சனி, 2 செப்டம்பர், 2023

ஒரு கூடையளவு மண்

 தந்திரசாலியான ஒருவன் ஒரு கிராமத்தில் பணஉதவி தேவைப்படுபவர்கள் தன்னிடம் வந்தபோது தந்திரமாக சிறிய தொகையை மட்டும் கடனாக கொடுப்பது அவனது வழக்கமான செயலாகும். அந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நன்றாகப் படிக்காதவர்கள் விவரம் தெரியாதவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கடனை திருப்ப முடியாததால் வட்டியை அசல் தொகையுடன் அந்த வட்டிக்கும் வட்டியாக கூட்டுவட்டி கணக்கிட்டு  சேர்த்துக் கொண்டே இருந்தான். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தொகை மிகவும் அதிகமாகி, அந்த கிராமத்தில் வாழும்மக்கள் திருப்பிச் செலுத்த முடியாமல், தங்கள் நிலத்தை தந்திரசாலியிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படுமாறு செய்துஅந்த கிராமத்திலுள்ள அனைத்து நிலங்களையும் அபகரித்து கொள்வது வழக்கமான செயலாகும்.
இப்போது  அவனது வீட்டிற்கு அருகில் வாழ்கின்ற ஒரு மூதாட்டிக்கு சொந்தமான நிலத்தில் அவனது பார்வை விழுந்தது அந்த மூதாட்டிக்கு சொந்தமான நிலமும் நமக்கு கிடைத்துவிட்டால் இந்த ஊரிலுள்ள நிலமுழுவதும் நம்ஒருவனுக்கு மட்டுமே யாகி விடுமே என சிந்தித்தான். ஆனால் அம்மூதாட்டிமட்டும், வேறுயாருடனும் சேராமல் தானே பயிர் செய்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது வழக்கமாகும்.மேலும் இந்த தந்திரக்காரணிடம் மட்டும் எந்த தேவைக்கும் கடன்வாங்காமல் தனியாக பயிரிட்டு அதில் வருகின்ற வருமானத்தை கொண்டு வாழ்ந்துவந்தார்   அம்மூதாட்டியை எவ்வாறு கவர்ந்து அம்மூதாட்டியின் நிலத்தை அபகரிப்பது என்று எந்தவொரு வழிமுறையும்இந்த தந்திரசாலியால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் பின்னர் கிராமத்தில் உள்ள ஒரு அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து அந்த அரசு அதிகாரியின் மூலம் போலியான ஆவணங்களை தயாரித்து, அம்மூதாட்டியின் பெயரிலுள்ள நிலத்தினை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டான் அதனைதொடர்ந்து. அவன்  அரசாங்க அதிகாரியுடன் சேர்ந்து தனக்கு சொந்தமான நிலத்தினை மூதாட்டி அனுபவித்து வருவதாகவும் அது தனக்கு சொந்தமானதால் உடன் அந்த நிலத்தினை தன்னிடம் ஒப்படைக்குமாறு அறிவிப்புக்கடிதம் ஒன்றினை  கொடுத்தான்.
இதையறிந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்து, தன் வாழ்நாள் முழுவதும் இங்கு தான் வாழ்ந்து வருகிறேன் என்றும், இந்த நிலம் தன் முன்னோர்களுக்கு சொந்தமானது என்றும், தன் அன்புக்குரியமுன்னோர்கள் அனைவரும் இந்த நிலத்தினை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வாழ்ந்துவந்தவர்கள் என்றும், தனக்கு வாரிசுரிமையின்படி தனக்குதான் சொந்தமானது என்றும், இதை இப்போது  வேறுஒருவரால் எவ்வாறு உரிமை கொண்டாட முடியும்? என அந்த கிராமத்திற்கான நீதிமன்றத்தை அணுகினார், ஆனால் அந்த தந்திரசாலி அனைவருக்கும் லஞ்சம் கொடுத்தான் போலியாக தயார்செய்த உரிமை ஆவணங்களை சமர்ப்பித்தான். இதனால், தந்திரசாலிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மனச்சோர்வடைந்த மூதாட்டி நிலத்தை காலி செய்யத் தயாரானார், அப்போது அந்த தந்திரசாலியும் அவனது அடியாட்களும் அம்மூதாட்டி காலிசெய்தவுடன் அந்த நிலத்தினை தன்னுடைய உரிமையுள்ள நிலமாக சேர்த்து கொள்வதற்காக தயாராக அங்கே காத்திருந்தனர். அந்த நிலத்தினை விட்டு வெளியேறும் போது, இரண்டு கண்களிலும் கண்ணீர் சிந்திகொண்டு அந்த மூதாட்டி அந்த தந்திரசாலியை அணுகி, "ஐயா, நீங்கள் இன்று என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டீர்கள், என் முழு வாழ்க்கையும் இங்கே கழிந்தது, ஆனால் இப்போது நான் இந்த நிலத்தினை உங்களிடம் விட்டு செல்கிறேன். இங்கு நான் , குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வளர்ந்தவந்த நிலம், இந்த மண் எனக்கு மிகவும் விருப்பமான மண்“. என்றார்.  மேலும் அம்மூதாட்டி, “நாம் அனைவரும் இந்த மண்ணால் ஆனவர்கள், அதனால் நாம் அனைவரும் இந்த மண்ணின்மீது அன்பு வைத்திருப்பது வழக்கமான செயலாகும். அவ்வாறு நான் அன்பு செலுத்தும் இந்த மண்ணை என்னுடன் வைத்திருக்க விரும்புகின்றேன் அதனால்இந்த நிலத்தின்மண்ணில் ஒரு கூடையளவு மட்டும் என்னுடன்  எடுத்துச் செல்ல என்னை அனுமதியுங்கள்,  நான் அமைதியாக இறக்கும் வரை இந்த மண்ணின் மனம் எப்போதும் என்னுடன் இருக்கும்.“ எனக்கோரினார்
அந்த தந்திரசாலிஅந்த மூதாட்டிக்கு சொந்தமான நிலம் முழுவதையும்  பணம் கொடுக்காமல் தனக்கு உரிமையாக்கி விட்டதால், அம்மூதாட்டிக்கு  ஒரு கூடையளவு மண்ணைக் கொடுத்து விடலாம், அதனால் அவள் அமைதியாகப் போய்விடுவார் என்று நினைத்து சிரித்தான். தொடர்ந்து, “நன்று. நீங்கள் உங்கள் கூடையில் மண்ணை  நிரப்பி எடுத்து செல்லாம்." எனக்கூறினான்
மூதாட்டி தான் வைத்திருந்த கூடையில் தன்னுடைய நிலத்தின் மண்ணை நிரப்ப துவங்கினார். அவ்வாறு நிரப்பியதும் அந்த கூடையை தன்னுடைய தலையில் தூக்கி வைத்துக்கொள்ளமுயற்சித்தார் வயதானதால் அம்மூதாட்டியால் தன்னுடைய நிலத்தின் மண்நிரம்பிய அந்த கூடையை தலையில்  தூக்கிவைக்க முடியாமல் தவித்தார். அதனால் அந்ததந்திராலியிடம், “ஐயா, இந்த கூடையை என் தலையில் தூக்கிவைப்பதற்கு கை கொடுப்பீர்களா?” என்றாள். உடன் அந்த தந்திரசாலி அம்மூதாட்டிக்கு உதவ முன் வந்து, “ஓ, பாட்டி, மண்ணால் நிரப்பப்பட்ட இந்தக் கூடையைத் தூக்கிச் செல்ல  சிரமப்படுவோம் என இந்த கூடையை மண்ணால் நிரப்புவதற்கு முன்பு நீங்கள் சிந்திக்கவில்லையா? , பிறகு  எவ்வாறு இந்த கூடைநிறைய மண்ணைஉங்களுடன் தூக்கி எடுத்துச் செல்வீர்கள்?" என்றான்
கண்ணீருடன், அம்மூதாட்டி, "ஐயா, இந்த முழு நிலமும் எனக்குச் சொந்தமானது, என் வாழ்நாள் முழுவதையும் இங்கே கழித்தேன், ஆனால் நான் இன்னும் உயிர்வாழும் வரையிலாவது என்னுடன் இருக்குவேண்டுமென இங்கிருந்து ஒரு கூடை மண்ணை எடுத்துச் செல்ல சிரமப்படுகிறேன். அவ்வாறு மிகஅதிக சிரமத்துடன் எடுத்துசென்றாலும் நான் இறக்கும்போது கூடையில் எடுத்து செல்லும் என்னுடைய நிலத்தின் மண்ணை என்னுடன் கொண்டுச் செல்ல முடியாது. அவ்வாறான நிலையில் ஐயா,இந்த ஊரில் மற்றவர்களை ஏமாற்றி அபகரித்து உங்கள் பெயரில் சேர்த்து கொண்டு மற்றவர்களின் நிலம் மிகவும் அதிகம். அதையெல்லாம்   நீங்கள் மட்டும் எவ்வாறு உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள்?" எனக்கூறினார்.
மூதாட்டி இவ்வாறு கூறியதைக் கேட்ட அந்த தந்திரசாலி திகைத்து நின்றார். தன் தவறை உணர்ந்து அந்த மூதாட்டியிடம் மன்னிப்பு கேட்டான். மேலும் அம்மூதாட்டி இறக்கும் வரை இந்த நிலத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கேட்டு, அம்மூதாட்டியிடமே அந்த நிலத்தைத் திருப்பிக் கொடுத்தான்.
    மற்றவர்களை ஏமாற்றாதீர்கள், பேராசை கொள்ளாதீர்கள். தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியாக இருங்கள்,  அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு போதுமானது.


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...