சனி, 16 ஜனவரி, 2021

நாம் ஒருமணிநேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றோம் ?

 – ஒரு அர்த்தமுள்ள கேள்விக்கான பதிலுடன் கூடிய கதை,
 தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கை வாழும்   ஒருவர் தனது அன்றைய பணி முடிந்து  தாமதமாக, சோர்வாக  வீட்டிற்கு வந்து சேர்ந்தார் அப்போது அவருடைய .  5 வயது மகன் அவர்களுடைய வீட்டின் வாசலில் அவருக்காக காத்திருப்பதைக் கண்டார் 
அவருடைய மகன் : “அப்பா! நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?”  என கோரியபோது அவர்: " மகனே! தாராளமாக கேள்வி கேட்கலாம் அந்த கேள்வி என்ன?” என  பதிலளித்தார். தொடர்ந்து அவருடைய மகன்: “அப்பா! நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்?” என கேள்வி எழுப்பியபோது தந்தை: “இது உனக்கு தேவையில்லாதது. ஏன் அவ்வாறு கேட்கின்றாய்? ” என அவர் மிக கோபமாக எரிந்து விழுந்தார். இருந்தபோதிலும் அவருடைய மகன் அமைதியாக: “நான்  தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அப்பா! தயவுசெய்து சொல்லுங்கள், நீங்கள் ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்? ”என மீண்டும் வினவியபோது தந்தையானவர்: "நான் ஒரு மணி நேரத்திற்கு ரூ .100/- சம்பாதிக்கிறேன்."என பதிலளித்தார்  அதனை தொடர்ந்து அவருடைய மகன்: “அவ்வாறாயின்  அப்பா! எனக்கு  ரூ .50/- மட்டும் கடன் தருவீர்களா?” என கோரியபோது தந்தை அதிக கோபமடைந்தார், “ விளையாடுவதற்கான பொம்மை அல்லது வேறு சில முட்டாள்தனமான பொருட்கள் ஏதேனும்  வாங்குவதற்கு உனக்கு பணம் தேவை அதனால்  என்னிடம் கடன் வாங்கவிரும்புகின்றாய்  உனக்கு என்னவேண்டுமோ என்னிடம் நேரடியாக கேள்!  அதனை  உனக்கு நானே நேரடியாக வாங்கி தருகின்றேன்  அதனால்,தேவையில்லாத செயலில் நீ தலையிடாதே. இரவுசாப்பாடு சாப்பிட்டு விட்டிருந்தால் பேசாமல் நேராக படுத்து தூங்கசெல்." என உத்திரவிட்டார் . அதனால் அந்தச் சிறுவன்  வேறுஏதும் பேசாமல் தனது அறைக்குச் சென்று கதவினை மூடி அமைதியாக படுத்துவிட்டான் . சிறிது நேரம் கழித்தவுடன் அந்த மனிதன் அமைதி அடைந்தார்:, “அந்தசிறுவன் உண்மையில் இவ்வாறு அடிக்கடி பணம் கேட்பது வழக்கமில்லை. இருந்த போதிலும் இன்று அவ்வாறு பணம் கேட்கின்றான் என்றால் அவனுக்கு உண்மையிலேயே ஏதேனும் விளையாட்டு பொருட்கள் உடனடியாக  வாங்குவதற்கு அந்த ரூ .50/-  தேவைப்பட்டிருக்கலாம், அதனால்  அவ்வாறு கேட்டிருக்கலாம் அல்லவா! " என யோசிக்க ஆரம்பித்தார் அதனால் அந்த மனிதன் சிறுவனின் அறையின்  கதவை திறந்து உள்ளே சென்றார் . ” மகனே!  தூங்குகின்றாயா? ” என தன்னுடைய மகனிடம்  கேட்டார். "இல்லை அப்பா!, " என்று சிறுவன் பதிலளித்தான். "மகனே! முன்பு நான் உன்னிடம் மிகவும் கோபமாக திட்டிவிட்டேன். நீ கேட்ட ரூ .50/- இந்தா வாங்கிகொள். ” என கூறியவாறு தன்னுடைய மகனிடம் ரூ .50/- ஐ கொடுத்தார் உடன் அந்த சிறுவன் சிரித்தபடி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து “ நன்றி அப்பா!” என கூறியவாறு அந்த பணத்தினை வாங்கி கொண்டான். . பின்னர், தனது தலையணைக்கு அடியில் வைத்திருந்த பணத்தையும்  வெளியே எடுத்தான்.பின்னர் அந்தச் சிறுவன் மெதுவாக  பணத்தை  மொத்தம் எவ்வளவு உள்ளது என கணக்கிட்டான், அதன் பின்னர் தன் தந்தையைப் பார்த்தபோது. பையனிடம் ஏற்கனவே பணம் இருப்பதைக் கண்ட மனிதன், மீண்டும் கோபத்துடன் "உன்னிடம் ஏற்கனவே பணம்  இருந்தால் மேலும் ஏன் அதிக பணம் உனக்கு வேண்டும்?" என  முணுமுணுத்தார். "ஏனென்றால் அந்த பணம் எனக்கு போதுமானதாக இல்லை, அப்பா!,அதனால்தான் நான் உங்களிடம் ரூ .50/- ஐ  கடனாக எனக்கு தருமாறு கோரினேன் இப்போது என்னிடம் ரூ .100/-.உள்ளது  உங்களுடைய  நேரத்தின் ஒரு மணிநேரத்தை நான் வாங்கலாமா? அப்பா! நாளைய  உங்களுடைய பணியை ஒருமணிநேரத்திற்குமுன்னரே முடித்து வீட்டிற்கு சீக்கரம் வந்து சேருங்கள். அந்த ஒருமணி நேரத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தினை நான் இன்றே உங்களுக்கு தருகின்றேன். நாளை  நான் உங்களுடன் அந்த ஒருமணிநேரம் இரவு உணவை சாப்பிட்டுகொண்டே  மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். " எனகோரிக்கை வைத்ததும் அத்தந்தைக்கு  “அடடா! தினமும் நம்முடைய பிள்ளையுடன் சிறிதுநேரம் கூட அமர்ந்து இல்லாமல் எப்போதும் வேலை வேலை என இயந்தரமயமான இந்த சூழலில் வாழ்ந்து  கொண்டிருக் கின்றேனே!”  என்ற உண்மை அவருடைய நெஞ்சில் சுருக்கென  முள்குத்தியதை போன்று இருந்தது  . அவர் தனது சிறிய மகனைச் தனது கைகளால் சேர்த்து அனைத்துகொண்டு,  மன்னிப்பு கோரினார்.
 வாழ்க்கையில்  எப்போதும் வேலை வேலை  என மிகவும் கடினமாக உழைத்து வாழும் நம் அனைவருக்கும் ஒரு நினைவூட்டல். நமக்கு உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன், சிறிது நேரம் செலவிடாமல் நேரத்தை நழுவ விடாதீர்கள்…
 

சனி, 2 ஜனவரி, 2021

ஒரு வயதான மனிதனும் அவரது மகனும்

 
தற்போதைய கிராமத்தில் வாழமுடியாத சூழலில் ஒரு இளைஞன் பிழைப்பினை தேடி நகரத்தினை நோக்கி செல்வதற்காக அழைத்தான் அப்போத தன்னுடைய தந்தையையும் தன்னுடன் நகரத்திற்கு அழைத்தபோது தான் பிறந்து வளர்ந்த இந்த கிராமத்தை விட்டு தன்னால் வரமுடியாது என மறுத்து தனியாக தான் இருப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவ்விளைஞன் பிழைப்பதற்காக நகரத்தை நோக்கி பயனபட்டான் அதனால் அம்முதியவர் அவருடைய கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். அதன்பின்னர் அந்த வருடத்தில்அக்கிராமத்தில் நல்ல மழைபொழிந்தது அதனை தொடர்ந்து அவர் தனது நிலத்தில் மக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிட விரும்பினார், ஆனால் அதற்காக அவர் மிகவும் கடினமாக உழைக்கவேண்டியிருந்தது மேலும் நிலத்தினை உழுதிடுவதற்காக போதுமான பணமும் கைவசம் இல்லை பிழைப்பினை தேடி நகரத்திற்கு சென்ற அந்த இளைஞனை தீவிரவாதி என சந்தேகபட்டு சிறையில் அடைத்துவிட்டனர் அதனால். அவருக்கு உதவி செய்த அவரது ஒரே மகன் சிறையில் இருந்ததால், அவ்விளைஞனை வெளியே கொண்டுவருவதற்காக போதுமான பணவசதி இல்லாததால் ஒரு வழக்கறிஞரை நியமிக்க முடியவில்லை. அதனால் அவ்வயதானவர் தனது மகனுக்கு தனது நிலைமையைக் குறிப்பிட்டு பின்வருமாறு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தர்:
அன்புள்ள மகனே,
நான் மிகவும் மோசமானநிலையில் இருப்பதாக உணர்கின்றேன், ஏனெனில் இந்த ஆண்டு நமது கிராமத்தில் நல்ல மழைபொழிந்துள்ளது ஆயினும் நமது நிலத்தில் மக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிடுவதற்கு போதுமான நிதிவசதி இல்லாததால் அவ்வாறு செய்ய முடியாது என்று தெரிகிறது. உன்னுடைய தாயார் எப்போதும் மழைபொழிந்துவிட்டது நம்முடைய நிலத்தில் பயிர்செய்திடுமாறு புலம்பிகொண்டே இருக்கின்றார் அவ்வாறு என்னால் செய்யஇயலாத நிலையில் நான் அதனை நான் வெறுக்கிறேன். எனெனில் எனக்கு வயதாகிவிட்டதால் நிலத்தில் என்னால் கடின உழைப்பை ஈடுபடமுடியவில்லை. நீ இங்கே இருந்திருந்தால், ஏதாவது செய்துகொண்டிருப்பாய்அதனால் எங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் முடிந்துவிடும். ஆனால் நீ சிறையில் இருப்பதால் எதுவும் செய்யமுடியாமல், தவிக்கின்றோம் என்னசெய்வது என்று தடுமாறி இருக்கின்றோம் .
அன்பு, அப்பா
அதன்பின்னர் அந்த வயதானவருக்கு ஒரு தந்தி வந்தது அதில்பின்வருமாறு செய்தி இருந்தது,
 அப்பா, நிலத்தினை நீங்கள் உழுவதை பற்றி கவலைப்பட வேண்டாம்! அங்குதான் நான் ஏராளமான அளவில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் புதைத்து வைத்திருக்கின்றேன் !! ’
அதனை தொடர்ந்து மறுநாள் அதிகாலையிலேயே அவருடைய நிலத்தில் , அருகிலிருந்த நகரத்தின் ஏராளமானஅளவிலான FBI முகவர்களும் காவல்துறை அலுவலர்களும் அவருடைய நிலத்தில் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கண்டுபிடிப்பதற்காக முழு தோட்டத்தையும் தோண்டிபுரட்டி பார்த்து ஏதும் கிடைக்கததால் . குழப்ப்ததுடன் சென்றுவிட்டனர்,
பின்னர் அவ்வயதானவர் தனது மகனுக்கு அவருடைய நிலத்தில் என்ன நடந்தது என்று மற்றொரு கடிதத்தினை எழுதி, அடுத்து தான் என்ன செய்வது என்று கேட்டார்.
அதனைதொடொர்ந்து அவரது மகன் : ‘நீங்கள் நம்முடைய நிலத்திற்கு சென்று நீங்கள் விரும்பியவாறுமக்காச்சோளம் அல்லது குச்சிவல்லி கிழங்கு பயிரிடுக அப்பா. இங்கிருந்து உங்களுக்காக நான் செய்யக்கூடியது இதுதான். ’
எனக்குறிப்பிட்டார்

நீதி: நாம் உலகில் எங்கிருந்தாலும் பரவாயில்லை, நாம் மனப்பூர்வமாக ஏதாவது செய்ய முடிவு செய்திருந்தால், நாம் எங்கு இருக்கிறீர்கள் அல்லது நம்மிடம் உதவிகோரும் நபர் எங்கே இருக்கிறார் என்பது முக்கியமன்று அவ்வுதவியை நாம் செய்யலாம்..

பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்

 இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...