2.முறைகேடான(Vishing) அழைப்புகள்
செயல் முறை
➢ வஞ்சகர்கள் தொலைபேசி அழைப்பு / சமூக ஊடகங்கள் மூலம் வங்கியாளர்கள் / நிறுவன நிர்வாகிகள் / காப்பீட்டு முகவர்கள் / அரசு அதிகாரிகள் போன்ற தோற்றத்தில் வாடிக்கையாளர்களை அழைக்கி றார்கள் அல்லது அணுகுகிறார்கள். நம்பிக்கையைப் பெற, ஏமாற்றுக் காரர்கள் வாடிக்கையாளரின் சரியானபெயர் அல்லது பிறந்த தேதி போன்ற சில வாடிக்கையாளர் விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
➢ சில சந்தர்ப்பங்களில், அனுமதியில்லாத நிதி நடவடிக்கைகளை தடுத்துநிறுத்திடவேண்டி ,அவைகளுக்கு அபராதங்களை நிறுத்தி வைத்தல், கவர்ச்சிகரமான தள்ளுபடிகிடைத்தல் போன்றவற்றை அவசரமாக/ உடனடியாக செய்யவேண்டியுள்ளதால் கடவுச்சொற்கள் / OTP / PIN / அட்டை சரிபார்ப்பு மதிப்பு (Card Verification Value (CVV)) போன்ற இரகசிய விவரங்களைப் உடனடியாக பகிர்ந்திடுமாறு ஏமாற்றுபவர்கள் வாடிக்கையாளர்களை நெருக்குதல்தந்து / ஏமாற்றி.. இவைகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பின்னர்மோசடியாகப் பயன்படுத்தி கொள்கின்றனர்.
தற்காப்பு நடவடிக்கைகள்
➢ வங்கி அதிகாரிகள் / நிதி நிறுவனங்கள் / இந்திய சேமநல வங்கி / எந்தவொரு உண்மையான நிறுவனமும் பயனர் பெயர் / கடவுச்சொல் / அட்டை விவரங்கள் / CVV / OTP போன்ற இரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களிடம் எப்போதும் கோருவதில்லை.
➢ இந்த இரகசிய விவரங்களை யாருடனும், உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக