"நேற்று என்பது கடந்த காலம், நாளை என்பது எதிர்காலம் ஆனால் இன்றுதான் நமக்கான பரிசுஆகும். அதனால்தான் இது நிகழ்காலம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கோள்கள் அல்லது ஊக்கமளிக்கும் கட்டுரைகள் ஆகியவற்றை படிப்பது மட்டும் போதாது. அதனால் உருவாகின்ற மாற்றத்தை நமக்குள் கொண்டு வருவதும் நம் மனநிலை மாறுவதும் இதற்கான ஒரே வழியாகும்" என்ற மேற்கோளை நாம் அனைவரும் கண்டிப்பாக கேள்விப்பட்டிப்போம். நம்முடைய வாழ்க்கையானது .ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது, ஆயினும் நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையவேண்டும் என்பதே நம்மனைவருடைய விருப்பமாக உள்ளது. அதனால் நாமனைவரும் கவலையற்ற அல்லது குறைவான கவலையுடன், மன அழுத்தம்இல்லாத , மகிழ்ச்சியுடனான வாழ்க்கை விரும்புகிறோம். ஆனால் பிரச்சனை என்னவென்றால், நாமனைவரும் மிகவும் விரும்புகின்ற மகிழ்ச்சியானது மிகக்குறைவாகவே கிடைக்கிறது. .ஏனெனில் நிகழ்காலத்தை விட கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நாம் அதிக கவனம் செலுத்துவதே இதற்குப் பின்னால் உள்ள ஒரே காரணமாகும்.எனினும் நிகழ்காலத்தினை விட்டுவிட்டு கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைத்து குழப்பிகொண்டிருக்கின்ற இளைஞர்கள் கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு அமைதியின்றி தங்கள் எண்ணங்களை நகர்த்துகிறார்கள். நம் முடைய எண்ணங்கள் கடந்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக நம்மைப் பின்தொடர்கின்றன, இது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவோ அல்லது சோகமான அதிர்ச்சியாகவோ இருக்கலாம். அவை நிகழ்காலத்தில் நமக்கு அதிக மனவருத்தத்தை அளிக்கின்றன.அதனால் நம்மில் பெரும்பாலானோர் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து நம்முடைய நிகழ்காலத்தின் நேரத்தைக் கொன்றுவிடுகின்றோம், அது நம்மைவிட்டு எங்கும் செல்லாதுஇருந்துகொண்டு நம்முடைய எந்த பணியையும் செய்யவிடாமல் தடுத்து நிறுத்துகின்றது. ஆயினும் நம்முடைய எதிர்காலமானது நிகழ்காலத்தில் நாம் செய்யும் செயல்களை மட்டுமே சார்ந்துள்ளது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அதில் கவனம் செலுத்தத் தவறுகிறோம்.
ஒரு நாளின் முடிவில், நாம் பணிகளைமுடித்து படுக்கையில் ஓய்வெடுக்கும்போது, நம்முடைய மனம் இன்னும் அந்த எண்ணங்களைத் தூண்டுகிறது. ஒரு கவர்ச்சியான தோற்றத்துடன் தொடங்கி வலியையும் துக்கத்தையும் கொடுப்பதில் முடிவடையும் ஒரு திரைப்படம் போன்று நினைவு காட்சி மனதில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. நமது கடந்த காலம் நமக்கு மதிப்புமிக்க அனுபவங்களையும் படிப்பினைகளையும் தருகிறது. மனிதர்களைப் பற்றிய ஒரு சிறந்த செய்தி என்னவென்றால், நாம் நம்முடன் பேசுகிறோம், வெவ்வேறு வழிமுறைகளை வழங்குகின்ற அவ்வாறான நமது உள்மனதின் குரல் அரிதாகவே நிற்கிறது . நேர்மறையான நோக்கமுள்ள வாழ்க்கையுடன் நம்மைச் சுற்றிசெயல்படுவதன் மூலம் அதை அழகாகக் கட்டுப்படுத்தலாம். உறங்கச் செல்வதற்கு முன் கடைசியாக எப்பொழுது கடந்த காலத்தின் துக்கமோ அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ இல்லாமல் நிம்மதியாக இருந்தோம் என்பது கூட நமக்கு நினைவிருக்கிறதா? ஒருவேளை இந்த அவசர உலகில், நாமெல்லோரும் நம்மைச் சுற்றியுள்ள செய்திகளைப் பாராட்டுவதற்கு மறந்து விட்டோம். தற்போது நம்மிடம் என்னென்ன வளங்கள் உள்ளன என்பதைக் கவனிக்க கூட நமக்கு நேரம் இல்லை. அந்த வளங்களை சேகரிப்பதில் மட்டுமே நாம் மிகவும்சுறுசுறுப்பாக இருக்கிறோம் ஆனால் அவற்றை அனுபவிக்க நேரமில்லாமல் நாம் வாழ்ந்துவருகின்றோம்
மனிதனின் வாழும் கலை என்பது நிகழ்காலத்தில் வாழ்வது. வாழ்க்கையில் எல்லாமே காலாவதி தேதியுடன் வருகிறது, அது உறவாக இருந்தாலும், செய்தியாக இருந்தாலும் அல்லது நாமாக இருந்தாலும் சரி. நேர்மறையான , ஆதரவான நபர்களுடன் நம்மைச் சுற்றி இருப்பது நம்முடைய மகிழ்ச்சியின் அளவை அதிகரிக்கச்செய்யும். கடந்த கால அல்லது எதிர்கால நிகழ்வுகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக நிகழ்காலத்தில் நாம் சரியாகசெயல்படுவதில் அதிக கவனம் செலுத்த இது நம்மை அனுமதிக்கின்றது. நாம் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த விரும்பினால், முன்பு செய்திகள் எப்படி இருந்தன என்பதை விட்டுவிட்டு, அவற்றை மாற்ற முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது, சில சமயங்களில் வாழ்க்கை நாம் விரும்புவதை விட வித்தியாசமாக இருக்கும். ஏற்றுக்கொள்வது மட்டுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத செய்திகளை விட்டுவிட உதவும். நம்மிடம் இல்லாத செய்திகளில் கவனம் செலுத்துவதை விட தற்போது நாம் பாராட்டக்கூடிய செய்திகளை மட்டும் கவணத்தில் கொள்வது என்பது சிறந்த தொருவழிமுறையாகும். நாம் அனைவரும் தவறுகள் செய்துள்ளோம், தவறான தேர்வுகள் செய்துள்ளோம், நிராகரிக்கப்பட்டோம், சாதகமாகப் பயன்படுத்தினோம், கறைபடியாத நிறைவற்ற கடந்த காலம் யாருக்கும் இல்லை.
கடந்த காலத்தை மனதில் கொண்டு எதிர்காலத்தை நோக்கி ஓடுவது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. நிகழ்காலத்தின் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்வது நமக்கு அதிக தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தரும். அதை இன்றே முயன்றிடுக
ஞாயிறு, 2 அக்டோபர், 2022
கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே இடைவிடாத போராட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக