சனி, 30 செப்டம்பர், 2023

வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறுவது ?தாத்தா பேரனுக்கு அறிவுரை

 ஒருமுறை ஒரு சிறுவன் கோடை விடுமுறையில் தன்னுடைய தாத்தாவைப் பார்க்க கிராமத்திற்கு வந்தான். அவன் எப்பொழுதும் தன்னுடைய தாத்தாவோடு விளையாடுவது வழக்கமாகும். ஒரு நாள் அவன் தன்னுடைய தாத்தாவிடம், "தாத்தா நான் வளர்ந்தவுடன், நான் வெற்றிகரமான மனிதனாக மாற விரும்புகிறேன், அவ்வாறு வெற்றிகரமான மனிதனாக மாறுவதற்கான  வழிமுறைகளை கூற முடியுமா?" எனக்கோரினான். 

உடன் அவனுடைய தாத்தா சரி அதற்கான வழிமுறைகளை கூறுகின்றேன் வா ஆம் என க்கூறி,அந்த சிறுவனை தன்னுடன் அருகில் உள்ள தோட்டங்களுக்கான நாற்றங்காளிற்கு  அழைத்துச் சென்றார்.அந்நாற்றங்காலில் இருந்து இரண்டு சிறிய செடிகளை வாங்கிக்கொண்டு தாத்தா தன்னுடைய பேரனுடன் வீட்டிற்கு திரும்பிவந்தார். வீட்டிற்கு வந்தபின்னர் ஒரு தொட்டியில் ஒரு செடியை நட்டு வீட்டிற்குள் வைத்தார் மற்றொன்றை வீட்டிற்கு வெளியே நட்டார்.தொடர்ந்து " இந்த இரண்டு செடிகளில் எது எதிர்காலத்தில் நன்றாக வளரும் " என்று தாத்தா தன்னுடைய பேரனிடம் கேட்டார். சிறுவன் சிறிது நேரம் ஆலோசனைசெய்து, "வீட்டினுள் பாதுகாப்பாக வைத்த செடிதான் நன்றாக வளரும், ஏனென்றால் அது எல்லா ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கும், அதே நேரத்தில் வெளியில் உள்ள செடி அதிகசூரிய ஒளி, பலமான புயல், விலங்குகள் போன்ற பலவற்றால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தில் உள்ளது." என்றார் .தாத்தா சிரித்துக் கொண்டே, "சரி  என்ன நடக்கும் என காண்போம்.* என்றார் .அதன் பிறகு சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் நகரத்திற்கு சென்றுவிட்டான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறுவன் மீண்டும் தன் தாத்தாவைகாண கிராமத்திற்கு வந்தான். சிறுவன் தன்னுடைய தாத்தாவைப் பார்த்ததும், "தாத்தா, கடந்த முறை நான் வாழ்க்கையில் வெற்றிபெற சில வழிமுறைகளைக் கேட்டேன், ஆனால் நீங்கள் என்னிடம் எதுவும் கூறவில்லை. அதனால் இந்த முறை நீங்கள் கண்டிப்பாக எனக்கு கூறவேண்டும்." என்றான் .இப்போதும் தாத்தா சிரித்துக் கொண்டே , ‘கண்டிப்பாக ஆனால் முதலில் நாம் சில வருடங்களுக்கு முன்பு நட்டுவைத்த செடிகளை எந்த நிலையில் உள்ளது எனக்காண்போம்". எனக் கூறியவாறு, தாத்தா அந்த சிறுவனை வீட்டிற்குள் செடியை நட்டு வைத்திருந்த  இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த செடி.யானது காற்றில் தள்ளாடும் மெல்லிய மரமாக மாறியதைக் கண்டனர். பின்னர்  வீட்டிற்கு வெளியே நட்டுவைத்திருந்த செடியை காண அந்த சிறுவனை அழைத்துச் சென்றார். அங்கே ஒரு பெரிய மரம் நிற்பதையும் அதன் கிளைகள் வெகுதூரம் பரவி, வழிப்போக்கர்களுக்கு நிழல் தருகின்றவாறு இருப்பதையும் கண்டனர். இப்போது, தாத்தா அந்த சிறுவனைப் பார்த்து, ", எந்தச் செடி நன்றாகவும் வெற்றிகரமாகவும் வளர்துள்ளது?" கேட்டார். அதற்கு அந்த சிறுவன், "நாம் வெளியில் நட்டதுதான். ஆனால் தாத்தா, இது எப்படி சாத்தியம்? அந்த செடி இவ்வளவு பெரியதாக வளர்ந்துள்ளது ஆனால்அது பல ஆபத்துகளைச் சந்தித்திருக்க வேண்டுமே!" என சந்தேகமாக வினவினானஅ .உடன்தாத்தா சிரித்துக்கொண்டே , "ஆம், வெளியில் உள்ள செடி பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருந்தது, அதனால் அவ்வாறான பிரச்சனைகளைச் சமாளிப்பதும் அதன் பலனாக. வெளியில் உள்ள செடிக்கு தன் வேரையும் கிளைகளையும எவ்வளவு வேண்டுமானாலும் பரப்பும் சுதந்திரம் இருந்தது. புயல் போன்ற பிரச்சனை, வேர்களை வலுவாக்கியது. இன்று ஒரு சிறிய புயல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது. , நான் உனக்குச் சொல்லப் போவது, அதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்க, அப்போதுதான் வாழ்க்கையில் நீ எதைச் செய்தாலும் வெற்றி பெறுவாய். நீ எப்போதும் வசதியான தேர்வுகளைச் செய்தால், எல்லா ஆபத்துகளையும் மீறி இந்த உலகத்தில் வெற்றியாளனாக வளரமுடியாது அவ்வாறான ஆபத்துகளை எதிர்கொள்ள நீ தயாராக இருந்தால் அவற்றை சமாளித்து வெற்றியாளனாக உன்னால் வளரமுடியும் .வாழ்க்கையி்ல் ஏற்படும் அவ்வாறான பிரச்சனைகளை தடைகள் என நினைக்காதே அவைகளை வெற்றிக்கான படிகள் என்று எண்ணி செயல்படுக." என நீண்ட விளக்கமளித்தார் சிறுவன் நீண்ட பெருமூச்சு எடுத்து கொண்டு  வெளியில் வளர்ந்திருந்த மரத்தை உற்றுப் பார்த்தான், அவனது தாத்தாவின் சொற்கள் அவனுக்குப் புரிந்தது - வாழ்க்கையில் நாம் எதிர்படும் கருதும் தடைகள் நம்மை தோல்வியுறச்செய்வதாக கருதாமல், அதே தடைகள் நம்மை வலிமையடையச் செய்கின்றன, மேலும் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றன. என முடிவுசெய்துசெயலபடுக.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...