ஞாயிறு, 19 நவம்பர், 2023

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்டில் இவர் செய்கின்ற ஒவ்வொரு சிறு சிறு செயலிற்கும் சரியாக செய்யவேண்டுமென அவரது பெற்றோர்கள் அந்த இளைஞரிடம் நச்சரி்ததுகொண்டேயிருப்பதால் அதிக விரக்தியடைந்துவந்தார்.
  இந்த நேர்காணலுக்காகஅவர் காத்திருந்தபோது, அவ்விளைஞர் , “இன்றைய நேர்காணலில் நான் வெற்றி பெற்றால்  நான் என் பெற்றோறுடன் சேர்ந்து வாழும் வீட்டிற்கு விடைபெற்று கொண்டு வந்து இந்நகரத்தில் குடியேறி விடுவேன். அவ்வாறு செய்துவிட்டால், நான் இனிஎப்போதும் என் பெற்றோர்கள் அடிக்கடி சிறு செயலுக்கும் நச்சரித்துகொண்டிருப்பதை நான்  கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. " என சிந்தித்தார்
தொடர்ந்து தன்னுடைய பெற்றோர்கள் தன்னிடம் கடிந்துகொள்ளும் தன்னுடைய சிறுசிறுசெயல்களைப் பற்றியும் அவர் சிந்தித்தார்.
அவர் குளியலறையிலிருந்து வெளியேவரும்போது அவரது தாயார் அந்த குளியலறைகதவை கதவை சரியாகமூடச் சொல்வார், மேலும் தண்ணீர் குழாய் சரியாக மூடப்பட்டிருக்கின்றதாவென குளியலறையிலிருந்துவெளியேறுவதற்கு  முன் சரிபார்த்துவிட்டு வரச்சொல்வார்க.
மேலும் அவரது தந்தை ஒவ்வொருஅறையிலிருந்து வெளியேறுமுன்  மின்விசிறி சுழன்றுகொண்டிருப்பதையும் அல்லது மின்விளக்குகள் எரி்ந்து கொண்டிருப்பதையும் கண்டிப்பாக அனைத்து அவைகளின் இயக்கத்தை நிறுத்திவிட்டு வெளியேறுமாறு கூறுவார்.
வீட்டிலுள்ள பொருட்களை அந்தந்த பொருட்களை அதனதன் இடத்தில் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவனுடைய தாய் எப்பொழுதும் அவனைத் திட்டிக்கொண்டே இருப்பாள்.
இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, "இதையெல்லாம் நான் ஏன் கேட்க வேண்டும், எனக்கு இந்த பணி கிடைத்தால், நான் நிச்சயமாக அவர்களுடன் சேர்ந்து வாழ்கின்ற  வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன்" என்று முடிவுசெய்துகொண்டிருந்தார்.
சுற்றும் முற்றும் பார்த்தபோது, அலுவலக வராண்டாவில் அவனைபோன்ற ஏராளமான  இளைஞர்கள் அந்த பணிக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக அமர்ந்து காத்துகொண்டிருந்ததை  கண்டார் .
அப்போது அவ்வலுவலகத்தில் வராண்டா விளக்கு  காலை பத்து மணியாகியும் அனைத்து நிறுத்தாமல் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதை கண்டார். தன்னுடைய பெற்றோர்களின் அறிவுரையை நினைவுக்கு கூர்ந்தவுடன் எழுந்து விளக்கை அனைத்து நிறுத்தினார்.
அப்போது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த குளிர்நீர் கருவியில் இருந்து தண்ணீர் சொட்டுவதை கண்டார். உடன் அவர் எழுந்துசென்று சரியாக குழாயை மூடி தண்ணீர் தொடர்ந்த கொட்டிக்கொண்டேயிருப்பதை நிறுத்தினார்.
இரண்டாவது தளத்தில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிப்பு செய்யப்பட்டந்தது.
எனவே அவ்விளைஞன் எழுந்து இரண்டாவது மாடிக்குச் செல்லும் போது, செல்லும் வழியில்  நாற்காலிகள் சிதறி  இருப்பதைக் கண்டு, அவைகளை வழியிலிருந்து  ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு இரண்டாவது மாடிக்குச் சென்றார்.
இப்போது,இரண்டாவது மாடியில் வெளியே காத்திருந்த இளைஞன், ஏற்கனவே  தன்னைபோன்ற அங்கு நேர்முகத்துவந்திருந்தவர்கள் நேர்முகத்தேர்விற்கான அறைக்குள்செல்வதையும் உடனடியாக வெளியே வந்துவிடவதையும் கண்டார்.
இதுகுறித்து விசாரித்தபோது, நேர்காணல் செய்பவர்கள் அவர்களிடம் கேள்வி எதுவும் கேட்கவில்லை என்பது தெரியவந்தது.
  அதாவது அவர்களிடமிருந்து தேவைையான ஆவணங்களைம்ட்டும் பெற்ற பிறகு,  உடன் அவர்களைத் திரும்பிச் செல்லும்படி கூறுகின்றனர்.
இளைஞனின்  எண் வந்தது. அவர் உள்ளே சென்று நேர்காணல் செய்பவரிடம் தனது ஆவணங்களை நீட்டினார். அவரது ஆவணங்களை சரிபார்த்த பிறகு, நேர்காணல் செய்பவர், கேள்வி எதுவும் கேட்காமல் "நீங்கள் எப்போது பணியில் சேருகிறீர்கள்?" என க்கூறியபோது
அவ்விளைஞன் மிகவும் ஆச்சரியத்துடன் அவர்களை திகைத்து பார்த்தபோது.
நேர்காணல் செய்பவர், “இன்று, நேர்காணல் செய்வதற்கு முன்பு , சிசிடிவியில் அனைவரின் நடத்தையையும் கவனித்தபோது யாரும் சரியாக செயல் படவில்லை என்பது தெரியவருகின்றது. எல்லோரும் வந்தார்கள் சென்றார்கள், ஆனால் யாரும்உங்களை போன்று எரிகின்ற  விளக்கை அனைத்து நிறுத்தவில்லை. குழாயில் தண்ணீர் சொட்டிகொண்டேயிருப்பதை நிறுத்தம்செய்யவில்லை சிதறிகிடந்த நாற்காலிகளை ஓரமாக நகர்த்தி வைக்கவில்லை உங்களிடம் அவைகளை சரிசெய்யவேண்டும் எனும்நல்ல  பழக்கவழக்கங்கள் உள்ளன.
சுய ஒழுக்கம் இல்லாத ஒருவர், எவ்வளவு, புத்திசாலியாக இருந்தாலும், நிர்வாகத்திலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியாது.எனக்கூறி வெற்றிகரமாக வழிகூட்டிஅனுப்பினர்
நேர்காணல் முடிந்ததும். அந்த இளைஞன் தங்களுடைய மிகவிரைவாக தங்களுடைய வீட்டிற்கு சென்றடைந்தார் .
 உடன் தான் அவர்களிடம்  அவ்வப்போது கோபத்துடன் எரிச்சலடைந்து பேசுவதற்கு மன்னிப்புக் கேட்டுகொண்டு இன்று தான் அவர்களுடைய அறிவுரையை பின்பற்றியதால்தான் தனக்கு ஒரு நல்ல பணி கிடைத்தது எனவும் தொடர்ந்து
அவர், “என் வாழ்க்கையில், சிறிய செயல்களில் நீங்கள் நச்சரித்ததால் நான் உங்களிடம் கற்றுக்கொண்ட பாடங்களைவிட எனது பட்டப்படிப்புக்கு எந்த மதிப்பும் இல்லை.
நான் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால், கல்வி மட்டுமல்ல, நல்ல பழக்கவழக்கங்களும்  விழுமியங்களும்  முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை  இதுவரையில் நீங்கள் என்னை திருத்தி செயல்படச்செய்யவைத்ததன்மூலம் இன்றுநான் அறிந்து கொண்டேன்."என நன்றி கூறினார்

சனி, 11 நவம்பர், 2023

அரசகுருவும் ஆடு மேய்ப்பவனும் - பேராசை கதை

 
ஒருமுறை போஜ் எனும் அரசனின் அரசவையில்  - பலிபீடத்தை போன்று ஒரு மனிதனால் வெளியே வர முடியாத கினறு எது?  என்ற ஒரு கேள்வி எழுந்தது. உடன் அரசன் அதற்கான மிகச்சரியானபதிலை அந்த அரசவையிருந்த உறுப்பினர்களில் யாராவதொருவர் கூறுமாறு கேட்டுக்கொண்டார் அதனை தொடர்ந்து அரசவையிலிருந்த உறுப்பினர்கள் பலரும் பல்வேறுவிதமான பதில்களை அளித்தனர் ஆனால் யாராலும் அந்தக்கேள்விக்கான மிகச்சரியான பதிலால் அரசனின் ஆர்வத்தை திருப்திப்படுத்த முடியவில்லை. இறுதியில், அவ்வரசன் அரசவை குருவிடம்  ஏழு நாட்களுக்குள் இந்த கேள்விக்கான மிகச்சரியான பதில் சொல்ல வேண்டும், இல்லையெனில் அவரிடமிருந்து அரசவை குரு என்ற பதவியும் நீக்கம் செய்யப்படும் அதனோடு அவர் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். அதனால்  அரசகுரு அந்த கேள்விக்கான சரியான பதிலைக் கண்டுபிடிக்க மிககடுமையாகமுயன்றார், ஆனால் ஆறு நாட்கள் கடந்தும், அவரால் பதிலெதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசன் கெடுவிதித்த ஏழாவது நாளன்றுஅந்த நாட்டின் அரசகுருவானவர் நம்மால் அரசன்கோரியவாறு அந்த கேள்விக்கான மிகச்சரியான பதிலை கண்டுபிடிக்கமுடியவில்லையே அடுத்து நாம் என்னசெய்வது எனமிகுந்த  மனவருத்தத்துடனும் அவநம்பிக்கையடனும் மனஆறுலிற்காக அருகிலிருந்த காட்டிற்குள் சென்றார், அவர்அந்தக் காட்டில் ஆடுமேய்ப்பவன் ஒருவனை கடந்து சென்று கொண்டிருந்தார். அந்த ஆடு மேய்ப்பவன் இவர் நம்முடைய நாட்டின் அரசகுருவாயிற்றே ஏன் மிகமனவருத்தத்துடன் காட்டிற்குள் சென்று கொண்டிருக்கின்றார் எனஅவரை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு, "ஐயா நீங்கள் இந்த நாட்டின் அரசகுருவல்லவா ,நீங்கள்  இந்தகாட்டிற்குள்  என்ன செய்யப்போகின்றீர்கள்? நீங்கள் ஏன் மிகமனவருத்தத்துடனும் இவ்வளவு சோகமாகவும் இருக்கின்றீர்கள் ?"  என வினவினான் அந்த ஆடு மேய்ப்பவனிடம் பேசிப் பயனில்லை என எண்ணிக் கொண்டு, அரசகுருவானவர் பதில் ஏதும் பேசாமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார். ஆடுமேய்ப்பவன்  மீண்டும், “ஐயா , உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கூறுங்கள். உங்களுடைய பிரச்சனைக்கான தீர்வு என்னிடம்கூட இருக்கலாம்.“  எனக் கோரினான் .அவ்வாறு அந்த காட்டிலிருந்த ஆடுமேய்ப்பவன் அவரிடம் கேட்டபோது அரசகுருவானவர் தன்னுடைய  பிரச்சனையைஅந்த ஆடுமேய்ப்பவனிடம் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தீங்கும் ஏற்படவழியில்லை அதனால் ஆடுமேய்ப்பவனிடம் தன்னுடய பிரச்சினயை கூறலாம் என முடிவுசெய்து ஏழுநாட்களுக்குமுன் அரசவையில் எழுந்த  கேள்வியும் அதற்கான பதிலை ஏழுநாட்களுக்குள் பதில் சொல்ல முடியாவிட்டால் தன்னுடைய அரசபதவி இழப்பதோடுமட்டமல்லாமல் தன்னை இந்த நாட்டைவிட்டு வெளியேறுமாறு அரசன் கட்டளையிட்டதையும் தன்னுடைய தற்போதைய கையறுநிலையை  பற்றியும் விவரமாக கூறினார் . இதைக் கேட்ட ஆடுமேய்ப்பவன்அரசகுருவிடம், "பரவாயில்லை ஐயா. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ஐயா. என்னிடம்  மந்திர கல் ஒன்று உள்ளது, அதைப் பயன்படுத்தினால் நீங்கள் எந்த வொரு பிரிச்சினைக்கும் தீர்வுகாண முடியும் விரும்பினால் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும்கூட கொண்டுவருமாறு செய்ய முடியும்" என்றார். ஆடுமேய்ப்பவனின் இந்த பதிலை கேட்டு அரசகுருமிகுந்த ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார். தொடர்ந்து ஆடுமேய்ப்பவன், "ஐயா இந்தக் கல்லால் நீங்கள் இனி பணத்திற்காக கவலைப்பட வேண்டியதில்லை, அதனை உங்களிடமிருந்து பெறுவதற்காக பலரும் உங்களைப் பின்தொடர்வார்கள், அதனை நான் உங்களுக்கு வழங்க முடியும், ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது." என கூறியதும் அரசகுருவானவர், "நிபந்தனை என்ன?" எனக்கேட்டார் உடன் ஆடு மேய்ப்பவன் , "ஐயா நீங்கள்முதலில் என் சீடனாக  மாறிசெயல்படவேண்டும்." எனக்கூறியபோது அரசகுருவானவர் முதலில், "பணத்திற்காக நான் ஏன் ஆடு மேய்ப்பவனின் சீடனாக ஆக வேண்டும்" என்று நினைத்தார். ஆனால் பின்னர் மந்திரக் கல்லின் திறனை பற்றி சிந்தித்து, அரசுகுரு ஒப்புக்கொண்டார். இப்போது, ஆடு மேய்ப்பவன், "என் சீடனாவதற்கு, முதலில் நீங்கள் என்னுடைய இந்த ஆடுகளில் இருந்த கரக்கின்றஆட்டுப்பாலை குடிக்க வேண்டும்" என்றார். அரச குரு, "ஆனால் ஒரு பிராமணர் ஆட்டுப்பாலை குடித்தால், அவனது புத்திசாலித்தனம் இல்லாமல் ஆகிவிடும், அதனால் நான் ஏன் ஆட்டுப்பாலை குடிக்கவேண்டும் எனவே நான் அந்த பாலை குடிக்க மாட்டேன்" என்றார். ஆடு மேய்ப்பவன், "அப்படியானால் சரிஐயா நீங்கள் போகலாம், நான் அந்த  மந்திரக் கல்லை உங்களுக்கு கொடுக்க மாட்டேன்" என்றான். அதன்பிறகு ஒரு நிமிடம் சிந்தித்த அரச குரு, "சரி, நான் நீ கூறியவாறு ஆட்டுப்பாலை குடிக்கின்றேன்" என்றார். ஆடு மேய்ப்பவன், ° சரி ஐயா. ஆனால் , முதலில் நான் ஆட்டுப் பாலை குடிப்பேன், பிறகு மிகுதியாக நான்வைத்திடுகின்ற ஆட்டுப் பாலைத்தான் நீங்கள் குடிக்க வேண்டும்." என்றான் அதனால் அரச குரு மிகுந்த கோபத்துடன் ,  ° ஆடு மேய்ப்பவனே நான் ஒரு பிரமான குலத்தினை சேர்ந்தவன் அவ்வாறு இருந்தும் இப்போது, நீ உன்னுடைய வரம்பை மீறுகிறாய். ஆடுமேய்ப்பவன் குடித்தது போகு மிகுதி இருக்கும் ஆட்டுப்பாலை ஒரு பிராமணர்  ஏன் குடிக்க வேண்டும்? அவ்வாறெல்லாம் செய்யமுடியாது நான் போகின்றேன்"  என பதிலளித்தார்
ஆடு மேய்ப்பவன் மீண்டும், "சரிஐயா அவ்வாறாயின் நீங்கள் போகலாம் ஐயா நான் அந்த  மந்திரக் கல்லை உங்களுக்கு கொடுக்க மாட்டேன்" என்றான்  . திரும்பவம் அந்த மந்திரக் கல்லைப் பற்றி சிந்தித்த அரச குரு ஆடுமேய்ப்பவன் கூறியவாறு செய்வதையும் ஒப்புக்கொண்டார். இப்போது ஆடு மேய்ப்பவன்  என் வீட்டின் முன் ஒரு இறந்த மனிதனின் மண்டை ஓடு திருவோடு போன்று இருக்கிறது. இப்போது நான் அந்த மண்டையோட்டிலான திருவோட்டில் ஆட்டின் பாலைகரந்து ஊற்றுகிவேன், பிறகு நான் அதை குடித்துவிட்டு, அதன் பிறகு அந்த மண்டை ஓட்டில் நான் குடித்தது போக மிகுதி உள்ள பாலையே நீங்கள் குடிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மந்திரக் கல்லை நான் உங்களுக்குத் தருவேன், இல்லையெனில் நீங்கள் உங்கள் வழியில் செல்லலாம்." எனமீண்டும் மற்றொரு நிபந்தனைவிதித்தான் .இதைக் கேட்ட அரச குரு நிறைய சிந்தித்து, °நான் ஒரு பிராமணர் அவ்வாறு செய்யக் கூடாதுதான் எனக்கு மிக சங்கடமாக இருக்கின்றது. இருந்தாலும் நான் நீகூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்படுகின்றேன் நான் இப்போது நீகூறியவாறு செய்யத்தயாராக இருக்கிறேன்." என்று ஏற்றுக்கொண்டு கூறினார் உடன் ஆடுமேய்ப்பவன் காட்டிற்கு அருகிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு ஆடுகளை ஓட்டிச்சென்று மண்டையோட்டிலான திருவோட்டில் ஆட்டுப்பாலைகரந்து தன்னுடைய வாய்வைத்து கொஞ்சம் பாலைகுடித்துவிட்டு மிகுதியை அரசகுருவிடம் கொடுத்தான் அரசகுருவும் தான் ஏற்றுக்கொண்ட நிபந்தனையின்படி ஆடுமேய்ப்பவன் வாய்வைத்து குடித்தது போக திருவோட்டில் மிகுதி இருந்த ஆட்டின் பாலை குடித்தார் அதனை தொடர்ந்து  ஆடு மேய்ப்பவன் , " உங்களிடம் பதில் கண்டுபிடித்துகூறுமாறு கோரிய  கேள்விக்கான பதில். பேராசை. ஆகும் அந்த பேராசையில்  ஒரு மனிதன் விழுந்தால், அவன் வெளியே வரவே முடியாது. அவ்வாறே அரசகுருவான நீங்களும் அந்த மந்திரக் கல்லைப் பெறவேண்டும் என்ற பேராசை எனும் கிணற்றில் விழுந்துவிட்டீர்கள் இதிலிருந்து உங்களால் தப்பித்து வெளியேறவே முடியாது."  என நீண்ட விளக்கமளித்தான்.

சனி, 4 நவம்பர், 2023

மகனின் வீட்டுப்பாடத்தை படித்தலால்- தந்தையின் சிந்தனையில் மாற்றம்

 ஒரு மனிதன் வீட்டுச் செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்க வேண்டியதாலும், முழுக் குடும்பத்தின் பொறுப்பும் தன் மீது இருப்பதாலும், உறவினர்களின் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கு மிமுக்கிய நிகழ்வுகளுக்குச் சென்று வருவதாலும் எப்போதும் எரிச்சலுடனும் பதட்டத்துடனும் அதிக கவலைப்பட்டுக் கொண்டு மிருப்பார். அதனோடு இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டு, அடிக்கடி மனம் வருந்துவதும், தங்களுடைய பிள்ளைகளைக் கடிந்து கொள்வதும், ஏதாவதொரு செயலுத்துக்காக மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வதும் அவருடைய வழக்கமான செயலாகிவிட்டது. ஒரு நாள் அவர்களுடைய மகன் அவரிடம் வந்து, “அப்பா, தயவு செய்து என் வீட்டுப்பாடம் செய்வதற்கு எனக்குஉதவுங்கள்” என்றான். அதனை  கேட்டவுடன் அதிக  எரிச்சலுடனும் கோபத்துடனும் தங்களுடைய  மகனைத் திட்டி விரட்டினார். ஆனால் சிறிது நேரம்கழித்து  அவரது கோபம் தணிந்தபின்னர் அவர் மகனின் அறைக்குச் சென்று பார்த்தபோது, வீட்டுப்பாடத்தினை  தன்னுடைய கையில் வைத்துகொண்டே  மகன் தூங்கிக் கொண்டிருந்தான். அவர்  மகனின் கைகளில் இருந்து எடுத்துப் பார்த்துவிட்டு, திரும்ப அதைத் திரும்பகீழே வைத்திடும் போது.. மகனுடய வீட்டுப்பாடத்தின் தலைப்பைப் படித்தார். அந்த தலைப்பானது- முதலில் நமக்குப் பிடிக்காத செயல்கள், ஆனால் அவை நல்லவை என்று பின்னர் உணருங்கள் என்றிருந்தது. தங்களுடைய மகன் இவ்வாறான  தலைப்பில் ஒரு பத்தி எழுதி இருப்பதை கண்டு அவர்மிகவும் ஆர்வத்தால்  மகன்  எழுதியதைப் படிக்க ஆரம்பித்தார்: "எனது இறுதித் தேர்வுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், ஏனெனில் அவை பள்ளிக்கூடம் செல்லத் துவங்கும்போது இல்லை, ஆனால் இந்த தேர்வுகளுக்கு  பிறகு மிக நீண்ட விடுமுறைகள் உள்ளன அதனால் நான் மிகமகிழ்ச்சியடைகின்றேன். அதேபோன்றுமோசமான  மருந்துகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனென்றால் அவை முதலில் கசப்பாக இருந்தாலும் அவை என் நோயைக் குணப்படுத்துகின்றன. மேலும் அதேபோன்று என்னை எரிச்சலூட்டும் ஆனால் தினமும் என்னை  காலையில் எழுப்பி நான் தினமும் அன்றன்றையை வீட்டுப்பாடங்களை எழுதவும் படிக்கவும் உதவுகின்ற கடிகாரத்தின்அலாரத்திற்கு நான்  கூறுகிறேன். அவ்வாறே அத்தகைய நல்ல தந்தையை எனக்கு வழங்கியமைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனென்றால் அவர் திட்டுவது முதலில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது, ஆனால் அவர் எனக்கு பொம்மைகளைவாங்கி  கொண்டு வருகிறார், எனக்கு இனிப்புகளையும் தின்பண்டங்களையும்வாங்கி  கொண்டு வருகிறார், தினமும் என்னை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்." என்றவாறு இருந்த மகனின் வீட்டுப் பாடத்தைப் படித்துவிட்டு, மகன் எழுதிய சொற்கள் அவர் மனதில் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருந்தன. அதன்முடிவில் அம்மனிதன் ஒரு சிறந்த கருத்தினை உணர்ந்துகொண்டார். சிறிது நேரம் அமர்ந்து தன்னுடைய மனவருத்தத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். வீட்டின் அனைத்து செலவுகளையும் நான் ஏற்க வேண்டும், அதாவது எனக்கு ஒரு வீடு இருக்கிறது,  வீடு கூட இல்லாதவர்களை விட நான் சிறந்த நிலையில் இருக்கிறேன். முழு குடும்பத்தின் பொறுப்பையும் நான் ஏற்க வேண்டும் என்றால் எனக்கு ஒரு குடும்பம், மனைவி, குழந்தைகள் உள்ளனர் , குடும்பம் இல்லாமல் இந்த உலகில் தனியாக இருப்பவர்களை விட நான் மிகவும் நற்பேறு அடைந்தவன்..
என் நண்பர்களும் உறவினர்களும் தொடர்ந்து என்னுடைய வீட்டிற்கு வருகிறார்கள் நானும் அவ்வாறேஅவர்களுடைய வீட்டிற்கு சென்று வருகின்றேன், அதாவது எனக்கு ஒரு சிறந்த சமூக நிலைஉள்ளது, அதனால் என் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் எனக்கு ஆதரவாக நண்பர்களும் உறவினர்களும்இருக்கிறார்கள். . இதனைஎண்ணி நான் மிகவும் வருந்துவது தவறு,  என இதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில், அவருடைய துன்பங்கள், கவலைகள் எல்லாம் மறைந்தோடிச்சென்றன. அவரது சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது. மகனின் நெற்றியில் முத்தமிட்டு மகனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தார்
கற்றல்: நமக்கு முன்னால் எந்த பிரச்சனைகள் இருந்தாலும், எதிர்மறையான கண்ணோட்டத்தில் அவற்றைப் பார்க்கும் வரை, நாம் கவலையுடனும் எரிச்சலுடனும் இருப்போம். ஆனால் அதே சூழ்நிலையை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்த்தவுடன், நமது கண்ணோட்டம், நமது சிந்தனை நம் வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடும்.



பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...