நாம் ஒரு குழந்தையாக இந்த உலகத்தை வித்தியாசமாக காண்கின்கின்றோம். நமக்கு இந்த உலகில் உள்ள எல்லாம் மிகவும் வண்ணமயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் தோன்றுகின்றது. நமக்குப் பிடித்த பொம்மை, மிட்டாய் போன்றவற்றைப் பார்த்து உற்சாகம் அடைகிறோம். இவ்வுலகில் வாழும் யாரும் நாம் குழந்தையாக இருப்பதால் நம்மிடம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை, நம்மை பற்றி மதிப்பிடப் படாமலேயே நமக்கான அன்பையும் அக்கறையையும் பெறுகிறோம். புதிய செய்திகளை மிகத் தீவிரமாக கற்றுக்கொள்கிறோம். அதாவது விதைக்கப்பட்ட ஒரு விதையானது சிறிய ஒரு செடியாக முளைத்து மரமாக வளரும், அவ்வாறான வளர்ந்து வரும் மரமானது இப்போது காற்று, வெப்பம், புயல், வறட்சி போன்ற பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேபோன்று நாமும் குழந்தையாக இவ்வுலகில் தோன்றியபின் மனிதர்களாக வளரும் போது பல்வேறு சூழ்நிலை மாற்றங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் எந்தவொரு தனிநபரின் எதிர்கால வளர்ச்சியையும் எவ்வாறு இருக்கும் என்பதை நியாயமான துல்லியத்துடன் கண்டிப்பாக கணிக்க முடியாது. நாம் வளர வளர நமக்கான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து கொண்டேவருகிறது. நம்மை பற்றிய மதிப்பீட்டினை கண்டு ஏற்படுகின்ற பயம், தோல்விகளைப் பற்றிய பயம், நமக்குபோதுமான திறன் இல்லை என்ற பயம் நமக்கென ஒன்றுமேயில்லை எனும் பயம் ஆகிய உணர்வுகள்நம்மை எப்போதும் பயந்துகொண்டே கோழையாக வாழுமாறு செய்துவிடுகின்றது. அதாவது நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கு வானவில் போல இருந்த உலகம் படிப்படியாக மறைந்து போகிறது. இப்போது நாம் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளோம், ஒரு காலத்தில் நாம் நேசித்த செய்திகள் அனைத்தும் நமக்கு எதிராக இருப்பதாக நாம் உணர்கின்றோம். ஏனெனி நாம் நம்முடைய வாழ்க்கை எனும் ஒரு நிலையான போர்களத்தில் நாம் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருப்பதாக எண்ணுகின்றோம். அதனால் வளர்ந்து கொண்டிருக்கின்ற நம்முடைய வாழ்க்கையை இன்னும் கடினமாக்குகின்றோம் மேலும் நம்முடைய திறன்களை மற்றவர்களுக்கு நிரூபிக்க முயற்சிக்கிறோம். அதனால் நாம் அதற்கான செய்திகளைப் பின் தொடர்ந்து ஓடிக்கொண்டே யிருக் கின்றோம், தோல்வியடையும் போது ஒரு காலத்தில் இவ்வுலகில் ஒளிமயமாக இருந்த அனைத்தும் நமக்கு வெற்றிருளாக ஒன்றுமேயில்லாததாகத் தெரிகிறது. அதனை தொடர்ந்து நாம் ஒன்றுமில்லாத உணர்வை நமக்குள்ள வளர்த்து கொண்டு, ஒவ்வொரு நாளும் நம்முடைய திறன்களை கேள்விக்குள்ளாக்குகிறோம். நாம் தோல்வியுற்றவுடன், ஒவ்வொருவரும் தங்களுடைய தீர்ப்பு செய்திகளுடனும் கருத்துகளின் பெட்டியுடனும் தோல்வி என்ற தலைப்பை நமக்கு வழங்க தயாராக உள்ளனர்.
நம்முடைய குழந்தைப் பருவம் என்பது நம்முடைய வாழ்க்கையின் உள்ளடக்க அட்டவணை மட்டுமே நம்முடைய தோல்விகளுக்குப் பிறகுதான் உண்மையான புத்தகம் தொடங்குகிறது என்பதை அறிந்துகொள்ளதவறிவிடுகின்றோம். இவ்வாறான நம்முடைய வாழ்க்கையின் கசப்பான கட்டமானது நம்மீது நமக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே இனிமையான முடிவுகளைத் தருகின்றது. ஒரு கட்டத்தில் நம்முடைய வாழ்க்கை அர்த்தமே இல்லாதது அல்லது நோக்கமே இல்லாதது போன்று தோன்றுவது நம்மனைவருக்கும் பொதுவானதாகும். இருப்பினும், சில நேரங்களில் மகிழ்ச்சியையும் வலியையும் உணருவதில்லை. எதுவும் நம்மை மிகவும் உற்சாகப்படுத்துவதில்லை. அதனை தொடர்ந்து நமக்கு தூக்கமின்மை, எடை இழப்பு , எப்போதும் சோர்வாக உணருதல் போன்ற பல உடல் பிரச்சனைகளையும் இது கொண்டு வரலாம். நம்முடன் தொடர்பை இழப்பது . நம்மைப் பற்றிய நுண்ணறிவு இல்லாத வாழ்க்கையின் மிக மோசமான கட்டமாகும் நம்மை முற்றிலும் காலியாக உணர வழிவகுக்ககூடும்.நாம் எந்த வகையான நபர் அல்லது நாம் யாராக உயர விரும்புகின்றோம் என்பதில் நமக்கு தெளிவு இல்லாமல் இருக்கலாம் என்று அர்த்தமாகும். சில நேரங்களில் இது நமது மோசமான கடந்த கால அனுபவங்களால் ஏற்படுகிறது. நீண்ட காலமாக நம்முடன் இருக்கும் உணர்ச்சிகளை நாம் வெளிப்படையாகப் பேசாமலோ அல்லது ஆராயாமலோ இருக்கும்போது. அது வேதனையாக உணர்ந்தாலும்,நமக்கு வருத்தத்தை ஏற்படுத்திய கடந்தகால நிகழ்வுகளைப் பற்றி பேசுவது நமக்கு வெற்றிக்கான வழியை செயல்படுத்த நமக்கு உதவக்கூடும். மனிதர்களின் வாழ்க்கைக்கு உணர்ச்சிபூர்வமான நெருக்கம், ஆதரவு அவர்களின் பிரச்சனையை சுறுசுறுப்பாகக் கேட்பவர்கள் தேவையாகும். தோல்விகள்நமக்கு ஒன்றுமில்லாத உணர்வை அல்லது நாம் எழுந்து நிற்கும் தைரியத்தை கொண்டு வரும் நம்முடைய சொந்த மேம்பாட்டு திறன்களில் பணியாற்றுவது நிச்சயமாகநம்மை நாமே சிறந்த பதிப்பாக மாற்றையமைக்ககூடும். அதனால் தனியாக அமர்ந்து நம்மை பற்றி ஆராய முயற்சித்திடுக. அன்புக்குரியவர்களுடன் இணைந்திருந்திடுக உணர்ந்ததைப் பேசுக.
சனி, 8 அக்டோபர், 2022
ஒன்றுமில்லாத உணர்வு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக