ஞாயிறு, 27 நவம்பர், 2022

பெண்ணின் புகாரும் விமானபணிப்பெண்ணின் பதிலும்

  ஒரு அழகான பெண் புறப்பட தயாராக இருந்த ஒரு விமானத்திற்குள் நுழைந்து தனது இருக்கையைத் தேடி சுற்றிப் பார்த்தாள். கைகள் இல்லாத ஒரு நபருக்கு அருகில் அவள் இருக்கை இருப்பதைக் கண்டாள். அந்த ஊனமுற்றவரின் அருகில் உட்காரஅந்த பெண் தயங்கினாள். அவள் விமானபணிப்பெண்ணை அருகில் அழைத்து, “இந்த இருக்கையில் நான் வசதியாக உட்கார்ந்து என்னால்  பயணிக்க முடியாது” என்றாள். உடன் விமானபணிப்பெண் “ஏன்“, என வினவியபோது,அந்தப் பெண் , “ஏனெனில் என்னுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவருக்கு இரண்டு கைகளும் இல்லை, அத்தகையவர்களின் அருகில் நான் அமர்ந்து பயணிக்க முடியாது“. என பதிலளித்தார். மேலும் தொடர்ந்து,  தனது இருக்கையை வேறு இடத்திற்கு மாற்றித்தருமாறு விமான பணிப்பெண்ணிடம் கோரிக்கை விடுத்தார். நன்கு படித்த  கண்ணியமான ஒரு பெண்ணிடம் இருந்து இவ்வாறான கோரிக்கையக் கேட்டு விமான பணிப்பெண் திகைத்துப் போனார். இருந்தபோதிலும் பயனாளரின் கோரிக்கையை ஏற்கவேண்டியது விமான சேவை நிறுவனத்தின் அடிப்படை கடமையல்லவா அதனால் அந்த விமான பணிப்பெண் வேறு காலி இருக்கைகள் ஏதேனும்இருக்கின்றதா என தேடி பார்த்தார் ஆனால் காலி இருக்கை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் விமான பணிப்பெண்  அந்த பெண்பயனியிடம், “அம்மா, இந்த சாதாரண வகுப்பு இருக்கையில் காலி இருக்கை எதுவும்இல்லை, ஆனால் இந்தவிமானத்தில் பயனம் மேற்கொள்ளும்  பயணிகளின் வசதியைக் கவனிப்பது எங்கள் பொறுப்பு. அதனால் இந்த பிரச்சினையை தீர்வுசெய்வதற்காக நான் விமான ஓட்டியிடம் சென்று அடுத்து என்னசெய்யவேண்டும் என கேட்டுவருகிறேன். அதுவரை நீங்கள்பொறுமையாக இருங்கள்.." எனக்கூறிவிட்டு விமானபணிப்பெண் விமான ஓட்டியை சந்திக்க கிளம்பிசென்றாள். சிறிது நேரம் கழித்து, அப்பணிப்பெண் மீண்டும் வந்து அந்த பெண்பயனியிடம் வந்து, “அம்மா! உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறேன். இந்த முழு விமானத்திலும், ஒரு இருக்கை மட்டுமே காலியாக உள்ளது, ஆனால் அது முதல் வகுப்பில் உள்ளது. நான் எங்கள் விமான குழுவின் தலைவரிடம் பேசினேன், எங்கள் நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக , சாதாரண வகுப்பு  இருக்கையில் பயனம் செய்திடும் ஒருவரை முதல் வகுப்பில் பயணிக்க அனுமதிக்கலாம் எனும் ஒரு அசாதாரண முடிவை எடுத்தோம்." என கூறியதும் அந்த அழகான பெண் மிகவும் மகிழ்ச்சியுடன் “மிக்க மகிழ்ச்சி இப்போதே நான் அந்த இருக்கைக்கு செல்கின்றேன்" என தனது எதிர்வினையை வெளிப்படுத்தி சொல்ல முயற்சிக்குமுன்.அந்த விமானபணிப்பெண் “மன்னிக்கவும் அம்மா சிறிது பொறுங்கள் நான்  முழுவதையும் கூறி முடிக்கவில்லை" எனக் கூறிக்கொண்டே இரண்டு கைகளையும் இழந்த ஊனமுற்ற நபரை நோக்கி  அவரிடம் பணிவுடன், “ஐயா, உங்களால் முதல் வகுப்பில் பயனம் செய்ய முடியுமா..? ஏனென்றால், ஒரு முரட்டுத்தனமான பயணியுடன் பயணம் செய்து நீங்கள் தொந்தரவு அடைவதை நாங்கள் விரும்பவில்லை". என கேட்டுக்கொண்டார் இந்தசெய்தியைக் கேட்ட மற்ற பயணிகள் அனைவரும் கைதட்டி இந்த முடிவை வரவேற்றனர். இப்போது அந்த அழகிய பெண் தன்னுடைய தலைகுனிந்து கொண்டாள்  அவமானத்தால் தன்னுடைய தலையை உயர்த்த முடியவில்லை. அப்போது ஊனமுற்றவர் எழுந்து, “நான் ஒரு முன்னாள் இராணுவ வீரன், இராணுவ நடவடிக்கையின் போது வெடிகுண்டு வெடித்ததில் எனது இரு கைகளையும் இழந்தேன். முதலில், இந்தப் பெண்ணின் சொற்களைக் கேட்டபோது, நான் மனம் உடைந்து போனேன், அப்போது  — இப்படிப்பட்டவர்களின் பாதுகாப்பிற்காக நான் என் உயிரைப் பணயம் வைத்தேன், என் கைகளை இழந்தேன்..!! என மிகவருத்தப்ட்டேன் ஆனால், இந்த விமான ஊழியர்களின் முடிவை கோட்டபோது, என்னுடையநாட்டிற்கும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் நான் என் கைகளை இழந்தது சரிதான் என்று என்னை நினைத்து பெருமைப்படுகிறேன்".. என்று கூறிவிட்டு, முதல் வகுப்பில் பயனம் செய்திடச் சென்றார், அந்த அழகான பெண் மிகவும் அவமானத்தில் தலைகுனிந்தபடி தனது இருக்கையில்  அமர்ந்தாள்.

திங்கள், 21 நவம்பர், 2022

வங்கி மேலாளருடன் புத்திசாலி மூதாட்டியின் பந்தயம்!

 

ஒருமுறை ஒரு வயதான பெண்மணி நகரத்தின் மிகப்பெரிய வங்கிக்கு வந்து, தான் வங்கியில் கொஞ்சம் பணம் வைப்பீடு செய்ய விரும்புவதாகக் கூறினார். அவ்வங்கியின் ஊழியர்கள் எவ்வளவு தொகை என்று கேட்டபோது, வயதான பெண்மணி சுமார் 10 இலட்சம் ரூபாயைவைப்பீடு செய்ய விரும்புவதாக பதிலளித்தார், ஆனால் தனது பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் வங்கி மேலாளரைச் சந்திக்க விரும்புவதாக கூறினார். உடன் அந்த வங்கியின் மேலாளர் அந்த வயதான பெண்மணியின் அருகில் வந்து அவரை தன்னுடைய அறைக்கு அழைத்து சென்று உட்காரவைத்து அவது சந்தேகத்தினை தீர்வு செய்ய தான் தயாராகஇருப்பதாக கூறினார். பிறகு பேசிக் கொண்டிருக்கும் போது. "ரூபாய்10 இலட்சம் என்பது மிகப்பெரிய தொகை ஆயிற்றே . நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என வங்கி மேலாளர் வினவினார் உடன் வயதான பெண்மணி , "தனிப்பட்ட வகையில் சிறப்பான தொழில் எதுவும் இல்லை, நான்ஒரு பந்தயம் கட்டினேன் அந்த பந்தயத்தில் வெற்றிபெற்றுவிட்டேன் அதற்கானத் வெற்றித்தொகைதான் இந்த பத்து இலட்ச ரூபாயகும்." என விளக்கமளித்தவுடன் .வியந்து போன வங்கி மேலாளர், "பந்தயம் கட்டி இவ்வளவு தொகை சம்பாதித்தீர்களா!! மிகவும் ஆச்சரியம" என வியந்து கூறினார். அதற்கு அந்த மூதாட்டி, "அதெல்லாம் பெரிய செயல் ன்றுமில்ல.. இப்போதக் கூட, ந்த வங்கியின் மேலாளரான ங்களின் தலையில் விக் வைத்திருக்கின்ீர்கள என்று நான் ஐந்து இலட்ச ரூபாய்க்கு பந்தயம் கட்டுவேன்" என்றாள். மேலாளர் சிரித்துக்கொண்டே, "இல்லை.அம்மா. நான் இன்னும் இளமையாக இருக்கிறேன், விக் எதுவம் அணியவில்லை." என பதில் கூறினார் தொடர்ந்து மேலாளர் மூதாட்டியிடம், "நேற்று வழக்குரைஞருடன் எதற்கு பந்தயம் கட்டினீர்கள்?" என வினவினார் அதற்கு அந்த மூதாட்டி, "ஒன்றுமில்லை. அவர் பந்தயத்தில் தோற்றார். நேற்று, நான் நாளை காலை 10 மணிக்கு நம்முடைய நகரத்தின் மிகப்பெரிய வங்கியின் மேலாளரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துவிடுவேன். என அவருடன் 5 லட்சம் ரூபாய் பந்தயம் கட்டினேன், அவ்வாறு இழுத்துவிட்டால் எனக்கு அந்த பந்தய தொகை 5 லட்சம் ரூபாய அவர் தந்துவிடவேண்டும் இல்லையெனில் நான் அவருக்கு 5 லட்சம் ரூபாய் தந்துவிடவேண்டும் என பந்தயம் கட்டினேன் எனஅந்த மூதாட்டி கூறினார் தொடர்ந்து அந்தமூதாட்டி, "வ்வாறு ஏன் பந்தயம் கட்டக்கூடாது? இப்போது கூட உங்களிடம் நான் ஒரு பந்தயம் கட்டுகின்றேன் உங்களுடைய தலைமுடி விக்தான் அதை நான் என்னுடைய கையால்பிடித்தி இழுப்பேன் கையோடு வந்துவிட்டால் அது விக்ஆகும் நான் ரூபாய்ஐந்து இலட்சம் கொடுத்துவிடுகின்றேன் கையோடு வராவிட்டால் நீஙகள் எனக்கு ரூபாய் ஐந்து இலட்சம் கொடுத்துவிடவேண்டும் " எனக்கூறினாள் .அந்த வயதான பெண்மணிக்கு பைத்தியம் பிடித்திருப்பதாகவும், நான் விக் அணிவதில்லை என்று தெரிந்ததால், அவள் தனக்கு ஐந்த லட்ச ரூபாய் தரவேண்டியிருக்கும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டுதான் பந்தயம் கட்டத் தயாராக இருப்பதாகவும் மேலாளர் உறுதி கூறினார். நான் விக் அணிவதில்லை என்று அந்த மூதாட்டியிடம் கூறியும், இன்னும் அவள் நம்பமால் பந்தயம் கட்ட விரும்புகிறாள், பிறகு ஏன் அவ்வாறான சூழ்நிலை நான் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது.. அது எளிதான பணமாக எனக்கு வந்து சேர்ந்துவிடுமே. ரூபாய்ஐந்து லட்சம் பந்தயத்திற்கு வங்கி மேலாளர் ஒப்புக்கொண்டார். வயதான பெண்மணி, "ரூபாய் ஐந்து லட்சம் என்பது பெரியத்தொகை என்பதால், நாளைக் காலை சரியாக 10 மணிக்கு என் வழக்குரைஞருடன் வருவேன், பந்தய முடிவு அவர் முன் முடிவு செய்யப்படும்" என்றாள். வங்கி மேலாளர், "நிச்சயம்" என்று பதிலளித்தார். வயதான பெண்மணி அந்த வங்கியின் மேலாளரின் அறையைவிட்ட வெளியேறினார். வங்கி மேலாளரால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. ஐந்த இலட்ச ரூபாயையும் அந்த மூதாட்டியையும் நினைத்துக் கொண்டே இருந்தார். அடுத்த நாள் காலை மிகச்சரியாக 10 மணிக்கு மூதாட்டி தன் வழக்கறிஞருடன் மேலாளரின் அறையை அடைந்து மேலாளரிடம், "நீங்கள் தயாரா?" என வினவினார் உடன் மேலாளர் , "கண்டிப்பாக.." என பதிலளித்தார் வயதான பெண்மணி, "ன்னுடைய வழக்கறிஞரும் இங்கு இருப்பதால், தொகை பெரியது. எனவே நீங்கள் விக் அணியவில்லை என்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். உங்கள் தலை முடிகளை நானே இழுத்து பார்க்கிறேன்." எனக்கூறினார். உடன் அந்த வங்கி மேலாளர் ஒரு கணம் யோசித்துவிட்டு, “கண்டிப்பா.. ரூபாய்ஐந்தஇலட்சத்துக்கு அப்புறம்வேறு என்ன செய்வது ” என்று பதிலளித்தார். அந்த மூதாட்டி வங்கியின் மேலாளரின் அருகில் வந்து அவருடைய தலைமுடியைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள் பெண்மணி... அதே சமயம் மூதாட்டியுடன் வந்த வக்கீல் அறையின் சுவரில் தலையை இடித்துகொள்ள ஆரம்பித்தார். இதைப் பார்த்த வங்கியின் மேலாளர் மூதாட்டியிடம், “வழக்கறிஞருக்கு என்ன நடந்தது?” என்று கேட்டார். வயதான பெண்மணி , "ஒன்றுமில்லை, அவர் தனது பந்தயத்தில் தோல்வியடைந்தார், நேற்று நான் அவருடன் பந்தயம் கட்டினேன், இன்று காலை 10 மணிக்கு இந்த நகரத்தின் மிகப்பெரிய வங்கியின் மேலாளரின் முடியைப் பிடித்து இழுப்பேன் அவ்வாறு இழுத்துவிட்டால் எனக்கு 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என பந்தயம் கட்டினேன் அதன்படி நான் செய்துவிட்டேன் அதனால் அவர் எனக்கு ரூபாய் ஐந்து இலட்சம் தரவேண்டும் அதேபோன்று நீங்களும் தோற்றுவிட்டீரகள் எனக்கு ரூபாய் ஐந்து இலட்சம் தரவேண்டும் ஆக மொத்தம் ரூபாய் பத்துஇலட்சம் தொகையை என்னுடைய பெயரில் உங்கள் வங்கியில் வைப்பீடாக ஆக்கிவிடுங்கள்", என்றார் அந்த மூதாட்டி .


ஞாயிறு, 13 நவம்பர், 2022

ஒரு பணக்காரர் வழங்கும் இலவச உணவு சேவை

 

வடஇந்தியாவில் பணக்காரர் ஒருவர் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார்.அவரிடத்தில் ஏழைகளுக்கு தொண்டு செய்யும் உணர்வு மிகவும் குறைவாக இருந்தது, ஆனாலும் தன்னை தாராள மனப்பான்மை கொண்டவர் எனவும் இரக்க குணம் கொண்டவர என்றும் சமூகம் பாராட்ட வேண்டும் என்பதற்காக அவர் ஏழைகளுக்கு உதவுவதற்கு முன்வந்தார். அவர்ணவு பொருட்களின் மொத்த வியாபாரம் செய்து வந்தார். தனால் தன்னுடைய வியாபார நடவடிக்கையின் போது மாதக் கடைசியில், விற்காமல் வீணாக போன தரமற்ற உணவுப்பொருட்களை, தரமம் செய்வது என்ற பெயரில், கோதுமையை கோதுமை மாவாக தயாரித்து சப்பாத்தி செய்ய, இலவச உணவு வழங்கிடும் இடத்திற்கு அனுப்பி விடுவார். அந்த பணக்காரர் வழங்கும் உணவு சேவையில் பெரும்பாலும் வீணாக போன தரமற்ற கோதுமையிலிருந்து தயார்செய்த மாவினால் செய்யப்பட்ட சப்பாத்திகள் பசியுடன் இருக்கின்ற ஏழைமக்களுக்குக் கிடைத்தன. இவ்வாறான சூழலில் பணக்காரருடைய மகனுக்கு திருமணம் நடந்தது.பணக்காரரின் புதிய மருமகள் பணக்காரரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தா். அவள் மிகவும் கண்ணியமாகவும், அக்கறையுடனும் அனைவரையும் அரவணைத்து செல்லும் குணத்துடனும் இருந்தாள் .பணக்காரரின் வீட்டிற்கு வந்தவுடன் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குகின்ற இடத்திற்கு வீணாக போகும் தரமற்ற கோதுமை அனுப்பப்படுவதை பற்றி அறிந்ததும், ஏழைகளுககு தரமம் என்ற பெயரில் தரமற்ற கோதுமையைக் கொடுப்பது தவறு என்று அவள் மிகவும் வருந்தினாள். அதனால் ஏழைகளின் பசியை போக்குவதற்கு தரமான கோதுமை அனுப்புவதை உறுதிசெய்திட விரும்பினாள் .பணக்காரனின் வீட்டில் பல்வேறு பணிகளையும் செய்வதற்கு நிறைய வேலைக்காரர்கள் இருந்தார்கள், ஆனால் புதிய மருமகள் தங்களுடைய வீட்டில் உணவு தயாரிக்கும் பொறுப்பை தானே ஏற்க முடிவு செய்தார். அதனால் முதல் நாளே, ஏழைகளுக்கும் இலவச உணவு வழங்கும் இடத்தில் பயன்படுத்தப்பட்ட அதே கோதுமை மாவைப் பயன்படுத்தி சப்பாத்தி செய்தார் பணக்காரரின் மருமகள். காலை உணவினை சாப்பிட அந்த பணக்காரர் அமர்ந்ததும், அவது தட்டில் ஏழைகளுக்கு வழங்கும் தரமற்ற கோதுமை மாவினால் தயார செய்த அதேபோன்ற சப்பாத்தியை பரிமாறினாள். தரமற்ற கோதுமை மாவினால் தயார்செய்த சப்பாத்தியைப் உண்பதற்காக வாயில் வைத்து தின்றபோது நன்றாக இல்லாததை கண்டு அதனை கீழேதுப்பிவிட்டு , ‘நம்முடைய வீட்டில் சப்பாத்தி செய்ய நல்ல கோதுமை மாவுதானே இருக்கும்.. அப்புறம் எதுக்கு இப்படி தரமற்ற மாவில் சப்பாத்தி செய்தீர்கள. என வினவினார் அதற்கு மருமகள், “மாமா, இது நீங்கள் ஏழைகளுக்கு இலவச உணவுவழங்குவதற்காக அனுப்பு கின்ற கோதுமை மாவில் செய்தது .” எனக்கூறினார் உடன் பணக்காரர் குழப்பமடைந்து, “எனக்கு ஒன்றும் புரியவில்லையே..” என்றாள். அதற்கு மருமகள், “மாமா! முற்காலத்தில் நாம் என்ன செய்தோமோ, அதையே இப்போது அடைவோம் அல்லவா, அதேபோன்று நாம் இப்போது எதைச் செய்கிறோமோ, அதுவே நம்முடைய வருங்காலத்திலும் கிடைக்கும். அதனால் நம்முடைய இலவச உணவு வழங்கும் இடத்தில், இந்த தரமற்ற கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் இவ்விடத்தை விட்டுச் செல்லும் போது இந்த மாவில் செய்த சப்பாத்தியை மட்டுமே உண்டு வாழ வேண்டும். அதனால்தான், இனிமேல் இதை நீங்கள உண்ணும் பழக்கம் ஏற்பட்டால், பிற்காலத்தில் துன்பம் குறையும் என்று நினைத்தேன்.“ என சமாதானம் கூறினாள். உடன்வடஇந்திய பணக்காரர் தன் தவறை உணர்ந்தார். மருமகளிடம் மன்னிப்பு கேட்டு தரமற்ற கோதுமை மாவை அன்றே தூக்கி எறிந்தார். அப்போதிருந்து, ஏழைக்கும் பசியுடன் வருகின்ற பொதுமக்களுக்கும் தரமுடைய புதிய கோதுமைமாவில் செய்யப்பட்ட சப்பாத்தியைப் பெறத் தொடங்கினர்.

கற்றல்: உதவி செய்யும்போது மக்கள் என்னைப் பாராட்ட வேண்டும், கைதட்ட வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது. மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன்  செய்ய வேண்டும். ஒரு கையால் உதவிசெய்திடும்போது இன்னொரு கைக்குக்கூட தெரியாத அளவுக்கு ரகசியமாக இருக்க வேண்டும் எனக் கூறுவது உண்டு.


திங்கள், 7 நவம்பர், 2022

ஏன் மீண்டும் முயற்சிக்க வேண்டும்?

 

  தோல்வி பற்றிய ஆசிரியர்அறிவுரைராமு என்பவர் மிகுந்த ஆர்வத்துடன் புதியதாக ஒரு தொழிலைத் துவங்கினார், ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, அவரது வணிகம் வீழ்ச்சியடைந்தது. அதன் பின் சிறிது நாட்கள் கடந்தும் ராமு வேறு தொழில் எதுவும் துவங்கவில்லை.  

 அவரது நிலைமையை அறிந்த அவரது ஆசிரியர் அவரை தங்களுடைய வீட்டிற்கு அழைத்தார். ஆசிரியர் ராமுவை வரவேற்று, இருரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தபின் தற்போதைய நிலவரம் கூறித்து விவாதித்தனர். அப்போது ஆசிரியர், “நீ ஏன் வேறு தொழில் எதாவது செய்யக் கூடாது?” என்று கேட்டார். அதற்கு ராமு, “யா நான் ஏற்கனவே புதியதாக ஒரு தொழில் தொடங்கினேன். நான் அந்த தொழிலிறகாக மிகவும் கடினமாக உழைத்தேன், அந்த தொழிலிற்ாக எனது உடமைகளை அனைத்தையும் இழந்தேன். நான் நாள்முழுக்க ஓய்வெடுக்காமல் 24மணிநேரமும் வாரம் முழுவதும் வாரவிடுப்பெதுவும் எடுக்காமல் 7 நாட்களும் என்னுடைய புதிய தொழிலிற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டேன், ஆனால் அந்த வணிகம் தோல்வியடைந்து விட்டது", எனக்கூறினார்.  

  உடன் ஆசிரியர், "ஆனால் அதுதான் வாழ்க்கையின் உண்மையான களநிலவரமாகும், சில நேரங்களில் நாம் செய்திடும் தொழிலில் வெற்றி கிடைக்கும், வேறு சில நேரங்களில் தோல்விதான் கிடைக்கும் , தொழிலில் வெற்றியும் தோல்வியும் இயற்கையாக நடப்பதுதான் அதனால் நாம் துவங்கிடும் தொழிலை நிறுத்திவிடவேண்டும் என்று அர்த்தமல்ல" என்று ஆறுதல் கூற முயன்றார்.

   உடன் இராமு "வெற்றியை உறுதி செய்ய முடியாத போது, அந்த தொழிலை செய்து என்ன பயன்.", சற்று எரிச்சலுடன் பதில் கேள்வி கேட்டார்

   தொடர்ந்து ஆசிரியர் ராமுவை தன்னுடைய வீட்டுதோட்டத்தின் ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று, செத்துபோன தக்காளிச் செடியை காண்பித், “இதைப் பார்..” என்றார்

    ராமு குழம்பிப்போய், “தக்காளிசெடிகளெல்லாம் செத்து போய்விட்ட, வைகளினால் பயனேதுமில்லை. வற்றை ஏன் என்னிடம் காண்பிக்கின்றீ்ர்கள்?” என மிகவும் எரிச்சலுடன் கூறினார் 

   அதற்கு ஆசிரியர், “நான் வைகளுக்கான விதையை விதைத்தேன், போதுமான தண்ணீர் பாய்ச்சினேன், உரமிட்டேன், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தேன். நான் மிகவும் கவனமுடன் பார்த்து வந்தேன் ஆனாலும்வை இறந்துவிட்ட.” ஆசிரியர் சற்றுநேரம் நிறுத்தியபின், "நம்முடைய கடமை பணி செய்வது ஒன்றே.. நீ எவ்வளவு முயற்சி செய்து அயராது பாடுபட்டாலும், இறுதியில் என்ன நடக்கும் என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது, ன்னுடைய கையில் உள்ள நீசெய்திடும் பணியை மட்டுமே உன்னால் கட்டுப்படுத்த முடியும், மீதமுள்ளசெயல்கள் மற்றவர்களால் நடக்கும் என விட்டுவிடுக " எனக்கூறினார்

  .உடன் ராமு, “ஆனால் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்றால், எதையும் முயற்சி செய்து என்ன பயன்?” என சந்தேகம் எழுப்பினார். தொடர்ந்து ஆசிரியர் , “அவ்வாறு நினைத்துக்கொண்டு பலர் வாழ்க்கையில் பெரிதாக எதையும் செய்ய முயல்வதில்லை..”எனக்கூறினார்.

  உடன் இராமுஅப்படி நினைப்பதில் என்ன தவறு. இவ்வளவு கடின உழைப்பு, இவ்வளவு பணம், இவ்வளவு நேரம் செலவழித்த பிறகும், வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை எனில், இவ்வளவு செய்து என்ன பயன்..” என்று சொல்லிவிட்டு ராமு தங்களுடைய வீட்டிற்கு கிளம்பதயாராக இருந்தார்.

  உடன ஆசிரியர் இராமு புறப்படுவதை தடுத்து நிறுத்தி, “நீ கிளம்புமுன், உனக்கு இன்னொரு செயலை காண்பிக்க விழைகின்றேன்..” என்று கூறியவாறு . ராமுவை அருகிலிருந்த வேறொரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று காண்பித்தார்

  அங்கே பெரிய சிவப்பு தக்காளி பழங்கள் கொத்தாக காய்த்து கிடந்தன. உடன் இராமு, " வற்றை ஏன் என்னிடம் காண்பிக்கின்றீர்கள்?" என மீண்டும் எரிச்சலுடன் வினவியபோது ஆசிரியர், "நீ பார்க்கும் இந்த தோட்டத்தில் முந்தைய தோட்டத்தில் நன்கு பாடுபட்டும் இறந்துபோய்விட்டதே எனவேறு செடிகளை வளர்க்காமல் . நான் நிறுத்தவில்லை, அந்த தோட்டத்தில் இறந்த செடிகளைப் பார்த்தேன், பின்னர் வேறு புதியவிதைகளை வாங்கி நான் மீண்டும் இந்த தோட்டத்தில் புதிய விதைகளை விதைத்து அவற்றைப் பராமரித்தேன். அவை இந்த தோட்டத்தில் வளர்ந்த. ப்போது இந்த தோட்டத்தில் நன்கு காய்த்து தொங்குகின்றன

   தேபோன்று, நீ தோல்வி ஏற்பட்டது என துவண்டுவிடாமல் தொடர்ந்து வேறு சரியான செயல்களைச் செய்தால், ன்னுடைய வெற்றிக்கான வாய்ப்புகள் பெரிதும் அதிகரிக்கும். ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான ஒரு படி என முடிவுசெய்து தொடர்ந்து முயன்றால் தொழிலில் வெற்றி பெறமுடியும் .ஆனால் ஒன்று அல்லது இரண்டு தோல்விகளால் துவண்டு தொழில் எதையும் செய்வதில்லை என முடிவெடுத்தால், வாழ்க்கை பயனத்தில் க்கு எந்த வெற்றியும் கிடைக்காது."என மிகநீண்ட விளக்கமளித்தார் 

  ராம இப்போது வெற்றிக்கான இரகசியத்தை தன்னுடைய ஆசிரியரிடமிருந்து தெரிந்து கொணடார், அவர் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டார், மேலும் அவர் வேறொரு புதிய தொழிலை துவங்கிடும் உத்வேகத்துடன் வெளியேறினார்.

கற்றல். ராமுவைப் போன்றே, பலரும் தாங்கள் முயற்சி செய்யாமல் இருப்பதற்கு தங்கள் தோல்வியை ஒரு காரணமாகக் காண்பிக்கிறார்கள். நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மைதான். ஆனால், தொடர்ந்து வெற்றி பெற முயற்சிப்பவர்களுக்கு இன்று இல்லாவிட்டாலும் நாளை வெற்றி கிடைக்கும் என்பதுதான் உண்மையான களநிலவரமாகும்..அவ்வாசிரியர் அறிவுரை கூறுவது போன்று - ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான ஒரு படி என்பதை நினைவில் கொள்க.


பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...