ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்து, 50 வயதை எட்டியபோது, அவர் பல தொழில்நிறுவனங்களைத் துவங்கியதால் அந்நகரின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தார்.
அத்தொழில்அதிபர் ஒரு நாள், தனது மகிழ்வுந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, அவ்வண்டியின் ஓட்டுனர் சத்சங்க கேட்பொலியை இயக்கினார். அதில், துறவி ஒருவர் - நீங்கள் உங்கள் கைகளையும் கால்களையும் கொண்டு எவ்வளவு அதிக கடினமாக உழைத்தாலும், நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும், நீங்கள் இவ்வுலகிற்கு வந்ததைப் போன்றே வெறும் கைகால்களுடன் மட்டுமேஇவ்வுலகைவிட்டு விடைபெறுவீர்கள். எனக்கூறினார் மேலும் இதுகுறித்து- உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் எதைச் சம்பாதித்தீர்களோ அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதையும் எதற்காக செலவழித்தீர்களோ, அது வீடு, பணம், புகழ் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அதை உங்களால் ஒருபோதும் நீங்கள் இறக்கும்போது உங்களோடு கூடவே கொண்டசெல்ல முடியாது. எனமிக நீண்ட விளக்கமளித்தார்
இதைக் கேட்ட தொழிலதிபர், தான் இவ்வளவு சம்பாதித்து,பெயரும் புகழும் அடைந்தும் தான் இறந்த பிறகு தன்னுடன் எதுவும் கொண்டுபோக போவதில்லையா என்று நினைக்க ஆரம்பித்தார். அதனால், இவ்வளவுநாள் சம்பாதித்ததை தான் இறக்கும் போது தன்னோடு கூடவே எடுத்துச் செல்வதற்கான வழியை தேட ஆரம்பத்தார்.
அன்றிலிருந்து அந்த தொழிலதிபர் இரவும் பகலும் அது குறித்துமட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் தான்மட்டும் எவ்வளவுதான் சிந்தித்தாலும் தனக்கு அதற்கான வழி கிடைக்காது என புரிந்து கொண்ட பிறகு, தன்னால் அதற்குமேல் அதுகுறித்து சிந்திக்க முடியாது என்று முடிவு செய்தார்
எனவே, ஒரு நாள் அவர் தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தனது பணியாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி, தான் இறந்த பிறகு தான் சம்பாதித்த தன்னுடைய பணத்தை எவ்வாறு தன்னுடன் எடுத்துச் செல்வது என்று தனக்கு சிறந்த ஆலோசனை கூறினால், அந்த நபருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்தார்.
அதன்பின்னர் அவருடைய நிறுவனத்தில் பணிபரியும் பணியாளர்கள் அனைவரும் அதைப் பற்றியே விவாதிக்கத் தொடங்கினர், ஒரு வாரம் கழித்து, யாராலும் அதுகுறித்த சிறந்த ஆலோசனையை அவருக்கு கூற முடியவில்லை.
எனவே, அவர் மீண்டும் தனது பணியாளர்கள் அனைவரையும் கூட்டி, இந்த முறை தனக்கு ஆலோசனை கூறக்கூடிய நபருக்கு ஐந்து கோடி ரூபாய் தருவதாக உறுதியளித்தார், ஆனால் இந்த முறை இந்த பரிசானது ஊழியர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் பொருந்தும் எனக் கூறியிருந்தார் மேலும் அந்நகரம் முழுவதும் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது அதனால், அந்த நகரம் முழுவதும் இவ்வாறான ஆலோசனை கூறுவது குறித்தும் அதற்கான பரிசுத்தொகை குறித்தும் மிகபரபரப்பாக பொதுமக்கள் அனைவராலும் விவாதிக்கப்பட்டது.
அடுத்த நாள் அந்த நகரில் வாழும் ஒருவர் அத்தொழிலதிபரின் வீட்டை அடைந்து, 'உங்களுக்கு வேண்டிய ஆலோனையை நான் வழங்கத் தயாராக இருக்கின்றேன் ஆனால் அதற்கு முன் என்னுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்' என்றார்.
அதற்கு தொழிலதிபரும் ஒப்புக்கொண்டார்.
அம்மனிதன் தொழிலதிபரிடம், 'நீங்கள் எப்போதாவது அமெரிக்கா சென்றிருக்கிறீர்களா?' என்று வினவிபோது உடன் தொழிலதிபர் , 'ஆம். பல முறை. சென்றிருக்கின்றேன். ' என பதிலளித்தார்
அம்மனிதன், 'அப்பயனங்களின்போது எந்த பணத்தை அந்த நாட்டில் உபயோகிக்க அங்கு கொண்டு செல்கின்றீர்கள்?' என வினவியபோது
தொழிலதிபர், "நான் விமான நிலையத்திற்கு சென்றடைந்த, பின்னர் நம்முடைய நாடடு பணத்தை அமெரிக்காவில் பயன்படுத்தக்கூடிய டாலர்களாக மாற்றிக்கொள்கிறேன்." என பதிலளித்தார்
இப்போது அம்மனிதன் தொழிலதிபரிடம் வெவ்வேறு நாடுகளின் பெயர்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லி அதே போன்ற கேள்விகளைக் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் தான் பயனம் செய்ய விழையும் குறிப்பிட்ட அந்த நாட்டின் பணமாக விமான நிலையத்தில் மாற்றிக் கொண்டு எடுத்துச்செல்வேன் அவ்வாறாக மாற்றிய அந்தந்த நாட்டின் பணத்தை அந்தந்த நாட்டில் பயன்படுத்திக்கொள்வேன் என்று பதிலளித்தார்.
இவ்வாறு அந்த மனிதன் ஒவ்வொரு நாடாக தான் பயனம் செய்வது குறித்து கேள்வி கேட்பதை கண்டு அத்தொழிலதிபர் மிகஅதிகஎரிச்சலடைந்தார். தொழிலதிபர் அந்த மனிதனிடம் “ஏன் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைக் கேட்கிறாய்? என்னுடைய மரணத்திற்குப் பிறகு எனது பணத்தை நான் எவ்வாறு என்னுடன் எடுத்துச் செல்ல முடியும் என்பதற்கான தீர்வை மட்டும் எனக்கு நேரடியாக கூறிடுங்களேன்* எனமிக எரிச்சலுடன் கேட்டார்
உடன் அம்மனிதன் சிரித்துக்கொண்டே, “இதைத்தான் நான் உங்களுக்கு புரியவைக்க முயற்சிக்கிறேன்.. நீங்கள்குறிப்பிட்ட நாட்டிற்கு பயணம் செய்யும் துவங்கிடும்போது நம்முடைய நாட்டின் பணத்தை அந்தந்த நாட்டின் பணமாக மாற்றுவது போன்று.
நீங்கள் இறப்பதற்கு முன் உங்களுடைய எல்லாப் பணத்தையும் மேலுலகத்திற்கான நாணயமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் குறிப்பிட்ட நாட்டிற்கு பயனம் செய்திடும்போது அந்த நாட்டின் பணத்தை உடன் எடுத்து செல்வதை போன்ற அதனை மிக எளிதாக எடுத்தச் செல்லமுடியும் என மிக நீண்ட விளக்கமளித்தார்
இவ்வாறான அந்த மனிதரின் விளக்கத்தை கேட்டு அத்தொழிலதிபர் மிக அதிக குழப்பமடைந்து, "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மேலுவலகத்திற்கான நாணயம் எது?" என வினவினார்
உடன் அம்மனிதன் “மேலுலகத்தின் நாணயம் அறம் செய்தல். உங்களுக்கு நல்லொழுக்கத்தைத் தரும் இதுபோன்ற அறப்பணிகளில் உங்கள் பணத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் இறந்த பிறகும் நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்ல ஒரே வழி அதுதான். எனக்கூறினார்.
தொழிலதிபர் அந்த மனிதனின் கருத்தை புரிந்து கொண்டார். அவர் பரிசுபணத்தினை உறுதியளித்தவாறுஅம்மனிதனுக்கு வழங்கினார் அவரது வாழ்நாள் முழுவதும் பொதுமக்களுக்கும் தொண்டும் ஏழைஎளியவர்களுக்கு சேவை செய்தும் தன்னுடைய அறப்பணிகளை செய்யத்துவங்கினார்.
ஞாயிறு, 11 ஜூன், 2023
மேலுலகத்திற்கான நாணயம் எது?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பணிக்கான நேர்காணல் - நல்ல பழக்கங்களின் முக்கியத்துவம்
இளைஞன் ஒருவர் தனது பணிக்கான முதல் நேர்காணலுக்காக ஒரு அலுவலகத்திற்கு சென்றார். அந்த இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் தனது வீட்ட...
-
இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிற்கு முன்புவரை இந்திய கூட்டாண்மைசட்டம்1932 என்பது நடைமுறையில் இருந்துவந்தது மனிதநாகரிகம் தோன்றியபின்னர் ஏராளமான...
-
ஒரு கிராமத்தில் ஒரேயொரு விவசாயிமட்டும் கோடைகாலத்தில் பயன்படும் தர்பூசனியை தன்னுடைய நிலத்தில் பயிரிட்டிருந்தார் அவருடைய விளைநிலம் முழுவதும்...
-
அன்புதமிழ் நேயர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கத்துடன் அருகுசருகுஎனும் என்னுடைய முதல் வலைபூவை இணையத்தின்வாயிலாக உங்கள் முன் சமர்ப்பிப்பதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக