சனி, 28 அக்டோபர், 2017

நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து சன்டைசச்சரவில்லாமல் ஒற்றுமையுடன் வாழமுயற்சி செய்க


இது ஒரு தம்பதியரின் திருமணநாளாகும் மனைவி தன்னுடைய கணவரின் வருகைக்காக காத்திருந்தார் இந்த தம்பதியரின் திருமணத்திற்கு பின்னர் ஒவ்வொரு நாளும் ஏதாவது தொரு பிரச்சினைக்காக இருவரும் சண்டையிட்டுகொண்டும் ஒருவருக்கொருவர் திட்டிகொண்டும் எலியும் பூனையுமாகவே இருந்துவந்ததால் இவர்களுடைய மணவாழ்க்கை காலப்போக்கில் மிகவும் கசப்பாகவே மாறிவிட்டது அதனால் ஒவ்வொருநாளும் மிகவும் சிரமமாகவே கழித்து வந்தனர் இவ்வாறான நிலையில் அம்மனைவியின் கைபேசிஅழைப்பு மணி ஒலித்தது அவர் எடுத்தவுடன் . "வணக்கம் அம்மா நான் காவல் நிலையத்திலிருந்து அழைக்கின்றேன். "நீங்கள் 'க' என்பவரின் மனைவியா?" என கேட்டார் அதற்கு "ஆமாம் ஐயா!"என பதிலிறுத்ததும் "அம்மா நீங்கள் மனதினை தைரியபடுத்திகொள்ளுங்கள் தற்போது ஒரு விபத்து நடந்துள்ளது அதில் இறந்தவருடைய பணப்பையிலிருந்து நாங்கள் இந்த கைபேசி எண்ணைப் பெற்றோம், அவ்வாறு இறந்தது 'க' என்பவர்தானா என நீங்கள் நேரில் வந்து அடையாளம் கூற வேண்டும்." என்று கூறினார் உடன் 'க' என்பவரின் மனைவியானவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்! தொடர்ந்து ஐயோ !!!என்னசெய்வேன்? !!! மிகுதி நாட்களை யாருடைய துனையுடன் வாழ்வேன் ? !!! எங்களுக்கு இடையே சிறிய வேறுபாடுகள் இருந்த போதிலும் அவர் மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் என்னை விட்டுகொடுக்காமல் என்னோடு வாழ்ந்து வந்தாரே !!! என தரையில் விழந்து புரண்டு அழுதார் இவ்வாறான நிலையில் சிறிதுநேரத்தில் அவர்களுடைய வீட்டுவாயிலில் இருந்த அழைப்புமணி ஒலித்தது "ஐயோ! இன்னும் என்னென்ன தீங்கு நேர்ந்துவிட்டதோ ! "என பதைபதைப்புடன் 'க' என்பவரின் மனைவியானவர் தரையிலிருந்து மிகவும் மெதுவாக எழுந்து சென்ற வாயில் கதவினை திறந்தார் "என்னஆச்சரியம்!” நுழைவுவாயிலில் அவருடையகணவர் நின்றிருப்பதை கண்டதும்ஓடிசென்று "ஐயோ! நீங்கள் விபத்தில் அடிபட்டு இருந்துவிட்டதாக காவல்நிலையத்திலிருந்து சற்றுமுன்னர்தானே கூறினார்கள் அவ்வாறு நிகழவில்லையா பதை பதைத்து விட்டே !ரொம்ப மகிழ்ச்சி!” என ஆர்வத்துடன் அவருடைய கணவருடன் இறுக கட்டி ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக புலம்ப ஆரம்பித்தாள் அவளுடைய கணவன் "அன்பே! இன்று காலையில் போக்குவரத்து நெரிசலில் என்னுடைய பணப்பையினை திருடி கொண்டுவிட்டனர் அதில் என்னுடைய கைபேசியும் இருந்ததால் உனக்கு தகவல்எதுவம் கூறமுடியவில்லை இன்று சீக்கிரமாக வீடு்வந்து நேராக உன்னிடம் பணப்பை திருட்டு போனதை கூறலாம் என வந்து சேர்ந்தேன்" என கூறியதும் "பணப்பை போனால் பரவாயில்லை நீங்கள் நான் உயிர்வாழும் அளவும் என்னோடு இருந்தால் போதும்" என மனமகிழ்வுடன் கூறினாள் அம்மனைவி நாம் வாழ்வது சிலகாலமே அதுவரையில் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து சன்டைசச்சரவில்லாமல் ஒற்றுமையுடன் வாழமுயற்சி செய்க என பரிந்துரைக்கபடுகின்றது

திங்கள், 23 அக்டோபர், 2017

உதவிதேவைப்படுபவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்திடலாமே


நான் நெடுஞ்சாலையின் நடைபாதையில்நடந்து சென்றுகொண்டிருக்கும்போது வழியில் ஒரு மின்கம்பத்தில் சிறு துண்டு காகிதத்தில் ஒரு சிறிய குறிப்பு இருந்ததை கண்டேன் அதில்என்னதான் உள்ளது என அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தாதல் அதற்கருகில் சென்று பார்த்தபோது. " என்னிடம் வைத்திருந்த 50 ரூபாய் தாள் ஒன்றினை இந்த நெடுஞ்சாலையில் தவறவிட்டிட்டேன், அடுத்தவேளை சாப்பிடுவதற்கு எனக்கு அதனை தவிர வேறு தொகை எதுவும் என்னிடம் இல்லை யாராவது சாலையில் அதை கண்டால், தயவுசெய்து பின்வரும் முகவரியிலுள்ள என்னிடம் கொண்டுவந்து கொடுத்தால் நான் உயிர் உள்ளளவும் இந்த நன்றியை மறக்கமாட்டேன் எனக்கு இருகண்களும் தெரியாது அதனால் தயவுசெய்து உதவி செய்யவும்." நான் அந்த முகவரியைப் தேடிபிடித்து சென்றடைந்தேன் சிறிய பழையகாலத்து வீடாக இருந்தது அதன் கதவினை தட்டிவிட்டு திறந்து வீட்டின் உட்புறம் செல்லஆரம்பித்ததும் என்னுடைய கதவு தட்டுதல் சத்தத்தையும் காலடி சத்தத்தைதயும் கேட்ட அந்த பார்வை தெரியாதவர் யார் என்று கேட்டார். இந்த சாலை வழியாக வந்தேன் சாலையில் இந்த, ரூ. 50 ஐ கண்டெடுத்தேன் அதனை உங்களிடம் ஒப்படைக்க விரும்புகின்றேன். எனக்கூறியதை கேட்டு கண்தெரியாத அந்த தாய் அழ ஆரம்பித்தாள். "ஐயா இதுவரையில் இவ்வாறு கூறி 30-40 பேர் வந்து என்னிடம் 50 ரூபாய் தாளை தாங்கள் சாலையில் கண்டுபிடித்ததாக கொடுத்து சென்றனர் அந்த அறிவிப்பினை நான் எழுதவில்லை, எனக்கு சரியாகப் படிக்கவும் எழுதவும் தெரியாது . " என கூறினார் அந்த குறிப்பை யார் எழுதியிருக்கலாம் என்று ஒரு மில்லியன் கேளவியுடன் அந்த கண்தெரியாத மூதாட்டியின் வீட்டிலிருந்த திரும்பிவந்து கொண்டே யோசித்தபோது அந்த கண்தெரியாத மூதாட்டிக்கு உதவுவதற்காக ..யாரோ ஒரு நல்ல உதவும் உள்ளம் கொண்ட மனிதன் எழுதி கட்டியிருப்பார் என சமாதானத்துடன்என்னுடைய அடுத்தபணியை செய்திட சென்றேன் நாமும் நம்மால் முடிந்த இதைபோன்ற உதவிகளை செய்திடலாமே

செவ்வாய், 10 அக்டோபர், 2017

பெற்றோர்களை பேணி காப்போம்


மிகநீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கிராமத்தில் பெரிய மாமரம் இருந்தது. அப்போது அந்த ஊரில் இருந்த சிறுவன் ஒருவன் அந்த மாமரத்தின் அடியில் வந்து தினமும் அதை சுற்றி சுற்றி வருவது அந்த மாமரத்தின் கிளைகளில் ஏறி குதிப்பது என்றவாறு விளையாடுவது பசிஎடுத்தால் அந்த மாரத்தில் பழத்துள்ள பழங்களை பறித்து தின்பது சோர்வு அடைந்தால் அம்மரத்தின் நிழலில் படுத்து தூங்குவது என அந்த மாமரத்துடன் ஒட்டிஉறவாடி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தனர் சிறிது நாட்கள் அந்த சிறுவன் அந்த மாமரத்தின் பக்கம் வருவதே இல்லை அதனால் அந்த மாமரம் மிகவருத்தத்துடன் அந்த சிறுவனுடன் விளையாடி மகிழ்வாக இருக்கலாம் என காத்திருந்தது அந்த சிறுவன் தற்போது வளர்ந்துவிட்டான், மேலும் அவன் ஒவ்வொரு நாளும் மரத்தின் மேல் ஏறி விளையாடிக் கொண்டிருக்கவிரும்பவில்லை. ஒரு நாள், அந்த சிறுவன் சோகமாக மரத்தை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தான். உடன் அந்த மாமரமானது "தம்பி விரைவாக வா வந்து என்னுடன் விளையாடு",அழைத்தது . அதற்கு அவன்: "நான் தற்போது முன்பைபோன்று சிறுவன் அன்று , நான் உன்னை சுற்றி விளையாட கூடாது .எனக்கு விளையாடுவதற்கு விளையாட்டு பந்து போன்றவை வேண்டும். அவற்றை வாங்க பணம் என்னிடம் பணம் இல்லை அதனால் நான் மிகவருத்ததுடன் இருக்கின்றேன். " எனக்கூறினான் மாமரம்: "ரொம்பநல்லது தம்பி, என்னிடம் உனக்கு கொடுப்பதற்கான பணம் இல்லை, ஆனால் நீ என் மாமபழங்களை பறித்து எடுத்து சென்று அவற்றை விற்கலாம். அதன்வா.யிலாக உனக்கு பணம் கிடைக்கும். அதனை கொண்டு உனக்குத்தேவை.யான விளையாட்டு கருவிகளை வாங்கி விளையாடலாம் " எனக்கூறியது அந்தசிறுவன் மிகவும் உற்சாகமாக மரத்தில் ஏறி அதில் இருந்த எல்லா மாம்பழங்களையும் பறித்து கொண்டு மகிழ்ச்சியுடன் அந்த மரத்தை விட்டு சென்றான். பிறகு அந்த சிறுவன் திரும்பி வரவேஇல்லை. மாமரம் மிகவும் சோகமாக இருந்தது. சிறிது காலம் கழித்தபோது அந்த சிறுவன் இளைஞனாக வளர்ந்த விட்டான் அவனக்கு திருமணமும் நடந்தது அப்போது ஒரு நாள், மனிதனாக மாறிய அவன் அந்த மாமரத்திற்கு திரும்பினான், அந்த மாமரம் அந்த இளைஞனை கண்டவுடன் மிகவும் உற்சாகமடைந்தது. "வா தம்பி வந்து என்னுடன் விளையாடு" என்று அந்த மாமரம் சொன்னது. "எனக்கு உன்னுடன் விளையாட நேரம் இல்லை. நான் என் குடும்பத்திற்கு வேலை செய்து சம்பாதிக்கவேண்டும். நாங்கள் தங்கிவாழ்வதற்கு எங்களிடம் ஒரு வீடு கூட இல்லை என்ன செய்வது என்ற தெரியவில்லை ? " எனவருத்ததுடன் கூறினான் அந்த இளைஞன் அதற்கு மாமரம்: " பராவாயில்லை தம்பி என்னிடம் நீகேட்பது போன்ற வீடும் எதுவும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக அவ்வாறான வீட்டைக் கட்டுவதற்கு என்னிடம் இருக்கும் கிளைகளை வெட்டி எடுத்து சென்று பயன்படுத்தி கொள்க. " எனக்கூறி.யது உடன் அந்த இளைஞன் தங்களுக்கான வீடுகட்டுவதற்காக மகிழ்ச்சியுடன் அந்த மரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி, எடுத்து சென்றான். மாமரமும் அந்த இளைஞனுக்கு உதவியதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது, ஆனால் அந்த மனிதன் நீண்டநாட்களுக்கு அந்த மாமரத்திடம் திரும்பி வரவில்லை. மாமரம் மீண்டும் தனிமையாகவும் சோகமாகவும் இருந்தது. ஒரு வெப்பமிகுந்த கோடைநாளில், அந்த மனிதன் அந்த மாமரத்தினை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தான் மாமரமானது அவனுடைய வருகையினால் மிகமகிழ்ச்சியுற்றது. "தம்பி வா வந்து என்னுடன் விளையாடு!" என்று அந்த மாமரம் சொன்னது. "நான் முன்பு போன்று சிறுவனோ இளைஞனோ அன்று நான் என்னுடைய குடும்பத்திற்கு சம்பாதிக்கவேண்டும் அதற்காக அருகிலுள்ள கடலில் மீன் பிடித்துவந்து விற்பணை செய்திட விரும்புகின்றே ஆனால் அதற்கான படகினை வாங்கு வதற்கு என்னிடம் பணம் இல்லை எனக்கு ஒரு படகு கொடுக்க முடியுமா? "என்று அந்த மனிதன் கூறினான். மாமரம்: "உனக்கு படகு கட்ட என்னுடைய அடிமரத்தை பயன்படுத்தி கொள்க படகின்மூலம் கடலில் வெகுதூரம் சென்றுநல்ல கடல் மீன்களை பிடித்து விற்பணைசெய்து உன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுக "எனக்கூறியது எனவே அந்த மனிதன் தனக்கான படகு செய்வதற்காக அந்த மாமரத்தின் அடிமரத்தினை மகிழ்ச்சியுடன் வெட்டினான். நல்ல அருமையான படகினை செய்து அதன் வாயிலாக கடலிற்கு சென்று மீன்களை பிடித்த வந்து விற்று போதுமான அளவிற்கு பணம் சம்பாதித்தான் நீண்ட காலம் அந்த மனிதன் அந்த மாமரம் இருந்த பக்கத்திற்கு திரும்பவேயில்லை. இறுதியாக, பல ஆண்டுகள் கழித்து அந்த மனிதன் மாமரத்திற்கு திரும்பினான் "தம்பி நீபறித்து தின்பதற்கு என்னிடம் மாம்பழம் எதுவும் இல்லை ", மரம் கூறியது. அதற்குஅம்மனிதன் : "எந்த பிரச்சனையும் இல்லை, மாம்பழத்தை கடித்து தின்பதற்கு எனக்கு பற்கள் எதுவும் இல்லை." என்று கூறினான் அந்த மனிதன் மாமரம்: "நீ ஏறி விளையாடுவதற்கு என்னிட கிளைகள் இல்லை" என்றது. "எனக்கு இப்போது வயதாகிறது அதனால் கிளைகளில என்னால் ஏறமுடியாது" என்று அந்த மனிதன் கூறினான். " உனக்கு கொடுப்பதற்கு தரையினடி.யிலுள்ள இந்த வேரினை தவிர என்னிடம் எதுவமேஇல்லை இந்த வேர்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன" என்று மாமரம் கண்ணீருடன் சொன்னது. " எனக்கு இப்பொழுதுஎதுவும் தேவையில்லை, நான் ஆடிஓடி பாடுபட்டுவி்ட்டதால் சோர்வாக இருக்கிறேன் ஓய்வெடுக்க ஒரு இடம்.மட்டும் தேவை "என்று அந்த மனிதன் கோரினான் . மாமரம்: "நல்லது! தம்பி வா என்னுடைய வேர்களில் , அமர்ந்துசாய்ந்து ஓய்வெடுத்துகொள். " எனக்கூறியது உடன் அந்த மனிதன் மாமரத்தின் வேர்களில் சாய்ந்த உட்கார்ந்து ஓய்வெடுக்க துவ்ஙகினான், மாமரமானது மகிழ்ச்சியுடனும் கண்ணீருடனும் சிரித்து மகிழந்தது. நாம்சிறுவர்களாகஇருந்தபோது நம்முடைய பெற்றோர்கள்நமக்கு தேவையான உணவினை அளித்து நாம் நோய்நொடி இன்றி நன்றாக வளருவதற்கு தேவையானவகையில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்கள் அதன்பின்னர் நம்க்கு போதுமான கல்வியறிவு பெறச்செய்தார்கள் பின்னர் நல்ல வேலைவாய்ப்பினை பெற்று தந்தார்கள் அதன்பின்னர் நமக்கு திருமனம் செய்து நாம் வாழ்வதற்கான வீடுவாசல் போன்ற வசதிகளை அளித்தார்கள் அவ்வாறானஅனைத்தையும் தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை தம்முடைய பிள்ளைகள் நன்கு வாழவேண்டும் என தியாகம் செய்து நம்மை காத்து வளர்த்தார்கள் ஆனால் நாம் அனைவரும் வளர்ந்து பெரிய மனிதனாக மாறியபோது நம்முடைய பெற்றோர்களை பேணி பாதுகாத்திடாமல் அவர்களிடம் இருந்து அனைத்தையும் பறித்து கொண்டு அவர்களை நடுத்தெருவில் நிர்கதியாக விட்டுவிடுகின்றோம் இது சரியா

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...