சனி, 17 அக்டோபர், 2020

கப்பலை பழுதுபார்த்திடும் தொழில்நுட்ப அனுபவசாலி

 

ஒரு பெரிய கப்பல் கடலிற்குள் பயனிக்கமுடியாமல் அதனுடைய இயந்திரம் பழுதடைந்து நின்றுவிட்டது.அதனால் அந்த கப்பலின் உரிமையாளர் பல்வேறு பொறியியல் நிபுணர்களையும் அழைத்துவந்து அந்த கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதினை உடனடியாக சரிசெய்திடுமாறு கோரினார்அந் நிபுணர்கள் அனைவரும் எவ்வளவோ முயன்றும் அவர்களில் எவரும் அவ்வியந்திரத்தை எவ்வாறு சரிசெய்து பழையபடி இயங்கசெய்வது என்பதை மட்டும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பின்னர் அந்த கப்பலின் உரிமையாளர் சிறு வயதிலிருந்தே கப்பல்களின் பழுதுகளை சரிசெய்திடும் பணிமேற்கொண்டிருந்த மிகவும் அனுபவசாலியான வயதானதொழில்நுட்ப பணியார் ஒருவரை அழைத்து வந்து அந்த கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதினை சரிசெய்து பழையபடி இயங்கிட செய்திடும்படி கோரினார். அவ்வாறான கப்பல்களின் இயந்திரத்தின் பழுதுகளை சரிசெய்வதில் மிகநீண்ட அனுபவமிக்க தொழில்நுட்ப பணியாளரான அவர் ஒரு பெரிய பையில் ஏராளமான கருவிகளை தன்னுடன் எடுத்து வந்தார், அவர் வந்ததும் உடனடியாக தன்னுடைய பணியை துவங்கினார் அதாவது . அவர் அந்த கப்பலின் இயந்திரத்தின் அடிமுதல் முடிவரை முழுவதையும் மிகவும் கவனமாக ஆய்வு செய்தார். கப்பலின் உரிமையாளரும், அனுபவசாலியான இந்த தொழில்நுட்ப பணியாளர் என்னதான் செய்கின்றார் என தெரிந்துகொள்வோமேஎன அங்கு அவ்வயதுமுதிர்ந்த தொழில்நுட்ப பணியாளரின் பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார் , மேலும் அந்த கப்பலின் உரிமையாளர் அந்த கப்பலின் இயந்திரத்தில் என்ன பழுது ஏற்பட்டது என அனுபவசாலியான இந்த தொழில்நுட்பபணியாளரால் கண்டு பிடித்திட முடியும் மேலும் அதனை எவ்வாறு சரி செய்வது என்றும் அவருக்கு தெரியும் என்று நம்பினார். தொழில்நுட்ப அனுபவசாலியான அம்முதியவர் அந்த கப்பலின் இயந்திரத்தினை அடிமுதல் முடிவரை முழுவதும் ஆய்வுசெய்து பார்த்த பிறகு, இறுதியாக பல்வேறு கருவிகளைவைத்து தன்னுடன் எடுத்துகொண்டுவந்திருந்த தன்னுடைய கருவிகளின் பையில் இருந்து ஒரு சிறிய சுத்தியலை மட்டும் வெளியே எடுத்தார். பின்னர் அந்த கப்பலின் இயந்திரத்தின் எதையோ மெதுவாக தட்டி கொட்டி சரி செய்த பின்னர். அந்த கப்பலின் இயந்திரத்தினை இயக்குமாறு கோரினார் என்ன ஆச்சரியம் அவ்வியந்திரத்தின் பழுது எளிதாக சரி செய்யப்பட்டுவிட்டது! இவ்வளவு நேரம் பொறியியல் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் பலரும் பல்வேறு வகையில் பலமணிநேரம் முயன்றும் அவ்வியந்திரத்தின் பழுதினை கண்டுபிடித்திட முடியாத அந்த கப்பலின் இயந்திரமானது தற்போது சரியாக இயங்கதுவங்கி மிகப்பிரமாதமாக ஓடியது .அதனை தொடர்ந்து தொழில்நுட்ப அனுபவசாலியான அம்முதியவர் அந்த சிறு சுத்தியலை பழையபடி கருவிகளின் பையில் வைத்து அந்த பையை எடுத்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பி சென்றார் . ஒரு வாரம் கழித்து, அந்த கப்பலின் உரிமையாளருக்கு அம்முதிய தொழில்நுட்பபணியாளரிடமிருந்து ரூபாய்.10,000/-இற்கான பட்டியல் வந்தது அதனை கண்டவுடன் . "என்ன? ஒன்றுமே செய்யவில்லை! சிறிய சுத்தியலை மட்டும் மெதுவாக இயந்திரத்தினை தட்டி கொட்டி சரிசெய்ததற்கு ரூபாய்.10,000/- கூலியா" என உரிமையாளர் கூச்சலிட்டார். எனவே அந்த கப்பலின்முதலாளி அம்முதிய தொழில்நுட் ப பணியாளருக்கு "தயவுசெய்து இந்தபட்டியலிற்கான விவரங்களை அனுப்பிடுக" என்று கோரியபோது அனுபவ சாலியானஅம்முதியதொழில்நுட் ப பணியாளர் ஒரு குறிப்பினை அனுப்பியிருந்தார். அதில்:
சிறியசுத்தியலால் இயந்திரத்தினை தட்டுவதற்கானகூலி … .. ரூ.10.00
அந்த இயந்திரத்தில் எங்கு தட்டுவது என்று தெரிந்துகொள்வதற்கானகூலி… .. ரூ 9,990.00
ஆக மொத்தம் . ரூ10,000.00
என அந்த பட்டியலிற்கான விளக்கம் அளித்திருந்தார்
ஆம் முயற்சி முக்கியமானதுதான், ஆனால் அந்த முயற்சியை எங்கு செய்வது எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்வதுஅதைவிடமுக்கியமானதாகும் ! அதனால்தான், மிகச்சரியான இடத்தில் மிகச்சரியாக முடிவெடுக்கபடுகின்ற திறன்களே ஒருவரை மிகச்சிறந்த தொழில்முறைவல்லுனராக ஆக்குகின்றன

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...