சனி, 24 அக்டோபர், 2020

ஒருவர் எவ்வாறான மனிதன் என முடிவுசெய்திடும் முன் நன்கு சிந்தியுங்கள்

 
ஒருசிறுவனின் உயிர்பிழைப்பதற்காக அவசரமாக ஒருஅறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என அழைக்கப்பட்டதால் மருத்துவர் ஒருவர் மருத்துவமனைக்குள் விரைவாக நுழைந்தார். அறுவை சிகிச்சைக்கு தேவையான தன்னுடைய உடைகளை விரைவாக மாற்றிக்கொண்டு நேரடியாக அறுவை சிகிச்சை பகுதிக்குள் சென்றார். அங்கு வாயிலில் அறுவுசை செய்யவேண்டிய சிறுவனின் தந்தை அந்த மருத்துவக்காகக் காத்திருப்பதைக் கண்டார்.அப்போது அந்த மருத்தவரைப் பார்த்து தந்தை, “நீங்கள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டீர்கள்? எனது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்கு ஏதாவது பொறுப்புணர்வு இருக்கின்றதா பணிநேரத்தில் மருத்துவமனையில் இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என அழைத்தபின்னர் மட்டும் அவசரஅவசரமாக ஓடி வருகின்றீர்களே இது சரியா? ”என வாயில் வந்தவாறு கேள்வி கேட்டு கொண்டிருந்தார்.
மருத்துவர் புன்முறுவலுடன், “மன்னிக்கவும், முக்கியமான பணியொன்று இருந்ததால் நான் மருத்துவமனையில் இல்லை, அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்ற அழைப்பைப் பெற்ற பிறகு என்னால் முடிந்தவரை வேகமாக வந்து சேர்ந்தேன், இப்போது, நீங்கள் அமைதியாக இருந்தால் , நான் என் பணியை சரியாக ச் செய்துமுடிக்க முடியும்”. என பதில் கூறினார் .அதனை தொடர்ந்து அந்த அறுவைசிகிச்சை செய்யவேண்டிய சிறுவனின் தந்தையானவர் "என்ன பெரிய அமைதி! உங்களுடைய மகன் இப்போது இந்த நிலையில் இருந்தால்,உங்களால் அமைதியாக இருக்கமுடியுமா? நான் உங்களுக்காக காத்திருப்பதை போன்று உங்களுடைய சொந்த மகன் இவ்வாறு இருந்தால் நீங்கள் இவ்வாறுதான் அமைதியாக இரு என கூறிகொண்டிருப்பீர்களா ?? ” என கோபமாக கேள்விகளை எழுப்பி கொண்டிருந்தார். மருத்துவர் மீண்டும் புன்னகைத்து, “ அனைத்தும் இயற்கையின் செயலே நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம், உங்களுடைய மகன் மீண்டும் பழையநிலைக்கு வந்துவிடமுடியும் என நம்புங்கள்” என்று பதிலளித்தார்.
"யாருக்கும் துன்பம் வந்தால் தான் தெரியும் ஆனாலும் யாராலும் மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவது மட்டும் மிக எளிது" அந்த சிறுவனின் தந்தை முணுமுணுத்தார்.
அந்த அறுவைசிகிச்சைக்கு ஒருசில மணிநேரம் ஆனது, பின்னர் மருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியேவந்து, “ஐயா! வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது உங்களுடைய மகன் காப்பாற்றப்பட்டான்! ”என கூறிவிட்டு அந்த சிறுவனுடைய தந்தையின் பதிலுக்காகக் காத்திருக்காமல், “மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், இந்த செவிலியரிடம் கேளுங்கள்” என்று கூறி விட்டு ஓடிசேர்ந்தார்.
“ இவ்வளவு திமிர்பிடித்த மருத்துவர் ஏன்இவ்வளவு வேகமாக ஓடுகின்றார்? ஒருசில நிமிடங்கள் நின்று என்னுடைய சந்தேகங்களை தீர்வுசெய்திட முடியாதா, எனது மகனின் நிலையைப் பற்றி சிறிதுநேரம் விவரம் கூறிவிட்டு செல்லக்கூடாதா “ என அந்த தந்தை மருத்துவர் வெளியேறிய ஒருசில நிமிடங்களுக்குப் செவிலியரைப் பார்த்து தீட்டிக் கொண்டிருந்தார் . அதனை தொடர்ந்து அந்த செவிலியர் கண்ணீர் மல்க அந்த தந்தையிடம் “அவரது மகன் நேற்று ஒரு சாலை விபத்தில் இறந்தார், உங்கள் மகனின் அறுவை சிகிச்சைக்கு நாங்கள் அவரை அழைத்தபோது அவருடை மகனின் அடக்கம் செய்யும் பணியை துவக்கஇருந்தார். அதனால் அந்த பணியை அப்படியே நிறுத்திவிட்டு இங்கு வந்து உங்களுடைய மகனின் அறுவைசிகிச்சை பணியை வெற்றிகரமாக செய்துமுடித்து உங்களுடைய மகனின் உயிரைக் காப்பாற்றிவிட்டார் அதனால், அவர் தனது மகனின் அடக்கம் செய்திடும் பணியை முடிக்க ஓடுகின்றார். ” எனபதில் கூறினார்
நீதி: யாரைபற்றியும் ஒருபோதும் தவறாகமுடிவுசெய்யாதீர்கள், ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, அவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்ற எந்தவிவரமும் மிகச்சரியாக உங்களுக்குத் தெரியாது.

கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...