ஞாயிறு, 30 அக்டோபர், 2022

விழிப்(புடன்)பாய் இரு-- வங்கி பயன்பாட்டின் போதான.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

1.1.மோசடியான(Phishing) இணைப்புகள்

செயல் முறை

மோசடி செய்பவர்கள் மூன்றாம் தரப்பு மோசடி(Phishing) இணையதளத்தை உருவாக்குகிறார்கள், இது ஏற்கனவே உள்ள உண்மையான இணையதளத்தைப் போன்றே தோற்றமளிக்கிறது - இவை வங்கியின் இணையதளம் அல்லது மின்-வணிக இணையதளம் அல்லது தேடுபொறி போன்றவைகளாகும்.

இந்த இணையதளங்களுக்கான இணைப்புகள் குறுந்தகவல் சேவை (Short Message Service (SMS)) / சமூக ஊடகங்கள் / மின்னஞ்சல் / உடனடி செய்தியாளர் போன்றவற்றின் மூலம் மோசடி செய்பவர்களால் பரப்பப்படுகின்றன

. ➢ பல வாடிக்கையாளர்கள் விரிவான ஒரேசீரானவளஇடங்காட்டியை (Uniform Resource Locator (URL)) சரிபார்க்காமல் இணைப்பை சொடுக்குதல் செய்து, தனிப்பட்ட அடையாள எண் (Personal Identification Number (PIN)), ஒரு முறை மட்டுமானகடவுச்சொல் (One Time Password (OTP)), கடவுச்சொல் (Password) போன்ற பயனாளர்உள்ளிடுகின்ற பாதுகாப்பான சான்றுகள . மோசடி செய்பவர்களால் கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன

தற்காப்பு நடவடிக்கைகள்

அறியப்படாத / சரிபார்க்கப்படாத இணைப்புகளை சொடுக்குதல் செய்திடாதீர்கள் எதிர்காலத்தில் தவறுதலாக அவற்றை அணுகுவதைத் தவிர்க்க, தெரியாத அனுப்புநர் அனுப்பிய குறுந்தகவல (SMS) / மின்னஞ்சலை உடனடியாக நீக்கிடுக.

வங்கி / மின்-வணிகம் / தேடுபொறி இணையதளத்திற்கான இணைப்புகளை வழங்கும் குழுவிலிருந்து விலகிடுக அத்தகைய மின்னஞ்சல்களை நீக்கும் முன் அனுப்புநரின் மின்னஞ்சல் சுட்டியைத் தடுத்திடு.

எப்போதும் வங்கியின் / சேவை வழங்குநரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு மட்டும் செல். குறிப்பாக நிதிச் சான்றுகளை உள்ளிட வேண்டிய இணையதள விவரங்களைக் கவனமாகச் சரிபார்த்திடு. பாதுகாப்பிற்காசான்றிதழ்களை உள்ளிடுவதற்கு முன் இணையதளத்தில் பாதுகாப்பான அடையாளத்தை (பூட்டு சின்னத்துடன் கூடிய https) உள்ளதா எனச் சரிபார்த்திடு.

எழுத்துப் பிழைகளுக்கு மின்னஞ்சல்களில் பெறப்பட்ட இணையதள முகவரிகளையும்(URL) களப்பெயர்களையும் சரிபார்த்திடு. சந்தேகம் இருந்தால் உடனடியாக அதுகுறித்து தகவல்தெரிவித்திடு

 

1.2..முறைகேடான(Vishing) அழைப்புகள்

செயல் முறை

வஞ்சகர்கள் தொலைபேசி அழைப்பு / சமூக ஊடகங்கள் மூலம் வங்கியாளர்கள் / நிறுவன நிர்வாகிகள் / காப்பீட்டு முகவர்கள் / அரசு அதிகாரிகள் போன்ற தோற்றத்தில் வாடிக்கையாளர்களை அழைக்கி றார்கள் அல்லது அணுகுகிறார்கள். நம்பிக்கையைப் பெற, ஏமாற்றுக் காரர்கள் வாடிக்கையாளரின் சரியானபெயர் அல்லது பிறந்த தேதி போன்ற சில வாடிக்கையாளர் விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில், அனுமதியில்லாத நிதி நடவடிக்கைகளை தடுத்துநிறத்திடவேண்டி ,அவைகளுக்கு அபராதங்களை நிறுத்தி வைத்தல், கவர்ச்சிகரமான தள்ளுபடிகிடைத்தல் போன்றவற்றை அவசரமாக/ உடனடியாக செய்யவேண்டியுள்ளதால் கடவுச்சொற்கள் / OTP / PIN / அட்டை சரிபார்ப்பு மதிப்பு (Card Verification Value (CVV)) போன்ற ரகசிய விவரங்களைப் உடனடியாக பகிர்ந்திடுமாறு ஏமாற்றுபவர்கள் வாடிக்கையாளர்களை நெருக்குதல்ந்து / ஏமாற்றி.. வைகளை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பின்னர்மோசடியாகப் பயன்படுத்தி கொள்கின்றனர்.


தற்காப்பு நடவடிக்கைகள்

வங்கி அதிகாரிகள் / நிதி நிறுவனங்கள் / இந்திய சேமநல வங்கி / எந்தவொரு உண்மையான நிறுவனமும் பயனர் பெயர் / கடவுச்சொல் / அட்டை விவரங்கள் / CVV / OTP போன்ற ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களிடம் எப்போதும் கோருவதில்லை.

இந்த ரகசிய விவரங்களை யாருடனும், உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


 


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...