சனி, 31 அக்டோபர், 2020

மற்றவர்களுக்கு உதவுதல்

 
முன்பு ஒருகாலத்தில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சங்கர் எனும் சிறுவன் ஒரு கிராமத்தில் வாழ்ந்துவந்தான். ஒரு நாள், அவன் அருகிலுள்ள காட்டில் கொஞ்சம் மரங்களை சேகரித்து சுமையாக கட்டி தலையில் சுமந்து கொண்டு காடு வழியாக தன்னுடைய வீட்டிற்கு திரும்பவந்து கொண்டிருந்தான்.அப்போது மிகவும் பசியுடன் இருந்த ஒரு வயதானவரை பார்த்தான். அந்த வயதானவர் பசியாறுவதற்கு அந்த சிறுவன் சிறிது உணவு கொடுக்க விரும்பினான், ஆனால் அவன் கைவசம் கொடுப்பதற்கான உணவு இல்லை. எனவே தனது வழியில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான் .அவ்வழியில், மிகவும் தாகமாக இருந்த ஒரு மானைக் கண்டான். அந்த தாகமான மானிற்கு கொஞ்சம் தண்ணீர் கொடுக்க விரும்பினான், ஆனாலும் அந்த மானிற்கு கொடுப்பதற்காக தண்ணீர் அவன் கைவசம்இல்லை. எனவே அந்த சிறுவன் தொடர்ந்து காடுவழியே பயனித்து கொண்டிருந்தான்.
பின்னர் மனிதர்கள் தங்குவதற்கு ஏதுவானசிறு குடில் போன்று கட்டி கொண்டிருந்த ஒருவரைப் பார்த்தான், ஆனால் அந்த குடிலை கட்டி முடிப்பதற்கு போதுமான மரம் அவரிடம் இல்லை. சங்கர் அந்த மனிதனது பிரச்சினையைக் கேட்டு அறிந்து கொண்டு அதற்கு தீர்வாக தன்கைவசம் இருந்த மரங்களின் கட்டினைஅவரிடம் கொடுத்து அதனை கொண்டு அந்த மனிதன் தங்குவதற்கு போதுமானகுடிலை கட்டிடுமாறு கேட்டு கொண்டான் அந்த மனிதன் மிக்கமகிழ்ச்சியுடன் சங்கர் கொடுத்த அந்த மரங்களை கொண்டு தான் தங்குவதற்கான குடிலை கட்டிமுடித்தார். மேலும் பதிலுக்கு, சங்கருக்கு கொஞ்சம் உணவும் தண்ணீரும் கொடுத்தார். இப்போது சங்கர் திரும்பிதான் வந்த வழியே திரும்பசென்று வயதான கிழவனிற்கு தனக்கு கிடைத்த உணவினை கொடுத்தான் . மேலும் அந்த மானின் தாகம் தீர்ப்பதற்கு தேவையானதண்ணீரை யும் கொடுத்தான். அதனால் அந்த பசியுடன்இருந்த வயதான கிழவனும் தாகத்துடன் இருந்த மானும் தங்களுடைய தேவை நிறைவு செய்யபட்டதால் மிகவும் மகிழ்ச்சியாக தங்களுடைய அடுத்தபணிகளை கவணிக்க சென்றனர். அதனை தொடர்ந்து சங்கரும் மகிழ்ச்சியுடன் தனது வழியில் பயனம் செய்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான்.
அதன்பின்னர், ஒரு நாள் சங்கர் அந்த காட்டின் அருகிலிருந்த மலையில் ஏறமுயன்றபோது அம்மலையிலிருந்து கீழே உருண்டு விழுந்தான். அதனால் சங்கர் அதிக அடிபட்டு மிக்க வலியுடன் துடித்துகொண்டிருந்தான், அதனால் அவனால் நகரகூட முடியவில்லை, அங்கு அவனுக்கு உதவ யாரும் இல்லை. ஆனால், முன்பு சங்கர் உணவுகொடுத்து உதவிய முதியவர், அந்நிகழ்வினை பார்த்துமிக விரைவாக வந்து கீழே விழுந்திருந்த சங்கரை தூக்கி உட்கார வைத்தார். சங்கரின உடலில் ஏராளமானஅளவில் காயங்கள் இருந்தன. முன்னர் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த மானானது சங்கருடைய காயங்களைக் கண்டு விரைவாக காட்டிற்குள் சென்று ஒருசில மூலிகைகளைக் கொண்டு வந்தது அந்த வயதான மனதின் அந்த மூலிகைகளை கொண்டு அந்த காயங்கள் அனைத்தையும் சாறுபிழிந்து கட்டுகட்டி மூடி மெதுவாக அவனுடைய வீட்டிற்கு கொண்டுசென்று சேர்த்தார். அதனால் விரைவில் அவனுடைய உடலில் ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் ஆறிவிட்டன சங்கரும் முன்பு போன்று எழுந்து நடமாடிடுமாறு பழையநிலைக்கு நலமாகிவிட்டான் ஒருவர் மற்றொருவருக்கு உதவயிதால் இவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடனும் வாழ்ந்து வந்தனர்.
நீதி: நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தால், அவர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...