, நாளை உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன். எனக்காக ஒரு சின்ன வேலை செய்வாயா?” எனக்கோரினார் உடன்துறவிகூறுகின்ற  பணியை செய்ய தான் தயாராக இருப்பதாக அந்த மனிதன் ஒப்புக்கொண்டான். துறவி, “மகனே நான் பயனம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்வதற்காக  நூறு ஒட்டகங்கள் உள்ளன, அவற்றை இன்றிரவு நீ கவனித்துக் கொள்ள வேண்டும். நூறு ஒட்டகங்களும் ஓய்வெடுப்பதற்காக தரையில் படுத்ததும், நீ உறங்க செல்லலாம்." எனக்கோரியபின், துறவி ஓய்வெடுக்க தனது கூடாரத்திற்குள் சென்றார். மறுநாள் காலை துறவி அந்த மனிதனைச் சந்தித்தபோது, "மகனே, நேற்றிரவு நீ நன்றாகத் உறங்கினாயா?" என்று கேட்டார். உடன்அம்மனிதன், "ஐயா நேற்றிரவு முழுவதும்  ஒரு ஒட்டகத்தை ஓய்வெடுக்க செய்யமுயற்சித்தால் உடன், மற்றொன்று எழுந்து நிற்கும் இவ்வாறு மாற்றி மாற்றி ஒன்று ஒய்வெடுக்கச்செய்ய முயற்சித்திடும்போது மற்றொன்று எழுந்து கொண்டே யிருந்தன  நூறு ஒட்டகங்களையும் ஓய்வெடுப்பதற்காக பலவகையிலும் முயற்சிசெய்தேன், ஆனால் என்னால் அனைத்து ஒட்டகங்களையும் ஒரேநேரத்தில் ஓய்வெடுக்க செய்யமுடியவில்லை அதனால் நேற்றிரவு முழுவதும் என்னால் ஒரு கணம் கூட தூங்க முடியவில்லை.." என  மிகச்சோர்வாகவும், சோகமாகவும் பதில் கூறினான் உடன்துறவி, "மகனே நீ எவ்வளவு முயற்சி செய்தாலும், அனைத்து ஒட்டகங்களும் ஒன்றாக ஓய்வெடுக்க செய்ய முடியாது என்பதை  புரிந்து கொண்டாய் அல்லவா. அதாவது சிலவற்றை ஓய்வெடுக்க செய்யமுயற்சித்தால் உடன் வேறு சில ஒட்டகங்கள் எழுந்து நிற்கும். அதே போன்று நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு பிரச்சனையை தீர்வு செய்தவுடன்,  மற்றொரு பிரச்சனை நம்முன்எழும் இதுதான் உலகநியதி. நம் உயிர் இருக்கும் வரை பிரச்சனைகளும் இருந்துகொண்டேயிருக்கும், சில நேரங்களில் குறைவாகவும்,வேறுசிலநேரங்களில் மிக அதிகமாகவும் இருக்கும் என்பதை புரிந்து கொள்க. " எனக்கூறினார் உடன் அம்மனிதன்"அவ்வாறாயின் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?" என வினவினான். துறவி சிரித்துக்கொண்டே, "நேற்று இரவு என்ன நடந்தது? 1. பல ஒட்டகங்கள் நீ முயற்சி செய்யாமலேயே இரவு நேரத்தில் தானாகவே ஓய்வெடுக்க செய்யும், 2. உன்னுடைய முயற்சியால் பலவற்றை ஓய்வெடுக்க வைத்தாய், 3. பல ஒட்டகங்கள் உன்னுடைய கடுமையான முயற்சிக்குப் பிறகும் ஓய்வெடுக்க செய்யமுடியவில்லை, பின்னர் அவற்றில் சில தனியே ஓய்வெடுக்கசெல்வதை  நீ  கண்டாய் அதுபோன்று நம்முடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள்.. 1. சில தானாகவே தீர்வாகிவிடும், 2. சிலவற்றை உன்னுடைய சொந்த முயற்சியால் தீர்வுசெய்கி்ன்றாய், 3. நிறைய முயற்சி செய்தும் வேறுசில தீர்வாகவில்லை...? அதனை அப்படியே விட்டுவிடு இதுபோன்ற பிரச்சனைகள் சரியான நேரத்தில் தானாகவே தீர்வாகிவிடும். எனவே,  பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கையை அனுபவிக்க கற்றுக்கொள்க.."  என நீண்ட விளக்கமளித்தார்

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

கையில் விளக்கு எடுத்துசென்ற குருடனை - மற்றவர்கள் கேலி செய்தல்

.
முன்பெல்லாம் தற்போதைய நவீன வாழ்க்கை முறைபோன்று தெருவில் இரவில் மின்விளக்குகள் இல்லாததால்  இருள்சூழ்ந்த இரவில் சரியாக நடந்து செல்வதற்கு ஏதுவாக சிலர் தம்முடைய கைகளில் விளக்கு ஒன்றினை எடுத்து செல்வார்கள் அவ்வாறானசூழலில்  ஒரு கிராமத்தில் வாழ்ந்த கண்பார்வையற்ற  குருடன் ஒருவர். இரவில் வெளியில் செல்லும் போதெல்லாம், எப்பொழுதும் மற்றவர்களை போன்றே தன்னுடைய கைகளில் ஒரு விளக்கினை  எடுத்துசெல்வார்
அவ்வாறு ஒரு நாள் இரவு  தன்னுடைய  நண்பரின் வீட்டில் இருந்து தன்னுடைய வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  அது இருள்சூழ்ந்த இரவானதால் அவர் வழக்கம் போல  ஒரு விளக்கை தன்னுடைய  கையில் பிடித்தபடி தன்னுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அப்போது அந்த கிராமத்திலிருந்த சில குறும்புக்கார இளைஞர்கள் அந்தக் குருடனைப் பார்த்து கேலிசெய்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவன் சத்தமாக, “டேய், பாருடா, கண்ணில்லாத குருடன் கையில் விளக்கை ஏந்தி சென்று கொண்டிருக்கிறார். பார்வையற்றவருக்கு கைவிளக்கால் என்ன பயன்?” என சத்தமாக, கிண்டல் செய்தான் மற்றஇளைஞர்களும் அதனை ஆமோதித்து சிரிக்க துவங்கினார்
அவ்வாறு கிண்டலாக  கூறிய சொற்களைக் கேட்ட பார்வையற்றவர் தான் மேலும் நடந்து செல்வதை நிறுத்திவிட்டு, “மிகச்சரியாகச் சொன்னீர்கள் சகோதரர்களே. நான் குருடன்தான். என்னால் பார்க்க முடியாது. அதனால் விளக்கை கையில் வைத்திருப்பதால் எனக்கு என்ன பயன்?”
  உண்மையில் எனக்கு இருட்டில் மட்டுமே வாழ்வது வழக்கமாகும்
ஆனால் உங்களைப் போன்ற கண்பார்வை உள்ளவர்கள் இருட்டில் வாழப் பழகவில்லை. இருள்சூழ்ந்த இரவில் எதிரில் இருப்பதை அல்லது வருவதை பொதுமக்களாகிய உங்களுக்கு பார்ப்பதில் சிக்கல் இருக்கலாம். எனவே நான் எதிரில் வருவதை கவனிக்காமல் நடந்து வரலாம் அதனால் தவறுதலாக இருளில் என்னைப் கவனிக்காமல் பார்க்காமல் எதிரில் வருபவர் என்னை கீழே இடித்துத் தள்ளிவிட வாய்ப்புண்டு அல்லவா, அதன் பிறகு எனக்கு என்ன நடக்கும்? நான்தான் கீழே விழவேண்டிவரக்கூடும்
அதனால்தான் எதிரில் வருகின்ற உங்களைப் போன்றவர்கள் கவனக்குறைவாக என்னை இடித்து கீழேவிழச்சசெய்யாமல் இருப்பதற்காக இந்த விளக்கினை கையில் ஏந்தி செல்கிறேன். அதனால் பார்வையுடையவர்கள் இருட்டில் ஒரு குருடனைப் பார்க்க முடியும் அல்லவா. ' என மிக நீண்ட விளக்கமளித்தார்
பார்வையற்றவரின் பேச்சைக் கேட்டு வெட்கமடைந்த அவ்விளைஞர்கள், அவரிடம் மன்னிப்பு கேட்கத் தொடங்கினர், எதிர்காலத்தில் யாரிடமும் எதையும் சிந்திக்காமல் எதுவும் சொல்ல மாட்டேன் என்று சபதம் செய்தனர்.
கற்றல்.
உலகில் பல்வேறு வகையான மக்கள் உள்ளனர். சிலர் தங்கள் சொந்த பலவீனங்களை புறக்கணிக்கிறார்கள், ஆனால் மற்றவர்களின் பலவீனங்களை கேலி செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
உண்மையான களநிலவரத்தை மதிப்பிடாமல், மற்றவர்களின் பலவீனங்களைப் பார்த்துகைகொட்டி கிண்டல்செய்து சிரிக்கிறார்கள், அவர்களின் கூர்மையான சொற்களின் அம்புகளால் அவர்களை காயப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையான செயலால் அறையப்படும்போது, குற்ற உணர்வைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லாதது அவர்களு்குக தெரியவருகின்றது.
எனவே, யாரையும் அவமானப்படுத்த முயற்சிக்கக் கூடாது, எதையும் பேசும் முன் கவனமாக சிந்தித்திடுக

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...