ஒரு ஐரோப்பிய நாட்டில் தொழிலதிபர் ஒருவர் தங்களுடைய மகன் கால்லூரி படிப்பினை முடித்தவுடன் தன்னுடைய காரின் சாவியை மகனிடம் கொடுத்து , “மகனே, நீ நல்ல மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்கிறாய். உன்னுடைய பட்டப்படிப்பினை முடித்ததற்கான எனது பரிசு இது. உங்கள் தாத்தா நான் பட்டப்படிப்பு சரியாக முடித்ததற்காக எனக்கு இந்த காரை பரிசாக கொடுத்தார். இப்போது நீ நன்றாக பட்டபடிப்பு முடித்ததற்காக உனக்கு நான் இந்த காரை பரிசாக கொடுக்கின்றேன் நீ இதை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." எனக்கூறினார்
உடன் அவருடைய மகன், “ஆனாலும். ஐயா அது மிகவும் பழையதாக இருக்கின்றதே...” என சந்தேகம் எழுப்பினார்.
தந்தை தனது மகனிடம், “மகனே, இது பழையதுதான் என்று எனக்குத் தெரியும், ஆனால் இந்த காரைப் பற்றி நீ எதையும் முடிவு செய்வதற்கு முன்பு. நீ இந்தக் காரை பழைய பொருட்களை வாங்குபவரிடம் எடுத்துச் சென்று, அவரிடம் இதை விற்க விரும்புவதாகவும, அதற்கு அவர் எவ்வளவு கொடுக்கத் தயாராக இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டு வா." எனக்கோரினார்
உடன் அவருடைய மகன் பழையபொருட்களை வாங்குபவரின் கடைக்குச் சென்று சிறிது நேரம் கழித்து திரும்பிவந்து தன்னுடைய தந்தையிடம், "ஐயா இது பழையது என்பதால் அதற்கு 90 டாலர் மட்டுமே தருவதாககூறினார்" என்றார்
. தொடர்ந்து தந்தை , " சரிமகனே இப்போது, அருகில் உள்ள பழைய காரை சரிசெய்து விற்பவரிடம் காட்டி, இந்த காருக்கு எவ்வளவுவிலை கொடுக்கத் தயாராக இருக்கிறார் என கேட்டு வா." என்றார் .உடன்மகன் அவ்வாறான பணிமனை ஒன்றிற்கு சென்று சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து தன் தந்தையிடம், "ஐயா இந்த காருக்கு அவர் 500 டாலர் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்" என்றார். தந்தை மீண்டும், "சரி மகனே இப்போது, பழைய கலைப்பொருட்கள் சேகரிப்பாளரிடம் சென்று, இந்த காரின் மதிப்பு என்ன என்று தெரிந்துகொண்டுவா." என்றார்
உடன் மகன் பழைய கலைபொருட்கள் சேகரிப்பாளரிடம் சென்று திரும்பி வந்து தன் தந்தையிடம், "ஐயா கலைப்பொருட்கள் சேகரிப்பாளர் இந்த காருக்கு 7000 டாலர் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.." என்றார்.
அதனை தொடர்ந்த தந்தை சிரித்துக்கொண்டே, "மகனே இதிலிருந்து உனக்கு ஏதாவது புரிகிறதா?" எனக்கேள்வி எழுப்பினார் தனக்கு தந்தை என்ன கூறவருகின்றார் என தெரியாமல் மகன் குழப்பமான பார்வையுடன் தந்தையைப் பார்த்தார்.
அதனால் தந்தை , "சரியான இடமே உன்னை சரியாக மதிக்கிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு நிறுவனத்தில் நீ சரியான மரியாதை பெறவில்லை என்றால், கோபப்பட வேண்டாம், ஏனென்றால் நீ சரியான இடத்தில் இல்லை என்று பொருளாகும். ஏனென்றால் உன்னை பற்றி சரியாக அறிந்தவர்கள் எப்போதும் உன் மதிப்பை அறிவார்கள், அதனால் உன்னைப் பாராட்டுவார்கள். உனக்கு நல்ல மதிப்பு வழங்கிடுவார்கள் எனவே, உன்னை மதிக்காத இடத்தில் நீ ஒருபோதும் இருக்காதே. " என தன்னுடைய மகனுக்கு ஒரு நீண்ட அறிவுரையை வழங்கினார் அந்த தொழிலதிபர்.
கற்றல். : சரியான இடத்தில் மட்டுமே உங்களின் சரியான மதிப்பை அறிவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக