– ஒரு அர்த்தமுள்ள கேள்விக்கான பதிலுடன் கூடிய கதை,
தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கை வாழும் ஒருவர் தனது அன்றைய பணி முடிந்து தாமதமாக, சோர்வாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார் அப்போது அவருடைய . 5 வயது மகன் அவர்களுடைய வீட்டின் வாசலில் அவருக்காக காத்திருப்பதைக் கண்டார்
அவருடைய மகன் : “அப்பா! நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என கோரியபோது அவர்: " மகனே! தாராளமாக கேள்வி கேட்கலாம் அந்த கேள்வி என்ன?” என பதிலளித்தார். தொடர்ந்து அவருடைய மகன்: “அப்பா! நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்?” என கேள்வி எழுப்பியபோது தந்தை: “இது உனக்கு தேவையில்லாதது. ஏன் அவ்வாறு கேட்கின்றாய்? ” என அவர் மிக கோபமாக எரிந்து விழுந்தார். இருந்தபோதிலும் அவருடைய மகன் அமைதியாக: “நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அப்பா! தயவுசெய்து சொல்லுங்கள், நீங்கள் ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்? ”என மீண்டும் வினவியபோது தந்தையானவர்: "நான் ஒரு மணி நேரத்திற்கு ரூ .100/- சம்பாதிக்கிறேன்."என பதிலளித்தார் அதனை தொடர்ந்து அவருடைய மகன்: “அவ்வாறாயின் அப்பா! எனக்கு ரூ .50/- மட்டும் கடன் தருவீர்களா?” என கோரியபோது தந்தை அதிக கோபமடைந்தார், “ விளையாடுவதற்கான பொம்மை அல்லது வேறு சில முட்டாள்தனமான பொருட்கள் ஏதேனும் வாங்குவதற்கு உனக்கு பணம் தேவை அதனால் என்னிடம் கடன் வாங்கவிரும்புகின்றாய் உனக்கு என்னவேண்டுமோ என்னிடம் நேரடியாக கேள்! அதனை உனக்கு நானே நேரடியாக வாங்கி தருகின்றேன் அதனால்,தேவையில்லாத செயலில் நீ தலையிடாதே. இரவுசாப்பாடு சாப்பிட்டு விட்டிருந்தால் பேசாமல் நேராக படுத்து தூங்கசெல்." என உத்திரவிட்டார் . அதனால் அந்தச் சிறுவன் வேறுஏதும் பேசாமல் தனது அறைக்குச் சென்று கதவினை மூடி அமைதியாக படுத்துவிட்டான் . சிறிது நேரம் கழித்தவுடன் அந்த மனிதன் அமைதி அடைந்தார்:, “அந்தசிறுவன் உண்மையில் இவ்வாறு அடிக்கடி பணம் கேட்பது வழக்கமில்லை. இருந்த போதிலும் இன்று அவ்வாறு பணம் கேட்கின்றான் என்றால் அவனுக்கு உண்மையிலேயே ஏதேனும் விளையாட்டு பொருட்கள் உடனடியாக வாங்குவதற்கு அந்த ரூ .50/- தேவைப்பட்டிருக்கலாம், அதனால் அவ்வாறு கேட்டிருக்கலாம் அல்லவா! " என யோசிக்க ஆரம்பித்தார் அதனால் அந்த மனிதன் சிறுவனின் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றார் . ” மகனே! தூங்குகின்றாயா? ” என தன்னுடைய மகனிடம் கேட்டார். "இல்லை அப்பா!, " என்று சிறுவன் பதிலளித்தான். "மகனே! முன்பு நான் உன்னிடம் மிகவும் கோபமாக திட்டிவிட்டேன். நீ கேட்ட ரூ .50/- இந்தா வாங்கிகொள். ” என கூறியவாறு தன்னுடைய மகனிடம் ரூ .50/- ஐ கொடுத்தார் உடன் அந்த சிறுவன் சிரித்தபடி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து “ நன்றி அப்பா!” என கூறியவாறு அந்த பணத்தினை வாங்கி கொண்டான். . பின்னர், தனது தலையணைக்கு அடியில் வைத்திருந்த பணத்தையும் வெளியே எடுத்தான்.பின்னர் அந்தச் சிறுவன் மெதுவாக பணத்தை மொத்தம் எவ்வளவு உள்ளது என கணக்கிட்டான், அதன் பின்னர் தன் தந்தையைப் பார்த்தபோது. பையனிடம் ஏற்கனவே பணம் இருப்பதைக் கண்ட மனிதன், மீண்டும் கோபத்துடன் "உன்னிடம் ஏற்கனவே பணம் இருந்தால் மேலும் ஏன் அதிக பணம் உனக்கு வேண்டும்?" என முணுமுணுத்தார். "ஏனென்றால் அந்த பணம் எனக்கு போதுமானதாக இல்லை, அப்பா!,அதனால்தான் நான் உங்களிடம் ரூ .50/- ஐ கடனாக எனக்கு தருமாறு கோரினேன் இப்போது என்னிடம் ரூ .100/-.உள்ளது உங்களுடைய நேரத்தின் ஒரு மணிநேரத்தை நான் வாங்கலாமா? அப்பா! நாளைய உங்களுடைய பணியை ஒருமணிநேரத்திற்குமுன்னரே முடித்து வீட்டிற்கு சீக்கரம் வந்து சேருங்கள். அந்த ஒருமணி நேரத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தினை நான் இன்றே உங்களுக்கு தருகின்றேன். நாளை நான் உங்களுடன் அந்த ஒருமணிநேரம் இரவு உணவை சாப்பிட்டுகொண்டே மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். " எனகோரிக்கை வைத்ததும் அத்தந்தைக்கு “அடடா! தினமும் நம்முடைய பிள்ளையுடன் சிறிதுநேரம் கூட அமர்ந்து இல்லாமல் எப்போதும் வேலை வேலை என இயந்தரமயமான இந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக் கின்றேனே!” என்ற உண்மை அவருடைய நெஞ்சில் சுருக்கென முள்குத்தியதை போன்று இருந்தது . அவர் தனது சிறிய மகனைச் தனது கைகளால் சேர்த்து அனைத்துகொண்டு, மன்னிப்பு கோரினார்.
வாழ்க்கையில் எப்போதும் வேலை வேலை என மிகவும் கடினமாக உழைத்து வாழும் நம் அனைவருக்கும் ஒரு நினைவூட்டல். நமக்கு உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன், சிறிது நேரம் செலவிடாமல் நேரத்தை நழுவ விடாதீர்கள்…
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக