ஞாயிறு, 20 டிசம்பர், 2020

தவறுகளிலிருந்து கற்றல்

 

தாமஸ் எடிசன் எனும் அறிவியல் அறிஞர் மின்சாரத்தில் ஒளிரும் விளக்கை கண்டுபிடிப்பதற்காக இரண்டாயிரம் வெவ்வேறு பொருட்களில் முயற்சித்து கொண்டிருந்தார். எதுவும் திருப்திகரமாக ஒளிதரும் மின்விளக்காக அமையவில்லை அதனால் அவருடன் அந்த ஆய்வகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த, அவரது உதவியாளர் , “ஐயா இரண்டாயிரம் முறை முயன்றும் நம்முடைய பணிகள் அனைத்தும் வீணாக போய்விட்டது நமக்கு இதுவரையில் ஒன்றும் சரியாக அமைய வில்லை, மின்சாரத்தை பயன்படுத்தி மின்சாரத்தில் மிகச்சரியாக ஒளிரும் மின்விளக்கை நம்மால் கண்டுபிடித்திட முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை. ” என மிக மனம் வெறுத்து கூறினான் அதனை தொடர்ந்து எடிசன் மிகவும் நம்பிக்கையுடன் , “ஓ, அப்படியா தம்பி நாம் வெகுதூரம் வந்துவிட்டோம், போன்றிருக்கின்றதே பரவாயில்லை ஒரு நல்ல ஒளி விளக்கை உருவாக்க நம்மால் பயன்படுத்த முடியாத இரண்டாயிரம் தவறுகள் இருப்பதை நாம் அறிவோம் அவைகளிலிருந்த நாம் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம்.அதே தவறினை மீண்டும் செய்யாது முயற்சிசெய்தால் நாம் கண்டிப்பாக வெற்றிபெறுவோம்” என நம்பிக்கை ஏற்படுத்தினார் : ஆம் நம்முடைய தவறுகளிலிருந்தும் அதனை வெற்றியாக்குவதற்கு நாம் கற்றுக்கொள்ளமுடியும்.

சனி, 5 டிசம்பர், 2020

அமெரிக்க சுற்றுலாபயனியும் தமிழக மீனவர்ஒருவரும் - வாழ்க்கை பாடம்

 
ஒரு அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் தமிழ்நாட்டின் கடற்கரையோர சிறியதொரு மீனவ கிராமத்தின் அருகில் உல்லாச சுற்றுலா படகில் நின்று பயனம் செய்து கொண்டிருந்த போது மீனவர் ஒருவரின் சிறிய மீன்பிடி படகு அந்த உல்லாச சுற்றுலாபடகிற்கு அருகே வந்துவிட்டது. அச்சிறிய படகில் அம்மீனவர் பிடித்து கொண்டுவந்த மீன்கள் குவியலாக இருந்தன. அமெரிக்கர் அம்மீன்கள் தரம் குறித்தும் ஏராளமானஅளவில்மீன்களை அம்மீனவர் பிடித்துகொண்டுவருவதை குறித்தும் அம்மீனவரைப் பாராட்டினார். "இம்மீன்களைப் பிடிக்க எவ்வளவு நேரம் ஆனது?" என அமெரிக்கர் அம்மீனவரிடம் வினவினார். "இப்போதுதான் கடலிற்குள் சென்றேன் ஐயா!மிககுறைந்த நேரத்தில் இந்த மீன்களை பிடித்துகொண்டு திரும்பிவருகின்றேன் ஐயா!" என அம்மீனவர் மிகவும் பணிவுடன் பதிலளித்தார். "அதுசரி இவை உங்களுக்கு போதுமா? நீங்கள் ஏன் அதிக நேரம் கடலிற்குள் இருந்து மிகஅதிக மீன்களைப் பிடிக்கக்கூடாது?"என அமெரிக்கர் அம்மீனவரிடம் வினவியபோது மீனவர் "இது எனது குடும்பத்தின் தேவைகளை ஆதரிக்க போதுமானது ஐயா!" என்று கூறினார்.. தொடர்ந்து அந்த அமெரிக்கர் அம்மீனவரிடம் "ஆனால் உங்களுடைய மீதமுள்ள நேரத்தை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என சந்தேகம் எழுப்பியபோது மீனவர் , “நான் தினமும் கடலிற்குள் சென்று மிககுறைந்த நேரம் மட்டும் , கொஞ்சம் மீன் பிடித்தபிறகு,மிகுதிநேரத்தில் என் குழந்தைகளுடன் விளையாடுகிறேன், என் மனைவி யுடனும் பிள்ளைகளுடன் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்துகின்றேன், ஒவ்வொரு நாள் மாலையும் கிராமத்தில் உலா வருகிறேன், சக உறவினர்களுடனும் நண்பர்களுடனும சேர்ந்து ஏதேனும் இசையை வாசிகின்றேன். என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொருநாளின் முழுநாளும் ஏதாவது பணி இருந்துகொண்டே யிருக்கின்றதுஐயா! ” என விவரமாக கூறினார்: அதனை தொடர்ந்து அமெரிக்கன் அமமீனவரை கேலி செய்தார்: “நான் ஒரு ஹார்வர்ட் பல்கலைகழக எம்பிஏ, மீன்பிடித்து விற்பணை செய்திடும் உங்களுடைய மீன்வியாபாரத்தில் நீங்கள் முன்னேறுவதற்கு என்னால் உதவ முடியும். நீங்கள் மீன்பிடிக்க தற்போத செலவிடும் நேரத்தை விட அதிக நேரம் செலவிட வேண்டும், அதனால் அதிகஅளவு மீன்களை பிடிக்கலாம் அதனால் அதிக வருமானம் ஈட்டமுடியும் அவ்வாறான அதிக வருமானத்தினால் நீங்கள் ஒரு பெரிய படகு வாங்கலாம், தொடர்ந்து அப்பெரிய படகிலிருந்து கிடைக்கும் வருமானத்துடன், அதிக எண்ணிக்கையில் மீன்பிடி படகுகளை வாங்கலாம்.அதனால் அதிக அளவு மீன்களை பிடித்து அதிக வருமானத்தினை ஈட்டலாம் இறுதியில் நீங்கள் மீன்பிடி படகுகளுடன் கூடிய பெரிய கப்பலை வாங்கி மீன்பிடித்து கொண்டுவருவதற்காக பயன்படுத்தலாம். அதனை தொடர்ந்து நீங்கள் பிடித்த மீன்களை ஒரு இடைத்தரகருக்கு விற்பதற்கு பதிலாக, நீங்களே நேரடியாக நுகர்வோருக்கு விற்பதற்கான கட்டமைப்பினை உருவாக்கி மீன்விற்பணை முழுவதும் உங்கள் கட்டுபாட்டில் கொண்டுவரலாம் மேலும், இறுதியில் உங்களுடைய மீன்களை பதப்படுத்திடும் உங்களுடைய சொந்த தொழிற்-சாலையை உருவாக்கலாம். அதன் மூலம் மீன்பதப்படுத்திடும் தயாரிப்பு, செயலாக்கம் , விநியோகம் ஆகிய அனைத்தையும் நீங்கள் ஒருவரே கட்டுப்படுத்திடமுடியும். அதனால் இந்த சிறிய கடலோர மீன்பிடி கிராமத்தை விட்டு வெளியேறி சென்னை மும்பை போன்ற மிகப்பெரிய நகரங்களுக்கு நீங்கள் குடிபெயர்ந்த பின்னர் இறுதியில் உங்களுடைய மீன்வியாபாரத்தினை இந்தியா முழுவதும் விரிவடைந்துவரும் மிகப்பெரிய நிறுவனமாக உங்களுடைய நிறுவனத்தை நடத்துவீர்கள். ” என தன்னுடைய மீன் வியாபாரத்தினை மேம்படுத்திடும் கருத்துகளை மிக நீண்ட சொற்பொழிவுடன் விவரித்தார் அச்சொற்பொழிவின் இறுதியில் அம்மீனவர் : "ஆனால், ஐயா!, இவ்வாறு வளர்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?" என சந்தேகம் எழுப்பினார் அதற்கு அமெரிக்கர் : "சுமார் 15முதல் 20 ஆண்டுகள் ஆகும் ."என க்கூறினார் "சரிதான் ஐயா! ஆனால், அதன்பின்னர் என்ன செய்யவேண்டும்? என அம்மீனவர் மீண்டும் கேள்வி எழுப்பியபோது அமெரிக்கர் சிரித்துக் கொண்டே : “அதுவே சிறந்த நேரம் அனைத்தும் மிகச்சரியாக இருக்கும்போது, ​​நீங்கள் உங்களுடைய நிறுவனத்தில் - பொது சலுகையை அறிவிப்பீர்கள், மேலும் உங்கள் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்று மிகவும் பணக்காரராகி விடுவீர்கள். ”எனக்கூறினார் “அதன்பிறகு ? ” என அம்மீனவர் தொடர்ந்து சந்தேகம் எழுப்பியபோது அமெரிக்கர் மிகமெதுவாக : “அதன்பிறகு நீங்கள் உங்களுடைய வியாபாரத்திலிருந்து ஓய்வு பெறுவீர்கள். ஒரு சிறிய கடலோர மீன்பிடி கிராமத்திற்குச் செல்வீர்கள், அங்கு நீங்கள் தாமதமாக தூங்கலாம், கொஞ்சம் மீன் பிடிக்கலாம், மிகுதிநேரத்தில் உங்களுடைய குழந்தைகளுடன் விளையாடிடலாம், உங்களுடைய மனைவி யுடனும் பிள்ளைகளுடன் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்தலாம், ஒவ்வொரு நாள் மாலையும் கிராமத்தில் உலா வரலாம், சக உறவினர்களுடனும் நண்பர்களுடனும சேர்ந்து ஏதேனும் இசையை வாசிக்கலாம் ” என பதில் கூறியபோது ”அதைத்தான் ஐயா! இப்போது நான் செய்து கொண்டிருக்கின்றேன்” என்றார் அந்த மீனவர் இறுதியாக.

சனி, 28 நவம்பர், 2020

புத்திசாலி தனமான திருடன்

 முன்பு ஒருகாலத்தின் அன்பு என்பவன் மிகவும் புத்திசாலியானதிருடனாக இருந்துவந்தான் .ஆயினும் அன்பு எப்போதும் பணக்காரர்களிடமிருந்து பொருட்களையும் பணத்தையும் திருடி வயதானவர்களுக்கும்,நோய்வாய் பட்டவர் களுக்கும் ஏழைஎளியவர்களுக்கும் அதாவது உதவி தேவைப்படுவர்கள் அனைவருக்கும் அவற்றை பிரித்து பகிரந்து வழங்குவது அன்பினுடைய வழக்கமான செயலாகும். இவ்வாறான திருடிய பொருட்களை ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்ற அன்பினுடைய செயலை மற்ற திருடர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளமறுத்தனர் அதனால் அவர்கள் அனைவரும் நம்முடைய பிழைப்பை இந்த அன்பு கெடுத்துவிடுவான் அதனாஆல் அன்பு எங்காவது திருடிடும்போது காட்டிகொடுத்தல் அல்லது திருடவே முடியாத இடத்தில் திருடுமாறு செய்து இந்த திருட்டு தொழிலிலிருந்து அன்பை விரட்டிவிடவேண்டும் என ஒருமனதாக முடிவுசெய்தனர் .அதற்காக ஒரு நாள் அவர்கள் அன்பு என்ற திருடனிடம் அந்நாட்டு அரசன் போட்டிருக்கின்ற உடையை தங்களால் திருடி கொண்டுவரமுடியும் என்றும் அன்பினால் அவ்வாறு அரசன் அணிந்து கொண்டிருக்கின்ற உடையை திருடிகொண்டுவரமுடியுமா எனவும் அவ்வாறு அரசன் அணிந்து கொண்டிருக்கின்ற உடையை திருடிகொண்டுந்தால் அன்பினை தங்களுடைய கூட்டத்தின் தலைவனாக ஏற்றுக்கொள்வோம் எனும் புதிய போட்டிஒன்றிற்கு அழைத்தனர் .அந்த போட்டியை அன்பு ஏற்றுகொண்டான் அதற்கான ஆயத்த பணிகளை செய்தபின்னர் இறுதியாக, அரசனுடைய அரண்மனைக்கு சென்றான் . அப்போது அரசன் தன்னுடைய படுக்கையில் படுத்து தூங்கி கொண்டுஇருப்பதை கண்டவுடன் தன்கைவசம் நிறைய கட்டெறும்புகளை பாதுகாத்து வைத்திருந்த கண்ணாடி புட்டியின் மூடியை திறந்து விட்டான். உடன் அடைபட்டிருந்த கட்டெறும்புகள் சுதந்திரமாக வெளியேறி அரசனின் உடல்முழுவதும் கடிக்கஆரம்பித்தன.ஏராளமான கட்டெறும்புகள் அரசனின் உடல்முழுவதும் கடிக்கஆரம்பித்ததால் வலிதாளாமல் அரசன் விழித்தெழுந்து கத்தி கூப்பாடு போடஆரம்பித்தான் உடன் அரண்மனையில் பணிபுரியும் பணியாளர்கள் விரைவாக அரசனின் படுக்கை அறைக்கு ஓடிவந்து அரசனுடை உடலை கடித்து கொண்டிருந்த கட்டெறும்புகளை துடைத்து எறியத்துவங்கினர் இந்நிலையில் அன்பு எனும் திருடன் அரசனுடைய பணியாளரில் ஒருவனைன்போன்று அரசனின் உடையை கழற்றுவதற்கு உதவிசெய்து அதனை அரண்மனையுில் வேறு அறையில் வைப்பதற்கு எடுத்து செல்வதை போல நாடகமாடி அவைகளை எடுத்து கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி மற்ற திருடர்களிடம் கொண்டுசென்று அரசன் அணிந்திருந்த உடைகளைதான்திருடி வந்ததை காண்பித்தான். அதனை தொடர்ந்து திருடர்கள் போட்டியின் விதியின்படி மறுபேச்சு எதுவும் பேசாமல் அன்பினை தங்களுடைய கூட்டத்தின் தலைவனாக ஏற்றுக்கொண்டனர் .
எப்போதும் புத்திசாலித்தனமாக இருந்திடுக

சனி, 14 நவம்பர், 2020

நிர்வாகத்திற்கு அவர்களின் பணியாளர்கள் அனைவருடைய அடையாளமும் தெரியுமா?

ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உற்பத்தி சரியாக நடைபெறுகின்றதா தொழிலாளர்கள் அனைவரும் விழிப்புடன் பணிபுரிகின்றனரா என ஆய்வு செய்வதற்காக தங்களுடைய தொழிற்சாலைக்குள் பார்வை யிட்டு கொண்டே சென்றபோது, ஒரு இளைஞன் மட்டும், பணி எதுவும் செய்யாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு வெட்டியாக பொழுது போக்குவதைக் கவனித்தார் . உடன் அந்த இளைஞனை அருகில் அழைத்து , "நீங்கள் மாதம் ஒன்றிற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்?" என நிருவாக இயக்குநர் வினவினார் . அந்நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் தன்னிடம் இது போன்ற தனிப்பட்ட கேள்வி கேட்கப்பட்டதில் அந்த இளைஞன் மிகவும் ஆச்சரியப்பட்டான், இருந்தபோதிலும் , "ஐயா! நான் ஒரு மாதத்திற்கு ரூ.20000.00 சம்பாதிக்கிறேன், ஐயா! என்னிடம் ஏன் அவ்வாறு கேட்கின்றீர்கள்? ஐயா !" என அந்த இளைஞன் பதிலுக்கு அவரிடம் வினவினான். உடன் நிருவாக இயக்குநர் பதிலேதும் சொல்லாமல், தனது பணப்பையிலிருந்து ரூ.60000.00 பணத்தை எடுத்து எண்ணிக்கை செய்து அந்த இளைஞனிடம் கொடுத்து, "இங்கே தொழிற்சாலையில் பணி செய்வதற்காக மட்டுமே தொழிலாளர்களுக்கு சம்பளம் தருகிறேன், வெட்டியாக பணிஎதுவும் செய்திடாமல் பொழுது போக்குவதற்காக அல்ல! இதோ உங்களுடைய 3 மாத சம்பளம், வாங்கி கொண்டு இப்போதே நீங்கள் இந்த தொழிற்சாலையில் விட்டு வெளியில் செல்லலாம் நாளைமுதல் நீங்கள் இங்கு பணிசெய்வதற்காக திரும்பி வர வேண்டாம் ".என க்கூறி அந்த இளைஞனை விரட்டினார் அதனை தொடர்ந்து அந்த இளைஞனும் தொழிற்சாலையிலிருந்து விரைவாக வெளியேறிச் சென்றான். பின்னர் அந்த தொழிற்சாலையின் நிருவாக இயக்குநர் அருகில் நின்றுகொண்டிருந்த ஒருசில பணியாளர்களிடம் , "இதே செயல் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் உங்கள் அனைவருக்கும் பொருந்தும்".என்று மிகவும் கோபத்துடன் கூறினார் அதன் பின்னர் அங்குஇருந்த தொழிலாளர்களில் ஒருவரை அழைத்து, "நான் இப்போது பணியை விட்டு வெளியேற்றிய இளைஞன் யார்?" என வினவினார் அதற்கு அந்த தொழிலாளியிடமிருந்து - "அந்த இளைஞன் தேநீர் இடைவேளையில் தொழிலாளர் அனைவருக்கும் தேநீர் வழங்கிடுபவன், ஐயா!" எனும் ஒரு அற்புதமான பதில் வந்தது.


சனி, 7 நவம்பர், 2020

ஒரு போர்வீரனின் கதை


வியட்நாம் நாட்டுடனான போரில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்த கொண்டிருந்த ஒரு போர்வீரன் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து தனது பெற்றோரை தொலைபேசியில் அழைத்தார். “அம்மா! அப்பா!, நான் இப்போது வியட்நாம் நாட்டுடனான போர்முடிந்து நமது வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருக்கின்றேன், ஆனாலும் உங்களிடம் ஒரு கோரிக்கை ஒன்று உள்ளது. அதை நிறைவேற்றுவீர்களா ?." என தன்னுடைய பெற்றோரிடம் கோரியபோது,அவனது பெற்றோர்கள் “மகனே! நன்றாக இருக்கின்றாயா உன்னுடைய கோரிக்கையை கூறு நாங்கள் கண்டிப்பாக நிறைவேற்றிடுவோம்." என உறுதி அளித்தார்கள் . அதனை தொடர்ந்து “ அதாவது , என்னுடன் சக போர்வீரர் நண்பர் ஒருவரை நம்முடைய வீட்டிற்கு அழைத்து வர விரும்புகின்றேன். " என அந்த போர்வீரன் கூறினான். உடன் அந்த போர்வீரனுடைய பெற்றோர்கள்,“மகனே ! கண்டிப்பாக நாங்கள் அவரை சந்திக்க விரும்புகிறோம்" என பதிலளித்தனர். தொடர்ந்து “ஆனாலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது,” என்று அவர்களுடைய மகன் கூறியபோது ,“அந்த செய்தி என்னவென்று கூறு மகனே !" என மிகஆவலுடன் பதிலளித்தனர். “நடந்துமுடிந்த வியட்நாம் போரில் நண்பர் மிகவும் மோசமாக காயமடைந்து ஒரு காலையும் ஒரு கையையும் இழந்து விட்டார் .அதனால் நம்மை போன்று அவரால் நன்றாக நடக்கவும் வாழவும் முடியாது. அவர் வேறு எங்கும் செல்லவிரும்பவில்லை, அதனால் அவர் நம்முடன் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ”எனக்கூறினார். அதனை தொடர்ந்து “அவருடைய இந்த நிலையை கண்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்மகனே! இருந்தபோதிலும், அவர் வேறு எங்காவது அனாதைகள் இல்லத்தில் வாழலாம் அல்லவா! ” என அந்த போர்வீரனின் பெற்றோர்கள் பதில் கூறியபோது அவர்களுடைய மகன் "இல்லை!இல்லை! அவர் நம்முடன் நம்முடைய வீட்டில் மட்டுமே வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."என பிடிவாதமாக கூறியபோது “மகனே!, நீ என்ன கேட்கின்றாய் என்று உனக்குத் தெரியாது. அத்தகைய ஊனமுற்ற ஒருவர் நம்முடன் இருக்க அனுமதித்தால் அவர் நமக்கு பயங்கர சுமையாக இருப்பார்.நாம் வாழ்வதற்கு நம்முடைய சொந்த வாழ்க்கை இருக்கிறது, இதுபோன்று தேவையில்லாத சுமைஒன்றை தூக்கிகொண்டு செல்லுமாறான நிலைக்கு அனுமதிக்க முடியாது. நீ மட்டும் நம்முடைய வீட்டிற்கு வந்து சேர் உன்னுடைய நன்பரை மறந்துவிடு. உன்னுடைய நண்பர் தான் சுயமாக வாழ அவரே ஏதாவது ஒரு வழியைக் கண்டு பிடிப்பார். ” என மறுத்து பேசினர் .அதனை தொடர்ந்து அவர்களுடைய மகன் தொலைபேசியை பாதியில் வைத்துவிட்டான். அவர்களுடைய மகனிடமிருந்து வேறு எந்த தகவலும் அந்த போர்வீரனின் பெற்றோர்களுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், ஒருசில நாட்களுக்குப் பிறகு, அந்த போர்வீரனின் பெற்றோர்களுக்கு சான் பிரான்சிஸ்கோ போலீசாரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பின்போது அவர்களது மகன் ஒரு கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டான் என்ற தகவல் அவர்களிடம் கூறப்பட்டது. இது ஒரு தற்கொலை என்று போலீசார் நம்பினர். அந்த பெற்றோர்கள் சான் பிரான்சிஸ்கோவிற்கு மிகவும் மனவருத்ததுடன் விரைந்து சென்றனர் அங்கு அவர்களுடைய மகனின் உடலை அடையாளம் காண அந்நகர சவக்கிடங்கிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்நகர சவக்கிடங்கில் தங்களுடைய மகனை அடையாளம் கண்டுகொண்டனர், ஆனால் அவர்களின் மகனுக்கு ஒரு கையும் ஒரு காலும் மட்டுமே இருந்தன. என்ற அவர்கள் அறியாத ஒன்றையும் கண்டுபிடித்தனர், அதனை தொடர்ந்து அதிக மனவருத்தத்துடன் “ஐயய்யோ! தன்னுடைய உடல் குறையை மறைத்து உடல் குறைபாடுடை தன்னுடைய நண்பனசேர்ந்து வாழ அனுமதிகோட்டதை மறுத்துவிட்டோமே!" என அந்த போர்வீரனின் பெற்றோர்கள் அழுது புரண்டனர் .

நீதி : இந்த கதையில் வரும் பெற்றோர்களை போன்றே நம்மில் பலரும் வாழ்ந்துவருகின்றோம். அதாவது உடல் குறையில்லாத சகமனிதர்களிடம் நாம் அன்புசெலுத்தவிழைவோம் , ஆனால் உடல் குறையுடன் நமக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அல்லது நமக்கு சங்கடத்தை உருவாக்கும் நபர்களை நாம் ஒருபோதும் அன்பு செலுத்த விரும்புவதில்லை. அதாவது உடல்குறையுள்ளவர் களிடமிருந்து நாம் விலகி இருப்போம். அதாவாது இவ்வாறானவர்கள் நமக்கு சுமையாக இருப்பார்கள் என நினைத்து அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழவிரும்புவோம்ஆனாலும் அவ்வாறானவர்களிடம் அன்பு செலுத்தவும் சகமனிதர்கள் போன்று அரவணைத்து செல்லவும் வேண்டும்.



சனி, 31 அக்டோபர், 2020

மற்றவர்களுக்கு உதவுதல்

 
முன்பு ஒருகாலத்தில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சங்கர் எனும் சிறுவன் ஒரு கிராமத்தில் வாழ்ந்துவந்தான். ஒரு நாள், அவன் அருகிலுள்ள காட்டில் கொஞ்சம் மரங்களை சேகரித்து சுமையாக கட்டி தலையில் சுமந்து கொண்டு காடு வழியாக தன்னுடைய வீட்டிற்கு திரும்பவந்து கொண்டிருந்தான்.அப்போது மிகவும் பசியுடன் இருந்த ஒரு வயதானவரை பார்த்தான். அந்த வயதானவர் பசியாறுவதற்கு அந்த சிறுவன் சிறிது உணவு கொடுக்க விரும்பினான், ஆனால் அவன் கைவசம் கொடுப்பதற்கான உணவு இல்லை. எனவே தனது வழியில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான் .அவ்வழியில், மிகவும் தாகமாக இருந்த ஒரு மானைக் கண்டான். அந்த தாகமான மானிற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுக்க விரும்பினான், ஆனாலும் அந்த மானிற்கு கொடுப்பதற்காக தண்ணீர் அவன் கைவசம்இல்லை. எனவே அந்த சிறுவன் தொடர்ந்து காடுவழியே பயனித்து கொண்டிருந்தான்.
பின்னர் மனிதர்கள் தங்குவதற்கு ஏதுவானசிறு குடில் போன்று கட்டி கொண்டிருந்த ஒருவரைப் பார்த்தான், ஆனால் அந்த குடிலை கட்டி முடிப்பதற்கு போதுமான மரம் அவரிடம் இல்லை. சங்கர் அந்த மனிதனது பிரச்சினையைக் கேட்டு அறிந்து கொண்டு அதற்கு தீர்வாக தன்கைவசம் இருந்த மரங்களின் கட்டினைஅவரிடம் கொடுத்து அதனை கொண்டு அந்த மனிதன் தங்குவதற்கு போதுமானகுடிலை கட்டிடுமாறு கேட்டு கொண்டான் அந்த மனிதன் மிக்கமகிழ்ச்சியுடன் சங்கர் கொடுத்த அந்த மரங்களை கொண்டு தான் தங்குவதற்கான குடிலை கட்டிமுடித்தார். மேலும் பதிலுக்கு, சங்கருக்கு கொஞ்சம் உணவும் தண்ணீரும் கொடுத்தார். இப்போது சங்கர் திரும்பிதான் வந்த வழியே திரும்பசென்று வயதான கிழவனிற்கு தனக்கு கிடைத்த உணவினை கொடுத்தான் . மேலும் அந்த மானின் தாகம் தீர்ப்பதற்கு தேவையானதண்ணீரை யும் கொடுத்தான். அதனால் அந்த பசியுடன்இருந்த வயதான கிழவனும் தாகத்துடன் இருந்த மானும் தங்களுடைய தேவை நிறைவு செய்யபட்டதால் மிகவும் மகிழ்ச்சியாக தங்களுடைய அடுத்தபணிகளை கவணிக்க சென்றனர். அதனை தொடர்ந்து சங்கரும் மகிழ்ச்சியுடன் தனது வழியில் பயனம் செய்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான்.
அதன்பின்னர், ஒரு நாள் சங்கர் அந்த காட்டின் அருகிலிருந்த மலையில் ஏறமுயன்றபோது அம்மலையிலிருந்து கீழே உருண்டு விழுந்தான். அதனால் சங்கர் அதிக அடிபட்டு மிக்க வலியுடன் துடித்துகொண்டிருந்தான், அதனால் அவனால் நகரகூட முடியவில்லை, அங்கு அவனுக்கு உதவ யாரும் இல்லை. ஆனால், முன்பு சங்கர் உணவுகொடுத்து உதவிய முதியவர், அந்நிகழ்வினை பார்த்துமிக விரைவாக வந்து கீழே விழுந்திருந்த சங்கரை தூக்கி உட்கார வைத்தார். சங்கரின உடலில் ஏராளமானஅளவில் காயங்கள் இருந்தன. முன்னர் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த மானானது சங்கருடைய காயங்களைக் கண்டு விரைவாக காட்டிற்குள் சென்று ஒருசில மூலிகைகளைக் கொண்டு வந்தது அந்த வயதான மனதின் அந்த மூலிகைகளை கொண்டு அந்த காயங்கள் அனைத்தையும் சாறுபிழிந்து கட்டுகட்டி மூடி மெதுவாக அவனுடைய வீட்டிற்கு கொண்டுசென்று சேர்த்தார். அதனால் விரைவில் அவனுடைய உடலில் ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் ஆறிவிட்டன சங்கரும் முன்பு போன்று எழுந்து நடமாடிடுமாறு பழையநிலைக்கு நலமாகிவிட்டான் ஒருவர் மற்றொருவருக்கு உதவயிதால் இவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடனும் வாழ்ந்து வந்தனர்.
நீதி: நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தால், அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

சனி, 24 அக்டோபர், 2020

ஒருவர் எவ்வாறான மனிதன் என முடிவுசெய்திடும் முன் நன்கு சிந்தியுங்கள்

 
ஒருசிறுவனின் உயிர்பிழைப்பதற்காக அவசரமாக ஒருஅறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என அழைக்கப்பட்டதால் மருத்துவர் ஒருவர் மருத்துவமனைக்குள் விரைவாக நுழைந்தார். அறுவை சிகிச்சைக்கு தேவையான தன்னுடைய உடைகளை விரைவாக மாற்றிக்கொண்டு நேரடியாக அறுவை சிகிச்சை பகுதிக்குள் சென்றார். அங்கு வாயிலில் அறுவுசை செய்யவேண்டிய சிறுவனின் தந்தை அந்த மருத்துவக்காகக் காத்திருப்பதைக் கண்டார்.அப்போது அந்த மருத்தவரைப் பார்த்து தந்தை, “நீங்கள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டீர்கள்? எனது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்கு ஏதாவது பொறுப்புணர்வு இருக்கின்றதா பணிநேரத்தில் மருத்துவமனையில் இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என அழைத்தபின்னர் மட்டும் அவசரஅவசரமாக ஓடி வருகின்றீர்களே இது சரியா? ”என வாயில் வந்தவாறு கேள்வி கேட்டு கொண்டிருந்தார்.
மருத்துவர் புன்முறுவலுடன், “மன்னிக்கவும், முக்கியமான பணியொன்று இருந்ததால் நான் மருத்துவமனையில் இல்லை, அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்ற அழைப்பைப் பெற்ற பிறகு என்னால் முடிந்தவரை வேகமாக வந்து சேர்ந்தேன், இப்போது, நீங்கள் அமைதியாக இருந்தால் , நான் என் பணியை சரியாக ச் செய்துமுடிக்க முடியும்”. என பதில் கூறினார் .அதனை தொடர்ந்து அந்த அறுவைசிகிச்சை செய்யவேண்டிய சிறுவனின் தந்தையானவர் "என்ன பெரிய அமைதி! உங்களுடைய மகன் இப்போது இந்த நிலையில் இருந்தால்,உங்களால் அமைதியாக இருக்கமுடியுமா? நான் உங்களுக்காக காத்திருப்பதை போன்று உங்களுடைய சொந்த மகன் இவ்வாறு இருந்தால் நீங்கள் இவ்வாறுதான் அமைதியாக இரு என கூறிகொண்டிருப்பீர்களா ?? ” என கோபமாக கேள்விகளை எழுப்பி கொண்டிருந்தார். மருத்துவர் மீண்டும் புன்னகைத்து, “ அனைத்தும் இயற்கையின் செயலே நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம், உங்களுடைய மகன் மீண்டும் பழையநிலைக்கு வந்துவிடமுடியும் என நம்புங்கள்” என்று பதிலளித்தார்.
"யாருக்கும் துன்பம் வந்தால் தான் தெரியும் ஆனாலும் யாராலும் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவது மட்டும் மிக எளிது" அந்த சிறுவனின் தந்தை முணுமுணுத்தார்.
அந்த அறுவைசிகிச்சைக்கு ஒருசில மணிநேரம் ஆனது, பின்னர் மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியேவந்து, “ஐயா! வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது உங்களுடைய மகன் காப்பாற்றப்பட்டான்! ”என கூறிவிட்டு அந்த சிறுவனுடைய தந்தையின் பதிலுக்காகக் காத்திருக்காமல், “மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், இந்த செவிலியரிடம் கேளுங்கள்” என்று கூறி விட்டு ஓடிசேர்ந்தார்.
“ இவ்வளவு திமிர்பிடித்த மருத்துவர் ஏன்இவ்வளவு வேகமாக ஓடுகின்றார்? ஒருசில நிமிடங்கள் நின்று என்னுடைய சந்தேகங்களை தீர்வுசெய்திட முடியாதா, எனது மகனின் நிலையைப் பற்றி சிறிதுநேரம் விவரம் கூறிவிட்டு செல்லக்கூடாதா “ என அந்த தந்தை மருத்துவர் வெளியேறிய ஒருசில நிமிடங்களுக்குப் செவிலியரைப் பார்த்து தீட்டிக் கொண்டிருந்தார் . அதனை தொடர்ந்து அந்த செவிலியர் கண்ணீர் மல்க அந்த தந்தையிடம் “அவரது மகன் நேற்று ஒரு சாலை விபத்தில் இறந்தார், உங்கள் மகனின் அறுவை சிகிச்சைக்கு நாங்கள் அவரை அழைத்தபோது அவருடை மகனின் அடக்கம் செய்யும் பணியை துவக்கஇருந்தார். அதனால் அந்த பணியை அப்படியே நிறுத்திவிட்டு இங்கு வந்து உங்களுடைய மகனின் அறுவைசிகிச்சை பணியை வெற்றிகரமாக செய்துமுடித்து உங்களுடைய மகனின் உயிரைக் காப்பாற்றிவிட்டார் அதனால், அவர் தனது மகனின் அடக்கம் செய்திடும் பணியை முடிக்க ஓடுகின்றார். ” எனபதில் கூறினார்
நீதி: யாரைபற்றியும் ஒருபோதும் தவறாகமுடிவுசெய்யாதீர்கள், ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, அவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்ற எந்தவிவரமும் மிகச்சரியாக உங்களுக்குத் தெரியாது.

சனி, 17 அக்டோபர், 2020

கப்பலை பழுதுபார்த்திடும் தொழில்நுட்ப அனுபவசாலி

 

ஒரு பெரிய கப்பல் கடலிற்குள் பயனிக்கமுடியாமல் அதனுடைய இயந்திரம் பழுதடைந்து நின்றுவிட்டது.அதனால் அந்த கப்பலின் உரிமையாளர் பல்வேறு பொறியியல் நிபுணர்களையும் அழைத்துவந்து அந்த கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதினை உடனடியாக சரிசெய்திடுமாறு கோரினார்அந் நிபுணர்கள் அனைவரும் எவ்வளவோ முயன்றும் அவர்களில் எவரும் அவ்வியந்திரத்தை எவ்வாறு சரிசெய்து பழையபடி இயங்கசெய்வது என்பதை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பின்னர் அந்த கப்பலின் உரிமையாளர் சிறு வயதிலிருந்தே கப்பல்களின் பழுதுகளை சரிசெய்திடும் பணிமேற்கொண்டிருந்த மிகவும் அனுபவசாலியான வயதானதொழில்நுட்ப பணியார் ஒருவரை அழைத்து வந்து அந்த கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதினை சரிசெய்து பழையபடி இயங்கிட செய்திடும்படி கோரினார். அவ்வாறான கப்பல்களின் இயந்திரத்தின் பழுதுகளை சரிசெய்வதில் மிகநீண்ட அனுபவமிக்க தொழில்நுட்ப பணியாளரான அவர் ஒரு பெரிய பையில் ஏராளமான கருவிகளை தன்னுடன் எடுத்து வந்தார், அவர் வந்ததும் உடனடியாக தன்னுடைய பணியை துவங்கினார் அதாவது . அவர் அந்த கப்பலின் இயந்திரத்தின் அடிமுதல் முடிவரை முழுவதையும் மிகவும் கவனமாக ஆய்வு செய்தார். கப்பலின் உரிமையாளரும், அனுபவசாலியான இந்த தொழில்நுட்ப பணியாளர் என்னதான் செய்கின்றார் என தெரிந்துகொள்வோமேஎன அங்கு அவ்வயதுமுதிர்ந்த தொழில்நுட்ப பணியாளரின் பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார் , மேலும் அந்த கப்பலின் உரிமையாளர் அந்த கப்பலின் இயந்திரத்தில் என்ன பழுது ஏற்பட்டது என அனுபவசாலியான இந்த தொழில்நுட்பபணியாளரால் கண்டு பிடித்திட முடியும் மேலும் அதனை எவ்வாறு சரி செய்வது என்றும் அவருக்கு தெரியும் என்று நம்பினார். தொழில்நுட்ப அனுபவசாலியான அம்முதியவர் அந்த கப்பலின் இயந்திரத்தினை அடிமுதல் முடிவரை முழுவதும் ஆய்வுசெய்து பார்த்த பிறகு, இறுதியாக பல்வேறு கருவிகளைவைத்து தன்னுடன் எடுத்துகொண்டுவந்திருந்த தன்னுடைய கருவிகளின் பையில் இருந்து ஒரு சிறிய சுத்தியலை மட்டும் வெளியே எடுத்தார். பின்னர் அந்த கப்பலின் இயந்திரத்தின் எதையோ மெதுவாக தட்டி கொட்டி சரி செய்த பின்னர். அந்த கப்பலின் இயந்திரத்தினை இயக்குமாறு கோரினார் என்ன ஆச்சரியம் அவ்வியந்திரத்தின் பழுது எளிதாக சரி செய்யப்பட்டுவிட்டது! இவ்வளவு நேரம் பொறியியல் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பலரும் பல்வேறு வகையில் பலமணிநேரம் முயன்றும் அவ்வியந்திரத்தின் பழுதினை கண்டுபிடித்திட முடியாத அந்த கப்பலின் இயந்திரமானது தற்போது சரியாக இயங்கதுவங்கி மிகப்பிரமாதமாக ஓடியது .அதனை தொடர்ந்து தொழில்நுட்ப அனுபவசாலியான அம்முதியவர் அந்த சிறு சுத்தியலை பழையபடி கருவிகளின் பையில் வைத்து அந்த பையை எடுத்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பி சென்றார் . ஒரு வாரம் கழித்து, அந்த கப்பலின் உரிமையாளருக்கு அம்முதிய தொழில்நுட்பபணியாளரிடமிருந்து ரூபாய்.10,000/-இற்கான பட்டியல் வந்தது அதனை கண்டவுடன் . "என்ன? ஒன்றுமே செய்யவில்லை! சிறிய சுத்தியலை மட்டும் மெதுவாக இயந்திரத்தினை தட்டி கொட்டி சரிசெய்ததற்கு ரூபாய்.10,000/- கூலியா" என உரிமையாளர் கூச்சலிட்டார். எனவே அந்த கப்பலின்முதலாளி அம்முதிய தொழில்நுட் ப பணியாளருக்கு "தயவுசெய்து இந்தபட்டியலிற்கான விவரங்களை அனுப்பிடுக" என்று கோரியபோது அனுபவ சாலியானஅம்முதியதொழில்நுட் ப பணியாளர் ஒரு குறிப்பினை அனுப்பியிருந்தார். அதில்:
சிறியசுத்தியலால் இயந்திரத்தினை தட்டுவதற்கானகூலி … .. ரூ.10.00
அந்த இயந்திரத்தில் எங்கு தட்டுவது என்று தெரிந்துகொள்வதற்கானகூலி… .. ரூ 9,990.00
ஆக மொத்தம் . ரூ10,000.00
என அந்த பட்டியலிற்கான விளக்கம் அளித்திருந்தார்
ஆம் முயற்சி முக்கியமானதுதான், ஆனால் அந்த முயற்சியை எங்கு செய்வது எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்வதுஅதைவிடமுக்கியமானதாகும் ! அதனால்தான், மிகச்சரியான இடத்தில் மிகச்சரியாக முடிவெடுக்கபடுகின்ற திறன்களே ஒருவரை மிகச்சிறந்த தொழில்முறைவல்லுனராக ஆக்குகின்றன

சனி, 10 அக்டோபர், 2020

கடின உழைப்பிற்காக பாராட்டுதல்

 
கல்வியில் சிறந்த விளங்கிய ஒரு இளைஞர் ஒரு பெரிய நிறுவனத்தில் நிருவாக பதவியான அலுவலக மேலாளர் பணிக்கு விண்ணப்பித்தார். அவரை நேர்காணலிற்கு அழைப்பதற்காக அவருடைய விண்ணப்பத்தை சரிபார்த்திடும் போது அவ்விளைஞர் மேல்நிலைப் பள்ளி முதல் முதுகலை கல்வி வரை, எந்த வருடத்திலும் மதிப்பெண் குறைவாக பெறாமல் அதிகமதிப் பெண்களுடனே கல்விகற்று முடித்தது தெரியவந்தது மேலும் அவ்விளைஞர் கல்விகற்கும் போது மிகச்சிறந்த சாதனைகள் பல புரிந்திருந்ததும் எல்லா வழிகளிலும் மிகச்சிறப்பாக வெற்றிபெற்று வந்திருந்ததும் தெரியவந்தது. அந்நிறுவனத்தின் பணியாளர் களை தெரிவுசெய்வதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிருவாக இயக்குநர் அவ்விளைஞரை நேர்காணலிற்காக அழைத்திருந்தார் அந்நேர்காணலின்போது நிருவாக இயக்குநர் "நீங்கள் கல்வி நிறுவனத்தில் பயிலும்போது அதற்காக உதவித்தொகை ஏதேனும் பெற்றீர்களா?" என வினவியபோது அவ்விளைஞர் “இல்லை ஐயா! நான் உதவித்தொகை எதுவும் பெறாமல் பயின்று வெற்றி பெற்றேன் ஐயா !” என்று பதிலளித்தனர். அதனை தொடர்ந்து "நீங்கள் கல்வி பயிலுவதற்காக உங்களுடைய பள்ளி கட்டணத்தை உங்களுடைய தந்தை செலுத்தினாரா?" என அந்நிருவாக இயக்குனர் கேட்டார். அதற்கு அவ்விளைஞர் "இல்லை ஐயா ! நான் ஒரு வயதாக இருந்தபோது என் தந்தை காலமானார், அதனால் என்னுடைய பள்ளி கல்லூரி ஆகியவற்றின் கட்டணங்கள் அனைத்தையும் செலுத்தியது என் அம்மா தான்" என பதிலளித்தார்,
தொடர்ந்து அந்நிருவாக இயக்குனர் " உங்களுடைய அம்மா எங்கே பணி செய்துவருகின்றார்?" என வினவியபோது அவ்விளைஞர், “என்னுடைய அம்மா பொதுமக்களின் துணிகளை துவைத்து வழங்கிடும் பணி செய்து வருகின்றார் அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு நான் கல்வி பயிலு வதற்கான கட்டணங்களை செலுத்துவந்தார் ” என பதில் கூறினார்
உடன் நிருவாக இயக்குனர் அந்த இளைஞனின் இரு கைகளையும் காட்டுமாறு க் கேட்டுக்கொண்டார். அவ்விளைஞர் தன்னுடைய மென்மையான இரு கைகளையும் நிருவாக இயக்குநரின் பார்வைக்கு நீட்டி காட்டியபோது நிருவாக இயக்குநர் "நீங்கள் எப்போதாவது உங்களுடைய அம்மா பொதுமக்களின் துணிகளை துவைக்கும் போது அந்த பணியைசெய்வதற்காக உங்களுடைய அம்மாவிற்கு உதவியிருக்கிறீர்களா?" என வினவினார் , அவ்வி ளைஞர், “ஒருபோதும்,அந்த பணியைசெய்ய என்னுடைய அம்மா என்னை விடுவதில்லை ஐயா ! நான் உயர்கல்வி வரை நன்கு கல்வி கற்று வெற்றி பெற வேண்டும் என்று என் அம்மா எப்போதும் விரும்பினார்ஐயா !. மேலும், என்னுடைய அம்மா என்னை விட வேகமாக துணிகளைதுவைத்திடுவார் ”. என பதில் கூறியதைதொடர்ந்து
அந்நிருவாகஇயக்குனர், “அவ்வாறாயின் . இன்று நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு திரும்பிச் சென்று உங்களுடைய தாயின் இருகைகளையும் சுத்தம் செய்திடுக, பின்னர் நாளை காலை இங்கு வந்து என்னைப் பார்த்திடுக ”. எனவிடை கொடுத்தனுப்பினார்
அந்நிறவனத்தில் தனக்கு பணி கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அவ்விளைஞர் உணர்ந்தார். அதனால் மிக மகிழ்ச்சியுடன் தங்களுடைய வீட்டிற்கு திரும்பிச் சென்று தன்னுடைய தாயின் கைகளை சுத்தம் செய்யஅனுமதிக்குமாறு தனது தாயிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது தாயார் தன்னுடைய மகன் இவ்வாறு அனுமதி கேட்பதை மிகவிசித்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்ந்தார், அவ்வாறான கலவையான உணர்வுகளுடன், தன்னுடைய மகனிடம் தனது இரு கைகளையும் நீட்டி காட்டினார். அவ்விளைஞர் தனது தாயின் இருகைகளை தண்ணீரால் மெதுவாக கழுவினார். அவ்வாறு தனது தாயின் கைகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தபோது அவ்விருகைகளும் மிகவும் சுருக்கம் சுருக்கமாகவும் மேலும் காயங்கள் பல ஏற்பட்டு அவை ஆறிய பின்னர் பல்வேறு வடுக்களினால் கரடுமுரடாகவும் இருப்பதை முதல் முறையாக கவனித்தார் அதனால் அவர் மிகவும் வேதனையாக தன்னுடைய கைகளால் தாயின் இருஉள்ளங்கைகளை தண்ணீரால் கழுவிய போது அவரது கண்ணீரும் அவரது தாயாரின் கைகளில் விழுந்தது
தன்னுடைய தாயாரின் இந்த இரு கைகள்தான் தினமும் பொதுமக்களின் துணிகளை துவைத்து வந்தன மேலும் தன்னுடைய பள்ளி கல்லூரி கட்டணங்களை செலுத்த உதவின என அவ்விளைஞர் முதல் முறையாக மிகவருத்தத்துடன் உணர்ந்தார் . தன்னுடைய தாயின் கைகளில் உள்ள காயங்களும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் தன்னுடைய பட்டப்படிப்பு, கல்விசார்ந்த சிறப்புகள், ஆகியவைகளுடன் தன்னுடைய எதிர்காலத்திற்காக செலுத்த வேண்டிய விலையாகவும் இருப்பதை என எண்ணி அவ்விளைஞரின் மனம் துடிதுடித்தது . தனது தாயின் கைகளை சுத்தம் செய்தபின், அவ்விளைஞர். அன்றைய மீதமுள்ள துணிகளை துவைக்கும் பணியை தன்னுடைய தாய் செய்வதற்கு பதிலாக தானேசெய்து முடித்தார். அன்று இரவு, தாயும் மகனும் மிக நீண்ட நேரம் தங்களுடைய வாழ்க்கையின் நிகழ்வுகள் குறித்து விவாதித்தார்கள். அடுத்த நாள் காலை, இளைஞர் நிருவாகஇயக்குநரின் அலுவலகத்திற்குச் சென்றார்.
நிருவாகஇயக்குநரை கண்டவுடன் அவ்விளைஞரின் கண்களில் தாரையாக கண்ணீர் விடுவதை நிருவாக இயக்குனர் கவனித்தார். "உங்களுடைய வீட்டில் நேற்று என்ன நடந்தது அதன் காரணாக நீங்கள்என்ன, கற்றுக்கொண்டீர்கள் என்று சொல்ல முடியுமா?" என நிருவாகஇயக்குநர் வினவினார் அதற்கு அவ்விளைஞர், “நான் என்னுடைய அம்மாவின் கைகளை சுத்தம் செய்ததோடு மட்டுமல்லாமல், மீதமுள்ள துணிகளை துவைத்திடும் பணியை நானே செய்தேன்”. என பதில் கூறினார் அதனை தொடர்ந்து அந்நிருவாகஇயக்குனர் , "தயவுசெய்து அப்போது எழுந்த உங்களுடைய உணர்வுகளை கூறுங்கள்" என கோரியபோது .
அவ்விளைஞர், “ 1,முதலில் கடின உழைப்பினை பாராட்டுவது என்றால் என்னவென்று நான் தெரிந்து கொண்டேன் அதாவது . என்னுடைய அம்மா இல்லாமல், நான் இன்று இந்த அளவிற்கு வெற்றிகரமாக கல்வி கற்று இருக்க முடியாது என்பதை தெரிந்துகொண்டேன். 2, இரண்டாவது ஒன்றாகஇணைந்து பணி செய்வதன் மூலம்,அதாவது என்னுடைய அம்மாவிற்கு உதவுவதன் மூலம், எந்தவொரு பணையையும் தனியாக செய்வது எவ்வளவு கடினமானது என்பதை இப்போதுதான் உணருகிறேன். 3.மூன்றாவதாக, குடும்ப உறவினரின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் பாராட்டவேண்டும் என தெரிந்து கொண்டேன் ”. எனக்கூறினார்
நிருவாக இயக்குனர், “இதைத்தான் நான் எனது மேலாளராக வருபவரிடம் எதிர்பார்க்கிறேன். மற்றவர்கள் செய்திடும் பணியைப் பாராட்டக்கூடிய , பணியாற்றும் போது ஏற்டும் துன்பங்களை அறிந்த , வாழ்க்கையில்பணத்தை மட்டுமே தனது ஒரே இலக்காக கொள்ளாத ஒரு நபரை மேலாளராக நியமிக்க விரும்பு கிறேன். நீங்கள் இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் நாளைமுதல் இந்த பணியில் சேரலாம் " என கூறினார் . அதன்பின்னர் அந்நிறுவனத்தில் அவ்விளைஞர் அந்த பணியில் சேர்ந்து மிகவும் கடினமாக உழைத்தார், பிற்காலத்தில் அந்த இளைஞரின் கீழ் பணிபுரிபவர்களின் மதிப்பையும் மரியாதையைப் பெற்றார். ஒவ்வொரு பணியாளரும் விடாமுயற்சியுடனும் ஒரு குழுவாகவும் ஒருங்கிணைந்து பணியாற்றிடுமாறு செய்து. அந்நிறுவனத்தின் செயல்திறன் மிகவும் மேம்படுவதற்காக பாடுபட்டார்.
நீதி: ஒருவர் தங்களின் அன்புக்குரியவர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினை தமக்கு வழங்குவதற்கு எடுக்கும் சிரமத்தை புரிந்துகொண்டு மதிக்க கற்றுகொள்ளவேண்டும் . மிக முக்கியமான செய்தி என்னவென்றால், நாம் வாழ்க்கையில் வெற்றிகரமாக முன்னேற்றம் அடைந்ததற்கு பின்னால் அதற்காக கடின உழைப்பை வழங்கியவரை மதிக்க கற்றுக்கொள்வதுதான்.

சனி, 3 அக்டோபர், 2020

ஒருவர் நேர்மையாக இருப்பதற்கு நிதிநிலை, சமூக நிலைஆகிய இனப்பாகுபாடு எதுவும் இல்லை.

 
ஒரு பணக்கார தம்பதியினர் தங்களுடைய வீட்டில் நடைபெறவிருந்த முக்கியநிகழ்வினை ஒரு பெரிய விருந்துடன் கொண்டாட விரும்பினார்கள். எனவே அவர்கள் சந்தையில் விலைஅதிகமானதும் நிலையான விலையை நிர்ணையம் செய்தும் விற்பணைசெய்திடுகின்ற கடைகளில் அதற்கான பொருட்களை கொள்முதல் செய்திட சென்றனர். அவர்கள் தங்களுடைய தரத்தை மிகவும் உயர்வாக பராமரிக்க விரும்பினர், எனவே அதற்காக எவ்வளவு பணம் செலுத்தவும் தயாராக இருந்தனர். தங்களுடைய வீட்டின் நிகழ்வினை கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மிக அதிக விலைகொடுத்து வாங்கிய பிறகு, அவை எல்லாவற்றையும் தங்களுடைய வீட்டிற்கு எடுத்து கொண்டுவந்த சேர்த்திட ஒரு சுமைகூலியாளை அழைத்தார்கள். வந்த சுமைகூலி மிகவும் வயதானவர், அவரது உடைகள் கிழிந்திருந்தன, அவரின் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருப்பவர் போன்று இருந்தார்.
அந்த தம்பதிகள் தாங்கள் சந்தையில் விலை அதிகமாக கொடுப்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாங்கிய பொருட்களை தங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கான கட்டணத்தினை மட்டும் எவ்வளவு தரவேண்டுமென சுமைகூலியிடம் விசாரித்தார்கள். வயதான சுமைகூலி ரூ 200/-கட்டணத்தில் அந்த பொருட்களை அவர்களுடைய வீட்டில் தன்னுடைய பொறுப்பில் கொண்டுவந்த சேர்ப்பதாக கோரினார், ஏனெனில் இந்த தொகையாவது தனக்கு இன்று கிடைத்தால் தங்களுடைய குடும்பம் இன்று ஒருவேளையாவது வயிறாற சாப்பிடமுடியும் என்பதால் அந்த தம்பதியினரின் வீட்டிற்கு பொருட்களை கொண்டு சென்று ஒப்படைப்பதற்கான சந்தை வீதத்திற்குக் கீழாக இருந்தாலும் பரவாயில்லை என கோரினார். ஆனாலும், அந்த தம்பதியினர் கடைகளில் எந்தவொருபொருளும் எவ்வளவு விலை அதிகமாக குறித்திருந்ததாலும் மற்ற கடைகளைவிட விலைஅதிகமாக இருந்தாலும் அதனை குறைத்து கொடுக்குமாறு கோரி விவாதம் ஏதும் செய்திடாமல் கடைகளில் கோரியவிலையை செலுத்தி பொருட்களை வாங்கியவர்கள் சுமைகூலியிடம் மட்டும் வழக்கமான கட்டணத்தினைவிட குறைவாக கோரியபோதும் விலைகுறைப்பு செய்திடுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் சுமைகூலியிடம் அதைவிட கூலியை குறைத்திடுமாறு பேரம் பேசினர், இறுதியாக அந்த சுமைகூலி ரூ 150/- க்கு ஒத்துகொண்டபோது ஏற்றுகொண்டனர். அந்த சுமைகூலி இந்த குறைந்து தொகையை வைத்து இன்றஒரு வேளை உணவைக் கூட முழுவதுமாக குடும்த்துடன் சாப்பிடமுடியாதே என மிகமனவருத்தப்பட்டார், அதனால் தினமும் அவர் சம்பாதிக்கக்கூடிய தொகையானது வாய்க்கும் கைக்கும் ஆக போதுமான தாக இல்லாமல் மிக அதிக சிரமத்துடன் தன்னுடைய வாழ்நாளை ஓட்டிவந்தார்.
அந்த தம்பதியினர் ஏழை சுமைகூலியுடன் பேரம் பேசி கூலியை ரூ. 200/-இலிருந்து ரூ 50/- குறைத்து ரூ 150/- க்கு ஒத்துகொள்ளவைத்துவிட்டோம் என்று எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக , அந்த சுமைகூலிக்கு ரூ 150/- ஐமுன்பணமாக கொடுத்து, தங்களுடைய வீட்டு முகவரியைஎழுதிக் கொடுத்து விரைவாக பொருட்களை தங்களுடைய விட்டிற்கு கொண்டுவந்து சேர்த்திடுமாறு கோரியபின்னர் தங்களுடைய வீட்டை சென்றடைந்தனர், அந்த தம்பதிகள் வீடுவந்து சேர்ந்துசுமார், இரண்டு மணிநேரம் கடந்துவிட்டது, ஆனாலும் அந்த சுமைகலியானவர் இன்னும் பொருட்களை தங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்து ஒப்படைக்கவில்லை.
அதனால் மனைவி தனது கணவர் மீது மிகவும் கோபமாக “இதுபோன்ற ஏழைகளை நம்ப வேண்டாம் என்று நான் எப்போதும் உங்களுக்குச் சொல்கிறேன், ஆனாலும் நீங்கள் ஒருபோதும் என்னுடைய பேச்சைக் கேட்கவே மாட்டீர்கள். நாளொன்றுக்கு ஒருவேளை உணவிற்கு கூட சம்பாதிக்க முடியாத நபரிடம், பெரிய விருந்துக்காக வாங்கிய பொருட்கள் அனைத்தையும் ஒப்படைத்தீர்கள்.அவைகளை நம்முடைய வீட்டிற்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு பதிலாக, அவர் எல்லாவற்றையும் தன்னுடைய வீட்டிற்கு கொண்டுசென்றிருக்க வேண்டும்.மேலும் அப்பொருட்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன என்றும் கூறுவார் என நான் நம்புகிறேன். அதனால் அதுகுறித்து விசாரிக்க நாம் உடனடியாக சந்தைக்குச் செல்ல வேண்டும், பின்னர் அவர் மீது புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் ”. என்றவாறு பேசத்தொடங்கினார்,
அதனை தொடர்ந்து தம்பதிகள் இருவரும் சந்தையை நோக்கி சென்றனர். அவ்விருவரும் சந்தைக்கு செல்லும் வழியில், மற்றொரு சுமைகூலி தங்களுடைய பொருட்களை தனது வண்டியில் எடுத்துச் செல்வதைக் கவனித்தனர்! அதனை கண்ணுற்றதும் மேலும் அதிக கோபமடைந்த மனைவி அந்த சுமை கூலியிடம், “அந்த வயதான திருடன் எங்கே? இவை அனைத்தும் எங்களுடைய பொருட்கள் இவை யனைத்தையும் எங்களுடைய வீட்டில் கொண்டுவந்து சேர்த்திட வேண்டும் என்பதாவது தெரியுமா. நீங்கள் அனைவரும் திருடர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுடைய பொருட்களைத் திருடி விற்கப் போகின்றீர்களா ”.என மிககோபமாக திட்டியபோது அதனை தடுத்து அந்த புதிய சுமையானவர், “அம்மா, தயவுசெய்து அமைதியாக பேசுங்கள். அந்த ஏழை முதியவர் கடந்த மாதம் முதல் உடல்நிலை மிகவும் சரியில்லாமல் இருந்தார். அன்றாடம் ஒருவேளை உணவை குடும்பம் முழுவதும்சாப்பிடுவதற்கு போதுமான அளவு கூட அவரால் சம்பாதிக்க முடியவில்லை. அவர் இந்தபொருட்களை உங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்து வழங்குவதற்கா இந்த பாதையில் வண்டியில் வைத்து இழுத்து கொண்டுவந்து கொண்டிருந்தார், ஆனால் பசியுடன் இருந்ததாலும், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்ததாலும், நண்பகலின் அதிகவெப்பத்தினாலும் மேலும் செல்ல முடியவில்லை அதனால் அவர் கீழே விழுந்து விட்டார் இருந்தபோதிலும் என்னிடம் இந்த பொருட்களை ரூ 150/- இற்கு சந்தையிலிருந்து ஒரு தம்பதியினரின் வீட்டில் கொண்டுவந்து சேர்ப்பதாக ஏற்றுகொண்டேன் அதனால் தயவுசெய்து இந்த பொருட்களை அதே கூலிக்கு அவர்களுடைய வீட்டிற்கு கொண்டுசென்று ஒப்படைத்துவிடு என கூறி இறந்துவிட்டார் அதனால் அவருடைய கடைசி வாக்குறுதியை நிறைவேற்றிட நான் இந்த பொருட்களை கொண்டுசெல்கின்றேன், ”. “மேலும் அம்மா, அவர் பசியுடன் இருந்தார், அவர் ஏழை, ஆனால் அவர் ஒரு நேர்மையான மனிதர். நான் அந்த வயதான மனிதரின் கடைசிவாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக உங்களுடைய வீட்டில் இந்த பொருட்களை ஒப்படைப்பதற்காக என்னுடைய வண்டியில் வைத்து இழுத்து கொஂஂண்டுவருகின்றேன் ”, என பதில் கூறினார். இதைக் கேட்டதும், அவ்விருவரில் கணவரின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது, அவருடைய மனைவி இவ்வாறு தவறாக பேசிவிட்டோமே என மிகவும் வெட்கப்பட்டார்,
நீதி: நேர்மைக்கு நிதிநிலை, சமூக நிலைஆகிய இனப்பாகுபாடு எதுவும் இல்லை. அதனால் நிதிநிலை, சமூக நிலைஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நேர்மையானவர்களுக்கு மதிப்பளித்திடுக.

வியாழன், 1 அக்டோபர், 2020

நூல் இல்லாத காற்றாடி

 ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய ஊரில் நடைபெற்ற காற்றாடி பறக்கவிடும் திருவிழாவிற்குச் சென்றனர். அவ்வாறான காற்றாடி திரு விழா நடைபெறும் இடத்தின் வானம் வண்ணமயமான பல்வேறு காற்றாடிகளால் நிரம்பியிருப்பதைக் கண்டு அவருடைய மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனை தொடர்ந்து அம்மகன் தன்னுடைய தந்தையிடம் அந்த காற்றாடி திருவிழாவில் தானும் ஒரு காற்றாடியை பறக்கவிட விரும்புவதால் தனக்கும் ஒரு காற்றாடியை வாங்கி கொடுக்கும்படி கோரினார், அதனால் தந்தையும் தன்னுடைய மகன் கோரியவாறு காற்றாடி பறக்கவிடுவதற்கான பொருட்களை வாங்கி கொடுப்பதற்காக அந்த காற்றாடி திருவிழா நடைபெறும் பூங்காவில் உள்ள கடைக்கு சென்று தனது மகனுக்காக ஒரு காற்றாடி , அந்த காற்றாடியை இணைப்பதற்கான நூல்கண்டு , நூலை சுருட்டி வைத்து பட்டத்தை பறக்க விடுவதற்கான உருளை ஆகியமூன்றையும் வாங்கி தன்னுடைய மகனிடம் வழங்கினார்.
அதன்பின்னர் அவருடைய மகன் அந்த காற்றாடியை உருளையில் சுருட்டிவைத்த நூலுடன் இணைத்து பறக்கவிட ஆரம்பித்தார். விரைவில், அவருடைய மகனுடைய காற்றாடியானது வானத்தில் உயர்ந்து சென்று பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்து, அம்மகன், “அப்பா உயரத்தில் பறக்கும் காற்றாடியை அதைவிட உயரத்தில் பறக்கவிடாமல் அதனோடு இணைத்துள்ள நூலானது தடுப்பதாகத் தெரிகிறது, அதனால் நூலுடனான காற்றாடியின் இணைப்பை அறுத்துவிட்டால் காற்றாடியானது தடுப்பு எதுவும் இல்லால் சுந்திரமாக, மேலும் உயரமாக பறக்கமுடியமல்லவா அதனால் நூலுடனான காற்றாடியின் இணைப்பினை அறுத்துவிடலாமா? ” என கோரியபோது அவருடைய, தந்தையும் தன்னுடைய மகனின் விருப்பத்தின் படி நூலை சுருட்டிவைத்து பட்டத்தை பறக்க விடுவதற்கான உருளையிலிருந்து அந்த காற்றாடியுடனான நூலின் இணைப்பை வெட்டினார். தற்போது காற்றாடியை உயரத்தில் சென்று பறப்பதற்கான தடையெதுவும் இல்லாததால் அந்த காற்றாடியானது கொஞ்சம் கொஞ்சமாக மேலே சென்று பறக்க ஆரம்பித்தது. அதனால் அவருடைய மகன் மேலும் மகிழ்ந்தான.
ஆனால், அவ்வாறு உயரத்தில் பறந்த அந்த காற்றாடியானது பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக கீழே வர ஆரம்பித்தது. மேலும், விரைவில் அது தூரத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் விழுந்தது. இதைக் கண்டு அவருடைய மகன் மிகவும் ஆச்சரியப்பட்டான். காற்றாடி உயரே பறப்பதற்கு தடையாக இருந்த நூலின் இணைப்பை வெட்டிவிட்டோம், அதனால் அந்த காற்றாடி சுதந்திரமாக மேலே எவ்வளவு உயரத்தில் வேண்டுமானாலும் பறக்க முடியும், ஆனால் அதற்கு பதிலாக அது கீழே விழுந்து விட்டதே ஏன் என. சந்தேகம் எழுந்தது அம்மகன் தனது சந்தேகத்தை தீர்வுசெய்வதற்காக தனது தந்தையிடம் , “அப்பா, காற்றாடியை இழுத்து பிடித்து வைத்திருந்த நூலை வெட்டிய பிறகு, அந்த காற்றாடியானது சுதந்திரமாக மேலே பறக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் அது ஏன் கீழே விழுந்தது? ” என வினவினார் .அவருடைய தந்தை , “மகனே, இணைக்கப்பட்டிருந்த நூலானது காற்றாடியை உயரத்தில் சுதந்திரமாக பறக்கவிடாமல் இறுக்கி பிடித்துவைத்திடவில்லை, ஆனால் காற்று மெதுவாகச் செல்லும்போது அது உயரத்தில் பறந்து கொண்டிருக்க உதவுகிறது, காற்று வேகமாக வீசும்போது, காற்றாடி சரியான திசையில் மேலே சென்று பறக்க உதவியது. நாம் காற்றாடியுடன் இணைக்கப்பட்ட நூலை வெட்டியபின்னர், நூல் வழியாக காற்றாடி உயரே சரியாகபறப்பதற்கு வழங்கிய ஆதரவு இல்லாமல் காற்றின் வேகத்தால் கீழே விழுந்துவிட்டது .அதேபோன்று நாம் வாழும் வாழ்க்கையின் உச்சத்தில், ஒருசில செயல்களுடன் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம் என்று நினைக்கிறோம், மேலும் அவை நம்மை மேலும் நம்முடைய வாழ்வில் நாம்மேலும் உயரவிடாமல் தடுக்கின்றன. என்றும் தவறாக எண்ணுகின்றோம்”. என விளக்கமளித்தார் அதனை தொடர்ந்து அவருடைய மகன் தன் தவறை உணர்ந்தார்.
நீதி: ஒருசில சமயங்களில் நாம் நம் குடும்பத்தினருடன், நம்முடைய வீட்டோடு பிணைக்கப்படாவிட்டால், விரைவாக முன்னேறி, நம் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைய முடியும் என்று தவறாக நினைக்கிறோம். ஆனால், நம்முடைய அன்புக்குரியகுடும்ப உறுப்பினர்கள் நம்முடைய வாழ்க்கையின் கடினமான நேரத்தில் தப்பிப்பிழைக்க நமக்கு உதவுகிறார்கள் என்பதையும், நம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய ஊக்குவிப்பதையும் நாம் உணரத் தவறிவிட்டோம். அவர்கள் வாழ்க்கையின் உயரத்திற்கு செல்லாமல் நம்மை தடுத்திடவில்லை, ஆனால் நாம் உயரே செல்வதற்கு நமக்கு ஆதரவளிக்கிறார்கள்.


ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஒருவரைபற்றி எந்தவொரு சொற்களை கூறுவதற்குமுன் சரியாகத் தேர்ந்தெடுத்திடுக

 

முன்னொரு காலத்தில், வயதானவர்ஒரு வர் தனது பக்கத்து வீட்டுக்கார இளைஞன ஒரு திருடன் என்றுகூறி அந்த தவறான வதந்தியை அந்த ஊர்முழுவதும் பரப்பினார். இதனால், அந்த பக்கத்து வீட்டுக்கார இளைஞன் கைது செய்யப்பட்டார். பலநாட்கள் கழித்து அந்த இளைஞன் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட விடுதலையான பிறகு, அந்த இளைஞன் தனது வீட்டிற்கு திரும்பி நடந்து வந்துகொண்டிருக்கும்போது அவ்வதந்தியானது தனக்கு மிகஅவமானமாக இருப்பதாக உணர்ந்தார். தனால் அந்த இளைஞன் தன்னை அந்த பக்கத்துவீட்டுகார முதியவர் தவறாக குற்றம் சாட்டி அந்த ஊர்முழுவதும் வதந்தி பரப்பியதற்காக அம்முதியவர் மீது வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் இது குறித்த விசாரணையின்போது நீதிபதியிடம் அந்த முதியவர் , “அவ்வதந்திகள் வெறும் கருத்துகள் மட்டுமே , அதனால் யாருக்கும் தீங்கு எதுவும் விளைவிக்கவில்லை ..” என்று கூறினார். தொர்ந்து இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப் படுவதற்கு முன்பு, நீதிபதி அந்த முதியவரிடம், “ந்த இளைஞரைப் பற்றி நீங்கள் கூறிய கருத்துகள் வதந்திகள் எல்லாவற்றையும் இந்த முழுதாளில் எழுதுங்கள் . அவற்றைசிறுசிறு காகித துண்டுகளாக வெட்டி வீட்டிற்கு செல்லும் வழியில், அக்காகித துண்டுகளை தரையில் எறிந்துகொண்டேசெல்லுகள். நாளை, நீதிமன்றத்திற்கு மீண்டும் வாருங்கள் ”. என உத்திரவிட்டார்.
அடுத்த நாள், நீதிபதி அந்த முதியவரிடம், “ முதலில் நீங்கள் மீண்டும் உங்கள் வீட்டிற்கு செல்க அவ்வாறு செல்லும் வழியில் நேற்று எறிந்து சென்ற காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்து கொண்டுவருக ”.என உத்திரவிட்டார் .உடன் அந்த முதியவர், “என்னால் எவ்வாறு நேற்று எறிந்து சென்ற அந்த காகிததுண்டுகள் அனைத்தையும் தேடிபிடித்து சேகரித்து கொண்டுவரமுடியும்! வையனைத்தும் காற்றில் அடித்து சென்று காணாமல் போயிருக்குமல்லவா , அவற்றை எவ்வாறு எங்கேயிருக்கின்றது என நான் கண்டுபிடிப்பது ”. என பதில் கூறினார்
அதன் பின்னர் நீதிபதி , “அதேபோல்தான் நீங்கள் அந்த இளைஞனை பற்றிய தவறாக வதந்தியாக கூறிய கருத்துக்கள் ஒரு மனிதனின் கவுரவத்தை சரிசெய்ய முடியாத அளவிற்க்கு அழித்திருக்கக்கூடும். அல்லவா என கோரியபோது வயதானவர் தனது தவறை உணர்ந்து நீதிமன்றத்தில் மன்னிப்புகேட்டார்.
நீதி: உண்மை அல்லது உண்மை தெரியாமல் யாரையும் கேவலப்படுத்தவோ, குறை சொல்லவோ வேண்டாம். நம்முடைய சொற்கள் எந்தவொரு தவறும் இல்லாத நல்லவர் ஒருவரின் நற்பெயரை அவை அழிக்கக்கூடும்.


புதன், 23 செப்டம்பர், 2020

சசேவஇன் கீழ் பதிவுசெய்த ஒரு நிறுவனத்தின்பதிவை இரத்து செய்வது எவ்வாறு?

 


சசேவ சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவுசெய்து வரி செலுத்துவோர் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை நிறுத்தம்செய்ய வேண்டும் என்று நினைத்தால் அல்லது நிறுத்தம் செய்யவேண்டிய சூழ்நிலை ஏதேனும் ஏற்பட்டால் எந்த நேரத்திலும் தங்களுடைய சசேவ பதிவை இரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். சசேவபதிவு இரத்துசெய்யப்பட்டவுடன், சசேவஇன்கீழ் இனி வரி செலுத்தவோ அல்லது பொதுமக்களிடமிருந்து சசேவவரி வசூலிக்கவோ தேவையில்லை.

சசேவின் கீழான பதிவுஒரு முறை இரத்து செய்யப்பட்டால் என்னஆகும்?

சசேவின் கீழான பதிவுஒரு முறை இரத்து செய்யப்பட்டால் அவ்வாறான சசேவவரி செலுத்துவோர் பொருட்களின்/ சேவைகளின் விற்பணையின்போது சசேவவரியை சேகரிக்க முடியாது, மேலும் இனி சசேவஇன்கீழ் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை எந்த சசேவ ஆண்டறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை ஆயினும் ஒருசில வணிகநடிக்கைகளுக்கு, சசேவஇன் கீழ் பதிவு செய்வது கட்டாயமாகும். சசேவபதிவு இரத்துசெய்யப்பட்டு, குறிப்பிட்ட வர்த்தகநடவடிக்கை இன்னும் தொடர்ந்து நடந்துவந்தால், அது சசேவஇன் கீழ் ஒரு குற்றமாக கருதப்படும், மேலும் அதனமீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும்.

சசேவஇன்கீழ் பதிவை யார் இரத்து செய்யமுடியும்

சசேவஇன் கீழ்ணிபுரியும் ஒரு முறையான அதிகாரி அவ்வாறு சசேவஇன்கீழான பதிவை இரத்து செய்யவேண்டியத் தேவையுள்ளது எனக் கருதினால், அல்லது அவ்வாறு சசேவஇன்கீழ் பதிவுசெய்யப்பட்ட நபர் அல்லது சசேவின்கீழ் பதிவுசெய்தநபர் இறந்தால் அத்தகைய நபரின் சட்டப்பூர்வ வாரிசுகள் சசேவஇன்கீழ் பதிவைஇரத்து செய்யக்கோரி விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தால், , வரி செலுத்துவோரின் சசேவ பதிவை இரத்து செய்யலாம் . எவ்வாறாயினும், சசேவஇன்கீழான பதிவை ஒருவர் தானாக முன்வந்து பெற்றால், சசேவஇன்கீழான பதிவை சசேவஇன்கீழானபதிவு பெற்ற ஒரு வருடத்திற்குள் அவ்வாறான பதிவை இரத்து செய்ய விண்ணப்பிக்க முடியாது . சசேவஇன்கீழ் பதிவை இரத்து செய்யப்படுவதற்கு முன்னர், அவ்வாறான சசேவஇன்கீழான பதிவைஇரத்து செய்யப்பட வேண்டிய நபருக்கு சசேவஅதிகாரி அதற்கான காரணம் கோரும் அறிவிப்பு ஒன்றினை அனுப்பிடுவார், அதாவது சசேவஇன்கீழான பதிவு ஏன் இரத்து செய்யப்படக்கூடாது எனும் அறிவிப்பிற்கான பதிலைஇந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து ஏழு வேலை நாட்களுக்குள் விளக்கமான பதிலைசமர்ப்பிக்குமாறு காரணம் கோரப்படுவார் .சசேவஇன்கீழ் பதிவுசெய்யப்பட்ட நபர் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் காரணம்கோரும் அறிவிப்பிற்கு பதிலளிக்கலாம் அல்லது சசேவஇன்கீழான பதிவு இரத்து செய்யப்படலாம்.


பதிவு இரத்து அல்லது இடைநீக்கம் (பிரிவு 29)

1. சசேவஇன்கீழ்பணிபுரியும் முறையான அதிகாரி சுயமாக அல்லது பதிவுசெய்யப்பட்ட நபர் அல்லது பதிவுசெய்யப்பட்ட நபர் இறந்தால் அத்தகைய நபரின் சட்ட வாரிசுகள் இரத்துசெய்வதற்காக விண்ணப்பம் செய்தல், , ஆகியசூழ்நிலைகள் தொடர்பான விதிகளின் படி, சசேவஇன்கீழான பதிவை இரத்து செய்யலாம்: ) உரிமையாளரின் மரணம், நீக்கம் செய்யப்பட்ட அல்லது அகற்றப்பட்டவை உள்ளிட்ட எந்தவொரு காரணத்திற்காகவும் வணிகம் நிறுத்தப்பட்டது முழுமையாக மாற்றப்பட்டது பிற சட்ட நிறுவனங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டது; அல்லது ) வணிகத்தின் அமைப்பில் ஏதேனும் மாற்றம் உள்ளது; அல்லது ) இந்த சசேவசட்டத்தின் பிரிவு 25 இன் துணைப்பிரிவு (3) இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட நபரைத் தவிர, வரி விதிக்கக்கூடிய நபர், பிரிவு 22 அல்லது பிரிவு 24 இன் கீழ் பதிவு செய்யப்படுவதற்கு இனி பொறுப்பேற்கதேவையில்லை எனும்போது. பதிவு இரத்து தொடர்பான வழக்கு தொடரப்படும்போது பதிவுசெய்யப்பட்ட நபரால், பதிவு அத்தகைய காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படலாம் மற்றும் பரிந்துரைக்கப்படும் விதத்தில்.

(2) சசேவஇன்கீழ்பணிபுரியும் சரியான அதிகாரி எந்தவொரு பின்னோக்கு தேதி உட்பட, அவர் பொருத்தமாக இருப்பதாகக் கருதி ஒரு நபரின் சசேவஇன்கீழான பதிவை இரத்து செய்யலாம், அங்கு, ) பதிவுசெய்யப்பட்ட ஒருவர் சட்டத்தின் அத்தகைய நபர்களை அல்லது அங்குள்ள விதிகளை விதித்திருக்கலாம்; அல்லது ) பிரிவு 10 இன் கீழ் வரி செலுத்தும் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று வரி காலங்களுக்குசசேவ வரிவருமான
அறிக்கை சமர்ப்பிக்கவில்லை; அல்லது ) பிரிவு () இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நபரைத் தவிர வேறு எந்த பதிவுசெய்யப்பட்ட நபரும் தொடர்ச்சியான ஆறு மாத காலத்திற்கு சசேவவரிவருமானஅறிக்கை சமர்ப்பிக்கவிவில்லை; அல்லது ) பிரிவு 25 இன் துணைப்பிரிவு (3) இன் கீழ் தன்னார்வ பதிவு செய்த எந்தவொரு நபரும் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அவ்வாறான வணிகத்தைத் துவங்கவில்லை; அல்லது ) மோசடி, வேண்டுமென்றே தவறாகப் புரிந்துகொள்ளுதல் அல்லது உண்மைகளைமறைத்தல் ஆகியவற்றின் மூலம் தவறாகபதிவு பெறப்பட்டுள்ளது.

(3)
இந்த பிரிவின் கீழ் சசேவஇன்கீழானபதிவு இரத்து செய்யப்படுவது, இந்தச் சட்டத்தின் கீழ் வரி மற்றும் பிற நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கான நபரின் பொறுப்பை பாதிக்காது அல்லது இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு கடமையையும் அல்லது இரத்துசெய்யப்பட்ட தேதிக்கு முன்னதாக எந்தவொரு காலத்திற்கும் செய்யப்பட்டுள்ள விதிகளை பாதிக்காது. அல்லது அத்தகைய வரி மற்றும் பிற பாக்கிகள் இரத்து செய்யப்பட்ட தேதிக்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ தீர்மானிக்கப்படுவதில்லை.

(4) மாநில சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அல்லது யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு இரத்து செய்யப்படுவது, இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு இரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும்.


(5) பதிவு இரத்துசெய்யப்பட்ட ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட நபரும் மின்னணு வரவுபேரேடு அல்லது மின்னனுரொக்கபேரேடு பற்று மூலம் ஒரு தொகையை செலுத்த வேண்டும், இது சரக்கிருப்புகளில் உள்ளீடுகள் மற்றும் பகுதி முடிக்கப்பட்டபொருட்களின் உள்ளீடுகளுக்கு உள்ளீட்டு வரியின் வரவுக்கு சமமாகும். அல்லது இரத்து செய்யப்பட்ட தேதிக்கு முந்தைய நாளன்று அல்லது அத்தகைய பொருட்களுக்கு செலுத்த வேண்டிய வெளியீட்டு வரி, எது அதிகமாக இருந்தாலும், பரிந்துரைக்கப்பட்ட விதத்தில் கணக்கிடப்படும்: சரக்கிருப்புஅல்லது மூலதன பொருட்கள் அல்லது ஆலை மற்றும் இயந்திரங்களில் வைத்திருக்கும் முடிக்கப்பட்ட பொருட்கள்: மூலதன பொருட்கள் அல்லது ஆலை மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றிற்கு வரி விதிக்கப்படக்கூடிய நபர், கூறப்பட்ட மூலதன பொருட்கள் அல்லது ஆலை மற்றும் இயந்திரங்கள் மீது எடுக்கப்பட்ட உள்ளீட்டு வரிவரவிற்கு சமமான தொகையை செலுத்த வேண்டும், இது பரிந்துரைக்கப்பட்ட சதவீத புள்ளிகளால் குறைக்கப்படுகிறது அல்லது அத்தகைய மூலதனத்தின் பரிமாற்ற மதிப்பின் மீதான வரி பிரிவு 15 இன் கீழ் பொருட்கள் அல்லது ஆலை மற்றும் இயந்திரங்கள், எது அதிகமாக இருந்தாலும் செலுத்தவேண்டும்.

(6) துணைப்பிரிவு (5) இன் கீழ் செலுத்த வேண்டிய தொகை பரிந்துரைக்கப்படும் வகையில் கணக்கிடப்படும்.

சசேவ சட்டத்தின் கீழ் பதிவினை இரத்து செய்வதற்கான படிவங்கள் சசேவின்கீழான பதிவினை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தின் GST REG 16. இன்மூலம் வரி செலுத்துவோர் விண்ணப்பிக்க வேண்டும். இறந்த வரி செலுத்துவோரின் சட்டப்பூர்வ வாரிசுகள் அதே நடைமுறையைப் பின்பற்றுவார்கள். ரத்து செய்வதற்கான விண்ணப்பம் படிவம் GST REG 16.இல் சமர்ப்பித்திட வேண்டும். அந்த படிவத்தில் தேவையான விவரங்கள் படிவம் GST REG 16.- இல் சேர்க்கப்பட வேண்டும் - பதிவு ரத்து செய்யப்படும் தேதியில் உள்ளீடுகள், பகுதி முடிக்கப்பட்ட, முழுதும் முடிக்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் - அதற்கான பொறுப்பு - கட்டணம் செலுத்தும் விவரங்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இதற்கு சரியான பொறுப்பான அதிகாரி FORM GST REG-19 இல் வாயிலாக இரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதிகாரியால் நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து இரத்துசெய்தல்பயனுள்ளதாக இருக்கும், மேலும் அவர் வரி விதிக்கக்கூடிய நபருக்கு இரத்து செய்யப்பட்ட செய்தியைஅறிவிப்பார் பதிவுசெய்யப்பட்ட தனிநபரால் இரத்து செய்யப்படுதல் - விண்ணப்பபடிவம் FORM GST REG 16 . அவ்வாறு சசேவஇன்கீழான பதிவைஇரத்து செய்வதற்கான காரணம்கோரும் அறிவிப்பை( show cause ) - FORM GST REG 17 அவ்வாறு காரண கோரும் அறிவிப் பிற்கான பதில் - படிவம் Form GST REG 18. -அதனை தொடர்ந்து சசேவஇன்கீழான பதிவை இரத்து செய்வதற்கான படிவம் படிவம் Form GST REG 19. அவ்வாறு சசேவஇன்கீழான பதிவு இரத்து செய்தலை நிறுத்தம் செய்வதற்கான படிவும் Form GST REG 20 இரத்து நடவடிக்கைகளைத் தொடர விளக்க படிவம் GST REG 21 இறுதியாக இரத்துசெய்ய உத்தரவு - படிவம் GST REG 22


பதிவு இரத்துசெய்தலை திரும்பப் பெறுதல் (பிரிவு 30) பதிவு சான்றிதழ் இரத்துசெய்யப்படுவது என்றால் பதிவை ரத்து செய்வதற்கான முடிவு தலைகீழாகிவிட்டது மற்றும் பதிவு இன்னும் செல்லுபடியாகும்என அர்த்தமாகும்.
பதிவு சான்றிதழை எப்போது இரத்து செய்யப்படும்? சசேவ அதிகாரி தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வரி விதிக்கக்கூடிய நபரின் பதிவை இரத்து செய்தால் மட்டுமே இது பொருந்தும். அத்தகைய வரி விதிக்கக்கூடிய நபர் இரத்து உத்தரவு தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் இரத்து செய்யப்படுவதை இரத்து செய்யும் அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம்


திரும்பப்பெறுவதற்கான கால வரம்பு சசேவ பதிவை இரத்து செய்வதற்கான உத்தரவு தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் சசேவ பதிவை இரத்து செய்ய எந்தவொரு பதிவு செய்யப்பட்ட வரி விதிக்கக்கூடிய நபரும் விண்ணப்பிக்கலாம்.

படிவத்தில் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம்படிவம்FORM GST REG-21 இல் சசேவ பதிவை ரத்து செய்ய, நேரடியாகவோ அல்லது ஆணையாளரால் அறிவிக்கப்பட்ட ஒரு பொருத்தமான மையத்தின் மூலமாகவோ பதிவு செய்யப்பட்ட நபரால் பதிவு செய்யப்பட வேண்டும்.

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...