சனி, 3 அக்டோபர், 2020

ஒருவர் நேர்மையாக இருப்பதற்கு நிதிநிலை, சமூக நிலைஆகிய இனப்பாகுபாடு எதுவும் இல்லை.

 
ஒரு பணக்கார தம்பதியினர் தங்களுடைய வீட்டில் நடைபெறவிருந்த முக்கியநிகழ்வினை ஒரு பெரிய விருந்துடன் கொண்டாட விரும்பினார்கள். எனவே அவர்கள் சந்தையில் விலைஅதிகமானதும் நிலையான விலையை நிர்ணையம் செய்தும் விற்பணைசெய்திடுகின்ற கடைகளில் அதற்கான பொருட்களை கொள்முதல் செய்திட சென்றனர். அவர்கள் தங்களுடைய தரத்தை மிகவும் உயர்வாக பராமரிக்க விரும்பினர், எனவே அதற்காக எவ்வளவு பணம் செலுத்தவும் தயாராக இருந்தனர். தங்களுடைய வீட்டின் நிகழ்வினை கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மிக அதிக விலைகொடுத்து வாங்கிய பிறகு, அவை எல்லாவற்றையும் தங்களுடைய வீட்டிற்கு எடுத்து கொண்டுவந்த சேர்த்திட ஒரு சுமைகூலியாளை அழைத்தார்கள். வந்த சுமைகூலி மிகவும் வயதானவர், அவரது உடைகள் கிழிந்திருந்தன, அவரின் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருப்பவர் போன்று இருந்தார்.
அந்த தம்பதிகள் தாங்கள் சந்தையில் விலை அதிகமாக கொடுப்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாங்கிய பொருட்களை தங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கான கட்டணத்தினை மட்டும் எவ்வளவு தரவேண்டுமென சுமைகூலியிடம் விசாரித்தார்கள். வயதான சுமைகூலி ரூ 200/-கட்டணத்தில் அந்த பொருட்களை அவர்களுடைய வீட்டில் தன்னுடைய பொறுப்பில் கொண்டுவந்த சேர்ப்பதாக கோரினார், ஏனெனில் இந்த தொகையாவது தனக்கு இன்று கிடைத்தால் தங்களுடைய குடும்பம் இன்று ஒருவேளையாவது வயிறாற சாப்பிடமுடியும் என்பதால் அந்த தம்பதியினரின் வீட்டிற்கு பொருட்களை கொண்டு சென்று ஒப்படைப்பதற்கான சந்தை வீதத்திற்குக் கீழாக இருந்தாலும் பரவாயில்லை என கோரினார். ஆனாலும், அந்த தம்பதியினர் கடைகளில் எந்தவொருபொருளும் எவ்வளவு விலை அதிகமாக குறித்திருந்ததாலும் மற்ற கடைகளைவிட விலைஅதிகமாக இருந்தாலும் அதனை குறைத்து கொடுக்குமாறு கோரி விவாதம் ஏதும் செய்திடாமல் கடைகளில் கோரியவிலையை செலுத்தி பொருட்களை வாங்கியவர்கள் சுமைகூலியிடம் மட்டும் வழக்கமான கட்டணத்தினைவிட குறைவாக கோரியபோதும் விலைகுறைப்பு செய்திடுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் சுமைகூலியிடம் அதைவிட கூலியை குறைத்திடுமாறு பேரம் பேசினர், இறுதியாக அந்த சுமைகூலி ரூ 150/- க்கு ஒத்துகொண்டபோது ஏற்றுகொண்டனர். அந்த சுமைகூலி இந்த குறைந்து தொகையை வைத்து இன்றஒரு வேளை உணவைக் கூட முழுவதுமாக குடும்த்துடன் சாப்பிடமுடியாதே என மிகமனவருத்தப்பட்டார், அதனால் தினமும் அவர் சம்பாதிக்கக்கூடிய தொகையானது வாய்க்கும் கைக்கும் ஆக போதுமான தாக இல்லாமல் மிக அதிக சிரமத்துடன் தன்னுடைய வாழ்நாளை ஓட்டிவந்தார்.
அந்த தம்பதியினர் ஏழை சுமைகூலியுடன் பேரம் பேசி கூலியை ரூ. 200/-இலிருந்து ரூ 50/- குறைத்து ரூ 150/- க்கு ஒத்துகொள்ளவைத்துவிட்டோம் என்று எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக , அந்த சுமைகூலிக்கு ரூ 150/- ஐமுன்பணமாக கொடுத்து, தங்களுடைய வீட்டு முகவரியைஎழுதிக் கொடுத்து விரைவாக பொருட்களை தங்களுடைய விட்டிற்கு கொண்டுவந்து சேர்த்திடுமாறு கோரியபின்னர் தங்களுடைய வீட்டை சென்றடைந்தனர், அந்த தம்பதிகள் வீடுவந்து சேர்ந்துசுமார், இரண்டு மணிநேரம் கடந்துவிட்டது, ஆனாலும் அந்த சுமைகலியானவர் இன்னும் பொருட்களை தங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்து ஒப்படைக்கவில்லை.
அதனால் மனைவி தனது கணவர் மீது மிகவும் கோபமாக “இதுபோன்ற ஏழைகளை நம்ப வேண்டாம் என்று நான் எப்போதும் உங்களுக்குச் சொல்கிறேன், ஆனாலும் நீங்கள் ஒருபோதும் என்னுடைய பேச்சைக் கேட்கவே மாட்டீர்கள். நாளொன்றுக்கு ஒருவேளை உணவிற்கு கூட சம்பாதிக்க முடியாத நபரிடம், பெரிய விருந்துக்காக வாங்கிய பொருட்கள் அனைத்தையும் ஒப்படைத்தீர்கள்.அவைகளை நம்முடைய வீட்டிற்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு பதிலாக, அவர் எல்லாவற்றையும் தன்னுடைய வீட்டிற்கு கொண்டுசென்றிருக்க வேண்டும்.மேலும் அப்பொருட்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன என்றும் கூறுவார் என நான் நம்புகிறேன். அதனால் அதுகுறித்து விசாரிக்க நாம் உடனடியாக சந்தைக்குச் செல்ல வேண்டும், பின்னர் அவர் மீது புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் ”. என்றவாறு பேசத்தொடங்கினார்,
அதனை தொடர்ந்து தம்பதிகள் இருவரும் சந்தையை நோக்கி சென்றனர். அவ்விருவரும் சந்தைக்கு செல்லும் வழியில், மற்றொரு சுமைகூலி தங்களுடைய பொருட்களை தனது வண்டியில் எடுத்துச் செல்வதைக் கவனித்தனர்! அதனை கண்ணுற்றதும் மேலும் அதிக கோபமடைந்த மனைவி அந்த சுமை கூலியிடம், “அந்த வயதான திருடன் எங்கே? இவை அனைத்தும் எங்களுடைய பொருட்கள் இவை யனைத்தையும் எங்களுடைய வீட்டில் கொண்டுவந்து சேர்த்திட வேண்டும் என்பதாவது தெரியுமா. நீங்கள் அனைவரும் திருடர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுடைய பொருட்களைத் திருடி விற்கப் போகின்றீர்களா ”.என மிககோபமாக திட்டியபோது அதனை தடுத்து அந்த புதிய சுமையானவர், “அம்மா, தயவுசெய்து அமைதியாக பேசுங்கள். அந்த ஏழை முதியவர் கடந்த மாதம் முதல் உடல்நிலை மிகவும் சரியில்லாமல் இருந்தார். அன்றாடம் ஒருவேளை உணவை குடும்பம் முழுவதும்சாப்பிடுவதற்கு போதுமான அளவு கூட அவரால் சம்பாதிக்க முடியவில்லை. அவர் இந்தபொருட்களை உங்களுடைய வீட்டிற்கு கொண்டுவந்து வழங்குவதற்கா இந்த பாதையில் வண்டியில் வைத்து இழுத்து கொண்டுவந்து கொண்டிருந்தார், ஆனால் பசியுடன் இருந்ததாலும், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்ததாலும், நண்பகலின் அதிகவெப்பத்தினாலும் மேலும் செல்ல முடியவில்லை அதனால் அவர் கீழே விழுந்து விட்டார் இருந்தபோதிலும் என்னிடம் இந்த பொருட்களை ரூ 150/- இற்கு சந்தையிலிருந்து ஒரு தம்பதியினரின் வீட்டில் கொண்டுவந்து சேர்ப்பதாக ஏற்றுகொண்டேன் அதனால் தயவுசெய்து இந்த பொருட்களை அதே கூலிக்கு அவர்களுடைய வீட்டிற்கு கொண்டுசென்று ஒப்படைத்துவிடு என கூறி இறந்துவிட்டார் அதனால் அவருடைய கடைசி வாக்குறுதியை நிறைவேற்றிட நான் இந்த பொருட்களை கொண்டுசெல்கின்றேன், ”. “மேலும் அம்மா, அவர் பசியுடன் இருந்தார், அவர் ஏழை, ஆனால் அவர் ஒரு நேர்மையான மனிதர். நான் அந்த வயதான மனிதரின் கடைசிவாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக உங்களுடைய வீட்டில் இந்த பொருட்களை ஒப்படைப்பதற்காக என்னுடைய வண்டியில் வைத்து இழுத்து கொஂஂண்டுவருகின்றேன் ”, என பதில் கூறினார். இதைக் கேட்டதும், அவ்விருவரில் கணவரின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது, அவருடைய மனைவி இவ்வாறு தவறாக பேசிவிட்டோமே என மிகவும் வெட்கப்பட்டார்,
நீதி: நேர்மைக்கு நிதிநிலை, சமூக நிலைஆகிய இனப்பாகுபாடு எதுவும் இல்லை. அதனால் நிதிநிலை, சமூக நிலைஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நேர்மையானவர்களுக்கு மதிப்பளித்திடுக.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...