வியாழன், 1 அக்டோபர், 2020

நூல் இல்லாத காற்றாடி

 ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய ஊரில் நடைபெற்ற காற்றாடி பறக்கவிடும் திருவிழாவிற்குச் சென்றனர். அவ்வாறான காற்றாடி திரு விழா நடைபெறும் இடத்தின் வானம் வண்ணமயமான பல்வேறு காற்றாடிகளால் நிரம்பியிருப்பதைக் கண்டு அவருடைய மகன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனை தொடர்ந்து அம்மகன் தன்னுடைய தந்தையிடம் அந்த காற்றாடி திருவிழாவில் தானும் ஒரு காற்றாடியை பறக்கவிட விரும்புவதால் தனக்கும் ஒரு காற்றாடியை வாங்கி கொடுக்கும்படி கோரினார், அதனால் தந்தையும் தன்னுடைய மகன் கோரியவாறு காற்றாடி பறக்கவிடுவதற்கான பொருட்களை வாங்கி கொடுப்பதற்காக அந்த காற்றாடி திருவிழா நடைபெறும் பூங்காவில் உள்ள கடைக்கு சென்று தனது மகனுக்காக ஒரு காற்றாடி , அந்த காற்றாடியை இணைப்பதற்கான நூல்கண்டு , நூலை சுருட்டி வைத்து பட்டத்தை பறக்க விடுவதற்கான உருளை ஆகியமூன்றையும் வாங்கி தன்னுடைய மகனிடம் வழங்கினார்.
அதன்பின்னர் அவருடைய மகன் அந்த காற்றாடியை உருளையில் சுருட்டிவைத்த நூலுடன் இணைத்து பறக்கவிட ஆரம்பித்தார். விரைவில், அவருடைய மகனுடைய காற்றாடியானது வானத்தில் உயர்ந்து சென்று பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்து, அம்மகன், “அப்பா உயரத்தில் பறக்கும் காற்றாடியை அதைவிட உயரத்தில் பறக்கவிடாமல் அதனோடு இணைத்துள்ள நூலானது தடுப்பதாகத் தெரிகிறது, அதனால் நூலுடனான காற்றாடியின் இணைப்பை அறுத்துவிட்டால் காற்றாடியானது தடுப்பு எதுவும் இல்லால் சுந்திரமாக, மேலும் உயரமாக பறக்கமுடியமல்லவா அதனால் நூலுடனான காற்றாடியின் இணைப்பினை அறுத்துவிடலாமா? ” என கோரியபோது அவருடைய, தந்தையும் தன்னுடைய மகனின் விருப்பத்தின் படி நூலை சுருட்டிவைத்து பட்டத்தை பறக்க விடுவதற்கான உருளையிலிருந்து அந்த காற்றாடியுடனான நூலின் இணைப்பை வெட்டினார். தற்போது காற்றாடியை உயரத்தில் சென்று பறப்பதற்கான தடையெதுவும் இல்லாததால் அந்த காற்றாடியானது கொஞ்சம் கொஞ்சமாக மேலே சென்று பறக்க ஆரம்பித்தது. அதனால் அவருடைய மகன் மேலும் மகிழ்ந்தான.
ஆனால், அவ்வாறு உயரத்தில் பறந்த அந்த காற்றாடியானது பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக கீழே வர ஆரம்பித்தது. மேலும், விரைவில் அது தூரத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் விழுந்தது. இதைக் கண்டு அவருடைய மகன் மிகவும் ஆச்சரியப்பட்டான். காற்றாடி உயரே பறப்பதற்கு தடையாக இருந்த நூலின் இணைப்பை வெட்டிவிட்டோம், அதனால் அந்த காற்றாடி சுதந்திரமாக மேலே எவ்வளவு உயரத்தில் வேண்டுமானாலும் பறக்க முடியும், ஆனால் அதற்கு பதிலாக அது கீழே விழுந்து விட்டதே ஏன் என. சந்தேகம் எழுந்தது அம்மகன் தனது சந்தேகத்தை தீர்வுசெய்வதற்காக தனது தந்தையிடம் , “அப்பா, காற்றாடியை இழுத்து பிடித்து வைத்திருந்த நூலை வெட்டிய பிறகு, அந்த காற்றாடியானது சுதந்திரமாக மேலே பறக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் அது ஏன் கீழே விழுந்தது? ” என வினவினார் .அவருடைய தந்தை , “மகனே, இணைக்கப்பட்டிருந்த நூலானது காற்றாடியை உயரத்தில் சுதந்திரமாக பறக்கவிடாமல் இறுக்கி பிடித்துவைத்திடவில்லை, ஆனால் காற்று மெதுவாகச் செல்லும்போது அது உயரத்தில் பறந்து கொண்டிருக்க உதவுகிறது, காற்று வேகமாக வீசும்போது, காற்றாடி சரியான திசையில் மேலே சென்று பறக்க உதவியது. நாம் காற்றாடியுடன் இணைக்கப்பட்ட நூலை வெட்டியபின்னர், நூல் வழியாக காற்றாடி உயரே சரியாகபறப்பதற்கு வழங்கிய ஆதரவு இல்லாமல் காற்றின் வேகத்தால் கீழே விழுந்துவிட்டது .அதேபோன்று நாம் வாழும் வாழ்க்கையின் உச்சத்தில், ஒருசில செயல்களுடன் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம் என்று நினைக்கிறோம், மேலும் அவை நம்மை மேலும் நம்முடைய வாழ்வில் நாம்மேலும் உயரவிடாமல் தடுக்கின்றன. என்றும் தவறாக எண்ணுகின்றோம்”. என விளக்கமளித்தார் அதனை தொடர்ந்து அவருடைய மகன் தன் தவறை உணர்ந்தார்.
நீதி: ஒருசில சமயங்களில் நாம் நம் குடும்பத்தினருடன், நம்முடைய வீட்டோடு பிணைக்கப்படாவிட்டால், விரைவாக முன்னேறி, நம் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைய முடியும் என்று தவறாக நினைக்கிறோம். ஆனால், நம்முடைய அன்புக்குரியகுடும்ப உறுப்பினர்கள் நம்முடைய வாழ்க்கையின் கடினமான நேரத்தில் தப்பிப்பிழைக்க நமக்கு உதவுகிறார்கள் என்பதையும், நம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய ஊக்குவிப்பதையும் நாம் உணரத் தவறிவிட்டோம். அவர்கள் வாழ்க்கையின் உயரத்திற்கு செல்லாமல் நம்மை தடுத்திடவில்லை, ஆனால் நாம் உயரே செல்வதற்கு நமக்கு ஆதரவளிக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...