செவ்வாய், 10 அக்டோபர், 2017

பெற்றோர்களை பேணி காப்போம்


மிகநீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கிராமத்தில் பெரிய மாமரம் இருந்தது. அப்போது அந்த ஊரில் இருந்த சிறுவன் ஒருவன் அந்த மாமரத்தின் அடியில் வந்து தினமும் அதை சுற்றி சுற்றி வருவது அந்த மாமரத்தின் கிளைகளில் ஏறி குதிப்பது என்றவாறு விளையாடுவது பசிஎடுத்தால் அந்த மாரத்தில் பழத்துள்ள பழங்களை பறித்து தின்பது சோர்வு அடைந்தால் அம்மரத்தின் நிழலில் படுத்து தூங்குவது என அந்த மாமரத்துடன் ஒட்டிஉறவாடி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தனர் சிறிது நாட்கள் அந்த சிறுவன் அந்த மாமரத்தின் பக்கம் வருவதே இல்லை அதனால் அந்த மாமரம் மிகவருத்தத்துடன் அந்த சிறுவனுடன் விளையாடி மகிழ்வாக இருக்கலாம் என காத்திருந்தது அந்த சிறுவன் தற்போது வளர்ந்துவிட்டான், மேலும் அவன் ஒவ்வொரு நாளும் மரத்தின் மேல் ஏறி விளையாடிக் கொண்டிருக்கவிரும்பவில்லை. ஒரு நாள், அந்த சிறுவன் சோகமாக மரத்தை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தான். உடன் அந்த மாமரமானது "தம்பி விரைவாக வா வந்து என்னுடன் விளையாடு",அழைத்தது . அதற்கு அவன்: "நான் தற்போது முன்பைபோன்று சிறுவன் அன்று , நான் உன்னை சுற்றி விளையாட கூடாது .எனக்கு விளையாடுவதற்கு விளையாட்டு பந்து போன்றவை வேண்டும். அவற்றை வாங்க பணம் என்னிடம் பணம் இல்லை அதனால் நான் மிகவருத்ததுடன் இருக்கின்றேன். " எனக்கூறினான் மாமரம்: "ரொம்பநல்லது தம்பி, என்னிடம் உனக்கு கொடுப்பதற்கான பணம் இல்லை, ஆனால் நீ என் மாமபழங்களை பறித்து எடுத்து சென்று அவற்றை விற்கலாம். அதன்வா.யிலாக உனக்கு பணம் கிடைக்கும். அதனை கொண்டு உனக்குத்தேவை.யான விளையாட்டு கருவிகளை வாங்கி விளையாடலாம் " எனக்கூறியது அந்தசிறுவன் மிகவும் உற்சாகமாக மரத்தில் ஏறி அதில் இருந்த எல்லா மாம்பழங்களையும் பறித்து கொண்டு மகிழ்ச்சியுடன் அந்த மரத்தை விட்டு சென்றான். பிறகு அந்த சிறுவன் திரும்பி வரவேஇல்லை. மாமரம் மிகவும் சோகமாக இருந்தது. சிறிது காலம் கழித்தபோது அந்த சிறுவன் இளைஞனாக வளர்ந்த விட்டான் அவனக்கு திருமணமும் நடந்தது அப்போது ஒரு நாள், மனிதனாக மாறிய அவன் அந்த மாமரத்திற்கு திரும்பினான், அந்த மாமரம் அந்த இளைஞனை கண்டவுடன் மிகவும் உற்சாகமடைந்தது. "வா தம்பி வந்து என்னுடன் விளையாடு" என்று அந்த மாமரம் சொன்னது. "எனக்கு உன்னுடன் விளையாட நேரம் இல்லை. நான் என் குடும்பத்திற்கு வேலை செய்து சம்பாதிக்கவேண்டும். நாங்கள் தங்கிவாழ்வதற்கு எங்களிடம் ஒரு வீடு கூட இல்லை என்ன செய்வது என்ற தெரியவில்லை ? " எனவருத்ததுடன் கூறினான் அந்த இளைஞன் அதற்கு மாமரம்: " பராவாயில்லை தம்பி என்னிடம் நீகேட்பது போன்ற வீடும் எதுவும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக அவ்வாறான வீட்டைக் கட்டுவதற்கு என்னிடம் இருக்கும் கிளைகளை வெட்டி எடுத்து சென்று பயன்படுத்தி கொள்க. " எனக்கூறி.யது உடன் அந்த இளைஞன் தங்களுக்கான வீடுகட்டுவதற்காக மகிழ்ச்சியுடன் அந்த மரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி, எடுத்து சென்றான். மாமரமும் அந்த இளைஞனுக்கு உதவியதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது, ஆனால் அந்த மனிதன் நீண்டநாட்களுக்கு அந்த மாமரத்திடம் திரும்பி வரவில்லை. மாமரம் மீண்டும் தனிமையாகவும் சோகமாகவும் இருந்தது. ஒரு வெப்பமிகுந்த கோடைநாளில், அந்த மனிதன் அந்த மாமரத்தினை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தான் மாமரமானது அவனுடைய வருகையினால் மிகமகிழ்ச்சியுற்றது. "தம்பி வா வந்து என்னுடன் விளையாடு!" என்று அந்த மாமரம் சொன்னது. "நான் முன்பு போன்று சிறுவனோ இளைஞனோ அன்று நான் என்னுடைய குடும்பத்திற்கு சம்பாதிக்கவேண்டும் அதற்காக அருகிலுள்ள கடலில் மீன் பிடித்துவந்து விற்பணை செய்திட விரும்புகின்றே ஆனால் அதற்கான படகினை வாங்கு வதற்கு என்னிடம் பணம் இல்லை எனக்கு ஒரு படகு கொடுக்க முடியுமா? "என்று அந்த மனிதன் கூறினான். மாமரம்: "உனக்கு படகு கட்ட என்னுடைய அடிமரத்தை பயன்படுத்தி கொள்க படகின்மூலம் கடலில் வெகுதூரம் சென்றுநல்ல கடல் மீன்களை பிடித்து விற்பணைசெய்து உன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுக "எனக்கூறியது எனவே அந்த மனிதன் தனக்கான படகு செய்வதற்காக அந்த மாமரத்தின் அடிமரத்தினை மகிழ்ச்சியுடன் வெட்டினான். நல்ல அருமையான படகினை செய்து அதன் வாயிலாக கடலிற்கு சென்று மீன்களை பிடித்த வந்து விற்று போதுமான அளவிற்கு பணம் சம்பாதித்தான் நீண்ட காலம் அந்த மனிதன் அந்த மாமரம் இருந்த பக்கத்திற்கு திரும்பவேயில்லை. இறுதியாக, பல ஆண்டுகள் கழித்து அந்த மனிதன் மாமரத்திற்கு திரும்பினான் "தம்பி நீபறித்து தின்பதற்கு என்னிடம் மாம்பழம் எதுவும் இல்லை ", மரம் கூறியது. அதற்குஅம்மனிதன் : "எந்த பிரச்சனையும் இல்லை, மாம்பழத்தை கடித்து தின்பதற்கு எனக்கு பற்கள் எதுவும் இல்லை." என்று கூறினான் அந்த மனிதன் மாமரம்: "நீ ஏறி விளையாடுவதற்கு என்னிட கிளைகள் இல்லை" என்றது. "எனக்கு இப்போது வயதாகிறது அதனால் கிளைகளில என்னால் ஏறமுடியாது" என்று அந்த மனிதன் கூறினான். " உனக்கு கொடுப்பதற்கு தரையினடி.யிலுள்ள இந்த வேரினை தவிர என்னிடம் எதுவமேஇல்லை இந்த வேர்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன" என்று மாமரம் கண்ணீருடன் சொன்னது. " எனக்கு இப்பொழுதுஎதுவும் தேவையில்லை, நான் ஆடிஓடி பாடுபட்டுவி்ட்டதால் சோர்வாக இருக்கிறேன் ஓய்வெடுக்க ஒரு இடம்.மட்டும் தேவை "என்று அந்த மனிதன் கோரினான் . மாமரம்: "நல்லது! தம்பி வா என்னுடைய வேர்களில் , அமர்ந்துசாய்ந்து ஓய்வெடுத்துகொள். " எனக்கூறியது உடன் அந்த மனிதன் மாமரத்தின் வேர்களில் சாய்ந்த உட்கார்ந்து ஓய்வெடுக்க துவ்ஙகினான், மாமரமானது மகிழ்ச்சியுடனும் கண்ணீருடனும் சிரித்து மகிழந்தது. நாம்சிறுவர்களாகஇருந்தபோது நம்முடைய பெற்றோர்கள்நமக்கு தேவையான உணவினை அளித்து நாம் நோய்நொடி இன்றி நன்றாக வளருவதற்கு தேவையானவகையில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்கள் அதன்பின்னர் நம்க்கு போதுமான கல்வியறிவு பெறச்செய்தார்கள் பின்னர் நல்ல வேலைவாய்ப்பினை பெற்று தந்தார்கள் அதன்பின்னர் நமக்கு திருமனம் செய்து நாம் வாழ்வதற்கான வீடுவாசல் போன்ற வசதிகளை அளித்தார்கள் அவ்வாறானஅனைத்தையும் தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை தம்முடைய பிள்ளைகள் நன்கு வாழவேண்டும் என தியாகம் செய்து நம்மை காத்து வளர்த்தார்கள் ஆனால் நாம் அனைவரும் வளர்ந்து பெரிய மனிதனாக மாறியபோது நம்முடைய பெற்றோர்களை பேணி பாதுகாத்திடாமல் அவர்களிடம் இருந்து அனைத்தையும் பறித்து கொண்டு அவர்களை நடுத்தெருவில் நிர்கதியாக விட்டுவிடுகின்றோம் இது சரியா

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...