ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

கையில் விளக்கு எடுத்துசென்ற குருடனை - மற்றவர்கள் கேலி செய்தல்

.
முன்பெல்லாம் தற்போதைய நவீன வாழ்க்கை முறைபோன்று தெருவில் இரவில் மின்விளக்குகள் இல்லாததால்  இருள்சூழ்ந்த இரவில் சரியாக நடந்து செல்வதற்கு ஏதுவாக சிலர் தம்முடைய கைகளில் விளக்கு ஒன்றினை எடுத்து செல்வார்கள் அவ்வாறானசூழலில்  ஒரு கிராமத்தில் வாழ்ந்த கண்பார்வையற்ற  குருடன் ஒருவர். இரவில் வெளியில் செல்லும் போதெல்லாம், எப்பொழுதும் மற்றவர்களை போன்றே தன்னுடைய கைகளில் ஒரு விளக்கினை  எடுத்துசெல்வார்
அவ்வாறு ஒரு நாள் இரவு  தன்னுடைய  நண்பரின் வீட்டில் இருந்து தன்னுடைய வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  அது இருள்சூழ்ந்த இரவானதால் அவர் வழக்கம் போல  ஒரு விளக்கை தன்னுடைய  கையில் பிடித்தபடி தன்னுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அப்போது அந்த கிராமத்திலிருந்த சில குறும்புக்கார இளைஞர்கள் அந்தக் குருடனைப் பார்த்து கேலிசெய்து சிரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் ஒருவன் சத்தமாக, “டேய், பாருடா, கண்ணில்லாத குருடன் கையில் விளக்கை ஏந்தி சென்று கொண்டிருக்கிறார். பார்வையற்றவருக்கு கைவிளக்கால் என்ன பயன்?” என சத்தமாக, கிண்டல் செய்தான் மற்றஇளைஞர்களும் அதனை ஆமோதித்து சிரிக்க துவங்கினார்
அவ்வாறு கிண்டலாக  கூறிய சொற்களைக் கேட்ட பார்வையற்றவர் தான் மேலும் நடந்து செல்வதை நிறுத்திவிட்டு, “மிகச்சரியாகச் சொன்னீர்கள் சகோதரர்களே. நான் குருடன்தான். என்னால் பார்க்க முடியாது. அதனால் விளக்கை கையில் வைத்திருப்பதால் எனக்கு என்ன பயன்?”
  உண்மையில் எனக்கு இருட்டில் மட்டுமே வாழ்வது வழக்கமாகும்
ஆனால் உங்களைப் போன்ற கண்பார்வை உள்ளவர்கள் இருட்டில் வாழப் பழகவில்லை. இருள்சூழ்ந்த இரவில் எதிரில் இருப்பதை அல்லது வருவதை பொதுமக்களாகிய உங்களுக்கு பார்ப்பதில் சிக்கல் இருக்கலாம். எனவே நான் எதிரில் வருவதை கவனிக்காமல் நடந்து வரலாம் அதனால் தவறுதலாக இருளில் என்னைப் கவனிக்காமல் பார்க்காமல் எதிரில் வருபவர் என்னை கீழே இடித்துத் தள்ளிவிட வாய்ப்புண்டு அல்லவா, அதன் பிறகு எனக்கு என்ன நடக்கும்? நான்தான் கீழே விழவேண்டிவரக்கூடும்
அதனால்தான் எதிரில் வருகின்ற உங்களைப் போன்றவர்கள் கவனக்குறைவாக என்னை இடித்து கீழேவிழச்சசெய்யாமல் இருப்பதற்காக இந்த விளக்கினை கையில் ஏந்தி செல்கிறேன். அதனால் பார்வையுடையவர்கள் இருட்டில் ஒரு குருடனைப் பார்க்க முடியும் அல்லவா. ' என மிக நீண்ட விளக்கமளித்தார்
பார்வையற்றவரின் பேச்சைக் கேட்டு வெட்கமடைந்த அவ்விளைஞர்கள், அவரிடம் மன்னிப்பு கேட்கத் தொடங்கினர், எதிர்காலத்தில் யாரிடமும் எதையும் சிந்திக்காமல் எதுவும் சொல்ல மாட்டேன் என்று சபதம் செய்தனர்.
கற்றல்.
உலகில் பல்வேறு வகையான மக்கள் உள்ளனர். சிலர் தங்கள் சொந்த பலவீனங்களை புறக்கணிக்கிறார்கள், ஆனால் மற்றவர்களின் பலவீனங்களை கேலி செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
உண்மையான களநிலவரத்தை மதிப்பிடாமல், மற்றவர்களின் பலவீனங்களைப் பார்த்துகைகொட்டி கிண்டல்செய்து சிரிக்கிறார்கள், அவர்களின் கூர்மையான சொற்களின் அம்புகளால் அவர்களை காயப்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையான செயலால் அறையப்படும்போது, குற்ற உணர்வைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லாதது அவர்களு்குக தெரியவருகின்றது.
எனவே, யாரையும் அவமானப்படுத்த முயற்சிக்கக் கூடாது, எதையும் பேசும் முன் கவனமாக சிந்தித்திடுக

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...