நான் நெடுஞ்சாலையின் நடைபாதையில்நடந்து சென்றுகொண்டிருக்கும்போது வழியில் ஒரு மின்கம்பத்தில் சிறு துண்டு காகிதத்தில் ஒரு சிறிய குறிப்பு இருந்ததை கண்டேன் அதில்என்னதான் உள்ளது என அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தாதல் அதற்கருகில் சென்று பார்த்தபோது. " என்னிடம் வைத்திருந்த 50 ரூபாய் தாள் ஒன்றினை இந்த நெடுஞ்சாலையில் தவறவிட்டிட்டேன், அடுத்தவேளை சாப்பிடுவதற்கு எனக்கு அதனை தவிர வேறு தொகை எதுவும் என்னிடம் இல்லை யாராவது சாலையில் அதை கண்டால், தயவுசெய்து பின்வரும் முகவரியிலுள்ள என்னிடம் கொண்டுவந்து கொடுத்தால் நான் உயிர் உள்ளளவும் இந்த நன்றியை மறக்கமாட்டேன் எனக்கு இருகண்களும் தெரியாது அதனால் தயவுசெய்து உதவி செய்யவும்."
நான் அந்த முகவரியைப் தேடிபிடித்து சென்றடைந்தேன் சிறிய பழையகாலத்து வீடாக இருந்தது அதன் கதவினை தட்டிவிட்டு திறந்து வீட்டின் உட்புறம் செல்லஆரம்பித்ததும் என்னுடைய கதவு தட்டுதல் சத்தத்தையும் காலடி சத்தத்தைதயும் கேட்ட அந்த பார்வை தெரியாதவர் யார் என்று கேட்டார்.
இந்த சாலை வழியாக வந்தேன் சாலையில் இந்த, ரூ. 50 ஐ கண்டெடுத்தேன் அதனை உங்களிடம் ஒப்படைக்க விரும்புகின்றேன். எனக்கூறியதை கேட்டு கண்தெரியாத அந்த தாய் அழ ஆரம்பித்தாள். "ஐயா இதுவரையில் இவ்வாறு கூறி 30-40 பேர் வந்து என்னிடம் 50 ரூபாய் தாளை தாங்கள் சாலையில் கண்டுபிடித்ததாக கொடுத்து சென்றனர் அந்த அறிவிப்பினை நான் எழுதவில்லை, எனக்கு சரியாகப் படிக்கவும் எழுதவும் தெரியாது . " என கூறினார்
அந்த குறிப்பை யார் எழுதியிருக்கலாம் என்று ஒரு மில்லியன் கேளவியுடன் அந்த கண்தெரியாத மூதாட்டியின் வீட்டிலிருந்த திரும்பிவந்து கொண்டே யோசித்தபோது அந்த கண்தெரியாத மூதாட்டிக்கு உதவுவதற்காக ..யாரோ ஒரு நல்ல உதவும் உள்ளம் கொண்ட மனிதன் எழுதி கட்டியிருப்பார் என சமாதானத்துடன்என்னுடைய அடுத்தபணியை செய்திட சென்றேன்
நாமும் நம்மால் முடிந்த இதைபோன்ற உதவிகளை செய்திடலாமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக