ஞாயிறு, 13 நவம்பர், 2022

ஒரு பணக்காரர் வழங்கும் இலவச உணவு சேவை

 

வடஇந்தியாவில் பணக்காரர் ஒருவர் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கினார்.அவரிடத்தில் ஏழைகளுக்கு தொண்டு செய்யும் உணர்வு மிகவும் குறைவாக இருந்தது, ஆனாலும் தன்னை தாராள மனப்பான்மை கொண்டவர் எனவும் இரக்க குணம் கொண்டவர என்றும் சமூகம் பாராட்ட வேண்டும் என்பதற்காக அவர் ஏழைகளுக்கு உதவுவதற்கு முன்வந்தார். அவர்ணவு பொருட்களின் மொத்த வியாபாரம் செய்து வந்தார். தனால் தன்னுடைய வியாபார நடவடிக்கையின் போது மாதக் கடைசியில், விற்காமல் வீணாக போன தரமற்ற உணவுப்பொருட்களை, தரமம் செய்வது என்ற பெயரில், கோதுமையை கோதுமை மாவாக தயாரித்து சப்பாத்தி செய்ய, இலவச உணவு வழங்கிடும் இடத்திற்கு அனுப்பி விடுவார். அந்த பணக்காரர் வழங்கும் உணவு சேவையில் பெரும்பாலும் வீணாக போன தரமற்ற கோதுமையிலிருந்து தயார்செய்த மாவினால் செய்யப்பட்ட சப்பாத்திகள் பசியுடன் இருக்கின்ற ஏழைமக்களுக்குக் கிடைத்தன. இவ்வாறான சூழலில் பணக்காரருடைய மகனுக்கு திருமணம் நடந்தது.பணக்காரரின் புதிய மருமகள் பணக்காரரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தா். அவள் மிகவும் கண்ணியமாகவும், அக்கறையுடனும் அனைவரையும் அரவணைத்து செல்லும் குணத்துடனும் இருந்தாள் .பணக்காரரின் வீட்டிற்கு வந்தவுடன் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குகின்ற இடத்திற்கு வீணாக போகும் தரமற்ற கோதுமை அனுப்பப்படுவதை பற்றி அறிந்ததும், ஏழைகளுககு தரமம் என்ற பெயரில் தரமற்ற கோதுமையைக் கொடுப்பது தவறு என்று அவள் மிகவும் வருந்தினாள். அதனால் ஏழைகளின் பசியை போக்குவதற்கு தரமான கோதுமை அனுப்புவதை உறுதிசெய்திட விரும்பினாள் .பணக்காரனின் வீட்டில் பல்வேறு பணிகளையும் செய்வதற்கு நிறைய வேலைக்காரர்கள் இருந்தார்கள், ஆனால் புதிய மருமகள் தங்களுடைய வீட்டில் உணவு தயாரிக்கும் பொறுப்பை தானே ஏற்க முடிவு செய்தார். அதனால் முதல் நாளே, ஏழைகளுக்கும் இலவச உணவு வழங்கும் இடத்தில் பயன்படுத்தப்பட்ட அதே கோதுமை மாவைப் பயன்படுத்தி சப்பாத்தி செய்தார் பணக்காரரின் மருமகள். காலை உணவினை சாப்பிட அந்த பணக்காரர் அமர்ந்ததும், அவது தட்டில் ஏழைகளுக்கு வழங்கும் தரமற்ற கோதுமை மாவினால் தயார செய்த அதேபோன்ற சப்பாத்தியை பரிமாறினாள். தரமற்ற கோதுமை மாவினால் தயார்செய்த சப்பாத்தியைப் உண்பதற்காக வாயில் வைத்து தின்றபோது நன்றாக இல்லாததை கண்டு அதனை கீழேதுப்பிவிட்டு , ‘நம்முடைய வீட்டில் சப்பாத்தி செய்ய நல்ல கோதுமை மாவுதானே இருக்கும்.. அப்புறம் எதுக்கு இப்படி தரமற்ற மாவில் சப்பாத்தி செய்தீர்கள. என வினவினார் அதற்கு மருமகள், “மாமா, இது நீங்கள் ஏழைகளுக்கு இலவச உணவுவழங்குவதற்காக அனுப்பு கின்ற கோதுமை மாவில் செய்தது .” எனக்கூறினார் உடன் பணக்காரர் குழப்பமடைந்து, “எனக்கு ஒன்றும் புரியவில்லையே..” என்றாள். அதற்கு மருமகள், “மாமா! முற்காலத்தில் நாம் என்ன செய்தோமோ, அதையே இப்போது அடைவோம் அல்லவா, அதேபோன்று நாம் இப்போது எதைச் செய்கிறோமோ, அதுவே நம்முடைய வருங்காலத்திலும் கிடைக்கும். அதனால் நம்முடைய இலவச உணவு வழங்கும் இடத்தில், இந்த தரமற்ற கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் இவ்விடத்தை விட்டுச் செல்லும் போது இந்த மாவில் செய்த சப்பாத்தியை மட்டுமே உண்டு வாழ வேண்டும். அதனால்தான், இனிமேல் இதை நீங்கள உண்ணும் பழக்கம் ஏற்பட்டால், பிற்காலத்தில் துன்பம் குறையும் என்று நினைத்தேன்.“ என சமாதானம் கூறினாள். உடன்வடஇந்திய பணக்காரர் தன் தவறை உணர்ந்தார். மருமகளிடம் மன்னிப்பு கேட்டு தரமற்ற கோதுமை மாவை அன்றே தூக்கி எறிந்தார். அப்போதிருந்து, ஏழைக்கும் பசியுடன் வருகின்ற பொதுமக்களுக்கும் தரமுடைய புதிய கோதுமைமாவில் செய்யப்பட்ட சப்பாத்தியைப் பெறத் தொடங்கினர்.

கற்றல்: உதவி செய்யும்போது மக்கள் என்னைப் பாராட்ட வேண்டும், கைதட்ட வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது. மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன்  செய்ய வேண்டும். ஒரு கையால் உதவிசெய்திடும்போது இன்னொரு கைக்குக்கூட தெரியாத அளவுக்கு ரகசியமாக இருக்க வேண்டும் எனக் கூறுவது உண்டு.


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...