சனி, 26 ஆகஸ்ட், 2023

நாய்க்கு பூனை சலுகை - சார்புநிலை பற்றிய கதை

ஒரு நாள், ஒரு பூனை இரையை தேடி சென்று கொண்டிருந்தது, திடீரென்று  அதன்  எதிரில் பெரிய , பயங்கரமான நாய் ஒன்று வந்தது. உடன் பூனை ஆனது நாயைப் பார்த்து பயந்து அதனால் வரவிருக்கின்ற ஆபத்தை உணர்ந்து விரைவாக ஓட ஆரம்பித்தது ஆனால் பூனை நாயை விட விரைவாக ஓடமுடியவில்லை அதனால் சிறிது நேரத்தில் நாய்ஆனது பூனையை  பிடித்து விட்டது தொடர்ந்து பூனையை கொல்வதற்குதயாரானது  . மரணம் பூனையின் முன்னால் இருந்தது. வேறு வழியில்லாமல் நாயிடம் தன்னை கொல்லாமல் விட்டு விடும்படி கெஞ்சதுவங்கியது. ஆனால் பூனையின் கெஞ்சல்களுக்கும் அனைத்து வேண்டுகோள்களும் நாய் செவிசாய்க்காமல் தன்னுடைய அடுத்த செயலிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தது.
இந்நிலையில்  தன்னுடைய உயிரை காத்துக்கொள்வதற்கான கருத்து ஒன்று பூனையின் மனதில் தோன்றியது அதனை செயல்படுத்திடுவதற்காக பூனையானது நாயிடம், “நீ என்னை கொல்லாமல் விட்டிட்டால், நாளையிலிருந்து நீ உணவைத் தேடி எங்கும் செல்ல வேண்டியதில்லை, அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன், நானே தினமும் உனக்கான உணவினை தேடி கொண்டுவருவேன் அதனை நீ உண்ணலாம் அதன் பிறகு ஏதாவது மிச்சமிருந்தால்,  , எனக்கு கொடு. அதைக் கொண்டு என்னுடைய வயிற்றை நிரப்புவேன்” எனும் செயல்திட்டத்தை கூறியது.
உணவிற்காக எங்கும் தேடி அலையாமலும் கடினமாக உழைக்காமலும் நமக்கு தினமும் தேவையான உணவினை இந்த பூனையானது தேடிக்கொண்டுவருவேன் என்பது சரியான செயல்திட்டமாக நாய் உணர்ந்தது  அதைமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது  அந்த செயல்திட்டத்தின் படி நாயானது பூனையைக் கொல்வதை நிறுத்தியது  .ஆனால் அதே நேரத்தில் ஏதாவது ஒருநாள் அவ்வாறு தனக்கான உணவினை பூனையானது தேடிக்கொண்டுவரவில்லையெனில் அன்று பூனையை கொன்று தன்னுடைய உணவாக ஆக்கி கொள்வேன் என பூனையை எச்சரித்தது.
என்ன விலை கொடுத்தாலும் தன் வாக்குறுதியைக் காப்பாற்றுவேன் என்று பூனை சபதம் செய்தது.
அந்த நாளிலிருந்து நாய்க்கு நம்பிக்கை வந்தது, நாயானது பூனை தினமும் தேடிக்கொண்டு வந்துகொடுக்கின்ற உணவை சாப்பிட்டு வாழ ஆரம்பித்தது. உணவு தேடி எங்கும் செல்ல வேண்டிய அவசியம் அந்த நாய்க்கு இல்லை.  நாள் முழுவதும் தனது இடத்தில் படுத்துக் கொண்டு பூனைக்காகக் காத்திருப்பது மட்டுமே நாயின்அன்றாட பணியாக இருந்தது.
பூனையும் அந்த நாய்க்கு தான்ஏற்றுக்கொண்டவாறு தினமும் சரியான நேரத்தில் உணவைதேடிக் கொண்டுவந்து கொடுத்துந்ததது. இப்படியே பலநாட்கள் கழிந்தன. கடந்த பலநாட்களாகஅந்த நாயானது வேறு எங்கும் சென்று வராமல்  ஒரே இடத்தில் படுத்துக்  கிடப்பதால் அதிக கொழுப்பு உடலில் சேர்ந்து நாயானது மிகவும் பருமனாக ஆகிவிட்டது அதனால் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையாகிவிட்டது.
  ஒரு நாள், நாய்க்குமிகவும் பசியாக இருந்தது, தினமும் தன்னுடைய உணவினை கொண்டுவருகின்ற பூனைக்காக காத்திருந்தது. நீண்ட நேரம் காத்திருந்தும் பூனை வராததால் பொறுமை இழந்த நாய் பூனையை கண்டுபிடிக்க வெளியே தன்னுடைய பருத்தஉடலின் விரைவாகஓடமுடியாததால் மிகமெதுவாக நடந்து சென்றது.
நாயின் கண்களால்  பூனையினை காண்கின்ற தூரத்தில் பூனையானது ஒரு எலியை கொன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது, இதைப் பார்த்து நாய் கோபமடைந்து பூனையிடம் , "பூனையாரே, நீங்கள் உங்கள் வாக்குறுதியை மீறிவிட்டீர்கள். ஒப்பந்ததில் கூறியவாறு இப்போது நான் உன்னைக் கொன்று சாப்பிடபோகின்றேன்” என கோபமாக கூறியது
மேலும் இதைச் சொல்லிவாறு பூனையை நோக்கி விரைந்து செல்ல துவங்கியது ஆனால் பூனை ஏற்கனவே விழிப்புடன் இருந்தது. உடனே அது தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து விரைவாக ஓடியது.
நாயும் அதன் பின்னால் ஓடமுடியாமல் மெதுவாக நடந்தது. ஆனால் இந்த முறை பூனை நாயை விட விரைவாக ஓடியது. நாய் மிகவும்அதிக கொழுப்பு சேர்ந்து உடல்பருமனாக இருந்ததால் பூனையை நீண்ட நேரம் துரத்த முடியாமல் சோர்வாகி உட்கார்ர்ந்துவிட்டது. விரைவாக ஓடிய பூனை காணாமல் போய்விட்டது. தொடர்ந்து நாயானது தனக்கான உணவினை வேட்டையாடி உண்ணமுடியாமல் பட்டியாக இறந்துவிட்டது
  மற்றவர்களைச் சார்ந்திருப்பது நீண்ட காலம் நீடிக்காது. அது நம்மை சோம்பேறியாகவும் பலவீனமாகவும் ஆக்குகிறது. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால்,நமக்குத்தேவையான நம்மால் செய்யக்கூடிய அனைத்து பணிகளையும் நாமேசெய்துகொள்வோம் என உறுதி கொள்க

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...